மென்மையான​ கத்தி

This entry is part 20 of 27 in the series 6 செப்டம்பர் 2015

 

சத்யானந்தன்

 

பேரங்கள் அச்சங்கள்

பின்புலமாகாத​

புன்னகை

அபூர்வமாகவே தென்படும்

 

மலர்கள் தேடப்படும்

காரணங்களே

அவற்றை

வணிகப் பண்டமாக்கின​

மலர்கள் புன்னகைப்பதில்லை

வாடாமலிருக்கின்றன​

பின் இதழ்கள் நீங்கி

விடுதலையாகின்றன​

 

மென்மையான​ கத்தி

என்று ஒன்று இருந்தால்

அதைச் சுழற்றி

புன்னகைப் பட்டறை

நடத்தலாம்

 

விரைவில்

காலாவதியாவதெல்லாம்

பூவென்றால்

புன்னகையும்

ஒரு பூதான்

 

எவ்வளவு நேரமாகி விட்டது?

‘உன் புன்னகை

வன்முறை’

என்று இந்த​

அலுவலக​ வரவேற்பாளரிடம்

நான் மானசீகமாகவே

கத்த​ முடியும்

நான் நிராயுதபாணி

Series Navigationமொழிவது சுகம் செப்டம்பர் 4 -2015 அ. இலக்கிய சொல்லாடல்கள் -6: தன் நிகழ்பாடு படைப்பு (Automatisme psychique)காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுக்கும் ‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016’
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *