ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 40) காதலியைக் கவர்ந்த கள்ளன் !

This entry is part 10 of 23 in the series 7 அக்டோபர் 2012

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை வாலிபக் காதலருக்கு மட்டுமின்றி அனுபவம் பெற்ற முதிய காதலருக்கும் எழுதியுள்ள ஷேக்ஸ்பியரின் ஒரு முதன்மைப் படைப்பாகும். அந்தக் காலத்தில் ஈரேழ்வரிப் பாக்கள் பளிங்கு மனமுள்ள அழகிய பெண்டிர் களை முன்வைத்து எழுதுவது ஒரு நளின நாகரிகமாகக் கருதப் பட்டது. ஷேக்ஸ்பியரின் முதல் 17 பாக்கள் அவரது கவர்ச்சித் தோற்ற முடைய நண்பனைத் திருமணம் செய்ய வேண்டித் தூண்டப் பட்டவை. ஆனால் அந்தக் கவர்ச்சி நண்பன் தனக்குப் பொறாமை உண்டாக்க வேறொரு கவிஞருடன் தொடர்பு கொள்கிறான் என்று ஷேக்ஸ்பியரே மனம் கொதிக்கிறார்.   எழில் நண்பனை ஷேக்ஸ்பியரின் ஆசை நாயகியே மோகித்து மயக்கி விட்டதாகவும் எண்ணி வருந்துகிறார்.. ஆனால் அந்த ஆசை நாயகி பளிங்கு மனம் படைத்தவள் இல்லை. அவளை ஷேக்ஸ்பியர் தன் 137 ஆம் ஈரேழ்வரிப் பாவில் “மனிதர் யாவரும் சவாரி செய்யும் ஒரு வளைகுடா” (The Bay where all men ride) – என்று எள்ளி இகழ்கிறார்.

அவரது 20 ஆவது ஈரேழ்வரிப் பாவின் மூலம் அந்தக் காதலர்கள் தமது ஐக்கிய சந்திப்பில் பாலுறவு கொள்ள வில்லை என்பதும் தெரிய வருகிறது. ஐயமின்றி ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் அக்கால மாதரின் கொடூரத்தனத்தையும், வஞ்சக உறவுகளைப் பற்றியும் உணர்ச்சி வசமோடு சில சமயத்தில் அவரது உடலுறவைப் பற்றியும் குறிப்பிடுகின்றன ! ஷேக்ஸ்பியரின் நாடக அரங்கேற்ற மும் அவரது கவிதா மேன்மையாகவே எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவரது முதல் 126 ஈரேழ்வரிப் பாக்கள் தனது நண்பன் ஒருவனை முன்னிலைப் படுத்தி எழுதப் பட்டவையே. மீதியுள்ள 28 பாக்கள் ஏதோ ஒரு கருப்பு மாதை வைத்து எழுதப் பட்டதாக அறியப் படுகிறது. இறுதிப் பாக்கள் முக்கோண உறவுக் காதலர் பற்றிக் கூறுகின்றன என்பதை 144 ஆவது பாவின் மூலம் அறிகிறோம். ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்களில் சிறப்பாகக் கருதப்படுபவை : 18, 29, 116, 126 & 130 எண் கவிதைகள்.

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் எந்த ஒரு சீரிய ஒழுங்கிலோ, நிகழ்ச்சிக் கோர்ப்பிலோ தொடர்ச்சியாக எழுதப் பட்டவை அல்ல. எந்தக் கால இணைப்பை ஓட்டியும் இல்லாமல் இங்கொன்றும், அங்கொன்றுமாக அவை படைக்கப் பட்டவை. நிகழ்ந்த சிறு சம்பவங்கள் கூட ஆழமின்றிப் பொதுவாகத் தான் விளக்கப் படுகின்றன. காட்டும் அரங்க மேடையும் குறிப்பிட்டதாக இல்லை. ஷேக்ஸ்பியர் தனது நண்பனைப் பற்றியும் அவனது காதலியின் உறவைப் பற்றியும் எழுதிய பாக்களே நான் தமிழாக்கப் போகும் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள். இவற்றின் ஊடே மட்டும் ஏதோ ஒருவிதச் சங்கிலித் தொடர்பு இருப்பதாகக் காணப் படுகிறது. ஷேக்ஸ்பியர் தனது பாக்களில் செல்வீக நண்பனைத் திருமணம் புரியச் சொல்லியும் அவனது அழகிய சந்ததியைப் பெருக்கி வாழ்வில் எழிலை நிரந்தரமாக்க வேண்டு மென்றும் வற்புறுத்து கிறார். ஆதலால் ஷேக்ஸ்பியரின் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள் “இனப் பெருக்கு வரிப்பாக்கள்” (Procreation Sonnets) என்று பெயர் அளிக்கப் படுகின்றன.

++++++++++++++

(ஈரேழ் வரிப்பா -40)

காதலியைக்  கவர்ந்த கள்ளன்  !

களவாடு காதலனே என் உடமைகளை,  ஆம் களவா டனைத்தும்
இருப்பது என்ன உன்னிடம் ஏற்கனவே பெற்ற தற்கு மேலாக ?
இச்சை இல்லை அன்பே நீ  கருதிடும் மெய்ச் சொத்து மீது
என் சொத் தெல்லாம் உனக்கு நீ வைத்துள் ளதற்கு மேலாக !
பின்னே என் நட்பின் மூலம் நீ கவர்ந்தாய் என் காதலியை !
உன்னைப் பழியேன் நான்,  என் காதலியை நீ களவாடினும்
ஆயினும் இகழ்வேன் இக்களவில் நீ எனை ஏமாற்றி யதால்
நீயாக விரும்பி விலகினாய் பிறகு, என் காதலைப் பங்கிட்டு
மன்னித்து விட்டேன் உன் களவை என் கனிவான கள்வனே
என் சொத்தை எல்லாம் நீ உனக்காகத் திருடிய போதினும் !
ஆயினும் காதல் அறியும், பெருந் துயர் அதுதான் என்று,
வெறுப்பிடும் காயத்தை விட காதலன் தவறு ஏற்ப தரிது !
ஆகவே தீயது நெறியாய்த் தெரியும் விளையாட்டுப் பரிவிது !
அவமதித் தென்னைக் கொல், ஆயினும் நாம் எதிரி இல்லை.

+++++++++

SONNET 40

Take all my loves, my love, yea take them all,
What hast thou then more than thou hadst before?
No love, my love, that thou mayst true love call,
All mine was thine, before thou hadst this more:
Then if for my love, thou my love receivest,
I cannot blame thee, for my love thou usest,
But yet be blamed, if thou thy self deceivest
By wilful taste of what thy self refusest.
I do forgive thy robbery gentle thief
Although thou steal thee all my poverty:
And yet love knows it is a greater grief
To bear greater wrong, than hate’s known injury.
Lascivious grace, in whom all ill well shows,
Kill me with spites yet we must not be foes.

++++++++++++++

Sonnet Summary : 40

Sonnet 40 begins a three-sonnet sequence in which the poet shares his possessions and his mistress with the youth, although it is not until Sonnet 41 that he directly mentions their liaison.

The use of the word “love” may be confusing to readers, for “love” in this sonnet means at least three different things. Two of these meanings are addressed in the first line, “Take all my loves, my love, yea, take them all.” Here, “my loves” refers to the poet’s possessions, both physical — the sonnets themselves — and emotional. Following this, the phrase “my love,” set off by commas, refers to the young man himself, whom the poet is addressing. Although the allusion to the youth’s now possessing the poet’s mistress is slight in this sonnet, line 6 — “I cannot blame thee for my love thou usest” — contains the strongest hint of this new relationship: The young man “usest” the poet’s mistress — “my love.”

In an almost pathetically timid voice, the poet wavers between anger at and forgiveness of the young man. Line 7 begins, “But yet be blamed,” and we expect the poet to rant in extreme hostility at the youth, but this mood then shifts to the forgiveness contained in lines 9 and 10: “I do forgive thy robb’ry, gentle thief, / Although thou steal thee all my poverty.” In lines 11 and 12, the mood shifts again, but now the poet waxes philosophically about the contrasts between love and hate: “. . . it is a greater grief / To bear love’s wrong than hate’s known injury.” And finally, even while angry over the affair, the poet forgives the youth’s lecherous nature: “Lascivious grace, in whom all ill well shows, / Kill me with spites; yet we must not be foes.”

++++++++++++++++++++++++

SONNET 40

(Paraphrased)

01. “Steal” all my affections, my beloved friend, yes, “steal” them all –

02. What do you have then, more than you had already?

03. No, beloved friend, my affection, that you may call my true
“property” of love,

04. All of mine, was already yours, even before you “robbed”
that much more;

05. Then if, for love of me, you are a “receiver” of my “stolen” love,

06. I cannot “charge” you, that you “profit” for my love,

07. But yet you will be “charged,” if you’re deceitful about this “ownership,”

08. By willfully partaking of my love that you then forsake.

09. I do forgive you for your “robbery,” kind thief,

10. Although you “steal,” to yourself, all my poverty of loved ones,

11. And yet, love knows, it is a greater offense

12. To suffer a loving wrong, than hate’s certain injury;

13. So, sportive noble, in whom all that’s bad looks good,

14. You can “murder” me with such disgraces, yet,
we must not be opposing parties “at law.”

++++++++++++++++

Information :

1.  Shakespeare’s Sonnets Edited By: Stanley Wells (1985)
2.  http://www.william-shakespeare.info/william-shakespeare-sonnets.htm (Sonnets Text)
3.  http://www.sparknotes.com/shakespeare/shakesonnets/section2.rhtml (Spark Notes to Sonnets)
4.  http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/  (Sonnets Study Guide)
5.  http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/short-summary/ (Sonnets summary)
6.  The Sonnets of William Shakesspeare By :Lomboll House (1987)

+++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) October 3, 2012

 

Series Navigationஏதோவொன்றுசிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான அரச இலக்கிய சாகித்திய விருது
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *