ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 30) மீண்டும் நினைக்கும் போது

This entry is part 23 of 35 in the series 29 ஜூலை 2012

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை வாலிபக் காதலருக்கு மட்டுமின்றி அனுபவம் பெற்ற முதிய காதலருக்கும் எழுதியுள்ள ஷேக்ஸ்பியரின் ஒரு முதன்மைப் படைப்பாகும். அந்தக் காலத்தில் ஈரேழ்வரிப் பாக்கள் பளிங்கு மனமுள்ள அழகிய பெண்டிர் களை முன்வைத்து எழுதுவது ஒரு நளின நாகரிகமாகக் கருதப் பட்டது. ஷேக்ஸ்பியரின் முதல் 17 பாக்கள் அவரது கவர்ச்சித் தோற்ற முடைய நண்பனைத் திருமணம் செய்ய வேண்டித் தூண்டப் பட்டவை. ஆனால் அந்தக் கவர்ச்சி நண்பன் தனக்குப் பொறாமை உண்டாக்க வேறொரு கவிஞருடன் தொடர்பு கொள்கிறான் என்று ஷேக்ஸ்பியரே மனம் கொதிக்கிறார். எழில் நண்பனை ஷேக்ஸ்பியரின் ஆசை நாயகியே மோகித்து மயக்கி விட்டதாகவும் எண்ணி வருந்துகிறார்.. ஆனால் அந்த ஆசை நாயகி பளிங்கு மனம் படைத்தவள் இல்லை. அவளை ஷேக்ஸ்பியர் தன் 137 ஆம் ஈரேழ்வரிப் பாவில் “மனிதர் யாவரும் சவாரி செய்யும் ஒரு வளைகுடா” (The Bay where all men ride) – என்று எள்ளி இகழ்கிறார்.

அவரது 20 ஆவது ஈரேழ்வரிப் பாவின் மூலம் அந்தக் காதலர்கள் தமது ஐக்கிய சந்திப்பில் பாலுறவு கொள்ளவில்லை என்பதும் தெரிய வருகிறது. ஐயமின்றி ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் அக்கால மாதரின் கொடூரத்தனத்தையும், வஞ்சக உறவுகளைப் பற்றியும் உணர்ச்சி வசமோடு சில சமயத்தில் அவரது உடலுறவைப் பற்றியும் குறிப்பிடுகின்றன ! ஷேக்ஸ்பியரின் நாடக அரங்கேற்ற மும் அவரது கவிதா மேன்மையாகவே எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவரது முதல் 126 ஈரேழ்வரிப் பாக்கள் தனது நண்பன் ஒருவனை முன்னிலைப் படுத்தி எழுதப் பட்டவையே. மீதியுள்ள 28 பாக்கள் ஏதோ ஒரு கருப்பு மாதை வைத்து எழுதப் பட்டதாக அறியப் படுகிறது. இறுதிப் பாக்கள் முக்கோண உறவுக் காதலர் பற்றிக் கூறுகின்றன என்பதை 144 ஆவது பாவின் மூலம் அறிகிறோம். ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்களில் சிறப்பாகக் கருதப்படுபவை : 18, 29, 116, 126 & 130 எண் கவிதைகள்.

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் எந்த ஒரு சீரிய ஒழுங்கிலோ, நிகழ்ச்சிக் கோர்ப்பிலோ தொடர்ச்சியாக எழுதப் பட்டவை அல்ல. எந்தக் கால இணைப்பை ஓட்டியும் இல்லாமல் இங்கொன்றும், அங்கொன்றுமாக அவை படைக்கப் பட்டவை. நிகழ்ந்த சிறு சம்பவங்கள் கூட ஆழமின்றிப் பொதுவாகத் தான் விளக்கப் படுகின்றன. காட்டும் அரங்க மேடையும் குறிப்பிட்டதாக இல்லை. ஷேக்ஸ்பியர் தனது நண்பனைப் பற்றியும் அவனது காதலியின் உறவைப் பற்றியும் எழுதிய பாக்களே நான் தமிழாக்கப் போகும் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள். இவற்றின் ஊடே மட்டும் ஏதோ ஒருவிதச் சங்கிலித் தொடர்பு இருப்பதாகக் காணப் படுகிறது. ஷேக்ஸ்பியர் தனது பாக்களில் செல்வீக நண்பனைத் திருமணம் புரியச் சொல்லியும் அவனது அழகிய சந்ததியைப் பெருக்கி வாழ்வில் எழிலை நிரந்தரமாக்க வேண்டு மென்றும் வற்புறுத்து கிறார். ஆதலால் ஷேக்ஸ்பியரின் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள் “இனப் பெருக்கு வரிப்பாக்கள்” (Procreation Sonnets) என்று பெயர் அளிக்கப் படுகின்றன.

++++++++++++++

(ஈரேழ் வரிப்பா -30)

மீண்டும் நினைக்கும் போது

மௌனத்தில் உள்ள போதினிய மனதின் நினைவுகள்
சிந்திப்பேன் மனதில் நெடுநாள் சென்றவை எல்லாம்
தேவைப் படுபவை இன்மையால் பெருமூச் சிடுவேன்
கடந்த துயர்கள் மீள்வதால் என்னினிய பொழுது வீணாகும்
கண்ணீர் மூழ்க்கும் விழிகள் அழுது பழக்க மில்லை ஆயினும்
முக்கிய நண்பர் மறைந்து போவார் நித்திய மரண இரவில் !
அழுகை புதிதாய் மீளும் மறைந்த காதல் இதய வலியில்
துக்கம் பற்பல வகைகளில் இப்போ தொழிந்து போயினும்
பிறகும் வருத்தம் அடைவேன் முற்காலத் தவறு களுக்கு
கனத்த நெஞ்சொடு கூட்டிக் கொள்வேன் ஒவ்வோர் துயராய்
துயர்ப் பட்டியல் புகார்கள், நான் முன்பே நொந்தவை தான்
புதிதாய் நோவேன் நான், முன்னளிக்க இயலாமை போல்
நானதைச் செய்வ தாயின் நானுனை நினைப்பேன் நண்பனே
இழப்புகள் எல்லாம் மீளும் என் துயர் களுக்கு முடிவு !

+++++++++

SONNET 30

When to the sessions of sweet silent thought,
I summon up remembrance of things past,
I sigh the lack of many a thing I sought,
And with old woes new wail my dear time’s waste:
Then can I drown an eye (unused to flow)
For precious friends hid in death’s dateless night,
And weep afresh love’s long since cancelled woe,
And moan th’ expense of many a vanished sight.
Then can I grieve at grievances foregone,
And heavily from woe to woe tell o’er
The sad account of fore-bemoaned moan,
Which I new pay as if not paid before.
But if the while I think on thee (dear friend)
All losses are restored, and sorrows end.

++++++++++++++

Sonnet Summary : 30

The poet repeats Sonnet 29’s theme, that memories of the youth are priceless compensations — not only for many disappointments and unrealized hopes but for the loss of earlier friends: “But if the while I think on thee, dear friend, / All losses are restored and sorrows end.” Stylistically, Sonnet 30 identically mirrors the preceding sonnet’s poetic form.

This sonnet is one of the most exquisitely crafted in the entire sequence dealing with the poet’s depression over the youth’s separation (Sonnets 26–32). It includes an extraordinary complexity of sound patterns, including the effective use of alliteration — repetitive consonant sounds in a series of words — for example, both the “s” and “t” sounds in “sessions of sweet silent thought.”

But alliteration is only one method poets use to enhance the melody of their work. Rhyme, of course, is another device for doing this. A third is assonance — similar vowel sounds in accented syllables — for example, the short “e” sound in the phrases “When sessions” and “remembrance”. In this case, the short “e” sound helps unify the sonnet, for the assonant sound both begins — “When” — and concludes — “end” — the sonnet.

Contributing to the distinctive rhythm of Sonnet 30’s lines is the variation of accents in the normally iambic pentameter lines. For example, line 7 has no obvious alternation of short and long syllables. Equal stress is placed on “weep afresh love’s long,” with only slightly less stress on “since,” which follows this phrase. Likewise, in line 6, “friends hid” and “death’s dateless night” are equally stressed. This sonnet typifies why the Shakespeare of the sonnets is held to be without rival in achieving rhythm, melody, and sound within the limited sonnet structure.

++++++++++++++++++++++++

Sonnet 30

(paraphrased)

——————————————————————————–
01.     When, in my silent, contemplative meditations about friends,

02.     I call to mind memories of things long ago,

03.     I sigh because I lack many things I hoped for,

04.     And with my old woes newly recalled, I lament the waste of my precious life;

05.     Then, I could drown my eyes with tears – although I seldom cry –

06.     For precious friends dead and buried in death’s eternal night,

07.     And weep again over love’s long-ago-forgiven heartache,

08.     And lament the cost of many items I don’t have any more;

09.     Then, I could grieve about offenses of earlier times,

10.     And, with a heavy heart, count up one woe after another,

11.     A sad accounting of complaints I’ve already lamented;

12.     Which I newly suffer, when I think of them, as if I hadn’t already suffered;

13.         But if, while I’m doing that, I think of you, dear friend,

14.         All my losses are compensated, and my sorrows end.

++++++++++++++++

Information :

1.  Shakespeare’s Sonnets Edited By: Stanley Wells (1985)
2.  http://www.william-shakespeare.info/william-shakespeare-sonnets.htm (Sonnets Text)
3.  http://www.sparknotes.com/shakespeare/shakesonnets/section2.rhtml (Spark Notes to Sonnets)
4.  http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/  (Sonnets Study Guide)
5.  http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/short-summary/ (Sonnets summary)
6.  The Sonnets of William Shakesspeare By :Lomboll House (1987)

+++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) July 23, 2012

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 24 பாமாலைக் கழுத்தணி உனக்கு !பஞ்சதந்திரம் தொடர் 54
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *