நானும் பிரபஞ்சனும்

This entry is part 15 of 41 in the series 13 நவம்பர் 2011

சிறகு இரவிச்சந்திரன்.
மயிலாப்பூர் பாலையா அவென்யூவில் மீண்டும் மௌலி (எ) அழகியசிங்கர் நடத்திய கூட்டம். சின்ன அரங்கு குளீரூட்டப்பட்டிருந்தது. தேடி சந்தின் ஒரு கோடியில் இருந்த கட்டிடத்தின் முதல் மாடியில் இடத்தைக் கண்டுபிடித்தேன். மௌலிக்கு ஒரு திறமை உண்டு.. அவருடைய நண்பர்கள், அல்லது தெரிந்த படைப்பாளிகள் வேலை செய்யும் அலுவலகங்களில் ஒரு சனிக்கிழமை மாலை இடம் காலியானவுடன் கூட்டம் போட்டு விடுவார். எனக்குத் தெரிந்து தேவநேயப்பாவாணர் பேரரங்கையோ சிற்றரங்கையோ ( வாடகை வெறும் ஐம்பது ரூபாய்தான்) எடுத்ததாக எனக்கு நினைவில்லை.. அதெல்லாம் பிழைக்கத் தெரியாத இலக்கிய வெறி கொண்ட வட சென்னை ர்வலர்களுக்குத்தான். அவர்கள் தான் முன்கூட்டியே அதாவது இரண்டு நடைபெறும் கூட்டத்திலேயே வினியோகித்து விடுவார்கள். அதிலும் சொர்ணபாரதி என்கிற முகவை முனியாண்டி ( கல்வெட்டு பேசுகிறது சிரியர் ) கொஞ்சம் ஒஸ்தி. பார்ப்பவர்களை எல்லாம் ‘அடுத்த கூட்டத்துக்குக் கண்டிப்பா வந்துடுங்க ‘ என்று அன்பு வேண்டுகோள் விடுப்பார்.
மௌலி அந்த ரகம் இல்லை.. அலுவலகம், அவர்கள் செலவில் மின்சாரம் இத்தியாதி இத்தியாதி.. னால் கூட்டம் நச்சென்று இருக்கும்.. இலக்கியக் கடலில் கால் நனைத்துக் கொண்டிருந்த எனக்கு அப்போதெல்லாம் அவர்கள் பேசுவது க்ரீக் அண்ட் லேட்டிந்தான்.
க.நா.சு., என்பார்கள், வெங்கட் சாமிநாதன் என்பார்கள், பிச்சமூர்த்தி என்பார்கள்.. ஏகப்பட்ட பல்லிகள் உச்சு கொட்டும்..
அன்று கூட க.நா.சு. பற்றிய கூட்டம்தான்.. றரை மணி கூட்டத்துக்கு று மணிக்கே வர வேண்டும் எனக்கு அப்போதெல்லாம் தெரியவில்லை.. டீ கொடுத்து முடித்தாகி இருந்தது.. கொஞ்சம் உள்ளே போனால் சாப்பிட்ட சமோசாக்களின் எச்சங்கள்.. ஓ இதெல்லாம் கூட இருக்கிறதோ என்று வயிற்றைத் தடவிக் கொண்டேன். எனக்குத் தெரிந்த ஒரே முகம் கவிஞர் பால் நிலவன்.. மனிதர் இப்போ எங்கே இருக்கிறாரோ..
சமோசா டீ எல்லாம் கொடுத்திருக்காங்க?
நான் அஞ்சு மணிக்கே வந்திட்டேன்..
அனுபவம் பேசியது..
கூட்டம் எலெக்ட்ரிக்காக இருந்தது.. முதல் முதலில் க.நா.சு.வைப் பற்றி கேள்விப்படுகிறேன் .. இத்தனைக்கும் மனிதர் மயிலாப்பூரில் நான் கூப்பிடும் தூரத்தில் தான் இருந்திருக்கிறார்..வயசானவர், தனியாள்.. போய் பேசியிருக்கலாம்..
லதா ராமகிருஷ்ணன் தான் கடைசியில் அவருக்கு ஒத்தாசையாக இருந்தாராம்..
அவருடைய தில்லை சிவனின் நாட்டிய போஸைப் பற்றிய கவிதை ஒன்றினை வாசித்தார்கள்.. நினைவிலிருந்து அதை அடுத்த இதழில் சிறகிலும் வெளியிட்டேன்.
கொசு கடிக்குதோ..
அதான் காலைத் தூக்கி நிற்கிறாயோ..
என்று ஓடும் அந்தக் கவிதை..
கால் சராயே போட வேண்டாம் என்கிற அளவிற்கு நீ£ளமான ஜிப்பா அதுவம் கலரில் கட்டம் போட்ட டெரிக்காட்டான் துணியில் போட்டிருந்த கண்ணாடி போட்ட ள் பேசினார். என்னை ஈர்த்தது அவரது பேச்சுதான். சகஜமான பாவம் அவரது வார்த்தைகளில் தானாக வந்து ஒட்டிக்கொண்டிருந்தது. சன்னமான குரல்.. யானையைப் போல தலையை இங்கும் அங்கும் அசைத்து பேசிக்கொண்டிருந்தார்.
ஒலிவாங்கியை வாங்காமல் தான் பேசும் வார்த்தைகளில் லயித்துப் போன பேச்சு அது.. பின்னாளில் அந்தப் பாணி என் விமர்சனத்துக்குள்ளானது வேறு விசயம்.
அவர்தான் அந்த கொசுக்கடி கவிதையை சொன்னதாக ஞாபகம். இலக்கியக் கூட்டத்தில் இலக்கியம் பேசியது அவர் ஒருவர்தான். இதற்கு முன்னால் பேசியவர்கள் எல்லாம் க.நா.சு. வின் உடை, நடை, குணம் என்று ஏகத்துக்கு பேசி என்னை மரத்துப் போக வைத்திருந்தார்கள். மனிதரோ போய்விட்டார்.. இப்போதென்ன உடை, நடை பற்றியெல்லாம் என்று உள்ளூக்குள் அலறினேன். படைப்பைப் பற்றி பேசுங்கப்பா என்று ஒலியின்றி வார்த்தைகளை உமிழ்ந்தேன்.
கூட்டம் முடிந்து வெளியே எப்போதும் போல் குழுக்களாகப் பிரிந்து கூட்டத்தினரின் லிங்கரிங் ஒன்று இருக்கும். அதுவும் எனக்குப் புதுசுதான். போக யத்தனித்த எனக்கு பால்நிலவந்தான் சொன்னார்: இருங்க சிறகுக்கு ஏதாவது கிடைக்கும்..
வெட வெடவென்று இருக்கும் வயசான ( அப்போதே) னால் திருத்தமாக உடை உடுத்திக் கொண்டிருந்த கவிஞர் க்ருஷாங்கினி ( என்ன பெயர் என்று நினைத்துக் கொண்டேன்) அங்குதான் அறிமுகமானார். கையில் இருக்கும் சின்னக் குறிப்பேட்டில் அவரது தாம்பரம் முகவரியைக் குறித்துக் கொண்டேன்.
மெல்ல நகர்ந்து முன்பக்கம் வந்தபோது ஜிப்பாக்காரரைச் சுற்றி ஏகத்துக்கு கூட்டம்.
‘இரவிச்சந்திரன் வாங்க என்று என்னை அவரருகில் இழுத்துப் போனார் பால்நிலவன்.
‘ அய்யா வணக்கம்.. இவரு இரவிச்சந்திரன்.. சிறகுன்னு ஒரு பத்திரிக்கை ரம்பிச்சிருக்கார்..’
‘ நான் இன்னும் ஒங்க பத்திரிக்கைய பாக்கலியே.. இருக்கா ‘
‘ அடுத்த முறை தரேங்க ‘
இரவு எட்டுமணிக்கு லஸ் கார்னரில் கையேந்தி பவனில் தோசை சாப்பிட்டுக் கொண்டே கேட்டேன்.. ‘ யார் அவரு?’
‘அவருதாங்க பிரபஞ்சன்.. பெரிய எழுத்தாளர்..’
சொர்ணபாரதியின் கடற்கரைக் கூட்டமொன்றில் அவரை மீண்டும் சந்தித்ததும், சிறகின் ஐங்தாவது இதழைக் கொடுத்ததும் இன்னமும் என் நினைவிலிருந்து அகலவில்லை. அதைவிட ச்சர்யம் அவர் என்னை பெயர் சொல்லி அழைத்தது.
பின்னாளில் செங்கல்பட்டில்ல் மு. முருகேஷ், வெண்ணீலாவின் புத்தக வெளியீட்டுக்குப் போய் திரும்புகையில் இரவு பத்து மணி வரை அவருடன் மின்சார வண்டியில் பயணித்தது மறக்க முடியாத அனுபவம்.
இன்றளவும் கையில் ண்டுமலரோ சிறுகதைக் கொத்தோ வைத்துக் கொண்டு இலக்கிய நிகழ்வுகளில் அவரைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
பார்த்தால் கொடுக்க வேண்டும்.. கொடுத்தால் ஜிப்பா பையைத் துழாவி பத்து ரூபாய் தந்து விடுவார் என்பது வேறு விசயம்.

Series Navigationஅசூயைபத்தாம் ஆண்டு கம்பன் விழா அழைப்பிதழ்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

2 Comments

 1. Avatar
  லதர் ராமகிருஷ்ணன் says:

  நானும் பிரபஞ்சனும் கட்டுரை குறித்து சில கருத்துகள்:

  லதா ராமகிருஷ்ணன்

  வணக்கம், கட்டுரையாளர் ‘நானும் பிரபஞ்சனும்’ என்று தனது கட்டுரைக்குத் தலைப்பிட்டிருக்கிறாரே தவிர கட்டுரையில் அது குறித்துப் பேசியிருப்பது சொற்பமே.

  ”மௌலிக்கு ஒரு திறமை உண்டு.. அவருடைய நண்பர்கள், அல்லது தெரிந்த படைப்பாளிகள் வேலை செய்யும் அலுவலகங்களில் ஒரு சனிக்கிழமை மாலை இடம் காலியானவுடன் கூட்டம் போட்டு விடுவார். எனக்குத் தெரிந்து தேவநேயப்பாவாணர் பேரரங்கையோ சிற்றரங்கையோ ( வாடகை வெறும் ஐம்பது ரூபாய்தான்) எடுத்ததாக எனக்கு நினைவில்லை..” என்கிறார் கட்டுரையாளர்.விருட்சம் சார்பில் எழுத்தாளர் அழகியசிங்கர் நிறைய கூட்டங்களை தேவநேயப்பாவாணர் சிற்றரங்கில் – அதன் வாடகை 50 ரூபாயாக இருந்தபோதும் சரி, முந்நூறு ரூபாயாக உயர்ந்த பிறகும் சரி நடத்தியிருக்கிறார். தனியொரு மனிதனாக அழகியசிங்கர் இருபது வருடங்களுக்கும் மேலாக நவீன விருட்சம் இலக்கிய இதழை நடத்திவருவதை, அதற்கு அவர் செலவழித்திருப்பதைப் குறிப்பிட, பாராட்ட மனமில்லை கட்டுரையாளருக்கு. அவரைக் கேவலப்படுத்தி மகிழ்கிறார்.

  ”இலக்கியக் கடலில் கால் நனைத்துக் கொண்டிருந்த எனக்கு அப்போதெல்லாம் அவர்கள் பேசுவது க்ரீக் அண்ட் லேட்டிந்தான். க.நா.சு., என்பார்கள், வெங்கட் சாமிநாதன் என்பார்கள், பிச்சமூர்த்தி என்பார்கள்.. ஏகப்பட்ட பல்லிகள் உச்சு கொட்டும்..” என்று இலக்கியக் கூட்டங்களுக்குப் போகும் வாசகர்கள், படைப்பாளிகள் அனைவரையும் ‘பல்லிகளாகப் பழிக்கிறார்.

  ”வெட வெடவென்று இருக்கும் வயசான ( அப்போதே) னால் திருத்தமாக உடை உடுத்திக் கொண்டிருந்த கவிஞர் க்ருஷாங்கினி ( என்ன பெயர் என்று நினைத்துக் கொண்டேன்) அங்குதான் அறிமுகமானார்” என்று கவிஞர் கிருஷாங்கினியைப் பற்றி விவரித்திருப்பதுகூட நயமான விவரிப்பாக இல்லை.

  ”இலக்கியக் கூட்டத்தில் இலக்கியம் பேசியது அவர் ஒருவர்தான். இதற்கு முன்னால் பேசியவர்கள் எல்லாம் க.நா.சு. வின் உடை, நடை, குணம் என்று ஏகத்துக்கு பேசி என்னை மரத்துப் போக வைத்திருந்தார்கள். மனிதரோ போய்விட்டார்.. இப்போதென்ன உடை, நடை பற்றியெல்லாம் என்று உள்ளூக்குள் அலறினேன். படைப்பைப் பற்றி பேசுங்கப்பா என்று ஒலியின்றி வார்த்தைகளை உமிழ்ந்தேன்” என்று க.நா.சுவுக்கு விருட்சம் சார்பில் நடத்தப்பட்ட கூட்டம் பற்றி அங்கலாய்க்கிறார். க.நா.சு நினைவுக்கூட்டத்திலும் அந்த எழுத்தாளருடனான தமது பரிச்சயத்தைப் பற்றி சக எழுத்தாளர்கள் பகிர்ந்துகொண்டார்கள். அது க.நா.சுவின் படைப்புலகம் குறித்த திறனாய்வுக் கூட்டமல்ல. இதை எழுத்தாளர் பிரபஞசனிடமே கேட்டு அவர் தெரிந்துகொள்ளலாம்.

  “முதல் முதலில் க.நா.சு.வைப் பற்றி கேள்விப்படுகிறேன் .. இத்தனைக்கும் மனிதர் மயிலாப்பூரில் நான் கூப்பிடும் தூரத்தில் தான் இருந்திருக்கிறார்..வயசானவர், தனியாள்.. போய் பேசியிருக்கலாம்..லதா ராமகிருஷ்ணன் தான் கடைசியில் அவருக்கு ஒத்தாசையாக இருந்தாராம்..” என்று குறிப்பிட்டுள்ளார் கட்டுரையாளர். க.நா.சுவின் மனைவி அவருடனே வாழ்ந்துவந்தார். க.நா.சுவைப் போய் பார்த்துவிட்டு வரும் எத்தனையோ எழுத்தாளர்களில் நானும் உண்டு. அவருடைய எழுத்தாக்கங்கள் சிலவற்றை பிரதியெடுத்துக்கொடுத்திருக்கிறேன். அறிவார்ந்த, ஆரவாரமற்ற அவரிடம் பேசுவதில் அமைதியும், மனநிறைவும் கிடைக்கும். மற்றபடி,‘ஒத்தாசையாக’ இருந்தாராம்’ என்பதெல்லாம் ‘வேண்டாத மிகைவார்த்தைகள்’.

  ”பின்னாளில் செங்கல்பட்டில் மு. முருகேஷ், வெண்ணீலாவின் புத்தக வெளியீட்டுக்குப் போய் திரும்புகையில் இரவு பத்து மணி வரை அவருடன் மின்சார வண்டியில் பயணித்தது மறக்க முடியாத அனுபவம்” என்று குறிப்பிட்டு முடித்துவிடுவதற்கு பதிலாக கட்டுரையாளர் மேற்குறிப்பிட்ட விவரிப்புகளுக்கு ஒதுக்கிய இடத்தில் பிரபஞ்சனுடனான அந்த மறக்கமுடியாத பயணம் குறித்து, அந்த அனுபவம் குறித்து கட்டுரையில் அதிகமாகப் பதிவுசெய்திருக்கலாம்.

 2. Avatar
  Dr.K.Natarajan says:

  Siraku Ravichandran is not right in being so caustic. It is not necessary to limit the discussions to the works of the author. Several of us want to know about the dress and styles of a famous person like Ka Na Su. I fully agree with Latha Ramakrishnan.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *