—-வளவ. துரையன்
அந்தக் கோயிலின்
உள் பிரகார மூலையில்தான்
அவனும் அவளும் சந்திக்கிறார்கள்
ஓர் ஆறு மாதகாலமாக
புறாக்களைப் போல
எப்போதும் குசு குசுவென்று
ரகசியப் பேச்சுகள்தாம்
சிறு சிறு முறுவல்கள்
லேசான தொடுகைகள்
இப்பொழுது
ஒரு வார காலமாய்
அவளிருந்தாள்
அவனில்லை
அடுத்த வாரம்
அவன் இருக்க
அவளைக் காணோம்
எல்லாவற்றையும் கண்விழித்து
எப்போதும் பார்த்த
அகல் விளக்குகள் அழுதன
கோயில் யானையோ
தலையாட்டிக்கொண்டு
சிரித்தது.
- கவிதைகள்
- போராளி
- நந்தி
- ட்ரம்பின் புத்தாண்டு பரிசு 2026…
- யானை சிரித்தது
- மழைபுராணம் -16
- பச்சா பாசி அத்தியாயம் எட்டு
- விளக்கு விருதளிப்பு விழா காட்சிகள்
- விளக்கு இலக்கிய அமைப்பு (அமெரிக்கா) புதுமைப்பித்தன் நினைவு விருதுகள் வழங்கும் நிகழ்வு!
- விளக்கு இலக்கிய அமைப்பு – நுண்கலைப்பிரிவில் ஓவியத்திற்காக விருது பெறும் ஓவியர் சந்ரு
- விளக்கு இலக்கிய அமைப்பு – புனைவு விருது பெறும் எம்.கோபாலகிருஷ்ணன்
- விளக்கு இலக்கிய அமைப்பு – புனைவிலி விருது பெரும் தமிழவன்
- கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் கலந்துரையாடல்