கிறுக்கல்கள்

பூப்போலத் தூங்குமென்னை

பூகம்பமாய் எழுப்பியது…

இன்று போய்

நாளை வாருங்களென்றே

என் உறக்கத்தை உடுத்திக் கொண்டேன்.

தூக்கத்திலே மொட்டுவிட்ட வரிகள்

அதிகாலையில் துகிலுரித்துக் கிடந்தன

வெந்நீரில் விழுந்து விட்ட கிருமியாய்

சொற்கள் கரைந்தே போயின

வெள்ளம்போல் பொங்கி வந்த பாட்டு

விடிந்ததும் வடியக் கண்டேன்

வெங்காயம் போல் உரித்து வந்த கற்பனை

வெந்தயம் போல் கசக்கக் கண்டேன்

பசுமையிலே ஓரிரவு பறிபோனாலும்

இன்பா

நளினமாய் வருவதை

இப்போதெல்லாம்

நசுக்கிடாமல் பேனாமுட்களில்

கோர்த்துக் கொள்கிறேன்

பொங்கிவரும் கவிதை

பொசுங்கிவிடாமல்…

Series Navigationஏன்?சிற்றிதழ் அறிமுகம் : சங்கு