author

பிரேமம் ஒரு அலசல்

This entry is part 5 of 14 in the series 20 மார்ச் 2016

0 விருதுகளையும் வெகுஜன ரசிப்புகளையும் அள்ளிக் கொண்டிருக்கும் மலையாளப்படம்! ‘ நேரம்’ இயக்குனர்   அல்போன்ஸ் புத்திரனின் படைப்பு. அப்படி என்னதான் இருக்கிறது என்று ஒரு ஐம்பது நாட்கள் கழித்து திரையரங்கில் பார்த்தேன். ஆரம்பம் வெகு சாதாரணம். ப்ப்பி லவ் என்கிற விசயத்தை ‘பன்னீர் புஷ்பங்கள் ‘ தொடங்கி, பாக்யராஜின் ‘ இன்று போய்  நாளை வா ‘ வரை பல கட்டங்களில் துவைத்து காயப் போட்டு விட்டார்கள். அது இன்னமும் கிழியாமல் இன்றைய இயக்குனர்களிடம் போய் சேர்ந்திருப்பது […]

அவியல்

This entry is part 6 of 14 in the series 20 மார்ச் 2016

0 நான்கு குறும்படங்களை இணைத்து 132 நிமிட ஒட்டுச் சட்டையாக தந்திருக்கீறார் கார்த்திக் சுப்புராஜ்! வெரைட்டி இருந்தாலும் வயிறு ரொம்பவில்லை! 0 “ உனக்கும் எனக்கும் பிடிச்ச அவியல் “ என்றொரு தலைப்பு பாடலுடன் ஆரம்பிக்கிறது இந்தப் படம். முடிவில் உனக்கு பிடிக்கிறது. எனக்கு பிடிக்குமா என்றொரு யோசனையுடன் கலைகிறது ரசிகர் கூட்டம்! 1, ஸ்ருதி பேதம் – இயக்குனர் மோஹித் மெஹ்ரா. தாத்தாவுக்கு நான்காவது குழந்தையாக பிறந்தவள் ராஜின் தாய். ராஜ், தன்னை விட ஒரு […]

தி டோக்கன் ஆங்கிலம் – மே சிங்க்ளேர்

This entry is part 12 of 12 in the series 13 மார்ச் 2016

  தமிழில் சிறகு இரவிச்சந்திரன் 0 சிசிலி டன்பார்! பெண்களே நேசிக்கும் அற்புதப் பெண். இன்னும், அவள் என் சகோதரனின் மனைவி என்றிருந்து விட்டால். டொனால்ட் சரியான ஸ்காட். அவனுக்கு எதையும் வெளியே சொல்லத் தெரியாது. உள்ளுக்குள்ளேயே புதைத்து வைத்திருப்பான். சிசிலிக்கு எல்லாம் சொல்லியாக வேண்டும். முக்கியமாக, டொனால்ட் தன்னை எவ்வளவு நேசிக்கிறான் என்பதை. ஆனால், அதை சொல்வதை விட டொனால்ட் இறந்து போகவே விரும்புவான். கடைசி வரையில் அவனுக்கு தெரியவேயில்லை. தன்னுடைய காதல் மனைவி சிசிலி […]

கணிதன்

This entry is part 3 of 16 in the series 6 மார்ச் 2016

  0 போலி சான்றிதழ்களால் வாழ்வைத் தொலைக்கும் நேர்மையான / உண்மையான பட்டதாரிகளும், அதை சீராக்க முயலும் ஒரு இளைஞனின் போராட்டமும்! 0 செய்தி வாசிப்பாளர் ராமலிங்கத்தின் ஒரே மகன் கவுதம். ஸ்கை தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் நிருபரான அவனுடைய லட்சியம் லண்டனின் பி.பி.சி. தொலைக்காட்சியில் சேர்வது. அதே போன்ற லட்சியத்துடன் இருக்கும் அனு அவனைக் காதலிக்கிறாள். ஒரு கட்டத்தில் அவன் போலிச் சான்றிதழ்கள் தயாரிக்கும் கும்பலின் ஒரு கண்ணி என சந்தேகித்து காவல்துறை அவனை கைது […]

ஆறாது சினம்

This entry is part 4 of 16 in the series 6 மார்ச் 2016

  0 “மெமரீஸ்” தமிழ் பேசியிருக்கிறது. இன்னமும் மலையாள மெமரீஸ்/ நினைவுகள் தான் மறையாமல் ஈர்க்கிறது! 0 அன்பு மனைவி நீனா, செல்ல மகள் மீனுவுடன் வாத்சல்ய வாழ்வு வாழும் அரவிந்த்திற்கு மாட்டுத்தாவணி சேகரால் ஒரு சங்கடம். விளைவு? மனைவியையும் மகளையும் இழக்கிறான். குடியில் தன்னை மூழ்கடித்துக் கொள்கிறான். ஐந்து பெண்களால் அவமானப்படுத்தப்படும் சந்தோஷ் எனும் மாற்றுத்திறனாளி, அவர்களின் கணவர்களை குறி வைத்துச் செய்யும் சீரியல் கொலைகளை துப்பறிய முடியாமல் திணறும் காவல் துறை இணை கமிஷ்னர் […]

சேதுபதி

This entry is part 7 of 16 in the series 21 பெப்ருவரி 2016

  0 தெளிவில்லாத தகவல் அறிக்கை போல குழப்பமான திரைக்கதையுடன் ஒரு போலீஸ் ஸ்டோரி. நேர்மையான காவல் ஆய்வாளரை உரசிப் பார்க்கும் ஊழல் உலகத்தின் வழக்கமான கதை. 0 சேதுபதி, மதுரை வட்டத்தின் காவல் ஆய்வாளர். மனைவியும் இரு பிள்ளைகளுமாக நேர்மையாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவரது வாழ்க்கையில் குறுக்கிடுகிறார் கொலைகளுக்கு அஞ்சாத வாத்தியார் எனும் தாதா! காவல் நிலையத்தில் ஒரு பள்ளி மாணவன் சுடப்பட, பழி சேதுபதியின் மேல் விழுகிறது. பின்னணியில் இருப்பது வாத்தியாரா இல்லை வேறு […]

மிருதன் – மனிதர்களை மிருகங்களாக்கும் வைரஸ். தமிழில் ஒரு வித்தியாசமான ஹாரர் படம்.

This entry is part 9 of 16 in the series 21 பெப்ருவரி 2016

  0 ஊட்டியில் போக்குவரத்து காவலராக இருக்கும் கார்த்திக்கின் ஒரே தங்கை வித்யா. அவன் ஒரு தலையாகக் காதலிக்கும் டாக்டர் ரேணுகா, டாக்டர் நவீனுடன் திருமணம் நிச்சயமானவள். ரேணுவின் தந்தை மந்திரி குருமூர்த்தியின் பகைக்கு ஆளாகும் கார்த்திக்; அதனால் கடத்தப்படும் வித்யா; விஷ வைரஸ் ஒன்றின் பரவலால் ஊட்டி நகரமே ஸோம்பிக்கள் எனும் மனித மிருகங்களால் சூழப்படும்போது, அதற்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் ரேணுகா மற்றும் மருத்துவர் குழுவை கோவைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் […]

விசாரணை

This entry is part 6 of 18 in the series 14 பெப்ருவரி 2016

சிறகு இரவி 0 வெனிஸில் விருதுகளைக் குவித்த படம், வெகு ஜன ரசனைக்கு வித்திடுமா? வலிக்க வலிக்க காட்சிகள் ரணமாக நெஞ்சில் அறையும் நிதர்சனமாக ஒரு திரை அனுபவம். 0 ஆந்திர குண்டூரில் பிழைப்புக்காக குடியேறும் பாண்டி, முருகன், அப்சர், மூவரும் கோவை மாவட்டத்தின் கிராமத்து இளைஞர்கள். ஆந்திர காவல்துறை அநியாயமாக மேலிடத்தின் உத்திரவின் பேரில், இவர்கள் மீது பொய்யான களவுக் குற்றச்சாட்டைச் சுமத்துகிறது. குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்து வழக்கை முடிக்க தீவிரம் காட்டுகிறது. நீதிமன்றத்தில் பாண்டி […]

பெங்களூர் நாட்கள்

This entry is part 7 of 18 in the series 14 பெப்ருவரி 2016

– சிறகு இரவி 0 பெங்களூர் வாழ்வை கனவாக எண்ணி வாழும் மூவரின் வாழ்க்கையை சிலிர்ப்புடன் சொல்லும் சுகமான படம். 0 ஜாதக தோஷத்தால் மேற்படிப்பு சிதைந்து, சிவபிரகாஷுடன் சட்டென்று திருமணமாகும் திவ்யா, சிறு வயதிலிருந்தே பெங்களூரை எண்ணிக் கனவு காணும் இளம்பெண். திருமணத்திற்கு பிறகு அவளது வாழ்க்கை கனவின் நீட்சியாக நிதர்சனமாகி பெங்களூரிலேயே வாழும் வாய்ப்பு கிடைக்கீறது. கூடவே அவளது சகோதர்கள் கண்ணனும், அர்ஜுனும் அங்கேயே வர, சந்தோஷ முக்காடலில் திளைக்கீறாள் திவ்யா. தன் பழைய […]

திரை விமர்சனம் தாரை தப்பட்டை

This entry is part 5 of 16 in the series 17 ஜனவரி 2016

0 இயக்குனர் பாலாவின் பல படங்களை உள்ளடக்கி வெளிவந்திருக்கும் புதிய ரீமேக் படம் தாரை தப்பட்டை! பதினாறு வருட திரையுலக வாழ்வில் ஏழாவது படத்திலேயே இப்படி இறங்கியிருக்கும் இயக்குனர் பாலாவுக்கு ரசிகனின் ஆழ்ந்த இரங்கல்கள்! சாமி புலவரின் ஒரே மகன் சன்னாசி! தாரை தப்பட்டை என்கிற கிராமிய நடனக் குழுவை நடத்தி வருகிறான். அவனது குழுவில் முன்னணி ஆட்டக்காரி சூறாவளி! மாமா சன்னாசி மேல் மையல் கொண்ட அவளுக்கு, வேறொரு இடத்தில் திருமணம் செய்து வைக்கிறான் சன்னாசி. […]