தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

14 ஜூலை 2019

ரிஷி படைப்புகள்

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்….

ஏழு கடல் ஏழு மலை தாண்டி யொரு குகைக்குள்ளிருந்த இறக்கைகள் வெட்டப்பட்ட கிளியின் குடலுக்குள் இருந்த ரகசியத்தின் பாதுகாப்பைப் பற்றி எனக்கென்ன கவலை யென்றிருந்தான் எத்தனாதி யெத்தனொருவன்_ என்னென்னமோ தகிடுதித்தங்களைத் தொடர்ந்து செய்தபடி. மனுஷ ரூபத்தில் வந்த தெய்வம் கிளிக்கு ஒரு லாப்-டாப்பை மட்டும் கொடுக்க_ கூகிள்-சர்ச்சில் தேடி தன் குடலுக்கு பாதிப்பில்லாமல் கிழித்து [Read More]

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

ஊருக்கு உபதேசம் நாவடக்கம் வேண்டும் நம்மெல்லோருக்கும்.  ஆபத்தானவர்கள் அவரவர் கோபுரத்துள் அமர்ந்தபடி அக்கிரமக் கருத்துரைத்து அமைதியிழக்கும் ஊருக்காகவும் அடிபட்டுச் சாவும் சகவுயிர்களுக்காகவும் கவனமாய் ’க்ளோசப்’ பில் கண் கலங்குபவர்கள்.  புதிர்விளையாட்டு. காயம்பட்ட ஒருவரை ஸ்ட்ரெச்சரில் ஏந்தி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதற்கும் பாடையில் தூக்கி [Read More]

வழக்கு

வழக்கு

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) இல்லையென்பதற்கும் பார்த்ததில்லை யென்பதற்கும் இம்மிக்கும் பலமடங்கு மேலான வித்தியாசம்……. எனவே இன்னொரு முறை சொல்லச் சொல்லிக் கேட்டேன். குருவி என்று எதுவும் கிடையாது என்றார் திரும்பவும். இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர். புத்துசாலிதான்….. குருவியைப் பார்த்ததில்லை யென்றால் புரிந்துகொள்ளலாம். குருவியென்று எதுவுமே இல்லையென்றால்….. படங்களைக் [Read More]

இட்ட அடி…..

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) ஒரேயொரு அடி_ செத்துவீழ்ந்தது கொசு; சிலிர்த்தகன்றது பசு. சரிந்துவிழுந்து படுத்த படுக்கையானார் தெரிந்தவரின் சகோதரி. சிரிப்பாய்ச் சிரித்துவிட்டது கவியின் பொய். ’அய்’ ஆனது ‘ய்’ செல்லம் பெருகியது வெள்ளமாய். உணரமுடிந்தது உயிர்த்துடிப்பை. உள்வாங்கும்படியாகியது நச்சுக்காற்றை. உற்றுப்பார்க்க முடிந்தது நேற்றை ஒளிந்திருப்பது சிறுமியா காலமா என் [Read More]

அவரவர் – அடுத்தவர்

அவரவர் – அடுத்தவர்

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) ‘ஆவி பறக்கக் காப்பியருந்தினேன்’ என்று அதிநவீனமா யொரு வரி எழுதியவர் ‘அருமையின் அரிச்சுவடியும் அகராதியும் இஃதே’ என்று ஆட்டோகிராஃப் இட்டு முடித்தபின் தன் வலியை உலகக்கண்ணீராகப் புலம்பினால் கவிதையாகிடுமாவென அடுத்தகவியை இடித்துக்காட்டி ‘நிலம் விட்டு நிலம் சென்றாலும் நகம்வெட்டித்தானேயாகவேண்டும்’ என்று தன் கவிதையின் இன்னுமொரு வரியை [Read More]

கேள்வி – பதில்

கேள்வி – பதில்

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)   ஊரெல்லாம் ஒலிபெருக்கிகள் விதவிதமாய் உள்ளங்கைகளிலெல்லாம் தாயக்கட்டைகள் உருட்டத்தோதாய்…   வெட்டாட்டம் கனஜோராய் நடைபெறும் விடையறியாக் கேள்விகளோடு….   சுமையதிகமாக  உணரும் கேள்வியே தாங்கிக்கல்லுமாகும்!   சிறிதே வாகாய்ப் பிரித்துப்போட்டால் போதும் ஸோஃபாவாகி அமரச் சொல்லும்!   சரிந்தமர்ந்தால் தரையில் முதுகுபதித்து இளைப்பாற முடியும்!   [Read More]

கண்காட்சி

கண்காட்சி

ஒருவிதத்தில் அதுவுமோர் அருவவெளிதான்…. அந்த விரிபரப்பெங்கும் அங்கிங்கெனாதபடி அலைபாய்ந்துகொண்டிருக்கின்றன ஆட்கொல்லிப் புகைப்படக்கருவிகள், அனுமதியின்றியே ஸெல்ஃபியெடுக்கும் கைபேசிகள், வாயைக் கிழித்துப் பிளப்பதாய் நீட்டப்படும் ஒலிவாங்கிகள்….. போர்க்கால நடவடிக்கையாய், பேசு பேசு பேசு….’ என்று அவசரப்படுத்திக்கொண்டேயிருக்கின்றன அத்தனை காலமும் பொதுவெளியில் [Read More]

கோதையும் குறிசொல்லிகளும்

கோதையும் குறிசொல்லிகளும்

  ஊர்ப்பெண்களின் பிறப்பை, ஒழுக்கத்தையெல்லாம் கேள்விக்குறியாக்குவதே பாரிய தீர்வுபோலும் பிரச்சனைகளுக்கெல்லாம். பேர்பேராய் கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள். மாதொருபாகனை One Part Woman என்றா லது மிகப்பெரிய பெண்விடுதலை முழக்கமல்லோ. ராவணனே பரவாயில்லை யென்று ஜானகி  நினைத்ததாக முற்பிறவியில் அசோகவன மரமாயிருந்து சீதையின் மனதிற்குள் கிளைநீட்டி ஒட்டுக்கேட்டதாய் புட்டுப்புட்டு [Read More]

இரவு

இரவு

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) வலியின் உபாதை யதிகமாக முனகியபடி புரண்டுகொண்டிருக்கும் நோயாளிக்கு இரவொரு பெருநரகம்தான். மறுநாள் அதிகாலையில் கழுமேடைக்குச் செல்லவுள்ள கைதிக்கு கனவுகாண முடியுமோ இரவில்…. தெரியவில்லை. எலும்புருக்கும் இரவி லொரு முக்காலியில் ஒடுங்கியபடி தொலைவிலுள்ள தன் குடும்பத்தை இருட்டில் தேடித் துழாவும் கண்களோடு அமர்ந்திருக்கும் காவலாளிக்கு [Read More]

அன்பின் ’காந்த’ ஈர்ப்பு

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) உயிர்த்திருந்த நாளில் அவர் தன் சடாமுடியில் ஆகாயகங்கையாய் சூடிக்கொண்டாடியவள் இன்று அந்திமக்காலத்தில் அமைதியாய் தன்வழியில் போய்க்கொண்டிருக்கிறாள்….. அன்பின் பெயரால் தன்னை ஒப்புக்கொடுத்தவரிடம் என்றும் அன்பை மட்டுமே யாசித்திருந்தாள். அவருடைய அரைக்காசுக்கும் உரிமைகொண்டாட வழியற்ற தன் நிலைக்காய் வருந்தியதேயில்லை யவள். பார்புகழும் [Read More]

 Page 5 of 11  « First  ... « 3  4  5  6  7 » ...  Last » 

Latest Topics

நுரைகள்

மஞ்சுளா , மதுரை கூடாரங்கள் போட்டு [Read More]

குழந்தைகளும் கவிஞர்களும்

குழந்தைகளும் கவிஞர்களும்

test லதா ராமகிருஷ்ணன் உங்களால்  [Read More]

ரேகை : சுப்ரபாரதிமணியனின் நாவல் :

பேரா.க இராமபாண்டி நாவல்கள், எழுத்து மூலம் [Read More]

ஜே.பிரோஸ்கானின் ‘மீன்கள் செத்த நதி” குறித்து சில பதிவுகள்

மஞ்சுளா. ஒரு கவிதை தொகுப்பை நெருங்குவதற்கான [Read More]

மனக்குருவி

வைதீஸ்வரன் கவிதைகள்
1961- 2017….

லதா ராமகிருஷ்ணன் (*350க்கும் மேற்பட்ட [Read More]

சரித்திர புத்தர்

மஞ்சுளா  காலம் காலமாய் போதி மரங்கள் தவம் [Read More]

நாடகம் நடக்குது

கௌசல்யா ரங்கநாதன்             —– [Read More]

Popular Topics

Archives