Posted in

அமெரிக்காவில்திருக்குறள் ஆவணப்பட வெளியீடு

This entry is part 7 of 7 in the series 9 நவம்பர் 2025


————
தமிழ் நாடு முதல்வர் திரு .மு.க.ஸ்டாலின் விழாவிற்கு வாழ்த்து செய்தி.


———–

Screenshot


திருக்குறள் பற்றிய ஆவணப்படம் ஆங்கிலம், தமிழ்,இந்தி,பிரெஞ்சு, ஜப்பானிய மொழிகளில் தயாராகியுள்ளது. இதன் ஆங்கில வடிவம்  “த ஏஜ்லஸ் விஸ்டம் ஆப் த இண்டியன்  பொயட் அண்ட் பிலாஸபர் திருவள்ளுவர்” நவம்பர் மாதம் 16ஆம் தேதியன்று வர்ஜீனியாவில் திரையிடப்படுகிறது.  “தமிழ் இருக்கை” தலைவர் டாக்டர் விஜய் ஜானகிராமனின் பொறுப்பில் அமெரிக்கா வாழ் தமிழர்கள் சார்பாக, இதன் திரைக்கதையை எழுதி டாக்டர் ஆர்.பிரபாகரன் இதைத் தயாரித்துள்ளார். இவர் திருக்குறள் பற்றி பல நூல்களை எழுதியுள்ளார்.
திருக்குறளின் மேன்மையை பிற நாட்டவர்களுடன் இன்றைய இளம் தலைமுறை தமிழர்களும் அறிந்துகொள்ளும் வகையில் படம் உருவாகியுள்ளது. வள்ளுவர் பேணிய மனித சமத்துவம் படத்தின் கருப்பொருளாகும்.
எல்லிஸ் அச்சடித்த வள்ளுவர் உருவம் பொறித்த தங்க நாணயம், வீரமாமுனிவர் லத்தீனில் திருக்குறளை மொழிபெயர்த்த கையெழுத்துப் படிகள், குறள்கள் பொறிக்கப்பட்ட பழம் ஓலைச் சுவடிகள், உலகெங்கிலும் நிறுவப்பட்டுள்ள வள்ளுவர் சிலைகள், கிராபிக்ஸ் போர் காட்சிகள், குறும்பட வடிவில் காமத்துப்பால் காட்சிகள் ஆகியன இடம் பெற்றுள்ளன.
ராகுல், ராஜீவ் ஆனந்த், ஹன்சிகா, சுபா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் தோன்றுகிறார்கள். தயாரிப்பில் உறுதுணையாளராக டாக்டர் இ.ஜே.சுந்தர் பணியாற்றியுள்ளார்.
தேசிய விருது பெற்ற இயக்குநர் அம்ஷன் குமார் படத்தை இயக்கியுள்ளார்.வாஷிங்டன் வட்டார தமிழ்ச் சங்கம் வெளியீட்டு விழாவை நடத்துகிறது.

Series Navigationகதைப்போமா நண்பர்கள் குழுமம் சிறுகதை கலந்துரையாடலில், கு. அழகிரிசாமியின் “ராஜா வந்திருக்கிறார்” சிறுகதை 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *