author

வயதாகிவிட்டது

This entry is part 3 of 6 in the series 16 பெப்ருவரி 2020

கூடை முள்ளங்கியை முதுகில் ஏற்றிவந்து கடைக்குள் இறக்குவார் லோகதீபன் என்கிற தீபன். ‘ட்ராலி’ அவருக்குத் தேவையில்லாத ஒன்று.  கடைக்குள் ஒரு தனி அறையை அவரே உருவாக்கியிருக்கிறார். வெட்டுக்கத்தியால் கூடையைத் திறந்து, சரக்கைக் கொட்டிக் கவிழ்ப்பார். அழுகலோ, வெம்பலோ, வாடியதோ இருந்தால் உடன் சரக்கைத் திருப்பிவிடுவார். ஒரே வாரத்தில் கணக்கு பாக்கியை சுத்தமாக செலுத்தும் ஒரே ஆள் காய்கறிச் சந்தையில் தீபன்தான். அலாவுதீன் கடையில் காய்கறிப் பிரிவு மொத்தமும் தீபன் கையில்தான் இருக்கிறது. நாளொன்றுக்கு 1000 வெள்ளி சம்பாதித்துக் […]

ஓவியன்

This entry is part 3 of 6 in the series 9 பெப்ருவரி 2020

         தரையில் குப்புறப் படுத்துக் கொண்டு சிலேட்டுக் குச்சியால் எம்ஜியார், சிவாஜி, தாமரைப்பூ, சூரியகாந்தி, யானை என்று வரைந்துகொண்டே இருப்பேன். என் சட்டைப் பையில் எப்போதும் சிலேட்டுக் குச்சிகள் இருக்கும். பள்ளிக்கூடத்தில் திருடிய சில சாக்பீஸ் துண்டுகளும் இருக்கும். ஒரு நாள் அடுப்படித் திண்ணையில் அறிஞர் அண்ணா படம் வரைந்திருந்தேன். அந்தத் திண்ணையில் தான் அத்தாவுக்கு அம்மா சாப்பாடு வைப்பார்கள். அண்ணா படத்தின் மீது அம்மா பாயை விரித்தபோது அத்தா அந்தப் பாயை சற்று இழுத்துப் போட்டு […]

சாது மிரண்டால்

This entry is part 6 of 8 in the series 15 டிசம்பர் 2019

பாவாடை சட்டை அணிந்த சிறுமிகள் நடுவே அழகான பூக்கள் சிரிக்கும்  ‘கவுன்’ அணிந்திருப்பார் சாவித்திரி. நீண்ட முடியுடன் இருக்கும் சிறுமிகள் நடுவே ‘க்ராப்’  வெட்டியிருப்பார் . கோதுமை மாலை, மாங்காய் தோடு என்று பளிச்சென்று இருப்பார், சாவித்திரி என்ற அந்த 10 வயது சிறுமி.  தாஞ்சூர் கிராமத்தில் நான்கு ஏக்கர் நன்செய் நிலத்திற்கு நடுவே பண்ணை வீடாகத்தான் சாவித்திரியின் அப்பா மருது அந்த வீட்டைக் கட்டினார்.  அந்த இடத்தின் ரம்மியம் அவரை வெகுவாகக் கவர அதையே வசிக்கும் […]

ஊஞ்சல்

This entry is part 1 of 7 in the series 17 நவம்பர் 2019

‘ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா’ புதுக்கோட்டையில் தெற்கு 3ம் புதுக்குளமும் சந்திக்கும் இடத்தில் ஒரு பூங்கா இருந்தது. நான் சொல்வது 1960 களில். அங்கு 10 அடி நீள இரும்புச்சங்கிலியில் தொங்கும் தொட்டிப்பலகை பிரசித்தம். அதில் ஒருவர்தான் உட்கார்ந்துகொண்டோ நின்றுகொண்டோ ஆட முடியும். முறை வைத்து அந்த ஊஞ்சலில் நாங்கள் ஆடியிருக்கிறோம். நான் மட்டும்தான் அதில் 180 டிகிரி தாண்டி ஆடுவேன். சவுக்குக் குச்சியோடு பூங்கா காவல்காரர் எங்களை அடிக்க ஓடிவருவார். ஆடும் ஊஞ்சலிலிருந்து தடாலென்று குதித்து […]

முதியோர் இல்லம்

This entry is part 3 of 9 in the series 27 அக்டோபர் 2019

கதீஜா ஒரு வித்தியாசமான பெண். தொடக்கப்பள்ளி 6லேயே முதியவர்களை சொந்தங்களை விட நெருக்கமாய் நேசிக்கிறார். அவருடைய தமிழாசிரியர் எப்போதோ சொன்னார். ‘முதியவர்களை நேசியுங்கள். நீங்கள் முதியவர்களாகும்போது உலகமே உங்களை நேசிக்கும்.’  என்று. உடம்பு முழுவதும் பச்சைக் குத்திக் கொண்டதுபோல் அந்த வாசகம் அவரோடு ஒட்டிக் கொண்டது. ஈசூனில் இருக்கும் ஒரு பெரிய முதியோர் இல்லத்தில் தன்னை ஒரு தொண்டூழியராக இணைத்துக் கொண்டார். சனிக்கிழமைகளில் காலை 9 முதல் 12 வரை தேர்வே இருந்தாலும் அதைப் புறக்கணிக்கும் அளவுக்கு […]

முடிச்சுகள்

This entry is part 2 of 11 in the series 8 செப்டம்பர் 2019

தாலிக்கு ஏன் மூன்று முடிச்சாம்? தத்துவார்த்த ரீதியாக எவ்வளவோ சொல்லப்பட்டாலும் அந்தப் பெரியவர் சொன்னதைக் கேட்டு சிரித்துக் கொண்டேன். ‘மூணு முடுச்சு போடலேனா அறுத்துக்கிட்டு ஓடீருவாங்கெ ஓடீருவாளுக தம்பி’. அருண் பவானி திருமணம் நடந்தபோது அது உண்மை என்றுதான் தோன்றியது. அந்த ராஜேந்திரபுரம் கிராமத்தில் கிட்டத்தட்ட பாதிக் கிராமம் அருணின் குடும்பச் சொத்து. 5 அண்ணன்மார்கள் , அண்ணிகள் 3 அக்காள் குடும்பம், அப்பா வழி தாத்தா பாட்டி, அம்மா வழிப் பாட்டி,  25 பொடுசுகள், பண்ணையாட்கள், […]

நியாயங்கள்

This entry is part 1 of 9 in the series 16 ஜூன் 2019

கல்லூரிப் பேராசிரியர் வேலையை உதறிவிட்டு சிங்கப்பூர் செல்ல என் சிறகுகளைத் தயார்ப் படுத்திக் கொண்டிருந்தேன். கோலாலம்பூரிலிருந்து தாவூத் அழைத்தான். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் அவனோடு தொடர்பில்லை. அறந்தாங்கியில் எட்டு ஆண்டுகள் ஒன்றாகப் படித்தோம். பிறகு நான் கல்லூரியில் என் படிப்பைத் தொடர்ந்தேன். அவன் கோலாலம்பூரிலிருக்கும் அவன் அத்தாவின் பணமாற்று வியாபாரத்தில் இறங்கிவிட்டான். அசாத்தியத் துணிச்சல்காரன். ஒரு மழை இரவு முடிந்து நானும் அவனும் அறந்தாங்கி புதுக்குளக் கரையில் நடந்தோம். ஒரு நண்டுப் பொந்தைப் பார்த்துச் சொன்னேன். ‘இதுதான் […]

அட்டைக் கத்திகள்

This entry is part 3 of 6 in the series 9 ஜூன் 2019

‘குருவே வணக்கம்’ என்ற வாட்ஸ்அப் செய்தி என் தொலைபேசியில் படபடத்தது. குருவா? நானா? இதுவரை என்னை அப்படி யாரும் அழைத்ததில்லையே. இது யாராக இருக்கும்? என் சேமிப்பில் இருக்கும் நண்பர் பட்டியலிலிருந்து வரவில்லை. ஒரு எண்ணிலிருந்து வந்திருக்கிறது. அந்த வாட்ஸ்அப் எண்ணோடு இருந்த புகைப்படத்தை அகல விரித்துப் பார்த்தேன். எங்கேயோ பார்த்த முகமாகத்தான் இருக்கிறது. யாராக இருக்கும்? வாட்ஸ்அப்பிலேயே உரையாடினேன். ‘குருவா? நானா?’ ‘ஆம்’ ‘நீங்கள் என் சிஷ்யனா?’ ‘ஆம்’ ‘ஹ்ஹ்ஹ்ஹ்ஹா. சரி போதும். சொல்லவந்ததைச் சொல்லுங்கள்’ […]

சுண்டவத்தல்

This entry is part 5 of 6 in the series 30 டிசம்பர் 2018

  மதுரை வீரன் (1956) படத்தில் என்.எஸ். கிருஷ்ணன் பேசுவதாக ஒரு வசனம் வரும். ‘தேவாமிர்தம் தேவாமிர்தம்னு இதத்தான் சொல்லியிருப்பாகளோ?’ பழைய கஞ்சியோடு அந்த  நீராகாரத்தின் கடைசிச் சொட்டை ருசித்துவிட்டு அவர் பேசும் வசனம் இது. அந்தக் காலங்களில் எங்கள்  வீட்டிலும் காலையில் பழைய கஞ்சிதான். கோப்பை நிறைய கஞ்சியோடு ஓர் ஆப்பை பசுந்தயிர் விட்டு அளவாக உப்புப்போட்டு அம்மா தருவார். உள்ளங்கை முழுவதையும் நனைத்துப் பிசைவேன். கடலெண்ணையில் வறுபடும் சுண்டவத்தல் காப்பிக் கொட்டை நிறத்துக்கு வரும்போது […]

இடிந்த வீடு எழுப்பப்படும்

This entry is part 3 of 7 in the series 21 அக்டோபர் 2018

  அன்பு உள்ளங்களே ஆதரிக்கும் உறவுகளே அன்னைத் தமிழின் அருந்தவச் செல்வங்களே அத்துனை பேர் வாழ்விலும் ஆனந்தமே என்றும் பொங்க அன்பு மலர் தூவி அத்துனை பேர் ஆசிகளையும் யாசிக்கும் உங்கள் ஆனந்தி பேசுகிறேன் என்று தொடங்கியதுமே கரவொலி. ஒரு குடம் பால் தலையில் ஊற்றிய சிலிர்ப்பு.   சிங்கை வாழ்க்கை சரிப்படாது என்று அறந்தாங்கிக்கே ஓட நினைத்த என் கால்களைக் கட்டிப்போட்டது அந்தக் கரவொலிதான். நான் என் கணவர் செந்தூர்ப்பாண்டியோடு சிங்கை வந்து இரண்டு மாதங்கள் […]