author

இவன் இப்படித்தான்

This entry is part 7 of 10 in the series 6 டிசம்பர் 2020

1 ‘என்னங்க பேப்பர் பையன் காசு வாங்கிட்டுப் பொயிட்டான்’ ‘எவ்வளவு’ ‘எப்போதும்போலதான்’ ‘அது எப்புடி. போன மாதம் 10 நாள் பேப்பர் போடலியே. பேப்பர் போடவேணாம்னு சொல்லியிருந்தேனே. சபாபதியும் சரின்னு சொன்னாரே’ ‘மறந்துருப்பாருங்க’ நக்கீரன் உடன் சபாபதிக்கு தொலைபேசினார். ‘சார்’ ‘என்ன சபாபதி நல்லாயிருக்கீங்களா?’ ‘இருக்கேன் சார்’ ‘போன மாசம் தேதியெல்லாம் சொல்லி 10 நாள் பேப்பர் போடவேணாம்னு சொல்லியிருந்தேன். நீங்களும் சரின்னீங்க. பில்லு எப்போதும்போல குடுத்திருக்கீங்க’ ‘சாரி சார். பையன்ட சொல்ல மறந்துட்டேன். அவன் போட்ருப்பான்’ […]

நட்பு என்றால்?

This entry is part 8 of 10 in the series 22 நவம்பர் 2020

பிரியா. திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்கு வந்த முதல் நாள். சேலை அவளுக்கு கொஞ்சம் அந்நியமானாலும், காஞ்சிபுரப் பட்டில் நுழைந்து கொண்டு திராட்சை விழிகள் உருள ஊஞ்சலில் அமர்ந்திருக்கிறாள். பட்டு அங்கங்கே லேசாக கிச்சுக்கிச்சு மூட்டுகிறது. பாதங்களில் மருதாணி ஓவியம். தங்கக் கொலுசு தெரிந்தது. ஊஞ்சல் லேசாக ஆடுகிறது. பெண் பார்க்க அக்கம் பக்கத்தினர் வந்துகொண்டிருந்தனர். தட்டில் சீனியும் பூவும் கொண்டு வந்தார்கள். தரையில் விரிக்கப்பட்ட ஜமுக்காளத்தில் அமர்ந்து விழிகளை மட்டும் உருட்டி பிரியாவை பார்ப்பது பிறகு […]

நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்

This entry is part 5 of 13 in the series 8 நவம்பர் 2020

எனக்கு ஏழு வயதாகும் போதே அப்பா என்னை மலேயாவுக்கு கூட்டி வந்துவிட்டார். கோலாலம்பூரில் பெடாலிங் ஜெயாவுக்குப் பக்கத்தில் ஒரு கம்போங்கில் அப்பாவின் உணவுக்கடை. பெரிய இடம். பெரிய கழிவறை. கழிவறைக்கும் கடைக்கும் இடையே நீள அகலமான சிமெண்டுப் பெஞ்சுகள். அந்தப் பெஞ்சில்தான் அப்பா மதியம் இரண்டு மணி நேரம் தூங்குவார். அவைகள் நாலைந்து கடைகளின் உபயோகத்துக்காக இருந்த போதும் எங்களின் சொந்த உபயோகத்துக்கே அவைகள் பயன்பட்டன. சொற்பமான வாடகை. கம்போங்கில் உள்ள சில மலாய்ப் பெண்கள் எங்கள் […]

திரைப்பட வாழ்க்கை

This entry is part 3 of 17 in the series 11 அக்டோபர் 2020

ஆர்யா. கட்டுமானத்துறையில் பொறியியல் பட்டம் பெற்ற புதுமுகம். வேலைச் சந்தைக்குள் நுழையுமுன் ஓர் அரசு வேலையை ஒப்பந்த அடிப்படையில் செய்ய ஆசைப்பட்டார். அறந்தாங்கி முக்கியச் சாலையிலிருந்து காட்டுப் பிராமண வயல் செல்லும் சாலையின் குறுக்கே சிமெண்ட் குழாய் பதிக்கும் வேலையை எடுத்தார். சிறிய வேலைதான். நுணுக்கமாகச் செய்தார். அவரிடம் வேலை பார்த்த ஒரு மூத்த தொழிலாளி சொன்னார். ‘திட்டமிட்டு கச்சிதமா முடிச்சுட்டீங்க தம்பீ’ வேலையை மேற்பார்வை யிடவந்த மேலதிகாரி ‘வெரிகுட்’ என்று குறிப்பு எழுதிவிட்டுச் சென்றார். காசு […]

அதிசயங்கள்

This entry is part 2 of 14 in the series 28 ஜூன் 2020

1950 களில் பிறந்தவர்க்கெல்லாம் தெரியும். அது இந்தியாவில் காலணா அரையணா இருந்த காலம்.  காலணாவில் ‘பொத்தக்காசு காலணா’ என்று ஒன்று உண்டு. அறந்தாங்கி குட்டக்குளம் கரையில் இருக்கும் பெண்கள் துவக்கப் பள்ளியில்தான் நான் பத்தில் ஒருவனாகப் படித்தேன். அத்தா தினமும் காலணா தருவார். பொத்தக்காசு தந்தாத்தான் வாங்குவேன். அதெ சுண்டுவிரல்ல மோதிரமா மாட்டிக்கிட்டு பள்ளிக்கூடம் போவேன்.அப்போதெல்லாம் நானும்  என் பெரியத்தா மகள் மும்தாஜும் சேர்ந்துதான் எப்போதும் போவோம். வருவோம். அந்தக் காலணாவை உதட்டுக்கும் பல்லுக்கும் இடையே வைத்து […]

அமைதியை நோக்கியே அத்தனை புயல்களும்

This entry is part 15 of 22 in the series 19 ஏப்ரல் 2020

ஒரு நிறுவனத்தின் வெற்றி என்பது வாகனங்களைக் கையாளும் லாவகத்தில்தான் இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து ஒரு பிரமுகர் வருகிறாரென்றால் விமானம் தரையிறங்குமுன் நம் வாகனம் அங்கே நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் சரக்குகளை எங்கு அனுப்பவேண்டும், எங்கிருந்து எடுத்துவர வேண்டும், ஊழியர்கள் எந்தெந்த இடத்தில் தயாராக இருக்கவேண்டும் இவை அத்தனையையும் வாகனப்பிரிவு துல்லியமாய்ச் செய்யவேண்டும். அந்த நிறுவனம்தான் வெற்றிபெறும். அந்த வகையில்  ரவிச்சந்திரனின் கப்பல்துறை நிறுவனம் வெற்றிபெற்றிருக்கிறது. திருச்சி திருவெறும்பூரில் இருக்கும் அந்த நிறுவனத்தின் வாகனத்துறை குபேரனின் கையில். ரவிச்சந்திரன் அடிக்கடி சொல்வார். […]

ஊர் மாப்பிள்ளை

This entry is part 5 of 7 in the series 23 பெப்ருவரி 2020

தான் வேலை செய்யும் சமூக நல நிறுவனத்தில் பதவி உயர்வு கிடைத்தபின்தான் திருமணத்தைப் பற்றி சிந்திக்க வேண்டுமாம். அதுவும் ஆலமரம்போல் விரிந்து பரந்த ஓர் ஊர்க் குடும்பத்தின் விழுதாகத்தான் இருக்க வேண்டுமாம். உறுதியாக இருந்தார் சாந்தினி. அவர் நினைத்தபடியே பதவி உயர்வு கிடைத்துவிட்டது. திருமணத்திற்கான ஏற்பாடுகள், மாப்பிள்ளை தேடும் வேலைகள் தொடர்கின்றன. திருச்சியில் ஒரு பெரிய உணவுக்கடை வைத்திருக்கும் புண்ணியமூர்த்தியின் மகன் சாமியப்பாவுக்கு சாந்தினி பற்றிய தகவல் கிடைக்கிறது. கேட்டரிங் முடித்துவிட்டு அப்பாவோடு தொழிலுக்கு துணையாக இருப்பதாக […]