author

தமிழ் ஸ்டுடியோ லெனின் விருது 2014 – காணொளி (Video)

This entry is part 1 of 26 in the series 7 செப்டம்பர் 2014

நண்பர்களே ஆகஸ்ட் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு, சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடைபெற்ற தமிழ் ஸ்டுடியோவின் 2014ஆம் ஆண்டுக்கான லெனின் விருது வழங்கும் விழாவின் காணொளியை இந்த இணைப்பில் கொடுத்துள்ளோம். அவசியம் பாருங்கள். வெளிநாடுகளில் வாழும் பல்வேறு நண்பர்கள், தமிழ் ஸ்டுடியோவின் நிகழ்வுகளை குறைந்தது இணையத்தில் ஏற்றுங்கள் என்று பல முறை சொல்லியும், ஒளிப்பதிவு செய்யும் வசதி இல்லாததால் செய்யமுடியவில்லை. ஆனால் இந்தமுறை லெனின் விருது வழங்கும் விழாவை ஒளிப்பதிவு செய்து, […]

குரல்

This entry is part 1 of 26 in the series 7 செப்டம்பர் 2014

ஷைன்சன்   எனது குரல் எதுவென்று மறந்து போயிற்று எனக்கு. என் குரலில் தான் பேசிக் கொண்டிருக்கிறேனா, இல்லையென்றால் வேறு யாருடைய குரலிலாவது பேசிக் கொண்டிருக்கிறேனா என்ற சந்தேகம் வெகுநாட்களாக இருக்கிறது. அதிலும் நேற்று அவள் என் தோளில் சாய்ந்து கொண்டு, “உங்கிட்ட எனக்குப் பிடிச்சது உன் குரல் தான்” என்ற போது பயம் மனதில் பீறிட்டுக் கிளம்பியது. ஒரு வேளை இந்தக் குரல் என்னுடையதாக இல்லாவிட்டால்?   கல்லூரியில் குரல்வித்தை, அதுதான் மிமிக்ரி செய்ய ஆரம்பித்தேன். […]

பேசாமொழி 21வது இதழ் வெளியாகிவிட்டது…

This entry is part 1 of 26 in the series 7 செப்டம்பர் 2014

நண்பர்களே, தமிழில் மாற்று சினிமாவிற்காக வெளியாகும், தமிழ் ஸ்டுடியோவின் இணைய இதழான பேசாமொழியின் 21வது இதழ் வெளியாகிவிட்டது. பேசாமொழி மாதமிருமுறை இதழாக வெளிவந்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் 3ஆம் தேதி, மற்றும் 16ஆம் தேதிகளில் பேசாமொழி இதழ் வெளியாகிக்கொண்டிருக்கிறது. பேசாமொழி இதழை முழுக்க முழுக்க இணையத்தில் இலவசமாக படிக்கலாம். பேசாமொழி இதழ் அச்சில் வெளிவரவில்லை. இணையத்தில் மட்டுமே படிக்க முடியும். பேசாமொழி இதழை படிக்க: http://pesaamoli.com/index_content_21.html   பேசாமொழி இந்த இதழில்: ————————————————- 1. ஸ்டீபன் ஸ்பீல்பர்க்கின் ‘மியூனிக்’ […]

அவருக்கென்று ஒரு மனம்

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

கோ. மன்றவாணன் அலைபேசி அழைத்தது. பட்டனை அழுத்திக் காது கொடுத்தேன். நீலகண்டன் பேசினார். “ஒங்க வீட்டு முகவரிய கொஞ்சம் சொல்லுங்க” “எதுக்குங்க அய்யா” “ஒண்ணுமில்ல… ஒரு அழைப்பிதழ் வைக்கணும்” “எங்க இருக்கிறீங்க?” “ஒங்க பகுதியிலதான் ஆர்கேவி தட்டச்சுப் பயிலகத்துக்கிட்ட நிக்கிறேன்.” “அங்கேயே நில்லுங்க. நான் வரேன்” “முகவரிய சொல்லுங்க. நான் வந்துடுறேன்” “இல்லல்ல.. இந்த இரவு நேரத்துல என்வீட்ட கண்டுபிடிக்கிறது கஷ்டம். நானே வரேன்” அய்ந்து நிமிடங்களில் அந்த இடத்துக்குச் சென்றேன். வட்டமான முகத்தில் முறுக்கிவிட்ட அடர்த்தியான […]

கற்றுக்குட்டிக் கவிதைகள்

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

  கற்றுக்குட்டி   கவலை   பாழாய்ப்போன அணில்! நான் வியர்வை சிந்தி நட்டு, நீரூற்றி வளர்த்து, நாளும் பார்த்துப் பூரிக்கும் பப்பாளி மரத்திலிருந்து அரைப் பழமாக இருக்கும்போதே பறித்துக் கொறித்துப் போடுகிறது. எனக்கிரண்டு பழம் வாய்த்தால் அது மூன்று பிடுங்கிக்கொள்கிறது.   நகரத்து அணில், பகலிலும் தைரியமாக வருகிறது. என் கம்பும் கூச்சலும் பொருட்டில்லை. என் வருகை கண்டால் நிதானமாக இறங்கி, மதிலிடுக்கில் ஓடி அடுத்த வீட்டுக் காம்பவுண்டில் அடைக்கலம்.   இப்போது இரண்டு பழங்கள் […]

கவிஞர் நெப்போலியனின் ” காணாமல் போன கவிதைகள் ” நூலுக்கு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் – ஆனந்தபவன் மு.கு. இராமச்சந்திரா 2014ம் ஆண்டுக்கான புத்தகப்பரிசு

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

எழுத்தாளர் திரைப்படப்பாடலாசிரியர் கவிஞர் நெப்போலியனின் ” காணாமல் போன கவிதைகள் ” நூலுக்கு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் – ஆனந்தபவன் மு.கு. இராமச்சந்திரா 2014ம் ஆண்டுக்கான புத்தகப்பரிசு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆனந்தபவன் உணவகத்தோடு இணைந்து வருடந்தோறும் வழங்கும் ஆனந்தபவன் மு.கு. இராமச்சந்திரா 2014ம் ஆண்டுக்கான புத்தகப்பரிசு எழுத்தாளர் திரைப்படப்பாடலாசிரியர் கவிஞர் நெப்போலியனின் ” காணாமல் போன கவிதைகள் ” நூலுக்கு வழங்கப்பட்டது. சிங்கப்பூர் வெள்ளி 2000ம் மற்றும் சான்றிதழுடன் வெற்றியாளரை கெளவரவப்படுத்தும் இந்நிகழ்வில், […]

மெல்பனில் நடந்த முருகபூபதியின் சொல்லமறந்தகதைகள் நூல் வெளியீட்டு அரங்கு

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

  படைப்பிலக்கியவாதியும்பத்திரிகையாளருமானதிரு. லெட்சுமணன்முருகபூபதியின்  20 ஆவது நூல் சொல்லமறந்த கதைகளின்வெளியீட்டு அரங்கு கடந்த சனிக்கிழமை23-08-2014ஆம் திகதிமெல்பனில் Dandenong Central Senior Citizens Centreமண்டபத்தில்நடைபெற்றது. இலங்கைகம்பன் கழகத்தின்ஸ்தாபக  உறுப்பினரும்  இலக்கியஆர்வலருமான    திரு. கந்தையா   குமாரதாசன்இந்நிகழ்வுக்குதலைமைதாங்கினார். அண்ணாவியர் இளையபத்மநாதன் – எழுத்தாளர்கள் திருமதிபுவனாஇராஜரட்ணம் – டொக்டர்  நடேசன் – திரு. ஜெயராமசர்மா -சமூகப்பணியாளர்கள் திருவாளர்கள்   இராஜரட்ணம் சிவநாதன் – நவரத்தினம்    இளங்கோ – டொக்டர்    சந்திரானந்த் – ஜனாப்  ரஃபீக்முருகபூபதியுடன்    வீரகேசரி நிறுவனத்தில்    முன்னர்    பணியாற்றியதிரு. சுப்பிரமணியம்    தில்லைநாதன் […]

காத்திருத்தலின் வலி

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

தாயின் கருவறையிலிருந்து விட்டு விடுதலையாகும்போதும் மழலையர் பள்ளியில் சேர்க்கைக்கான பெரும்கனவுகளுடன் நிற்கும்போதும் படித்தவற்றையெல்லாம் தேர்வு அறையில் கொட்டி விட்டு முடிவுக்காக காத்திருக்கும்போதும் ஊரே கூடியிருக்கும் இடங்களில் அன்புக்குரியவரின் வருகைக்காக ஏங்கித்தவிக்கும்போதும் வேலைவாய்ப்பிற்காக ஆண்டுக்கணக்கில் கிடைக்குமென்று நம்பிக்கொண்டிருக்கும் போதும் திருமணச்சந்தையில் வரன்தேடி இளமை அழிந்தொழிந்து உழைத்து ஓடாக தேயும்போதும் பிள்ளைவரம் வேண்டி கோவில்கோவிலாக அலைந்துதிரியும்போதும் என்னுள் உண்டாகும் வலி நீ உணர வாய்ப்பில்லை ஏனென்றால் நீதான் இன்னும் இம்மண்ணில் வந்து பிறக்கவில்லையே! அமுதாராம்

பாஞ்சாலியின் புலம்பல்

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

  ஒரு அரிசோனன்   நான்தான் பாஞ்சால நாட்டின் இளவரசியான பாஞ்சாலி; துருபத மன்னனின் மகளான திரௌபதி; கருப்பாக இருப்பதாலும், கார்மேக வண்ணனான கண்ணனால் உடன்பிறப்பாக ஏற்கொண்டதாலும், கிருஷ்ணை என்றும் அழைக்கப்பட்டவள். பெண்மையைப் போற்றும் பெருந்தகையாளர்களே! நீங்கள் ஏன் என் பக்கம் பேசுவதில்லை? ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதியா என்று பேசும் உங்கள் கூற்றை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்று, ஐந்து கணவர்களைக் கொண்டேனே, அதை ஏன் நீங்கள் பாராட்டிப் பேசுவதில்லை? ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்த […]

12வது உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடு – ஜெர்மனி

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

அன்புடையீர், வணக்கம். 12வது உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 40வது ஆண்டு நிறைவு விழாவும் 2014 அக்டோபர் 4,5 ஆம் தேதிகளில் ஜெர்மனியில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான அறிவிப்பு மடல் இணைப்பில். உலகத் தமிழர் பண்பாடு, கலை, கலாச்சார, வாழ்வியல் மேம்பாடு, தமிழ்க் கல்வி போன்றவற்றைப் பற்றிய பதிவுகளாக உலகளாவிய தமிழ்க்கல்வி புலம் பெயர் தமிழர்கள் தமிழர் சமயமும் வழிபாடும் தமிழர் நாகரீகமும் தமிழ்க் கலைகளும் தமிழ் மரபுகள் தமிழ் வளர்ச்சியின் அறிவியல் மேம்பாடுகள் […]