author

மருமகளின் மர்மம் – 6

This entry is part 8 of 26 in the series 8 டிசம்பர் 2013

6 ஜோதிர்லதா கிரிஜா   மாலையில் கோவிலுக்குப் போகலாம் என்று தான் சொன்னதற்கு நிர்மலாவிடமிருந்து உற்சாகமான பதில் வரவில்லை என்று கண்ட சாரதா ஒருகால் தான் சொன்னது அவள் காதில் விழவில்லையோ என்கிற ஐயத்துடன், “என்ன, நிர்மலா? பதில் சொல்லாம இருக்கே?” என்றாள். “என்ன அத்தை கேட்டீங்க?” சாரதா சிரித்தாள் : “ஏற்கெனவே ஒரு மாதிரியா இருந்தே. அவன் கிட்டேருந்து •போன் வேற வந்திடிச்சு. கோவிலுக்குப் போலாம்னு சொன்னேன்.” இன்று ஏதேனும் காரணம் சொல்லிக் கோவிலுக்குப் போவதை […]

மருமகளின் மர்மம்-5

This entry is part 28 of 29 in the series 1 டிசம்பர் 2013

5 நிர்மலாவிடம் பேசிய பின் ஒலிவாங்கியைக் கிடத்திய ரமேஷ¤க்கு மறு விமானம் பிடித்து இந்தியாவுக்குப் பறந்து போய்விடமாட்டோமா என்றிருந்தது. அவன் புரிந்து கொண்டிருந்த வரையில் நிர்மலா உணர்ச்சி வசப்படுபவள். என்றோ இறந்துவிட்டிருந்த   தன் அம்மாவை  நினைத்து நினைத்து உருகுகிறவள். அப்பா அவளது மிகச் சிறிய வயதிலேயே இறந்துவிட்டாராம்.  அதன் பின் பதினைந்து வயது வரையில் அவள் அம்மாதான் அவளுக்கு எல்லாமாக இருந்தாளாம். அம்மா தன் திருமணத்தை நடத்தும் கொடுப்பினை தனக்கு இல்லாது போனது பற்றியும் அடிக்கடி புலம்புவாள். […]

மருமகளின் மர்மம் – 4

This entry is part 2 of 24 in the series 24 நவம்பர் 2013

திடீரென்று தோன்றிய  அந்த யோசனையின் மலர்ச்சியுடன் சகுந்தலா கருணாகரனை ஏறிட்டாள். ‘கருணா! நம்ம ஸ்டெல்லா டீச்சர்கிட்ட பேசினா என்ன? அவங்க கட்டாயம் நமக்கு உதவுவாங்க.  அவங்க அக்கா குடும்பம் மெட்ராஸ்லதான் இருக்கு.’ –  அப்போது கருணாகரனின் முகமும் மலர்ந்தது. ‘ரொம்ப நல்ல யோசனை, சகுந்தலா! மத வித்தியாசத்தால தாமோதரன் சாரைக் கட்ட முடியாம கன்னியாவே இருந்துட்டவங்க.  நம்ம விஷயத்தில அவங்க அனுதாபம் காட்டல்லேன்னா வேற யார் காட்டுவாங்க? வருஷா வருஷம் பெரிய லீவுக்கு மெட்ராஸ¤க்குப் போயிடுவாங்களே? இப்ப […]

நீங்காத நினைவுகள் – 24

This entry is part 16 of 24 in the series 24 நவம்பர் 2013

எழுத்தாளர்களும் அவர்களின் படைப்புகளும் ஓர் எழுத்தாளரின் தன்மைகளைப் பற்றியோ, அவர் வாழ்வில் நடந்திருக்கக் கூடிய நிகழ்வுகள் பற்றியோ அவர் படைப்புகளின் அடிப்படையில் ஊகிப்பது பெரும்பாலும் சரியாக இருக்காது. என் படைப்புகளின் அடிப்படையில் என்னைப்பற்றியும் என் பெற்றோர் பற்றியும் தாறுமாறான கணிப்புக்கும் முடிவுக்கும் சிலர் வந்தது பற்றி அறிய நேர்ந்து நான் தொடக்க நாள்களில் திடுக்கிட்டுப் போனதுண்டு. ஆனால், சராசரி மனிதர்கள் அப்படித்தான் யோசிப்பார்கள் என்பதை விரைவிலேயே புரிந்துகொண்டு சமாதானம் செய்தும் கொள்ளும் பக்குவத்தையும் விரைவிலேயே அடைந்து யாரும் […]

மருமகளின் மர்மம் 3

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

ஜோதிர்லதா கிரிஜா 3. சுவரில் சாய்ந்தவறு தளர்வாக உட்கார்ந்திருந்த லோகேசன் அவள் வீசிய குண்டுகளால் தாக்குண்டு நிமிர்ந்தார். ‘ஏ, களுத! வாய மூடு. நீ உன் அத்தானைத்தான் கட்டணும். இல்லாட்டி, கொலை விழும்,’ என்றார் காட்டமாக. அத்தை பாக்கியமோ முகம் சிறுத்து உட்கார்ந்திருந்தாள். ‘என்னால முடியாதுப்பா.’ ‘ஏன் முடியாது?’ – லோகேசன் கையை ஓங்கிக்கொண்டு எழுந்தார். ‘எனக்குப் பிடிக்கலைப்பா. ஆசைப் படுறதுக்கும் ஒரு அளவு வேணுமில்ல?’ – இவ்வளவு அப்பட்டமாய்ப் பேச அவள் விரும்ப வில்லை யானாலும், […]

நீங்காத நினைவுகள் -23

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

ஜோதிர்லதா கிரிஜா “சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே” – இந்தப் பாடலை நம்மில் பலர் கேட்டிருப்போம். அவ்வாறு வாழ்ந்தவர் திரைப்பட நகைச்சுவை நடிகர் அமரர் திரு என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள். அதுமட்டுமின்றி, பிறரை நிறையவே சிரிக்க வைத்ததோடு சிந்திக்க வைத்தும் வாழ்ந்த மேதை அவர். ஏட்டுக் கல்விக்கும் மேதைத்தனத்துக்கும் தொடர்பு இருந்துதான் தீர வேண்டும் என்பதாய்ப் பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் விதிக்கு அவர் விலக்கானவர் – பெருந்தலைவர் திரு காமராஜ் அவர்களைப் போல. (என்.எஸ். […]

நீங்காத நினைவுகள் – 22

This entry is part 30 of 34 in the series 10 நவம்பர் 2013

ஜோதிர்லதா கிரிஜா (“கல்கண்டு ஆசிரியரும், என் மீது ஒரு சகோதரர் போன்று பாசம் காட்டியவருமான திரு தமிழ்வாணன் அவர்கள் எழுபதுகளின் ஒரு தீபாவளியன்று காலமானார். அவரது நினைவாக அவரை நன்கு அறிந்தவர்கள், அவருடன் பழகியவர்கள் ஆகியோரிடமிருந்து கட்டுரைகளைப் பெற்று, கல்கண்டின் ஆசிரியர் திரு லேனா தமிழ்வாணன் அவர்கள் அதன் தீபாவளி இதழில் அதை வெளியிடுவதை வழக்கமாய்க் கொண்டிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்த வரிசையில் வெளியான கட்டுரை கீழே வருகிறது. இது ஏற்கெனவே பல்லஆண்டுகளுக்கு முன் திண்ணையிலும் […]

மருமகளின் மர்மம் – அத்தியாயம் 2

This entry is part 29 of 34 in the series 10 நவம்பர் 2013

ஜோதிர்லதா கிரிஜா 2 தொலைபேசி மறுபடியும் சிணுங்கியது. இந்தத் தடவை சோமசேகரன் உடனே எழுந்தார். அவரை முந்துகிறாப் போல் நிர்மலாவும் மிக அவசரமாக எழுந்தாள். “நீ உக்காரும்மா. நான் போய்ப் பாக்கறேன்.,” என்றவாறு அவர் தொலைபேசியை அணுகி, ஒலிவாங்கியில், “ஹலோ!” என்றார். “மிஸ்டர் ரமேஷ் இருக்காரா?” “அவரு ஸ்டேட்ஸ¤க்குப் போயிருக்காரே? திரும்ப ஆறு மாசம் ஆகும்.” “என் பேரு நவனீதகிருஷ்ணன். சரி. அப்ப அவரு வந்த பெறகு பேசறேன்.” மேசைக்குத்திரும்பிய சோமசேகரன், “கூப்பிட்டவர் பேரு நவனீதிருஷ்ணன். நவனீதகிருஷ்ணன் […]

நீங்காத நினைவுகள் – 21

This entry is part 7 of 29 in the series 3 நவம்பர் 2013

ஜோதிர்லதா கிரிஜா            தீபாவளியும் அதுவுமாய் விவாதத்தைக் கிளப்பும் கட்டுரையை எழுதி வம்பை விலைக்கு வாங்குவதற்குப் பதிலாக, நகைச்சுவை நிறைந்ததாய் ஒன்றை எழுதலாமே என்று தோன்றியது.  சிரிக்க மட்டுமின்றி, அவற்றில் சிலவேனும் சிந்திக்கவும் வைக்கக் கூடியவை என்று தோன்றுகிறது. அட, வாய்விட்டுச் சிரிக்க வைக்காவிட்டாலும்,  சில ஓர் இளநகையையேனும் தோற்றுவிக்கும் என்னும் நம்பிக்கை உண்டு. கீழ் வரும் ஜோக்குகளையோ, நகைச்சுவையான விஷயங்களையோ அன்பர்களில் சிலர் ஏற்கெனவே படித்திருந்திருக்கலாம். இருப்பினும், சிரிக்க வைப்பவையாதலால் மறுபடியும் படிப்பது வீணன்று. […]

மருமகளின் மர்மம் (புதிய தொடர்கதை) அத்தியாயம் 1

This entry is part 20 of 26 in the series 27 அக்டோபர் 2013

ஜோதிர்லதா கிரிஜா 1. “என்ன, சாரதா! நம்ம மருமகளைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?” என்றவாறு வழிபாட்டு அறைக்குள் நுழைந்த சோமசேகரன் சாரதா கண் மூடியவாறு கடவுள் படங்களுக்கு முன்னால் கை கூப்பி நின்றிருந்ததைக் கண்டதும் தன் வாயை மூடிக்கொண்டார். கண்மூடிக் கைகூப்பிப் பிரார்த்தித்து நிற்கும் போது சாரதாவின் செவிகளில் எதுவும் விழாது – அப்படியே விழுந்தாலும் அவள் பதில் சொல்ல மாட்டாள் – என்பது அவர் அறிந்திருந்த ஒன்றாதலால், அவர் மேற்கொண்டு எதுவும் பேசாமல் தாமும் […]