ஆத்ம கீதங்கள் – 7 எங்கள் கூக்குரல் கேட்குமா ? [கவிதை -5]

This entry is part 11 of 23 in the series 30 நவம்பர் 2014

 

 

ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

எளிய சிறுவரிடம் உரைப்பீர் :

என்னரும் சோதரரே !

மேல் நோக்கிப் பார்த்து

இறைவனைப் பிரார்த்திப்பீர் என்று;

கொடை அளிப்பவன்

கொடுப்பான் உமக்கு இன்றைக்கும்

அடுத்த நாளுக்கும்;

யந்திரச் சக்கரம் யாம் சுற்றும் போது

எமது கூக்குரல் கேட்கும்

இறைவன் யாரென்று !

களைத்துப் போய் மூச்சிழுக்கும்

எம்மருகே

கடந்து செல்வோர்

காதில் கூக்குரல் விழாது !

ஏது பதிலும் அவர் கூறார் !

ஆழி சுற்றும் பேரரவத்தில் பதில்

வீழாதெம் காதிலும் ;

அந்நியர் யாரோ வாசலில்

வந்து பேசுகிறார் !

சுற்றி நிற்கும் தேவதைகள் இசைபாட

இறைவனாய் இருக்குமோ

ஒருவேளை ?

இனியேனும் எமது கூக்குரல்

இறைவனுக்குக் கேட்குமா ?

 

நள்ளிரவு வேலைத் தொல்லைகள்

நடுவே நாங்கள்

பிரார்த் திக்கும் போது

நினைவில் உள்ளவை இரண்டு

வார்த்தைகள்;   

“எங்கள் பிதாவே !” எம்மீது

இரக்கம் காட்டுவீர் பரிவோடு

எனக் கேட்போம்;

“எங்கள் பிதாவே,” என்பதைத் தவிர

வேறெந்தச் சொற்களும்

யாமறியோம் !

நினைத்துக் கொள்வோம் பிதாவை

தேவ தூதர் பாடும் வேளை;

இறைவன் எடுத்துக் கொள்ளலாம்

எமது அமைதியை;

தனது வலுத்த வலது கரத்தில் !

கருணை வடிவான கடவுள்

காதில் விழும் நிச்சயம்,

“எங்கள் பிதாவே,” என்னும்

எமது கூக்குரல்;

மென்மை யாய் இறைவன் கேட்டால்

மெய்யாய்ப் பதில் கிடைக்கும்

புன்னகையுடன் :

“என்னோடு ஓய்வு கொள்ள வாரீர்

சின்னஞ் சிறுவரே !” என்று

 

[தொடரும்]

++++++++++++++++

மூல நூல் :

From Poems of 1844

Elizabeth Barrett Browning Selected Poems

Gramercy Books, New York 1995

  1. http://wednesdaymourning.com/blog/elizabeth-barrett-browning-beyond-victorian-love-poems/
  2. http://en.wikipedia.org/wiki/Elizabeth_Barrett_Browning
  3.  http://www.online-literature.com/elizabeth-browning/
Series Navigationதொடுவானம் 44. மலைக்கோட்டை To புதுக்கோட்டைசாபக்கற்கள்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *