தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 ஜனவரி 2021

அமீதாம்மாள் படைப்புகள்

முகநூலில்…

அந்த சமூகமன்றத்தின் சாதாரண உறுப்பினன் நான் மக்களுக்காக வாழ்ந்த மகத்தான தலைவனின் நினைவுநாள் நிகழ்ச்சிக்கு மூவாயிரம் திரட்டி முதியோர் இல்லத்திற்கு தரும் ஏற்பாடுகள் நடந்தன நினைவு நாள் அன்று தலைவர் நிதியளித்தார் பெற்றுக்கொண்டார் இல்ல நிர்வாகி நிகழ்ச்சி முடிந்தது அந்த நிர்வாகியை நெஞ்சோடு அணைத்து நிழற்படம் எடுத்தேன் ‘முதியோர் இல்ல நிதியளிப்பு விழாவில் நானும் அதன் [Read More]

யாருக்கு சொந்தம்

அங்காடித் தெருவில் அனாதையாகக் கிடக்கிறது ஐம்பது வெள்ளி பார்த்தான் ஒருவன் பறந்து எடுத்தான் வேறொருவன் ‘என் காசு’ என்றான் பார்த்தவன் ‘இல்லை அது என் காசு’ என்றான் எடுத்தவன் அடாவடிப் பேச்சு அடிதடியில் முடியலாம் ‘ஆளுக்குப் பாதியே நியாயம்’ என்றான் இன்னொருவன் ‘முடியாது நீ முடிந்ததைப் பார்’ எடுத்தவன் ஓடுகிறான் பார்த்தவன் விரட்டுகிறான் ‘அம்மா… அம்மா… அடிக்கா [Read More]

மாலையின் கதை

மாலை ஒன்று வாங்கினேன் வரிசை வரிசையாய் மல்லிகை ‘வணக்கம் வணக்கம்’ என்றது ரோஜாக்கள் சுற்றி வந்து ‘ஆரத்தி’ என்றது நாணில் கொத்துப் பூக்கள் ‘நலமா..நலமா..’ என்றது அதன் மோகனப் புன்னகையில் நான் மேகமென மிதந்தேன் மாலையில் ஒரு விழா… தலைவரின் கழுத்தில் மாலையைத் தவழவிட்டு ‘வாழ்க தலைவர்’ என்றேன் விழா முடிந்தது வீடு திரும்பினேன் யாரது கூப்பிட்டது? திரும்பிப் பார்த்தேன். கோணிச் [Read More]

தலைமுறை இடைவெளி

எனக்கும் என் மகனுக்குமிடையே அரைநூற்றாண்டு இடைவெளி அப்பா-மகன், குரு-சீடன் இப்படித்தான் நாங்கள் குருவாக அப்பாவாக என்மகன் எங்கள் மல்லிப்பூ உரையாடலில் முட்கள் இருந்ததில்லை கின்னஸ்களில் அவர் வாழ்க்கை கிண்ணத்தில் என் வாழ்க்கை போயிங்கில் அவர் பயணம் பொட்டு வண்டி என்பயணம் அவரின் ரசிகர்கள் மின்மினிகள் என் ரசிகர்கள் மினுக்கட்டான்கள் அவரின் அசைவுகளுக்கு  [Read More]

ஒப்பீடு ஏது?

முகில்கள் மறைத்த பாதி நிலா உன் கவச முகம் இடைவெளி தேவையாம் பறவையின் சிறகுகளாய் நாம் இனி அவர்கள் பார்ப்பது உடல் உஷ்ணம் காதல் உஷ்ணம் பார்த்திருந்தால் தெறித்திருக்கும் வெப்பமானி தூறலும் வானவில்லும் தனித்தனி அல்லவே ஒன்றும் ஒன்றும் இரண்டு சிலருக்கு பதினொன்று சிலருக்கு பெருக்கல் நமக்கு நாவலாகக் கிடைத்தாய் அட்டைப் படத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறேன் எப்போது [Read More]

பாலா

எஸ் பி பி மூன்றெழுத்தா? முத்தமிழா? ஆயிரம் நிலாக்களை அழைத்து வந்தாய் அத்தனைக்கும் எப்படி அமாவாசை? பொத்தி வச்ச மல்லிகை மொட்டு கருகியது நியாயமோ? என் மின்னல் எங்கே? தேடுகிறது இடி என் வானவில் எங்கே? தேடுகிறது தூவானம் ஒரு தாலாட்டு நின்றது உலகெங்கும் அழுகின்றன குழந்தைகள் குயில்களுக்கு குரல் தந்துவிட்டு துயில் கொண்டது நியாயமோ? ஒரு கடல் எப்படி கண்ணாடிக்குள்? உன் நாவில் [Read More]

தொலைத்த கதை

விதையிலிருந்து பிறந்தோம் உமிகளைத் தொலைத்துவிட்டோம் நம் மரப்பாச்சி பொம்மைகளைக் கறையான் தின்றுவிட்டது மழலையைத் தொலைத்துவிட்டோம் புத்த்க மூட்டைகளில் நம் மயிலிறகைத் தொலைத்துவிட்டோம் ‘ஒரே ஒரு ஊருல ஒரே ஒரு ராசா…….’ நாம் சொன்ன கதைகளின் ராசாராணிகள் எங்கோ அனாதைகளாய் அலைகிறார்கள் பாரம்பரியம் தொலைத்துவிட்டோம் மண் தொட்டிகளில் வாழைக்கன்றுகள் நிலங்களைத் [Read More]

பேச்சுப் பிழைகள்

சில பேச்சுக்கள் கருக்களைக் கலைக்கும் கரும்புக்காட்டை எரிக்கும் என் பேச்சு கூட பல சமயங்களில் மணவீட்டில் அழுதிருக்கிறது மரணவீட்டில் சிரித்திருக்கிறது நிராயுதபாணியைத் தாக்கியிருக்கிறது சிலரை நிர்வாணமாக்க முயன்று என்னையே நிர்வாணமாக்கியிருக்கிறது என் நாட்காட்டியின் இன்றைய தாளையே கிழித்திருக்கிறது என் எழுத்தையே அமிலமாய் எரித்திருக்கிறது அவிழ்க்க வேண்டிய [Read More]

ஒரு சொல்

என் கவிதைகளின் விதையாக ஒரு சொல் சூரியனிடம் கைகுலுக்கிவிட்டு சாம்பலாகாமல் திரும்பியது ஒரு சொல் என் தூக்கம் தின்று உயிரை மென்று உதிர்ந்த நட்சத்திரமாய் வந்து உட்கார்ந்தது ஒரு சொல் நிலவின் கரைகளைக் கழுவிவிட்டு வந்தது ஒரு சொல் கடலின் ஆழத்தோடு கதைபேசி மீண்டது ஒரு சொல் மேகத்துண்டாக வானவில்லோடு வந்தது ஒரு சொல் ஆவியாகி மீண்டு மழையாக இறங்கி ‘நலம்’ கேட்டது ஒரு சொல் [Read More]

ஆசைப்படுவோம்

விழிகள் நாடாக இமைகள் நாமாவோம் தேசியநாள் இன்று இப்படித்தா னென்று ஆசைப்படுவோம் ஆகும் பொருளாதாரங்கள் புடைத்து நிமிரும் நாள் பாச வீணைகள் பந்தம் இசைக்கும் நாள் சூழும் பகையாவும் சொடுக்கில் விலகும் நாள் தனிமை முகில்களை விமானத் தோழிகள் தழுவும் நாள் புண்ணகை யாவும் புன்னகை ஆகும் நாள் வானமகள் வாழ்த்திசைக்க வான்குடைகள் ஆடும் நாள் ஏனென்ற கேள்விக்குறியின் இடுப்பு நிமிரும் [Read More]

 Page 1 of 11  1  2  3  4  5 » ...  Last » 

Latest Topics

பல்லுயிர் ஓம்பல்

வறுமையில் இருக்கும் என்வயிற்றைக் [Read More]

மொழிபெயர்ப்பு கவிதைகள் – ஜரோஸ்லவ் செய்ஃர்ட்

மொழிபெயர்ப்பு கவிதைகள் – ஜரோஸ்லவ் செய்ஃர்ட்

மூலம்  : ஜரோஸ்லவ் செய்ஃர்ட் ஆங்கிலம் : [Read More]

மாசறு பொன்னே

குணா (எ) குணசேகரன் இடிக்கும் கேளிர் நுங்குறை [Read More]

மூட முடியாத ஜன்னல்

எங்கேகின வெளியில் புறாக்கள்? சப்திக்கிறதே [Read More]

நான்கு கவிதைகள்

    பின்புலம் பற்றற்ற வாழ்வைத் தாருமென [Read More]

புதியனபுகுதல்

ஜனநேசன் இரவு ஏழுமணி இருக்கும் .கிழக்கு [Read More]

கவிதையும் ரசனையும் – 9

கவிதையும் ரசனையும் – 9

அழகியசிங்கர்             [Read More]

Popular Topics

Archives