ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 20)

This entry is part 5 of 29 in the series 20 மே 2012

++++++++++++++++++++
ஒரு மாதின் காதலன்
++++++++++++++++++++

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை வாலிபக் காதலருக்கு மட்டுமின்றி அனுபவம் பெற்ற முதிய காதலருக்கும் எழுதியுள்ள ஷேக்ஸ்பியரின் ஒரு முதன்மைப் படைப்பாகும். அந்தக் காலத்தில் ஈரேழ்வரிப் பாக்கள் பளிங்கு மனமுள்ள அழகிய பெண்டிர் களை முன்வைத்து எழுதுவது ஒரு நளின நாகரிகமாகக் கருதப் பட்டது. ஷேக்ஸ்பியரின் முதல் 17 பாக்கள் அவரது கவர்ச்சித் தோற்ற முடைய நண்பனைத் திருமணம் செய்ய வேண்டித் தூண்டப் பட்டவை. ஆனால் அந்தக் கவர்ச்சி நண்பன் தனக்குப் பொறாமை உண்டாக்க வேறொரு கவிஞருடன் தொடர்பு கொள்கிறான் என்று ஷேக்ஸ்பியரே மனம் கொதிக்கிறார். எழில் நண்பனை ஷேக்ஸ்பியரின் ஆசை நாயகியே மோகித்து மயக்கி விட்டதாகவும் எண்ணி வருந்துகிறார்.. ஆனால் அந்த ஆசை நாயகி பளிங்கு மனம் படைத்தவள் இல்லை. அவளை ஷேக்ஸ்பியர் தன் 137 ஆம் ஈரேழ்வரிப் பாவில் “மனிதர் யாவரும் சவாரி செய்யும் ஒரு வளைகுடா” (The Bay where all men ride) – என்று எள்ளி இகழ்கிறார்.

அவரது 20 ஆவது ஈரேழ்வரிப் பாவின் மூலம் அந்தக் காதலர்கள் தமது ஐக்கிய சந்திப்பில் பாலுறவு கொள்ளவில்லை என்பதும் தெரிய வருகிறது. ஐயமின்றி ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் அக்கால மாதரின் கொடூரத்தனத்தையும், வஞ்சக உறவுகளைப் பற்றியும் உணர்ச்சி வசமோடு சில சமயத்தில் அவரது உடலுறவைப் பற்றியும் குறிப்பிடுகின்றன ! ஷேக்ஸ்பியரின் நாடக அரங்கேற்ற மும் அவரது கவிதா மேன்மையாகவே எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவரது முதல் 126 ஈரேழ்வரிப் பாக்கள் தனது நண்பன் ஒருவனை முன்னிலைப் படுத்தி எழுதப் பட்டவையே. மீதியுள்ள 28 பாக்கள் ஏதோ ஒரு கருப்பு மாதை வைத்து எழுதப் பட்டதாக அறியப் படுகிறது. இறுதிப் பாக்கள் முக்கோண உறவுக் காதலர் பற்றிக் கூறுகின்றன என்பதை 144 ஆவது பாவின் மூலம் அறிகிறோம். ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்களில் சிறப்பாகக் கருதப்படுபவை : 18, 29, 116, 126 & 130 எண் கவிதைகள்.

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் எந்த ஒரு சீரிய ஒழுங்கிலோ, நிகழ்ச்சிக் கோர்ப்பிலோ தொடர்ச்சியாக எழுதப் பட்டவை அல்ல. எந்தக் கால இணைப்பை ஓட்டியும் இல்லாமல் இங்கொன்றும், அங்கொன்றுமாக அவை படைக்கப் பட்டவை. நிகழ்ந்த சிறு சம்பவங்கள் கூட ஆழமின்றிப் பொதுவாகத் தான் விளக்கப் படுகின்றன. காட்டும் அரங்க மேடையும் குறிப்பிட்டதாக இல்லை. ஷேக்ஸ்பியர் தனது நண்பனைப் பற்றியும் அவனது காதலியின் உறவைப் பற்றியும் எழுதிய பாக்களே நான் தமிழாக்கப் போகும் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள். இவற்றின் ஊடே மட்டும் ஏதோ ஒருவிதச் சங்கிலித் தொடர்பு இருப்பதாகக் காணப் படுகிறது. ஷேக்ஸ்பியர் தனது பாக்களில் செல்வீக நண்பனைத் திருமணம் புரியச் சொல்லியும் அவனது அழகிய சந்ததியைப் பெருக்கி வாழ்வில் எழிலை நிரந்தரமாக்க வேண்டு மென்றும் வற்புறுத்து கிறார். ஆதலால் ஷேக்ஸ்பியரின் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள் “இனப் பெருக்கு வரிப்பாக்கள்” (Procreation Sonnets) என்று பெயர் அளிக்கப் படுகின்றன.

****************

(ஈரேழ் வரிப்பா -20)

++++++++++++++++++++
ஒரு மாதின் காதலன்
++++++++++++++++++++

இயற்கைக் கரம் தீட்டிய ஒரு மாதரின் முகம் உன்னது
என் இச்சைக் காதல் தலைவி நீயெனக் காட்டுது
மென்மைப் பெண் இதயம், கைத் தொடா காரிகை
மனம் மாறா மாதின் வாழ்க்கை நிலை மாறும் போதினும் !
ஒளிவீசும் விழிகள் பிறரை விட, வஞ்சமற்ற நோக்கு
பார்க்கும் பொருள் எல்லாம் பளபளக்கும் ஒளிப்பூச்சு
மனிதனுக் கொரு மாடல் எப்படித் தோற்றம் என்பதில்
எழில் கவரும் பிற விழிகள், வியக்கும் மாதர் ஆத்மா
மாதராய் உலவிட ஆக்கப் பட்டாய் நீ முதன் முதலில்
இயற்கை நொந்திடும் பிறகேன் படைத்தேன் என்று ?
தோல்வி கொடுத்தாய் ஒன்றை நீ எடுத்துக் கொண்டு
அது என் குறிக்கோளுக்கு ஒன்றும் உதவ வில்லை
தனக்கோர் சுகமாய் உனைத் தேர்ந்தெ டுப்பார் மாதர்
உன் காதல் எனக்குரிது நின் நேசம் மாதர் களஞ்சியம்!

+++++++++

SONNET 20

A woman’s face with nature’s own hand painted,
Hast thou, the master mistress of my passion;
A woman’s gentle heart, but not acquainted
With shifting change, as is false women’s fashion:
An eye more bright than theirs, less false in rolling,
Gilding the object whereupon it gazeth;
A man in hue all ‘hues’ in his controlling,
Which steals men’s eyes and women’s souls amazeth.
And for a woman wert thou first created;
Till Nature, as she wrought thee, fell a-doting,
And by addition me of thee defeated,
By adding one thing to my purpose nothing.
But since she prick’d thee out for women’s pleasure,
Mine be thy love and thy love’s use their treasure.

++++++++++++++

Sonnet Summary : 20

In this crucial, sensual sonnet, the young man becomes the “master-mistress” of the poet’s passion. The young man’s double nature and character, however, present a problem of description: Although to the poet he possesses a woman’s gentleness and charm, the youth bears the genitalia (“one thing”) of a man, and despite having a woman’s physical attractiveness, the young man has none of a woman’s fickle and flirtatious character — a condescending view of women, if not flat out misogynistic.

The youth’s double sexuality, as portrayed by the poet, accentuates the youth’s challenge for the poet. As a man with the beauty of a woman, the youth is designed to be partnered with women but attracts men as well, being unsurpassed in looks and more faithful than any woman.

Sonnet 20 is the first sonnet not concerned in one way or another with the defeat of time or with the young man’s fathering a child. Rather, the poet’s interest is in discovering the nature of their relationship. Yet even as the poet acknowledges an erotic attraction to the youth, he does not entertain the possibility of a physical consummation of his love.

Of all the sonnets, Sonnet 20 stirs the most critical controversy, particularly among those critics who read the sonnets as autobiography. But the issue here is not what could have happened, but what the poet’s feelings are. Ambiguity characterizes his feelings but not his language. The poet does not want to possess the youth physically. But the sonnet is the first one to evoke bawdiness. The poet “fell a-doting” and waxes in a dreamlike repine of his creation until, in the last line, the dreamer wakes to the youth’s true sexual reality: “Mine be thy love, and thy love’s use their treasure.” We are assured then that the relation of poet to youth is based on love rather than sex; according to some critics, even if the possibility existed that the poet could have a sexual relationship with the young man, he doesn’t show that he would be tempted. Other critics, of course, disagree with this interpretation.

++++++++++++++++++++++++

Information :

1. Shakespeare’s Sonnets Edited By: Stanley Wells (1985)
2. http://www.william-shakespeare.info/william-shakespeare-sonnets.htm (Sonnets Text)
3. http://www.sparknotes.com/shakespeare/shakesonnets/section2.rhtml (Spark Notes to Sonnets)
4. http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/ (Sonnets Study Guide)
5. http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/short-summary/ (Sonnets summary)
6. The Sonnets of William Shakesspeare By :Lomboll House (1987)

+++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) May 16, 2012
+++++++++++++

Series Navigationமுள்வெளி அத்தியாயம் -9திரைப்படம்: ஹாங்காங்கின் இரவுகள்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *