திண்ணையின் இலக்கியத் தடம்-39

This entry is part 1 of 21 in the series 15 ஜூன் 2014

சத்யானந்தன்

ஜனவரி 6 2006 இதழ்:
புத்தக அறிமுகம் – நரிக்குறவர் இனவரைவியல் -வெங்கட் ரமணன்
தொல்குடியினரான நரிக்குறவர்கள் வேளாண் கலாச்சாரத்திற்கு முந்துபட்ட வேட்டைக் கலாச்சாரத்தை அடியொற்றி வாழ்பவர்கள்.
இணைப்பு

பிறவழிப்பாதைகள் – குலக்கல்வியா ? தொழிற்கல்வியா ? -கோபால் ராஜாராம்-
செருப்புத் தைத்தலும், தோட்டியின் தொழிலும் நிச்சயம் குலக்கல்விதான். ஆனால் பாட்டா செருப்புத் தொழிற்சாலையில் வேலைபார்ப்பதும், மோட்டார் வாகனத்தில் ஏறி தூய்மையான உபகரணங்களுடன் தெருச் சுத்தம் செய்தலும் தான் தொழிற்கல்வி.
இணைப்பு

‘ வியாக்கியான இலக்கியம் ‘- சில விளக்கங்கள்-இந்திரா பார்த்தசாரதி-
நாதமுனிகள், ஆளவந்தார், இராமானுஜர் போன்ற வைணவத் தலைவர்கள், ஆழ்வார் பாடல்களை ஒரு நீண்ட தத்துவார்த்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகக் கண்டு, இப்பாரம்பரியத்தின் பழகு மொழியாக இருந்த சம்ஸ்கிருதத்தில் இப்பாடல்களின் ஏற்றத்தைக் கூறியது போல், இப்பாடல்களின் தரத்துக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத தேவாரம், திருவாசகம் போன்றவற்றிற்கு அகில இந்திய ஏற்றம் அளிக்க இருமொழி வல்லுநர்களாகிய சைவர்களில் யாரும் முயலவில்லை என்பதுதான் வருந்தத் தக்கது. தமிழ் எல்லையைத் தாண்டிப் போற்றப்படுவதற்குத் திருவாசகம், போப் வரும்வரை காத்திருக்க வேண்டியிருந்தது!
இணைப்பு

தமிழின் முதல் இசை நாடகம்- இந்திரா பார்த்தசாரதி
‘மைடியர் பிரதரே எங்கள் மதருக்குக் கூந்தல் நீளம்
ஐடிலா அவளும் தூங்க அறுத்ததை விற்று நானும்
ஸைடிலோர் லேடியாக ஜட்காவில் ஏறிக் கொண்டே
ஒய்டான ரோட்டின்மீதில் உல்லாசமாகப் போனேன் ‘
இணைப்பு

ஜனவரி 13 2006 இதழ்:
வகாபிசமும் நவீன முதலாளியமும்-ஹெச்.ஜி.ரசூல்:
இன்றைய வகாபிசத்தின் இக்குரல் மிகத்தெளிவாக கோடி கோடியாக உற்பத்தியிலும், வணிகத்திலும் முதலீடு செய்திருக்கும் பெருமுதலாளிகளின் நலன்களையும், லாபத்தையும், மூலதனப்பெருக்கத்தையும், பாதுகாப்பதற்கான குரலாகவே இஸ்லாமிய தளத்தில் ஒலிக்கிறது.
இணைப்பு

‘தமிழ் பாதுகாப்புக்குழு ‘ ஒரு கண்ணோட்டம்-ஜெயக்குமார்-
ஊட்டி, கொடைக்கானல் ஏன் சென்னையில் கூட சில பள்ளிகளில் தமிழ் தடை செய்யப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்துக்குள் தமிழில் பேசினால் அபராதமும் விதிக்கப்படுகிறது (தமிழக இளைஞர்கள் தங்கள் தலைவராக எண்ணிக்கொண்டிருக்கும் ரஜினியின் மனைவி நடத்தும் பள்ளியிலும் இப்படித்தான் என்று கேள்விப்பட்டேன்).
இணைப்பு

திறந்திடு சீஸேம்! / கவிதாவதாரம் / எஸ். ஷங்கரநாராயணன்-உதயகண்ணன்

திருமதி சரஸ்வதி
வீணையை மூடிவை
குழந்தை அழுகிறது பாலுக்கு
இணைப்பு

பிரதாபசந்திர விலாசம் -2 -இந்திரா பார்த்தசாரதி-

கட்டிய பெண்டாட்டிக்கு எட்டுப் பாங்காகவே
காதல்மிக உங்கள் மீது வைத்த என்னை
தட்டிப் பூ சுற்றுகிறீர் சரஸ வார்த்தைகளாலே
தாஸி எங்கேனும் மோசம் போவாளோ போம் போம் (பேச்சில்)
குப்பை உயர்ந்தது கோபுரம் தாழ்ந்தது
கூழுக்கு இல்லாதவர் குடித்தல் பாயஸமாச்சு
துப்பற்ற நான் உங்கள் ஸ்வாதீனம் ஆனபின்
துரும்புக்கும் கதியில்லை சொகுசாய்ப் பேசுறீர் போம் போம் (பேச்சில்)
இணைப்பு

கற்பனையும் சித்தரிப்பும் : எம். யுவனின் ‘கைமறதியாய் வைத்த நாள் ‘ -பாவண்ணன்-
எதிரில் வரும் எந்தப் பெண்ணோடும் உறவுகொள்ளத் துாண்டியும் எதிராளி அயரும் நேரத்தில் சொல்லாலாவது கொல்லும்படித் தூண்டுகிற மிருகத்தின் குரலை தற்செயலான ஒரு கணத்தில் கண்டடைகிறவனை விவரிக்கிறது கவிதை.
இணைப்பு

பிரெஞ்சு படைப்புலகில் ‘சுயகதைகள் ‘(Autofiction)-நாகரத்தினம் கிருஷ்ணா-
பிரெஞ்சு இலக்கிய உலகில் பேராசிரியரும் நாவலாசிருமான செர்ழ் தூப்ரோவ்ஸ்கி (Serge Doubrovsky)யினுடைய ‘Fils ‘(1) ‘சொந்தக் கதை அல்லது ‘சுயகதை(Autofiction) என்ற சொல்லை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.
இணைப்பு

ஜனவரி 20 2005 இதழ்:
பிறவழிப் பாதைகள் : அன்புள்ள குட்டி ரேவதி-கோபால் ராஜாராம்
குஷ்புவிற்கு எதிராகக் கலாசாரக் காவலர்கள் கொடிதூக்கிய வன்முறைக்கும், எஸ் ராமகிருஷ்ணனுக்கு எதிராக உங்களைத் தூண்டிவிடுபவர்கள் கொடிபிடிப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
இணைப்பு
இரண்டாம் அர்த்த வரிசையின் கதை- சல்மாவின் நாவலை முன்வைத்து-எச்.முஜீப் ரஹ்மான்-
நாவலை முழுமையாக சிதைவாக்கம் செய்கிற போது சமூக எதார்த்தம் தான் நாவலின் மையமாக இருக்கிறது.சமூக எதார்த்தம் என்பது இங்கே ஆணின் கருத்துருவாக்கத்துக்கு துணை நிற்கிறது என்பது தெளிவாக தெரிகிறது
இணைப்பு
சேதிராயர்-முனைவர் மு. பழனியப்பன்-
’’அறவனே‘ அன்று பன்றிப் பின்ஏகிய
மறவனே‘ எனை வாதைசெய் யேல்எனும்
சிறைவண் டார்பொழில் தில்லையு ளீர் எனும்
பிறைகு லாம்நுதற் பெய்வளையே’’
இணைப்பு
ஜனவரி 27 2005 இதழ்:
குறளும் பரிமேலழகர் உரையும்-இந்திரா பார்த்தசாரதி
‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர் ‘
மிகப் பிரபலபான குறள். பொருள் எளிதில் விளங்குகின்றது. பரிமேலழகர் உரையைப் பார்ப்போம்.
‘ யாவரும் உண்ணும் வகை உழுதலைச்செய்து அதனால் தாமும் உண்து வாழ்கின்றாரே தமக்குரியரராய் வாழ்கின்றார். மற்றையரெல்லாம் பிறரைத் தொழுது அதனால் தாமும் உண்டு அவரைப் பின் செல்கின்றவர் ‘.
இணைப்பு
சிறுகதை தியானங்கள் (மூலம் : கர்ட் வானகட்)-சேதுபதி அருணாசலம்
வானகட்டின் கதைகள் அவற்றின் கட்டமைப்பு, பன்முகத்தன்மை, நகைச்சுவை உணர்வு ஆகியவற்றின் காரணமாக தமிழ் எழுத்தாளர் சுஜாதாவின் சிறுகதைகளை ஒத்திருக்கின்றன.
இணைப்பு
பிப்ரவரி -3-2006 இதழ்:
வாசிப்பில் சூபிசம் -ஹெச்.ஜி.ரசூல்

இந்த உடலுக்குயிர் வந்த தெப்படி சிங்கி – அது
தொந்தி நடுக்குழி தொப்பூழ் வழியடா சிங்கா
தன்னை அறியுந் தலமேது சொல்லடி சிங்கி – அது
கண்டையான நடுலை யல்லவோ சிங்கா
(தக்கலை. பீர்முகமது சாகிபு)
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20602032&edition_id=20060203&format=html”>இணைப்பு
கற்பு என்றால் என்ன ? -இந்திரா பார்த்தசாரதி

‘கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரிய மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுமே ‘

தலைவன், தலைவி ஆகிய இருவருடைய பெற்றோர்கள், இருவருக்கும் களவுக்குப் பிறகு, இருவருடைய உறவையும் உறுதிப் படுத்த நிகழ்த்தும் சடங்கே ‘கற்பு ‘
இணைப்பு
பிப்ரவரி 10-2006 இதழ்:
நேசிப்பாளர்கள் தினம் (VALENTINE ‘S DAY )
ஆல்பர்ட் பெர்னாண்டோ

விழி இருந்தும்
வழி இல்லாமல் – மன்னன்
பழி தாங்கிப் போகிறேன்.
விழி இழந்து – பார்க்க
வழி இழந்து, நீ மன
வலி தாங்காது கதறும்
ஒலி கேட்டும், உனை மீட்க
வழி தெரியாமல் மக்களுக்காக
பலியாடாய் போகிறேன்; நீ
ஒளியாய் வாழு! பிறருக்கு
வழியாய் இரு!! சந்தோஷ
ஒளி உன் கண்களில்
மிளிறும்!!
-உன்னுடைய வாலண்டைனிடமிருந்து!
( -From your Valentine…. அன்றிலிருந்து இன்று வரை நேசிப்பாளர்களிடையே

பரந்து விரிந்து நிறைந்து நிற்கிற வைர வரி வாசகமாகும். இது மட்டுமே

உண்மையாக இருக்குமானால் இந்தச் செய்தியைத் தாங்கி வந்த முதல் வாலண்டைன் அட்டை இதுவாகத்தானிருக்கும். )

மெட்டாபிக்சனின் ஆழ அகலங்கள்-
எச்.முஜீப் ரஹ்மான்
Metafiction is, literally, fiction about fiction. It is generally used to indicate fiction including any self-referential element. Metafiction typically involves games in which levels of narrative reality (and the reader ‘s perception of them) are confused, or in which traditional realist conventions governing the separation of ‘mimetic ‘ and ‘diegetic ‘ elements are flouted and thwarted.

பிப்ரவரி 17-2006 இதழ்:
மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும்- (முனைவர்) நீதியரசர் பி.வேணுகோபால் (ஓய்வு)-
பாகிஸ்தான், மியான்மர் மற்றும் நேபாளம் ஆகியவை கிறிஸ்தவ மிசினரிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்த சட்டங்கள் இயற்றியுள்ளன. இஸ்ரேல் மதமாற்றத்தினை தடைசெய்துள்ளது. சுவிட்சர்லாந்து ஏசுசபையினரை தடைசெய்துள்ளது. கொலம்பியாவில் கத்தோலிக்கர்களை கத்தோலிக்கரல்லாதவர்கள் மதமாற்றம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. கத்தோலிக்கர் பெரும்பான்மையாக உள்ள இலத்தீன் அமெரிக்க நாடுகளில் சமுதாய அமைதியையும், அரசியல் ஸ்திரத்தன்மையையும் குலைப்பதாக காரணம் காட்டி மிசினரிகளின் மதமாற்ற வேலைகள் தடைசெய்யப்பட்டுள்ளன. வெனிசூலா அரசாங்கம் மெதாடிஸ்ட் கிறிஸ்தவ சபையினை தடை செய்து மிசினரிகளை வெளியேற்றியுள்ளது. ஸயர் (Zaire) அரசாங்கம் ஆப்பிரிக்க தனித்தன்மையை காப்பாற்ற மிசினரி செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்தோனேசியாவில் மதத்தினை பரப்பும் உரிமை அளிக்கப்பட்டு அது வகுப்பு ஒற்றுமைக்கு இடராக இருந்த காரணத்தால், இந்தோனேசிய அரசாங்கம் மதமாற்றங்களைத் தடை செய்து மிசினரி நடவடிக்கைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இணைப்பு
தீக்குளித்து மாண்ட 8000 நகரத்தார் குடும்பங்கள்-புதுவை சரவணன்-
தம்குல பெண்கள் சோழ மன்னனால் மானபங்கம் செய்யப்படுவதை சகிக்க முடியாமல் வேதனையில் வெந்த நகரத்தார்கள் தங்கள் ஆண் பிள்ளைகளைகளையும், சொத்துக்களையும் அவர்களின் குலகுருவாக இருந்த ஆத்ம சாஸ்திரியாரிடம் ஒப்படைத்துவிட்டு மற்ற அனைவரும் தீக்குளித்து மாண்டனர். அந்த காலகட்டத்தில் சுமார் 8000 நகரத்தார் குடும்பங்கள் இருந்தன. ஆத்ம சாஸ்திரியாரிடம் ஒப்படைக்கப்பட்ட 1502 நகரத்தார் ஆண் குழந்தைகளைத் தவிர மற்ற அனைத்து நகரத்தார்களும் தீக்குளித்து உயிர் துறந்தனர். இந்த 1502 குழந்தைகளும் ஆத்ம சாஸ்திரியாரிடம் வளர்ந்தனர்.
இணைப்பு

பிப்ரவரி 24-2006 இதழ்:

சான்றோர் சமூகமும் தோள்சீலைக் கலவரமும் – எஸ்.டி. நெல்லை நெடுமாறன், அ. கணேசன்-

ஐயா வைகுண்டர் மிஷனரிமார்களின் கிறிஸ்தவ மதப் பரப்பல் முயற்சியை வெறுத்துள்ளார். ‘முக்குவன் வேதம் முழுகிப் போகும் ‘ என்று அவர் குறிப்பிடுவது ஒட்டுமொத்தமாகக் கிறிஸ்தவர்களாக மாறிவிட்ட மீனவ சமூகத்தின் மேல் கொண்ட வெறுப்பினால் அல்ல. மீனவ சமூகத்தவரை ஒட்டு மொத்தமாக மதம் மாற்றி அவர்களை இந்த மண்ணின் மரபுகளுக்கு எதிரிகளாக மாற்ற முயன்ற கிறிஸ்தவ மிஷனரிமார்கள் மீது அவர் கொண்ட வெறுப்பினாலேயே ஆகும். நீசன் என்று அவர் குறிப்பிடுவது திருவிதாங்கூர் அரசனை என்பதில் ஐயமில்லை.
இணைப்பு

Series Navigation
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *