தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

9 டிசம்பர் 2018

ரிஷி படைப்புகள்

கண்காட்சி

கண்காட்சி

ஒருவிதத்தில் அதுவுமோர் அருவவெளிதான்…. அந்த விரிபரப்பெங்கும் அங்கிங்கெனாதபடி அலைபாய்ந்துகொண்டிருக்கின்றன ஆட்கொல்லிப் புகைப்படக்கருவிகள், அனுமதியின்றியே ஸெல்ஃபியெடுக்கும் கைபேசிகள், வாயைக் கிழித்துப் பிளப்பதாய் நீட்டப்படும் ஒலிவாங்கிகள்….. போர்க்கால நடவடிக்கையாய், பேசு பேசு பேசு….’ என்று அவசரப்படுத்திக்கொண்டேயிருக்கின்றன அத்தனை காலமும் பொதுவெளியில் [Read More]

கோதையும் குறிசொல்லிகளும்

கோதையும் குறிசொல்லிகளும்

  ஊர்ப்பெண்களின் பிறப்பை, ஒழுக்கத்தையெல்லாம் கேள்விக்குறியாக்குவதே பாரிய தீர்வுபோலும் பிரச்சனைகளுக்கெல்லாம். பேர்பேராய் கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள். மாதொருபாகனை One Part Woman என்றா லது மிகப்பெரிய பெண்விடுதலை முழக்கமல்லோ. ராவணனே பரவாயில்லை யென்று ஜானகி  நினைத்ததாக முற்பிறவியில் அசோகவன மரமாயிருந்து சீதையின் மனதிற்குள் கிளைநீட்டி ஒட்டுக்கேட்டதாய் புட்டுப்புட்டு [Read More]

இரவு

இரவு

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) வலியின் உபாதை யதிகமாக முனகியபடி புரண்டுகொண்டிருக்கும் நோயாளிக்கு இரவொரு பெருநரகம்தான். மறுநாள் அதிகாலையில் கழுமேடைக்குச் செல்லவுள்ள கைதிக்கு கனவுகாண முடியுமோ இரவில்…. தெரியவில்லை. எலும்புருக்கும் இரவி லொரு முக்காலியில் ஒடுங்கியபடி தொலைவிலுள்ள தன் குடும்பத்தை இருட்டில் தேடித் துழாவும் கண்களோடு அமர்ந்திருக்கும் காவலாளிக்கு [Read More]

அன்பின் ’காந்த’ ஈர்ப்பு

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) உயிர்த்திருந்த நாளில் அவர் தன் சடாமுடியில் ஆகாயகங்கையாய் சூடிக்கொண்டாடியவள் இன்று அந்திமக்காலத்தில் அமைதியாய் தன்வழியில் போய்க்கொண்டிருக்கிறாள்….. அன்பின் பெயரால் தன்னை ஒப்புக்கொடுத்தவரிடம் என்றும் அன்பை மட்டுமே யாசித்திருந்தாள். அவருடைய அரைக்காசுக்கும் உரிமைகொண்டாட வழியற்ற தன் நிலைக்காய் வருந்தியதேயில்லை யவள். பார்புகழும் [Read More]

வழி

வழி

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) நானோடு நான் போய்க்கொண்டிருக்கிறேன். தொலைந்துபோன கைப்பேசிக்குள் சிலவும் செயலிழந்துபோன கைப்பேசிக்குள் சிலவுமாய் கண்காணிப்புக்காமராக்கள் காலாவதியாகிவிட்டன. எல்லாநேரமும் என்னைப் பின் தொடர்ந்துகொண்டிருந்த உளவாளிக் குறுஞ்செய்திகள், கண்றாவி விளம்பரங்கள், கையறுநிலைக்குத் தள்ளும் வந்த வராத அழைப்புகள், பார்த்த மாத்திரத்திலேயே பிச்சைக்காரியாக [Read More]

வலி

வலி

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) நடுமுதுகில் நிலைகொண்டிருக்கிறது வலி. ‘இங்கே – இன்றுதான் நிஜமான நிஜம்’ என்று Thich Nhat Hanh திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டேயிருப்பது எரிச்சலூட்டுகிறது எனது காலத்தின் நீளத்தை யாராலும் கத்தரித்துவிட முடியாது. காலத்தால்கூட. வலியை வானிலை அறிக்கையாக்கி ‘மேலோ அல்லது கீழோ நகரக்கூடும்; அதிகமாகலாம் அல்லது குறையலாம் என்று வேடிக்கையாய் எனக்கு நானே [Read More]

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதை

1. அமரத்துவம் வேண்டுமென்றே அழுக்குப் பிசுபிசுப்புப் படிந்த கந்தல்துணியை எடுத்து அந்த பிரம்மாண்டத்தின் மீது போர்த்துகிறார்கள். உன்னதத்திற்கே யுரிய இன்னிசை அந்த ழுக்குப் பொதிக்குள்ளிருந்து சன்னமாகக் கேட்கத் தொடங்குகிறது. கண்ணன் புல்லாங்குழலைக் கேட்டுக் கிறங்கிய கால்நடைகளாயன்புமிக அருகேகியவர்களை அடித்துத் துன்புறுத்தித் துரத்தியோடச் செய்வதாய் சொற்களைக் [Read More]

உறவு என்றொரு சொல்……

உறவு என்றொரு சொல்……

ஒரு பந்து போனால் இன்னொரு பந்து; ஒரு பம்பரம் போனால் இன்னோன்று. ஒரு சொப்பு போனால் இன்னொரு சொப்பு; ஒரு பொம்மை போனால் இன்னொன்று. குழந்தைகளைப்போல சில பெரியவர்களுக்கு உறவுகள்…… ஒரு கிச்சா போனால் இன்னொரு கிச்சா; ஒரு மச்சான் போனால் இன்னொரு மச்சான். மிச்ச சொச்ச உறவுகளும் கிடைக்கும் சந்தைகளும் உண்டு. நீத்தாருக்காக அழ நேரமில்லை. நினைவைத் தொழுவது நவீனத்துவமில்லை. முகநூல் பக்க [Read More]

அதிகாரப்பரவல்

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) அதிகாரபூர்வமான அதிகாரமுள்ளவர்களின் அதிகாரக்குரலை எதிர்த்தெழும் அதிகாரபூர்வமான அதிகாரமற்றவர்களின் அதிகாரக்குரலும் அதேயளவு அதிகாரமாய் அதி காரமாய் அதி (வி)காரமா யொலித்து விதிர்த்துப்போகச் செய்கிறது.  கருத்துச்சுதந்திரத்திற்குக் குரல்கொடுத்துக்கொண்டே குரல்வளை நெரிக்கக் கையுயர்த்தும் குரல்களின் நிலவறைகளில் நிரம்பிவழிகின்றன [Read More]

திறனாய்வு

திறனாய்வு

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)     கத்திரிக்கோல் அல்லது பிளேட் அல்லது பிச்சுவாக்கத்தி அல்லது வீச்சரிவாள்…. அவரவர் வசதிக்கேற்றபடி ஆங்காங்கே வாலுடன் வளையவந்துகொண்டிருந்த இருகால் விலங்கினங்களை விரட்டத் தொடங்கினர். .’நாலேயங்குலம்தான் வால் இருக்கவேண்டு’ மென்றார் ஒரு விமர்சகர். ’இல்லை, மூன்றுதான்’ என்றார் இன்னொருவர். ’மும்மூன்று ஒன்பது அங்குலம்’ என்று தன் வாதத்திற்கு [Read More]

 Page 4 of 10  « First  ... « 2  3  4  5  6 » ...  Last » 

Latest Topics

சுப்ரமணிய பாரதி – ஆவணப்  படம்

சுப்ரமணிய பாரதி – ஆவணப் படம்

அன்பார்ந்த நண்பர்க்கு, வணக்கம். மகாகவி [Read More]

பாண்டிச்சேரியில் கவர்னர் கிரண்பேடி

பாண்டிச்சேரியில் கவர்னர் கிரண்பேடி

பொழுதுபோகாத சமயங்களில் பாண்டிச்சேரியில் [Read More]

மதிமுக-விசிக-ரஞ்சித் தகராறின் உண்மை பிரச்சினை என்ன?

மதிமுக-விசிக-ரஞ்சித் தகராறின் உண்மை பிரச்சினை என்ன?

ராஜசங்கர் மதிமுக-விசிக-ரஞ்சித் தகராறின் [Read More]

துணைவியின் இறுதிப் பயணம் – 2

துணைவியின் இறுதிப் பயணம் – 2

  அமர கீதங்கள்   என் இழப்பை உணர், ஆனால் போக [Read More]

மஞ்ஞைப் பத்து

மஞ்ஞை என்றால் மயில் என்று பொருள். [Read More]

பருப்பு உருண்டை குழம்பு

பருப்பு உருண்டை குழம்பு

தேவையானவை – உருண்டை செய்ய: கடலைப்பருப்பு [Read More]

முகலாயர்கள் இந்தியர்களல்லர்.

முகலாயர்கள் இந்தியர்களல்லர்.

பி எஸ் நரேந்திரன் “முகலாயர்கள் [Read More]

சிதைக்கப்பட்ட இந்திய வரலாறு

பி எஸ் நரேந்திரன் இந்தியப் பள்ளி, கல்லூரி [Read More]

கிள்ளைப் பத்து

இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களிலும் [Read More]

Popular Topics

Archives