இரு ஓவியர்களின் உரையாடல்கள்

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

  இரு ஓவியர்கள், நெடு நாள் நண்பர்கள் தம் சாவகாசமான பேச்சில் என்ன பேசிக்கொள்வார்கள்? தில்லி மும்பை ஒவியர்களாக இருந்தால் சர்வ தேச தளங்களில் தம் ஒவியங்களுக்கு திடீரென கிடைத்துவரும் திடீர் மவுஸ் பற்றி, ஹுஸேனும் ரஸாவும் டி சோஸாவும் இந்திய ஒவியங்களுக்கு ஏற்படுத்தியுள்ள கவனிப்பு பற்றி, பேசியிருக்கக் கூடும்.  ஆனால் தமிழகத்து ஒவியர்களுக்கு அப்படியான சிந்தனைகள் செல்ல வாய்ப்பில்லை. இன்னம் அவர்களுக்கு அத்தகைய வாய்ப்பு கிட்டியிருக்க வில்லை. ஒவியங்கள் பற்றி, தம் புதிய முயற்சிகள் பற்றி, […]

ஜாக்கி சான் 16. தத்துப் பிள்ளையாய்

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

16. தத்துப் பிள்ளையாய்   கழகத்தில் இருந்த போது மாணவர்களுக்கு வெளி உலக விசயங்கள் மேல் கவனம் செலுத்த வாய்ப்பே இல்லாமல் போனது. தினப்படி காரியங்கள், பயிற்சிகள், வகுப்புகள் என்று தினம் போவதேத்தெரியாது. ஆசிரியர்களை மகிழ்விக்க மட்டுமே இந்தப் பயிற்சிகள் நடத்தப்படவில்லை. உலகப் புகழ்பெற்ற சீன நாடகம் ஒபராவில் பங்கேற்கவே இத்தனைக் கடினமான பயிற்சிகள் செய்ய வேண்டியிருந்தன. வித்தைகள், மேடை சாகசங்கள், நடிப்பு, பாட்டு என்று அனைத்து விசயங்களையும் கற்க வேண்டியிருந்தது. அதை உணரும் வகையில் சானும் அவனது உடன் […]

நீங்காத நினைவுகள் -23

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

ஜோதிர்லதா கிரிஜா “சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே” – இந்தப் பாடலை நம்மில் பலர் கேட்டிருப்போம். அவ்வாறு வாழ்ந்தவர் திரைப்பட நகைச்சுவை நடிகர் அமரர் திரு என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள். அதுமட்டுமின்றி, பிறரை நிறையவே சிரிக்க வைத்ததோடு சிந்திக்க வைத்தும் வாழ்ந்த மேதை அவர். ஏட்டுக் கல்விக்கும் மேதைத்தனத்துக்கும் தொடர்பு இருந்துதான் தீர வேண்டும் என்பதாய்ப் பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் விதிக்கு அவர் விலக்கானவர் – பெருந்தலைவர் திரு காமராஜ் அவர்களைப் போல. (என்.எஸ். […]

Shraddha – 3 short plays from Era.Murukan

This entry is part 34 of 34 in the series 10 நவம்பர் 2013

Shraddha – 3 short plays from Era.Murukan   Shraddha is staging three short stage plays this season. These are based on Tamil author and movie scriptwriter Era.Murukan’s stories. The author who himself has decanted his works from the medium of short story to that of stage play says – ‘I commenced the work knowing pretty […]

நீங்காத நினைவுகள் – 22

This entry is part 30 of 34 in the series 10 நவம்பர் 2013

ஜோதிர்லதா கிரிஜா (“கல்கண்டு ஆசிரியரும், என் மீது ஒரு சகோதரர் போன்று பாசம் காட்டியவருமான திரு தமிழ்வாணன் அவர்கள் எழுபதுகளின் ஒரு தீபாவளியன்று காலமானார். அவரது நினைவாக அவரை நன்கு அறிந்தவர்கள், அவருடன் பழகியவர்கள் ஆகியோரிடமிருந்து கட்டுரைகளைப் பெற்று, கல்கண்டின் ஆசிரியர் திரு லேனா தமிழ்வாணன் அவர்கள் அதன் தீபாவளி இதழில் அதை வெளியிடுவதை வழக்கமாய்க் கொண்டிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்த வரிசையில் வெளியான கட்டுரை கீழே வருகிறது. இது ஏற்கெனவே பல்லஆண்டுகளுக்கு முன் திண்ணையிலும் […]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-8 துவாரகா வாசம்.

This entry is part 22 of 34 in the series 10 நவம்பர் 2013

அத்தியாயம்-8 துவாரகா வாசம். ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகையின் தனிப் பெரும் அரசர் இல்லை. நமக்குக் கிடைக்கும் தகவல்களின்படி துவாரகை பல சிற்றரசர்களால் ஆளப்பட்ட ஒரு சமஸ்தானம் ஆகும்.. அதனால்தான் அங்கு வலிமையான மன்னர்கள் இருந்தனர். அந்த சமஸ்தானத்தில்  மூத்த மன்னர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அளிக்கப்பட்டன. இந்த ஒரு காரணத்தால்தான் ஸ்ரீ கிருஷ்ணர் கம்சனை வென்றாலும் கூட மூத்த மன்னரான ஸ்ரீ கிருஷ்ணரின் தாத்தாவான உக்கிர சேனனுக்கு  மகுடம் சூட்டப் படுகிறது. அரசு மேற்பார்வை என்று வரும்பொழுது எவரிடம் […]

திண்ணையின் இலக்கியத் தடம் -8 நவம்பர் – டிசம்பர் -2000

This entry is part 21 of 34 in the series 10 நவம்பர் 2013

நவம்பர் – டிசம்பர் -2000 நவம்பர் 4, 2000 இதழ்: மார்க்ஸீஸம், முதலாளித்துவம், இந்தியாவின் எதிர்காலம் – ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கை வரலாற்று நூலின் ஒரு பகுதி – ஒத்துழையாமை இயக்கம் தோற்று சிறையில் இருக்கும் போது லெனின் தலைமையில் ரஷியா காணும் முன்னேற்றத்தை நேரு பாராட்டுகிறார். பொருளாதாரக் கொள்கைகளில் கம்யூனிஸமே சிறந்தது. ஆனாலும் நேருவுக்கு அங்கு ஜனநாயகக் குரல் நசுக்கப் படுவதில் உடன்பாடில்லை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=200110411&edition_id=20001104&format=html ) அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒரு கறைபடியாத கரம் : ரால்ஃப் […]

ஜாக்கி சான் 15. நரகமாகிப் போன மாயலோகம்

This entry is part 18 of 34 in the series 10 நவம்பர் 2013

15. நரகமாகிப் போன மாயலோகம்   சார்லஸ் குடும்பத்தினர் சீன நாடகக் கழகத்தை அடைந்த போது, குரு அவர்களுக்காகக் காத்திருந்தார்.  சானின் பெற்றோரை வரவேற்று விட்டு, அவனது தோளைத் தொட்டு நடத்தி, “வா.. கொங் சாங்”என்று அன்புடன் கூறி, கூடத்திற்கு அழைத்துச் சென்றார்.  “நீ இங்கு வரும்போதெல்லாம் நன்றாக இருந்ததல்லவா.. நீ இங்கே தங்குவதை விரும்புவாய் என்று எண்ணுகிறேன்” என்று பேசிக் கொண்டேநடந்தார்.   உடனே தந்தையின் பக்கம் திரும்பி, “அப்பா.. நான் நிஜமாகவே இங்கேத் தங்கலாமா?” என்று கேட்டான் சான்.   “ஆமாம் பாவ்.. உனக்கு எவ்வளவு நாள் வேண்டுமோ.. அவ்வளவு நாள்” என்றார் தந்தை.   உண்ணும் மேசை மேல் ஒரு காகிதச் சுருள் வைக்கப்பட்டு இருந்தது.  அதில் ஏதோ எழுதப்பட்டிருந்தது.  அதைப் படிக்கத் தெரியாத காரணத்தால், சான் அதைக் கண்டு கொள்ளவில்லை.  சார்லஸ்அதைப் படித்துப் பார்த்தார்.  தாயும் அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு எட்டி எட்டிப் பார்த்துப் படித்தார்.   “சான் அவர்களே.. எல்லாம் சரியாக இருக்கிறதா?” என்று கேட்டார் குரு.  “இதில் இருப்பது தான் நடைமுறைபடுத்தப்படும்.  நீங்கள் கையெழுத்திட்ட பின், இங்கு இருக்கும் வரை உங்கள் மகன் என்முழுப் பொறுப்பில் இருப்பான்.  நான் என் செலவில் உணவு, உடை, தங்கும் இடம் கொடுத்து விடுவேன்.  அவனது பாதுகாப்பிற்கு நான் உத்தரவாதம். நான் உலகின் மிகச் சிறப்பான பயிற்சியைஅவனுக்குக் கொடுத்துப் பெரியாளாக்குவேன். அவன் மிகப் பெரிய நட்சத்திரமாகும் வாய்ப்பும் உண்டு” என்று உறுதி கூறினார்.   தந்தை சொல்வதனைத்தையும் கேட்டுவிட்டு, “அவன் சம்பாதிப்பது கழகத்தைச் சேர்ந்தது என்று பத்திரம் சொல்கிறதே?” என்று கேட்டார்.   “நாங்கள் கழகத்தை குழந்தைகளின் நிகழ்ச்சிகளின் மூலமாகத் தான் நடத்தி வருகிறோம்.  அதனால் நாங்கள் சொல்லித் தருவனவற்றை தொடர்ந்து கற்று, தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். சரி தானே..”   சார்லஸ் குருவின் கூற்றை ஆமோதித்துவிட்டு, “இன்னொரு விசயம்.  பையனை ஒழுங்குப்படுத்துவதாயும், அதுவும் இறக்கும் அளவிற்கும் கூட சென்று ஒழுங்குப்படுத்துவதாய் உள்ளதே..” என்றுபயத்துடன் கேட்டார்.   “ஆம்.. கலைக்கு ஒழுக்கம் ஆத்மா.  மனித இனத்தின் வேரே ஒழுக்கம் என்று சொல்லப்படுகிறதல்லவா?” என்று எதிர் கேள்வி கேட்டார்.   சார்லஸ் அதை ஏற்றுக்கொண்டு, சானை அழைத்து, “பாவ் கவனமாக் கேள்..” என்றார்.   “என்னப்பா?”   “உனக்கு இங்கு எவ்வளவு காலம் இருக்க வேண்டும்.  ஐந்து வருடம், ஏழு வருடம்..?” என்று கேட்டார்.   “எப்போதும்” என்று மகிழ்ச்சியுடன் உரக்கக் கத்தினான்.   தாய் சார்லஸின் கைகளை பலம் கொண்ட மட்டும் அழுத்தினார்.   “அதிகபட்சம்  பத்து ஆண்டுகள் இருக்க முடியும்” என்றார் குரு.  பத்திரத்தில் பத்தாண்டு காலம் என்று எழுதி சார்லஸிடம் நீட்டினார். கையெழுத்திட்டுப் பெயர் பதித்த முத்திரையை இட்டார் சார்லஸ்.   சானுக்கு நடப்பது ஏதும் புரியவில்லை.  அடுத்த பத்து ஆண்டுகள் கழகத்தின் சொத்தானான் சான்.   கையெழுத்தான சிறிது நேரத்திலேயே, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சான் அழைக்கப்பட்டான்.   “விடை கொடுக்க எங்களுடன் வா பாவ்..” என்று தாய் கூறினார்.  அப்போது சானுக்கு அது புரியவில்லை.  இப்போதே விடைபெற வேண்டியது தானே என்று எண்ணினான்.   தாய் சொன்ன விதத்தை உணர்ந்து, சான் மறு பேச்சு பேசாமல் அவர்களுடன் நடந்தான்.  “நான் சீக்கிரமே வந்து விடுவேன்” என்று அங்கிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு சான் கிளம்பினான்.       வீட்டிற்குச் சென்று பொருள்களை எடுத்துக்கொண்டு கப்பல் துறைமுகத்திற்கு வந்தனர்.   சிறிது நேரத்தில் தந்தை கிளம்ப எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்.  தாயிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு சானிடம் வந்தார்.   “கொங் சாங்.. நீ இப்போது பெரியவன். உன்னைப் பார்த்துக் கொள். நீ எங்களுக்குப் பெருமை சேர்ப்பாய் என்று நன்றாகத் தெரியும்” […]

வில்லியம் ஸ்லீமனும் இந்திய வழிப்பறிக் கொள்ளையரும் – 1

This entry is part 9 of 34 in the series 10 நவம்பர் 2013

– நரேந்திரன்   பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்தியா சாலைப் பயணிகளுக்கு ஒரு ஆபத்தான இடமாக இருந்தது. பயணம் செய்யும் பல நூற்றுக் கணக்கான, ஏன், ஆயிரக்கணக்கானவர்கள் எந்தத் தடையமும் இன்றி மறைந்து போனார்கள். அவர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து யாரும் அக்கறையெடுத்து விசாரிக்கவில்லை. அந்த நேரத்தில் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்திய உள் நாட்டு விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்த்தார்கள். காளியை வழிபடும் ஒரு பெரும் ரகசியக் கூட்டமொன்று இப்பயணிகளைக் கொல்வதாக வந்த வதந்திகளையும் பிரிட்டிஷ் […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் 32.உலகின் சிறந்த சிறுக​தையாசிரியராகத் திகழ்ந்த ஏ​ழை……..

This entry is part 8 of 34 in the series 10 நவம்பர் 2013

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                       E. Mail: Malar.sethu@gmail.com 32.உலகின் சிறந்த சிறுக​தையாசிரியராகத் திகழ்ந்த ஏ​ழை……..   ​“பெத்து எடுத்தவதான் என்ன​யே தத்துக் ​கொடுத்துப்பிட்டா ​     பெத்த கடனுக்குத்தான் என்ன வித்து வட்டியக் கட்டிப்புட்டா ​     பெத்தவ மனசு கல்லாச்சு பிள்​ளையின் மன​சோ பித்தாச்சு இன்​​​​னொரு மனசு என்னாச்சு அது முறிஞ்சு ​போன வில்லாச்சு” என்னங்க […]