-துவாரகன்
அயற்சியால் வந்த
கனவிலிருந்து விழித்தெழுந்தார்.
நினைவினூடே நடந்தார்.
நக்கீரரால் பொற்கிழி மறுக்கப்பட்ட ஏமாற்றம்
அவரைப் பொசுக்கிவிட்டது.
குடிகாரன் நிலையில்
தள்ளாடி நடந்தவர் முன்னால்
அதிசயமாக…
காலடியில் கிடந்தது
பொற்கிழிமுடிச்சு.
அன்றிலிருந்து
அவரின்
துரைத்தனக் கனவு நிறைவேறியது.
இனி
நினைவில் இருந்த
இரண்டுவரிக் கவிதைகூட
அவருக்குத் தேவைப்படாது.
அவர் துரை.
- கொடை
- படைப்பும் படைப்பாளியும்
- மனம் போல் வாழ்வு
- சூதாட்டமாக மாறிய தேர்தல் களம் – மக்கள் வெறும் கருவேப்பிலை தான்
- தீரா காதல்…
- ஒரு வன பரப்பில்,பல மரங்கள் …
- “இந்தியாவின் சரக்கு பெட்டகப் புரட்சி: சீனாவின் ஆதிக்கத்திற்குப் பதிலடி கொடுக்குமா CMAS திட்டம்?”
- தருமிமுன் அறுந்துவிழுந்த பொற்கிழி முடிச்சு
- ‘அரண்மனை மியூசியம்’ நாவல் வெளியிடப் பட்டது
- மழைபுராணம் – 18
- இடைவெளி….