சொல்லாத சொற்கள்

 

உதடுவரை வந்து

திரும்பிப் போன சொற்கள்

எல்லோருக்கும் உண்டு

 

காதலைச் சொல்லவோ

கடன் கேட்கவோ

வேலை கேட்கவோ

மன்னிப்புக் கேட்கவோ

என எத்தனையோ

இயங்குதள பேதங்கள்

கொண்டவை அவை

 

நஷ்டத்தை மட்டுமன்றி

சமங்களில் லாபம் தந்து

உறவு காத்தல்

நாகரிகம் பேணல்

பொறுமைக்கான

அடையாளம் சேர்த்தல்

எனப்பல

பரிமாணங்கள் கொள்கின்றன

அந்தச் சொல்லாத சொற்கள்

 

அதன் விலை

சிலர் வாழ்கையையே

பலியிடும்

ஆனாலும் சொல்லாத சொற்களுக்கு

சொன்ன சொற்களைவிட

நன்மதிப்பு இருக்கத்தான் செய்கிறது !

 

Series Navigationஒரு சொட்டுக் கண்ணீர்அதிகாரம்