ஜெயானந்தன்.
சமீபத்தில் பக்கத்து வீட்டு கிழவருக்கு வயசு (88), “ஆயுள் சான்றிதழ் கொடுக்க “ஃபோட்டோ, கைரேகை எடுக்க போஸ்ட் ஆபிஸிலிருந்து ஆட்கள் வீட்டுக்கே வந்திருந்தனர் .எல்லாம் ஐ.டி. யின் முன்னேற்றம். வருடத்திற்கு ஒருமுறை மனுஷன் உயிரோடு இருக்கானா என பார்த்துவிட்டுதான், பென்ஷன் கொடுப்பார்கள். அந்த வயதான தாத்தா, ரயில்வேயிலிருந்து இருபத்தைந்து வருடங்களுக்கு முன் ரிடையர் ஆனவர். அவரது வீட்டில் மகன்,மருமகள்,பேரன் எல்லாமாக வீடே அமளிதுமளி பட்டது.
இந்த களேபரங்களை பார்த்துக்கொண்டிருந்த எனக்கு, தீடீரென தி.ஜா.வின், “துணை”, சிறுகதை நினைவில் ஓடியது.
அட ..டா…என்ன ஒரு அற்புதமான நடை. அக்கால வாழ்வின் யதார்த்தமான சுவடுகளை,குறுக்கு வெட்டுத்தோற்றத்தில் வந்துவிழும்
பகடையும், நையாண்டி மேளமும், கதையை, லாலாக்கடை அல்வா சாப்பிட்டது போலவும், காருக்குறிச்சியாரின் நாதஸ்வரம் கேட்டது போலவும் வாழ்கையை அனுபவிக்க கொடுத்துள்ளார் தி.ஜா.
தி.ஜா.வின் கண்களில் ஒருவித ஸ்பெஷல் லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.அது 360டிகிரிகளில் சுழன்று,3D ல் படம் பிடித்துவிடுகின்றது, இந்த வாழ்க்கையின் லெளகீக தடங்களை.
நமக்கு அந்த லென்ஸ் கிடைக்காமல், குதிரை போகும் ஒரே வழியில், வாழ்க்கையை ஓட்டுகின்றோம்.
தி.ஜா.வின் காலத்தில் அரசாங்க ஊழியர்கள் ரிடையானவுடன் வருடத்திற்கு ஒரு முறை, மஸ்டர்(உயிர் சான்றிதழ்) கொடுக்க வேண்டும் .அப்போதுதான் பென்ஷன் கிடைக்கும். அதற்கு அவர்கள் அங்குள்ள கஜானாவிற்கு சென்று வரவேண்டும்.
இந்த ஒரு கருவை வைத்துக்கொண்டு, தி.ஜா.வின் எழுதுகோல் செய்யும் நையாண்டி தர்பார் சொல்லி மாளாது.
அந்த காலத்தில் ஒரு ஆரோக்கியமான குடும்பத்தில்,
தாத்தா, மகன், பேரன் மூன்று தலைமுறைகள் பென்ஷன் வாங்குகின்றது.வாழ்க்கை நதி, கங்கையைப்போல் நீண்டு ஓடுகின்றது. நீண்ட ஆயுள் உள்ளவர்கள் வாழ்ந்த காலம். கள்ளங்கபடமற்ற வாழ்க்கை.
நதியையும், மண்ணையும், சங்கீதத்தை யும் உயிர
மூச்சாக கொண்டவர்கள்.
இன்று ஆயுள் பலம் இல்லாமல், குறைந்த காலத்திலேயே வாழ்வு முடிந்துவிடுகின்றது. எல்லாம் கலப்படமான வெளி,காலம்,மனிதர்கள்.
“சரி கதைகாகு வருவோம், தாத்தா லேடி, மகன் சின்னக்குழந்தை, பேரன் காசிக்கு போயிருக்கான்.மூன்று தலைமுறையும
உயிரோடு உள்ளது. மூன்றும் ரிடையர்டு உறுப்புடிகள். மூன்றும் அரசாங்க பென்ஷன் வஸ்துக்கள்.
மூன்றும் இன்றும் மார்கழி குளிரிலும், நதிக்குளியல், தயிர்சாதம், ஊறுகாய் உயிரிகள்.
இந்த தாத்தா கிழம் அவரது வாலிப வயதில், ஆஜானுபாகுவான உடல். கருகருவென்று தலைமுடி நீண்டு வளர்ந்திருக்கும். அதை கொண்டையாக மடித்து, அந்த காலத்து லேடிகள் போடும் கொண்டையாக சுற்றி தலைக்கு தலையணையாக மாற்றி தூங்குபவர். அதற்காக தான் அவருக்கு லேடி பட்டப்பெயர்.
கர்லா கட்டை
சுற்றுவார், தண்டால் போடுவார்,
பஸ்கி எல்லாம் போட்டு உடலை, திடகாத்திரமாக வைத்திருப்பார்.
மழையோ, குளிரோ, தோய்ந்த தயிரில் தயிர் சாதத்தை பாட்டி உருண்டை உருண்டையாக சூழற்றி, யானைக்கு ஊட்டுவதுபோல் கையில் போடுவார்.மகன் லேடியும் வயிறு முட்ட அடித்துவிட்டு, ஒரு வெற்றிலை பாக்கோடு ,அலுவலகம் சென்றுவிடும். எட்டுமுழ வேஷ்டி பஞ்சகஞ்சம், பாரதியார் தலைப்பாகை, அங்கவஸ்திரம்.
இன்று நமக்கு, உருண்டை சோற்றுப்படலம், இந்த காட்சி சித்தரிப்பு, ஒரு கோயில் யானைக்கு, பாகன், சோற்றுக்கவளத்தை கொடுப்பதுபோல் தெரிகின்றது.
இன்றைய தலைமுறைக்கு பர்கர், பீட்சா, பான்கேக், வாப்பிள்ஸ்,டோனட், சவர்மா பிரியாணி இத்யாதி…என்ற ஆரோக்கியமற்ற தின்பண்டங்கள்தானே கிடைக்கின்றது.
அம்மா,தாத்தா,பாட்டி, பெரியப்பா,சித்தப்பா, அத்தை மாமா உறவெல்லாம் பழங்கதையானது தான், இந்த தலைமுறையின் நாகரீகம்.
கைப்பேசியே உலகம்.
தாத்தாவும், மகனும் மஸ்டர் கொடுக்க ரெடி. இவர்களுக்கு உதவிக்கு பக்கத்து வீட்டு பையன் வந்திருந்தான்.
தி.ஜா.வின் நையாண்டி நடை இங்கிருந்து தான் பட்டையை கிளப்பும்.
“இவர் அப்பாவுக்கு தொன்ணூற்றெட்டு வயதாம், கேட்டியா?
நாலைஞ்சு வருஷமா, இதையேதான்
சொல்லிண்டிருக்கார்.
நல்ல வளமான வைரமான வளங்கள்.
இவர் போன ஜன்மமெல்லாம் சொல்வார். வயச சொன்னா திருஷ்டி பட்டுடுமாம். இவரு பேரன் காசிக்கு போயிருக்கான அவனையும் சேர்த்து தான் தாத்தா கிழம் அப்பா, பேரன் மூன்றும் மஸ்டருக்கு கிளம்பும். இந்த தடவைதான் பேரன் காசிக்கு போயிருக்கான். மூன்று தலைமுறைக்கும் காபி, டீ வாசமெல்லாம் தெரியாது.
வண்டிக்கு குரல் கொடுத்தார்கள்.
உதவிக்கு வந்த பையன் லேடி பெரிய தாத்தாவின் கையைப்பிடித்து அழைத்துச்சென்றான். சின்னக்குழந்தை தாத்தா மெதுவாக நடந்து வந்து வண்டியல ஏறினர்.
வீட்டில் சொல்லிக்கொண்டு, வண்டி ஏறச்சென்றனர்.
இங்கு ஒரு முக்கியமான இடம் வருகின்றது. அக்கால பெண்களின் நிலை. தி.ஜா. இதனை ஒரு புள்ளியாய் காட்டியுள்ளார்.
“இப்போதுதான் அம்மா இருக்கிற இடம் தெரிந்தது. கூடத்தில் ஒரு மூலையில், நீட்டன காலோடு உட்கார்ந்திருந்தாள். தலை கத்தாழை நாராக வெளுத்திருந்தது. காதில் செம்புடத்தோடு,தொங்கி ஆடிக்கொண்டிருந்தது”.
பூஜை அலமாரியை திறந்தார் பெரியவர்.பிரார்த்தித்துக்கொண்டார்
அவரும், சின்னக்குழந்தையும் நெடுஞ்சான் கட்டையாக நமஸ்காரம் செய்துவிட்டு கிளம்பினர்.
வண்டியில் மூவரும் பயணம்.
தி.ஜா.வின் கஜனா வர்ணனை, மனதை எங்கோ அலைத்து சென்றுவிடும். இலக்கிய மாஸ்டர் டச்
இதுபோன்ற இடங்களில் பளிச்சிடும்.
அவர் கேமிரா ஆங்கிள் உலகத்தர படத்தின் காட்சிகளை காட்டும்.
“கஜானா அருகில் கூட்டத்திற்கா பஞ்சம். கோர்ட், நெல் கொள்முதல் ஆபீஸ், கலெக்டர் ஆபிஸ்.
பெரிய பெரிய தூங்கு மூஞ்சு மரங்கள். நிழல் விழுந்த இடமெல்லாம் கிழங்கள் படுத்திருந்தன. முழங்காலை கட்டி அமர்ந்திருந்தன. போன வருஷம் கிழம்முதல் சின்னக்குழந்தை வரை எவ்வளவோ கிழங்கள் “
இந்த வாழ்க்கையின் உன்னதம் இங்குதான் தெரிகின்றது.
நீண்டு வளர்ந்த தூங்குமூஞ்சி மரங்கள் அதன் நிழலில் எத்தனயோ
கிழங்கள். இந்த காட்சியில் மொத்த
தத்துவாரத்த பார்வையும், மரங்களும் வயதான மனிதர்களும் நிழல்கள்தான் என்ற ஒரு எழுத்தாளனின் பார்வை, தமிழ் இலக்கியத்தின் பொக்கிஷம்.
வண்டி கஜானா காம்பவுண்டுக்குள் சென்று, நின்றது.
மெதுவாக லேடிகள் கிழவரை இறக்கினான்உதவிக்கு வந்த பையன். அடுத்ததாக சின்ன குழந்தையும் இறங்கினார்.
இறங்கியவுடன், லேடிக்கிழவர் இந்த வருடம் அவருடைய நண்பர்கள் யாரெல்லாம் உயிரோடு இருக்கின்றார்கள் என்ற கணக்கை ஆரம்பித்துவிட்டார்.
இதுயாரு கொள்ளுப்பேரனா என உதவிக்கு வந்த பையனைக்கேட்டார்கள்.
“இல்ல . நாலு வீடு தள்ளி அந்தாண்டை இருக்கான். சப்ரெஜிட்ரர் பிள்ளை. துணைக்கு வந்திருக்கான்”.
இன்னொரு கிழம் சொன்னது,
“போடு சாம்பிராணி!
யாருக்கு யார் துணை. ?
நீ அவனுக்கு துணையா ,
அவன் உனக்கு துணையா? என கேலி செய்தது.
சின்ன குழந்தை அவருடைய செட் ஆட்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
இந்த போடு சாம்பிராணி என்ற பகடை இன்றைய நாளின், ஹாயத்தில் காணமுடியவில்லை. இது தஞ்சை ஜில்லாவுக்கான அழகு.
மஸ்டர் கொடுத்துவிட்டனர்.
வண்டியை பூட்டினான் வண்டிக்காரன்.
அரசாங்கம், ரிடையர்மெண்ட், வயது பற்றியெல்லாம் அப்பாவும் பிள்ளையும் கேலி பேசிக்கொண்டே வண்டியில் ஏறினார்கள். உதவிக்கு வந்த பையனும் ஏறிக் கொண்டான்.
வண்டி கிளம்பிற்று.
நல்ல மேற்கத்திய காளை. வண்டிக்குடமும் அழுத்தமான குடம்.
குடுகுடு வென ஓடியது.
இந்த கிழங்கள் வண்டியில் போகும் போதும், வண்டிக்காரனிடம் பேசிக்கொண்டே சென்றனர்.
அக்கால மனிதர்களின் கள்ளங்கபடமற்ற மனங்களில், எல்லாவிதமான மனிதர்களிடம் அன்பு செலுத்துவதும், பேசி பழகுவதிலும் ஆர்வமுள்ளவர்களாக இருந்தனர்.
இதனையும் தி.ஜா. அவரது எழுத்து நடையில் காண்பிக்கின்றார்.
மெயின் ரோட்டை கண்டால்தான், இந்த நகரத்து மாடுகளுக்கு ஜோர் உண்டாகுமாம். வண்டிக்காரன் அவன் வசனத்தை அள்ளி விட்டான்.
என்னப்பா விலை மாடு? லேடிக்கிழவர்.
முந்நூறு ரூபாய்ங்க
வண்டி .
இருநூற்றம்பைது .
பேஷ். இரண்டும் நல்ல அமைச்சல்,
லேடி புகழ்ந்தார்.
தீடீரென திருப்பத்தில் வண்டி குடை சாய்ந்தது.
“ஏலே, கொசப்பயலே,வண்டிய தூக்குடா. கூறுக்கெட்ட கொசப்பயலே” லேடி கிழவர் கத்திக்கொண்டே இருந்தார். மற்றவர்கள் துணையோடு எழுந்துவிட்டார்.
சின்ன குழந்தையும் லேசான காயங்களுடன் எழுந்துவிட்டார்.
உதவிக்கு வந்த பையன் கை தான்,
எலும்பு முறிந்துவிட்டது.
எல்லோரும் ஜெனரல் ஆஸ்பத்திரில
நின்றுக்கொண்டிருந்தனர்.
பையனுக்கும
,எக்ஸ்-ரே எடுக்க வேண்டுமாம்.
பையனுக்கு பிளாஸ்திரி போட்டு, கையை கழுத்தோடு கட்டிவிட்டனர்.
அடுத்த வண்டியில் வீட்டிற்கு அனைவரும் வந்திறங்கினர்.
அம்மா வாசலுக்கு ஓடிவந்தாள்.
இது என்னடா கோலம் என்று பதறினாள்.
உன்னுமில்லம்மா, சும்மா கத்தாதே.
பையனுக்கு லேசான எலும்பு முறிவு என்றார் லேடிக்கிழவர்.
எங்களோடு வந்தத்துக்கு,உனக்கு தண்டனையா, அம்மா புலம்பினாள்.
உடனே லேடிக்கிழவர், “மூணுமாசம் மெடிக்கல் லீவு போட்டுக்கோ என, லேடிக்கிழவர் அவரது அரசாங்க உத்யோக அறிவில் பேசினார்.
சரி தாத்தா என கூறிக்கொண்டே, துணைக்கு வந்த பையன் உடைந்த கையோடு வீட்டிற்கு போனான்.
யாருக்கு யார் துணை!!
இந்த கதை, மணிக்கொடி பத்திரிகையில் 1950ல் ,எழுதப்பட்டது.
இந்த இலக்கிய சித்திரம் நமக்கு ஒரு காலத்தின் மனிதர்கள், அவர்களுடைய வாழ்க்கை, மனிதாபிமானம், நையாண்டி மொழி,
தி.ஜா.வின் கூர்மையான பார்வை,
பெண்களின் நிலமை, வண்டிக்கார தலைமுறை, நீண்ட ஆயுளின் சாட்சியங்களென காட்சிகள் விரிந்துக்கொண்டே போகின்றன.
மெல்லிய சோகத்தோடு, கதையை வாசகர்களின் மனதில் ஆழமாக பதித்துவிட்டார் தி.ஜா.என்ற காலபெட்டக வித்தகர்.
-ஜெயானந்தன்
.
- தி.ஜா.வின் – நையாண்டி தர்பார்
- மழைபுராணம்-15
- விளக்கு இலக்கிய அமைப்பு – விருதுகள் வழங்கும்விழா