என்று வருமந்த ஆற்றல்?

This entry is part 18 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

நள்ளிரவுக் கருமை;
மூழ்கிக் கிடக்குமுலகு; தண்ணொளி
பாய்ச்சும் நிலவு; ‘கெக்க’லித்துச்
சிரிக்கும் சுடரு.

விரிவான் விரிவெளி.
‘புதிர் நிறை காலவெளி.

வெறுமைக்குள் விரியும்
திண்ம இருப்பு.

பரிமாண விலங்குகள்
தாங்கும் அடிமை.

பன்முறையெனினும்
மீறி வியப்பதற்கெதுவுண்டு.

படியளக்கும் படைத்தவரே!
படைத்ததேன்? பகர்வீரா?

அறிவுத்தாகம் மிகுந்த
அலைவு; தாகசாந்திதான்
எப்போது?
அலையெனப் பரவும்
நிலை வரும் வரையிலா?
என்று வருமந்த
நிலை? அன்றி
‘அதிவெளி’ கடக்கும்
ஆற்றல் வரும் வரையிலா?
என்று வருமந்த
ஆற்றல்?

ngiri2704@rogers.com

Series Navigationஎனது இலக்கிய அனுபவங்கள் – 13 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 5 (கி.கஸ்தூரிரங்கன்)ரியாத்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா!
author

வ.ந.கிரிதரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *