Posted in

நிரந்தரம்

This entry is part 2 of 2 in the series 4 மே 2025

ஆர் வத்ஸலா

மறுபடியும்

அவன் மௌனம் நீளுகிறது

காத்திருந்து

கோபித்துக் கொண்டு

அவனை சபித்து

பின் 

நாக்கை கடித்து கன்னத்தில் போட்டுக் கொண்டு

அவன் தரப்பு சாக்குகளை-

அவன் அம்மாவுக்கு உடம்பு சுகமில்லை

அவன்‌ நண்பனுக்கு பெரிய பிரச்சினை

அவனுக்கு மனச் சோர்வு-

இப்படி ஏதாவது 

கற்பித்துக் கொண்டு 

பின் 

சலித்து 

அழுது

சூளுரைக்கிறேன்

‘இன்றோடு 

அவன் உறவை துண்டித்துக் கொள்கிறேன்

நிரந்தரமாக’

என்று

தயவு செய்து கேட்காதீர்கள்

யாரும்

எத்தனையாவது முறையாக

என்று 

Series Navigationசொல்வனம் 341 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *