ஒரு கதை ஒரு கருத்து – சர்வோத்தமன் சடகோபன் எழுதிய தமாஷ்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 5 of 8 in the series 7 பெப்ருவரி 2021

 

 

          

       அழகியசிங்கர்

         

          சர்வோத்தமன் சடகோபனின் முதல் சிறுகதைத் தொகுப்பான “முறையிட ஒரு கடவுள்”  என்ற தொகுப்பிலிருந்து ‘தமாஷ்’ என்ற கதையைப் படித்தேன். ஆரம்பிக்கும்போது நம் முன்னால் இருப்பவரைப் பார்த்து பேசுவதுபோல் கதை செல்கிறது.

          நம் முன்னால் இருப்பவர் ஒரு சஞ்சிகையைப் படித்துக் கொண்டிருக்கிறார்.  யாருடைய கதை?  சர்வோத்மன் சடகோபன் கதையைத்தான்.

          இப்படி கொஞ்சம் கொஞ்சமாக உரையாடல் தொடங்குகிறது. எதிரில் இருப்பவருடன்.  ஆனால் எதிரிலிருப்பவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

          சொல்பவர் மூலம்தான் எதிரிலிருப்பவரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.

          இன்னும் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.  எத்திரிலிருப்பவர் தாடி வைத்துக்கொண்டிருக்கிறார்.எதையோ பறிக்கொடுத்தவர் மாதிரி தெரிகிறார்.  ஏற்கனவே சர்வோத்தமன் சடகோபன் கதையைப் படித்துக்கொண்டிருப்பவர் அவர்.

          படித்துக்கொண்டிருக்கும் சஞ்சிகையை வைத்துவிட்டு வெளியே கூப்பிடுகிறார் அவரை. 

          அப்படி வரும்போது அவர் படித்துக்கொண்டிருக்கும் சஞ்சிகையை வைத்து விட்டு வரச்சொல்கிறார்.  ஆனால் அவரோ சஞ்சிகையை எடுத்துக்கொண்டுதான் வருகிறார்.

          இதிலிருந்து ஒன்று தெரிகிறது.  அவர் யார்  சொல்வதையெல்லாம் கேட்பவரில்லை.

          அவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பவருக்கு ஒரு புகார் அவர் மீது.  செடிக்குத் தண்ணீர் ஊற்றவில்லை என்று.  தாடி வளர்த்து சிறுகதை வாசிப்பவருக்கு அக்கறை இல்லை என்று கோபத்துடன் கூறுகிறார்.

 

          அப்புறம் ஒரு தகவல் தருகிறார்.  நாம் ஐவரும் இந்த இடத்தை விட்டு காலி செய்ய வேண்டுமென்று.  

          இந்தக் கதையில் சொல்பவர் கேட்பவர் என்ற இரண்டு நிலை வருகிறது. சொல்பவரே கேட்பவர் பேச வேண்டியவற்றைச் சேர்த்துப் பேசுகிறார்.

          வீட்டு உரிமையாளர் சதானந்தன் மோட்டார்  பம்பை சீர் செய்யப் பணம் வசூல் செய்து வருகிறார்.  கேட்பவர் உடனே பணம் கொடுத்து விடுகிறார்.  அதைச் சொல்பவர் கிண்டல் செய்கிறார்..வீட்டு உரிமையாளர் பணத்தைக் கொள்ளை  அடிப்பதுபோல் குறை கூறுகிறார்.

          நீங்கள் ஐந்துவருடம் கழித்துக் காலி செய்தால்கூட அதே பணத்தைத்தான் தருகிறார்கள்.  அதற்கு வட்டியும் சேர்த்துத் தருவதில்லை என்கிறார் சொல்பவர். அதுவும் சதானந்தன் எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்துக் கொடுப்பார் என்கிறார் சொல்பவர்.

          அப்புறம் இன்னொரு தகவல் தருகிறார்.  சென்ற வாரத்தில் உங்களின் பக்கத்து அறையில் வசித்த திவாகர் காலி செய்தானே பார்த்தீர்களா என்ற தகவலைக் கேட்பவரிடம் சொல்கிறார்.  ஏன் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கிறீர்கள் என்று வேறு முறையீடு செய்கிறார்.

          திவாகரிடம் மின்சார கட்டணமாக ரூ.500 வசூலித்துவிட்டு ரூ.300தான் மின்சாரத்திற்கு  வீட்டு உரிமையாளர் செலவு செய்தார். இப்படி கொள்ளை அடிக்கிறார் அவர் என்று கேட்பவரிடம் புலம்புகிறார் சொல்பவர்.

          கோபமாகச் சொல்பவர் கேட்பவரிடம்  “ஏன் நீங்கள் மோட்டார் ரிப்பேர் செய்வதற்கு ஆயிரம் ரூபாய் முன்னதாகவே கொடுத்தீர்கள்,”என்று.

          “நேற்று ஐந்தாம் தேதி சதானந்தன் வீட்டு வாடகை வசூலிக்க வந்திருந்தார்.  நீங்கள் இல்லை. எங்கே போயிருந்தீர்கள்? கடற்கரைக்குச் சென்றிருந்தீர்களா?  ஓ..காதல் தோல்வி.  கடற்கரை,”

அதுதான் சரியான இடம்.

          “ஓ.. நீங்கள் வாடகைக் கொடுக்கவில்லை. எனக்கு வயிறு எரிகிறதே என்கிறார்.  நீங்கள் அந்தப் பணத்தைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகலாம். 

          சொல்பவர் கேட்பவரிடம் ஒரு சம்பவத்தை விவரிக்கிறார். நேற்று முன்தினம் எப்போதும் நம் கீழ் வீட்டிலிருக்கும் மூன்று பெண்கள் கூச்சல் போட்டுக்கொண்டே இருப்பார்கள் இல்லையா, அதுபோல ஏதோ கத்திக்கொண்டே இருக்கிறார்கள் என்றுதான் முதலில்  நினைத்தேன்.  யாரோ ஒருவன் வீட்டில் புகுந்திருக்கிறான். வீட்டில் அந்த இரண்டு பெண்கள் மட்டும் இல்லை.  இரண்டு ஆண்களும் இருந்திருக்கிறார்கள்.   வந்தவன் ஒரு பெண்ணின் உடையைப் பற்றி இழுத்திருக்கிறான்.  அவர்களுடன் பக்கத்தில் இருப்பவன் எவ்வளவோ தடுக்க முயற்சித்தும் முடியவில்லை.  கன்னத்தில் ஒரு அறை வாங்கியதுதான் மிச்சம்.  பிறகு வீட்டை வெளி பக்கமாக மூடி சாவியை எடுத்து சென்றிருக்கிறான்.

          வீட்டு உரிமையாளர் சதானந்தம் வீட்டிலில்லை.  அவரது குடும்பத்துடன் வேலூரிலிருக்கும் தங்கக் கோயிலுக்குச் சென்றிருந்தார். மேலும் சொல்பவர் அந்தச் சம்பவத்தை விவரிக்கிறார்.  இந்தப் பெண்கள் இரவு பன்னிரெண்டு மணிக்குத் தெருவில் உடன் இரண்டு ஆண்களுடன் கூச்சல் போட்டபடியே வந்திருக்கிறார்கள்.  நமது தெரு முனையில் ஒருவன் சிகரெட் பிடித்தபடி நின்றிருக்கிறான்.  பார்த்தவன் பின் தொடர்ந்து வீட்டுக்கு வந்திருக்கிறான்.  ஒரு பெண்ணின் உடையைப் பற்றி இழுத்திருக்கிறான்.  தடுத்தவனை அடித்திருக்கிறான். சத்தம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்து கர்பணிப் பெண் கூச்சல் போட ஆரம்பித்து விட்டார்.அவன் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டைப் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு போய் விட்டான்.

          இந்தச் சம்பவத்தை விவரித்துவிட்டுச் சொல்பவர் கேட்பவரிடம் கேட்கிறார்.  üநீங்கள் மட்டும்தான் வெளியில் வரவில்லை.  தூக்க மாத்திரை சாப்பிட்டிருந்தீர்களா.  சரி.  நான் இதைப்பற்றி மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை என்றும் சொல்கிறார் சொல்பவர்.

          காதல் தோல்வியால்    கேட்பவர் தற்கொலை செய்யத் தூக்க மாத்திரியைச் சாப்பிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.  எல்லாம் யூகம்தான்.      

          அந்தப் பெண்கள் வீட்டு உரிமையாளர் சதானந்தை அழைத்தார்கள்.  சதானாந்த் அந்த வீட்டுக் குடியிருப்பவர்களில் தேவியைத்தான் அழைத்தார்.  நீங்கள் சிரிக்கிறீர்கள்.  எதையாவது அர்த்தப்படுத்திக்கொள்ளாதீர்கள்.  தேவியின் வீட்டுக்காரர் 60 வயது நிரம்பியவர்.  அவர் சினிமாவில் காஃபராக இருப்பவர். பக்கவாதம் வந்தபின் அந்த வேலையிலிருந்து நின்று விட்டார்.  இப்போது கைரேகையோ ஜோசியமோ பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த வீட்டுக்காரர் உங்களுடன் மட்டும்தான் பேசுவார். அவரும் கதைகள், நாவல்கள் பற்றி உங்களிடம் பேசிக்கொண்டிருப்பார். இதை ஊகத்துடன் சொல்கிறார் பேசுபவர்.

          அடுத்தது பாணி பூரி சாப்பிடக் கேட்பவரைக் கூப்பிடுகிறார். கேட்பவர் அணிந்திருக்கும் டிராக் பேண்டை கிண்டலடிக்கிறார் சொல்பவர்.  பின் அந்தப் பாணி பூரி செய்பவரைப் பற்றிப் பேசுகிறார்.  பூங்காவில் இருவரும் உட்கார்ந்து கொள்கிறார்கள்.

          வீட்டு உரிமையாளர் தேவியை அழைக்கிறார்.  தேவி சென்று பார்த்திருக்கிறார்.  பிறகு தேவி என்னையும் அழைத்தார்.  அந்தப் பெண்கள் உள்ளேயிருந்து கதவைத் திறந்தார்கள்.  உள்ளேயிருந்து இரண்டு பையன்களும் வந்தார்கள். அதில் ஒரு பையன் கன்னம் சிவந்திருந்தது. அவனுக்குக் காது கேட்காதோ என்ற சந்தேகம். இதெல்லாம் சொல்பவர் கேட்பவரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.  பீட் போலீசு காரன் கேûஸ பதிவுசெய்வதில் விருப்பமில்லை.  அந்தப் பெண்கள் நாங்கள் வீட்டைக் காலி செய்கிறோம் என்று வீட்டு உரிமையாளர்  சதானந்தை  சொன்னார்கள். 

          இங்கே திரும்பவும் விவரித்துக்கொண்டே போகிறார் சொல்பவர்.  சந்று நடப்போம் என்கிறார்.  பாருங்கள். அந்தி. காதல் தோல்விக்கு ஏற்ற நேரம் இல்லையா என்கிறார் கேட்பவரைப் பார்த்துக் கிண்டலுடன்.  எங்கே அந்தப் பெண்கள் காலி செய்தால் வீடு பாதுகாப்பற்றதாக ஆகிவிடும் என்று நினைத்தார்.  அந்தப் பையனைப் பிடித்து விடவேண்டுமென்று நினைத்தார். சிசிடிவி காமெரா மூலம் யார் அந்தப் பையன் என்று கண்டுபிடித்து விட்டார்கள்.

          அந்தப் பையன் அவர்கள் வீட்டுப் பக்கத்தில்தான் இருக்கிறான். முக்கோண வடிவில் இருக்கிறது அந்த வீடு.  தேவியின் கணவர் அவனை அறிவார்.  தேவியின் கணவர் பணிபுரிந்த திரைப்படத்தில் அவனும் சிறிது காலம் பணிபுரிந்திருக்கிறான் போலும். இந்த இடத்தில்தான் சொல்பவர் தேவியின் கணவனான அவன் பெயரைப் பதிவு செய்கிறார்.  அவர் பெயர் ராதாகிருஷ்ணன் என்று.  சொல்பவர் தன் போக்கில் எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டு போகிறார்.

          பையன் மீது வழக்கைப் பதிவு செய்தே தீர வேண்டுமென்று சதானந்த் பிடிவாதமாக இருந்தார்.  ராதாகிருஷ்ணனிடம் தன்னை விட்டுவிடும்படி கதறி இருக்கிறான் பையன்.  பையனின் தந்தை நமச்சிவாயமும் வந்தார். அவரிடமிருந்துதான் சதானந்த் நான்கு ஆண்டுகளுக்கு முன்னார் அந்தக் குடியிருப்பை வாங்கினார். அவர் கெஞ்சிக்கேட்டுக் கொண்டபின் பையனை விடுவித்துவிட்டார். மன்னிப்புக் கடிதம் எழுதிவிட்டு வெளியே வந்தான் பையன்.

          கேட்பவர் பொறுமை இழந்து வீட்டிற்குப் போக விரும்புகிறார்.  சொல்பவர் விடுவதாயில்லை.  அவரைப் பிடித்து நிறுத்துகிறார்.  இன்னும் சொல்கிறேன் கேளுங்கள் என்று சொல்கிறார்.  தன்னைக் கதற வைத்து மன்னிப்பு கேட்க வைத்த சதானந்தை பழிவாங்க நினைக்கிறான் பையன்.  இங்குதான் தமாஷ் துவங்குகிறது.  பையன் சதானந்த் மீத மைனர் சூட் வழக்கு தொடுக்கவிருக்கிறான்.

          அவன் மைனராக இருந்தபோது விற்ற சொத்து இது.  இப்போது அவனுக்குப் பதினெட்டு வயது பூர்த்தியாகி விட்டது.  இந்த குடியிருப்பு நமசிவாயம் சம்பாதித்த சொத்து இல்லை. பூர்வீக சொத்து.

          அந்தப் பையனைத் தூண்டியவர் ராதாகிருஷ்ணன்.  சதானந்த் நமச்சிவாயத்தைப் பார்த்திருக்கிறார்.  ‘நான் வேண்டுமானால் உங்களிடம் வாங்கிய பணத்தைக் கொடுத்துவிடுகிறேன்.  அவனைச் சமாதானம் செய்ய முடியவில்லை. அவன் உங்களைப் பழிவாங்கிய தீர்வேன் என்று பிடிவாதமாக இருக்கிறான். நான் ஒன்றும் செய்வதற்கில்லை’சதானந்த் பிடிவாதமாக இருந்தார்.  ராதாகிருஷ்ணனிடம் தன்னை விட்டுவிடும்படி கதறி இருக்கிறான் பையன்.  பையனின் தந்தை நமச்சிவாயமும் வந்தார். அவரிடமிருந்துதான் சதானந்த் நான்கு ஆண்டுகளுக்கு முன்னார் அந்தக் குடியிருப்பை வாங்கினார். அவர் கெஞ்சிக்கேட்டுக் கொண்டபின் பையனை விடுவித்துவிட்டார். மன்னிப்புக் கடிதம் எழுதிவிட்டு வெளியே வந்தான் பையன்.

          கேட்பவர் பொறுமை இழந்து வீட்டிற்குப் போக விரும்புகிறார்.  சொல்பவர் விடுவதாயில்லை.  அவரைப் பிடித்து நிறுத்துகிறார்.  இன்னும் சொல்கிறேன் கேளுங்கள் என்று சொல்கிறார்.  தன்னைக் கதற வைத்து மன்னிப்பு கேட்க வைத்த சதானந்தை பழிவாங்க நினைக்கிறான் பையன்.  இங்குதான் தமாஷ் துவங்குகிறது.  பையன் சதானந்த் மீத மைனர் சூட் வழக்கு தொடுக்கவிருக்கிறான்.

          அவன் மைனராக இருந்தபோது விற்ற சொத்து இது.  இப்போது அவனுக்குப் பதினெட்டு வயது பூர்த்தியாகி விட்டது.  இந்த குடியிருப்பு நமசிவாயம் சம்பாதித்த சொத்து இல்லை. பூர்வீக சொத்து.

          அந்தப் பையனைத் தூண்டியவர் ராதாகிருஷ்ணன்.  சதானந்த் நமச்சிவாயத்தைப் பார்த்திருக்கிறார்.  ‘நான் வேண்டுமானால் உங்களிடம் வாங்கிய பணத்தைக் கொடுத்துவிடுகிறேன்.  அவனைச் சமாதானம் செய்ய முடியவில்லை. அவன் உங்களைப் பழிவாங்கிய தீர்வேன் என்று பிடிவாதமாக இருக்கிறான். நான் ஒன்றும் செய்வதற்கில்லை’ என்று கையைப் பெரிதாக விரித்து விட்டார் பையனின் அப்பா நமச்சிவாயம்.

          சொல்பவன் கேட்பவனிடம் கடைசியாக சொல்கிறான்.  üஎன்னால் சதானந்திற்குச் செய்ய முடிந்த உதவி, அந்த மோட்டார் பம்பை சீர் செய்ய ஆயரிரம் ரூபாய் கேட்டார் இல்லையா. அதைக் கொடுத்துவிடுவதுதான்.

          இதை முடித்தவுடன் சொல்பவன், üசிரிக்கிறீர்கள்.  சரி நீங்க போயி அந்தச் சிறுகதை வாசிப்பை தொடருங்கள்.  நாம் கூட இந்தக் குடிறிருப்பில் தொடர வாய்ப்புண்டு.  ஆனால் சதானத்திற்குத்தான் அந்த வாய்ப்பே இல்லை.அவருக்குஒரு வீட்டைப் பார்க்க வேண்டும் என்கிறார் சொல்பவர்.

          உங்களுக்கு நல் இரவு என்று கூறி கேட்பவனை விடுவிக்கிறார் சொல்பவர்.

          தொடர்ந்து ஒருவருக்கொருவர் பேசுவதுபோல் இந்தக் கதை அமைந்து விடுகிறது.  சர்வ ஜாக்கிரதையாக இந்தக் கதையை அமைத்திருக்கிறார்.  ஒவ்வொரு முறையும் சொல்பவர் கேட்பவரைக் கூர்ந்து கவனித்த இந்தக் கதையைக் கூறுகிறாரள். அவர் பேன்ட் போட்டதைக் கிண்டலடிக்கிறார்.  சில இடங்களில் கோபிக்கவும் செய்கிறார்.  கதை எழுதும் முறையில் ஒரு வித்தியாசமான உத்தியை உண்டாக்கி உள்ளார்.

          முறையிட ஒரு கடவுள் என்ற பெயரில் ஒரு புத்தகமாக வந்துள்ளது. மணல் வீடு பதிப்பகம்.  சர்வோத்தமன் சடகோபனின் முதல் சிறுகதைத் தொகுப்பு.

           என்று கையைப் பெரிதாக விரித்து விட்டார் பையனின் அப்பா நமச்சிவாயம்.

          சொல்பவன் கேட்பவனிடம் கடைசியாக சொல்கிறான்.  üஎன்னால் சதானந்திற்குச் செய்ய முடிந்த உதவி, அந்த மோட்டார் பம்பை சீர் செய்ய ஆயரிரம் ரூபாய் கேட்டார் இல்லையா. அதைக் கொடுத்துவிடுவதுதான்.

          இதை முடித்தவுடன் சொல்பவன், ‘சிரிக்கிறீர்கள்.  சரி நீங்க போயி அந்தச் சிறுகதை வாசிப்பை தொடருங்கள்.  நாம் கூட இந்தக் குடிறிருப்பில் தொடர வாய்ப்புண்டு.  ஆனால் சதானத்திற்குத்தான் அந்த வாய்ப்பே இல்லை.அவருக்குஒரு வீட்டைப் பார்க்க வேண்டும் என்கிறார் சொல்பவர்.

          உங்களுக்கு நல் இரவு என்று கூறி கேட்பவனை விடுவிக்கிறார் சொல்பவர்.

          தொடர்ந்து ஒருவருக்கொருவர் பேசுவதுபோல் இந்தக் கதை அமைந்து விடுகிறது.  சர்வ ஜாக்கிரதையாக இந்தக் கதையை அமைத்திருக்கிறார்.  ஒவ்வொரு முறையும் சொல்பவர் கேட்பவரைக் கூர்ந்து கவனித்த இந்தக் கதையைக் கூறுகிறாள். அவர் பேன்ட் போட்டதைக் கிண்டலடிக்கிறார்.  சில இடங்களில் கோபிக்கவும் செய்கிறார். 

கதை எழுதும் முறையில் ஒரு வித்தியாசமான உத்தியை உண்டாக்கி உள்ளார் .

          சர்வோத்தமன் சடகோபனின்  ‘முறையிட ஒரு கடவுள்’ என்ற பெயரில் ஒரு புத்தகமாக வந்துள்ளது. மணல் வீடு பதிப்பகம்.  சர்வோத்தமன் சடகோபனின் முதல் சிறுகதைத் தொகுப்பு.

 

         

 

 

 

 

 

Series Navigationவளவ. துரையன் படைப்புகள்—ஒரு பார்வைஒரு சிறுகதை … சில க்ஷணங்கள் 
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *