மழை அவனை கேள்வி கேட்டது
காலை ஐந்து நாற்பது
ஈரம் தடவிய காற்று
பேருந்துக்குள் எத்தனை நுட்பமாக பேசுகிறது
ஓரிரண்டு மழைத்துளி வட்டங்கள்
முகத்தில் மோதின
அவை மனிதனைக் கேட்டன
“புவியின் பிரம்மாண்டமான சாட்சியமான இக்காற்று
அனுபவிக்கும் நீ
காற்றுக்கு பிரதியுபகாரமாய்
என்ன தந்திருக்கிறாய்-
உன் மூக்கின் இரு துளைகள் தவிர?”
***