புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 30.பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகனாகத் திகழ்ந்த ஏ​ழை

This entry is part 16 of 26 in the series 27 அக்டோபர் 2013

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 30.பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகனாகத் திகழ்ந்த ஏ​ழை “உ​ழைப்பதிலா இன்பம்? உ​ழைப்​பைப் ​பெறுவதிலா இன்பம்? எதி​லே உண்​டென்று ​சொல் ​தோழா” வாங்க…வாங்க… என்னங்க பாட்​டுப் பாடிக்கிட்டு அமர்க்களமா வர்ரீங்க…என்ன பதி​லக் கண்டுபிடிச்சிட்டீங்களா….? அட…ஆமா…உலகப் புகழ் ​பெற்ற தாய் அப்படிங்கற நாவல எழுதின ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி தான் அவர். […]

ஜாக்கி சான் 13. ஹாங்காங்கில் மறுபடி

ஆஸ்திரேலியாவில் தனிமையில் எந்த வேலையும் செய்யாமல் இருக்கப் பிடிக்காமல் தந்தையிடம் ஒப்பந்தம் இருக்கிறது என்று பொய் சொல்லி ஆறு மாதம் கழித்து ஹாங்காங் திரும்பினான் சான். அந்த ஆறு மாதங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. விட்டுச் சென்ற வீடு தூசும் தும்புமாக இருந்தது. வீட்டைச் சுத்தம் செய்யவே ஒரு நாள் பிடித்தது. தங்குவதற்கு வசதிகளைச் செய்த பின்ஸ்டுடியோ பக்கம் சென்றான். அவனைப் பலரும் மறந்து விட்டிருந்தனர். வேலை தேடிச் சென்ற போது அவன் பெயரைக் கூட பலர் […]

தமிழுக்குக் கிடைத்துள்ள புதையல் – வசனம்

This entry is part 10 of 26 in the series 27 அக்டோபர் 2013

பாவண்ணன் எண்பதுகளின் தொடக்கத்தில் நான் கர்நாடகத்துக்கு வந்தேன். பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹோஸ்பெட் என்னும் இடத்தில் இயங்கிக்கொண்டிருந்த முகாமுக்குச் செல்லும்படி சொன்னது எங்கள் நிர்வாகம். அங்கே முகாம் பொறுப்பாளர் ஹோஸ்பெட்டிலிருந்து கொப்பள் என்னும் ஊர் வரைக்கும் முப்பத்திரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு தொலைபேசிக் கேபிள் புதைக்கும் அணியில் சேர்ந்துகொள்ளும்படி சொன்னார். அபோது எங்கள் முகாமுக்கு அருகில் வாழ்ந்துவந்த பசவராஜ் என்பவர் எனக்கு நண்பரானார். வீட்டையொட்டி ஒரு சின்ன பகுதியில் தேநீர்க்கடை நடத்திவந்தார். தேனீ போலச் சுறுசுறுப்பானவர் அவர். எல்லா […]

மது விலக்கு தேவையா ? சாத்தியமா?

This entry is part 8 of 26 in the series 27 அக்டோபர் 2013

மது என்ற விஷயத்தில் எதிர்கருத்தை கேட்க கூட மாட்டேன்.மது அருந்துவது தவறல்ல என்ற எண்ணம் கொண்டவர்கள் இங்கு வாழ வேண்டிய அவசியம் இல்லை.வேறு எங்காவது சென்று விடுங்கள் என்று மது எதிர்ப்பாளர்கள்/மது விலக்கு போராளிகள் எடுக்கும் நிலை வருந்த வேண்டிய ஒன்று.இதே போல தான் மத மாற்றம்,சாதி மறுப்பு திருமணம் போன்றவற்றை எதிர்க்கும்  மத/சாதி அடிப்படைவாதிகளும் பேசுகிறார்கள்           addiction எனபது வியாதி. மது இல்லை என்றால் மாத்திரை/பக்தி,சாதி வெறி(முக்கால்வாசி வெறி பிடித்தவர்கள்,காந்தியை கொலை செய்ய துணியும் […]

வம்பை விலைக்கு வாங்கும் வனிதையர்

This entry is part 30 of 31 in the series 20 அக்டோபர் 2013

  பெண்கள் கண்ணியமான முறையில் உடை உடுக்க வேண்டும் எனும் அண்மைக்காலக் கூக்குரலைப் பெண்ணுரிமைவாதிகள் பெண்களின் உரிமைகளுக்கு எதிரான தலையீடு என்பதாய்ப் பதில் கூக்குரல் எழுப்பி வருகிறார்கள். உடுக்கும் உடையும், பாணியும் அவரவர் தனிப்பட்ட உரிமைதான். ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி.  ஆனால், இங்கு மட்டுமல்லாது வேறு சில நாடுகளிலும் பெண்கள் அணியும் உடைகள் பற்றி மட்டுமே கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன.  இதனை ஓரவஞ்சனை என்று பெண்ணுரிமையாளர்கள் கருதுகிறார்கள். ஆனால், அதற்கான காரணங்களைப் ஒருதலைப்பட்சமற்று ஆராய்ந்தால், பெண்கள் […]

“காமன்சென்ஸ்” இல்லாத “காமன்வெல்த்” நாடுகள்

This entry is part 22 of 31 in the series 20 அக்டோபர் 2013

தேமொழி   சர்வதேச மனித உரிமை அமைப்பினர் அறிக்கையின்படி,  40 ஆயிரம் தமிழரை இனப்படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த கூடாது என இந்தியத் தமிழர்கள் கண்டனம் எழுப்புவதும், அதற்கு நடுவண் அரசு மதிப்பு கொடுக்காமல் மழுப்பிப் பேசும் செய்தியும் தமிழுலகத்திற்குப் புதிதல்ல.  தமிழக முதல்வர் பிரதமருக்கு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்குமாறு வலியுறுத்திக் கடிதம் எழுதுகிறார் [1].  இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதைத் தவிர்க்கக்கோரி தமிழக அரசியல் கட்சிகளும் மற்றும் பல்வேறு பொதுநல […]

திண்ணையின் இலக்கியத் தடம் -5

This entry is part 19 of 31 in the series 20 அக்டோபர் 2013

சத்யானந்தன் மே 7, 2000 இதழ்: கட்டுரை : இலங்கைப் போர் சின்னக்கருப்பன். பங்களாதேஷ் விஷயம் போல ஏன் இலங்கைத் தமிழர் பிரச்சனையை அணுகவில்லை என்று கேள்வி எழுப்புகிறார் சி.க. இந்திய அரசு இதில் தனி ஈழ ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால் அது காஷ்மீரில் தனி நாடு கோருவோருக்கு வலு சேர்த்துவிடும் என்று கருதுகிறது. காஷ்மீரில் நடப்பது நில ஆக்கிரமிப்பு. பங்களாதேஷில் நடந்ததோ வேறு. உருது பேசும் பாகிஸ்தான் உருது பேசும் பீகாரிகளைத் துணைக் கொண்டு வங்க […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 29.இந்தியா​வை அடி​மையாக்கிய ஏ​ழை

This entry is part 16 of 31 in the series 20 அக்டோபர் 2013

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                       E. Mail: Malar.sethu@gmail.com 29.இந்தியா​வை அடி​மையாக்கிய ஏ​ழை என்னங்க ​பேசாம உம்முன்னு முகத்​தை வச்சிக்கிட்டு வர்ரீங்க…அட பதில் ​சொல்லுங்க…என்னது…நீங்க பாட்டுக்கு வரும்​போது யா​ரோ சில​பேரு வழியில ஒங்கள மறிச்சு பணத்​தைத் தர்ரீங்களா…இல்​லையான்னு ​கேட்டாங்களா….?அட அப்பறம் நீங்க என்ன ​செஞ்சீங்க…என்னது நீங்களும் ஒங்ககூட வந்த நண்பரும் அவங்கள அடிச்சு விரட்டிட்டு வந்தீங்களா…காலம் […]

ஜாக்கி சான். 12 ஆஸ்திரேலிய மண்ணில்

This entry is part 15 of 31 in the series 20 அக்டோபர் 2013

ஆஸ்திரேலிய மண்ணைத் தொட்ட பின் தான் வாழ்க்கை என்ன என்பதை உணர முடிந்தது.  விமான நிலையத்தில் பையை வைத்துக் கொண்டு பெற்றோரைத் தேடி அலைந்தான்.  அவர்கள் சொன்னஎந்தக் குறியீடுகளும் அங்கு இருக்கவில்லை.  கூட்டம் அதிகமாக இருந்தது.  சீன மொழி பேசுவோர் ஒருவரும் இருக்கவில்லை.  சின்ன சீட்டில் வீட்டு முகவரியை வைத்துக் கொண்டு அலைந்தான். அங்கிருக்கும் மனிதர்களிடம் கேட்கலாம் என்றால், நீண்ட முடியும், ஆசிய உருவமும் சாதாரண உடையும் அவர்களை ஓட வைத்தன.  அங்கே தனித்துவிடப் பட்டான்.  அதுவும் அன்னிய நிலத்தில்.   இறுதியில் ஒரு விமான பணிப்பெண், சீன மொழி  தெரிந்திருந்ததால், அவனிடம் வந்து பேசினாள்.   “எங்கே போக வேண்டும்?”   “நான் இந்த முகவரிக்குப் போக வேண்டும்” என்று கூறிவிட்டு, சீட்டைக் கொடுத்தான்.   அவள் அதை வாங்கிப் பார்த்தாள்.   “இந்த இடம் சிட்னி.  இந்த முகவரி கான்பராவில் இருக்கிறது” என்று சொன்னதும் அதிர்ந்து போனான்.  தவறான இடத்திற்கு வந்து விட்டோமோ .. இனி என்ன செய்வது? என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே,   “நீங்கள் இன்னொரு விமானத்தில் அங்கு போக வேண்டும்” என்று கூறினாள்.  அதைக் கேட்டதும், “அது எங்கே இருக்கும்?” என்று உடனே கேட்டான்.   விமானப் பணிப்பெண் அவன் செல்ல வேண்டிய விமானம் நிற்கும் இடத்தைக் காட்டி விட்டுச் சென்றாள்.   பயந்து கொண்டே சென்றான். இன்னும் என்னவெல்லாம் பட வேண்டுமோ?  ஆங்கிலம் தெரியாமல் திண்டாட வேண்டியிருக்கிறதே என்று வருந்தினான்.   கான்பரா சென்று சேர்ந்ததும், அங்கும் தன் பெற்றோரைத் தேடினான்.  அரைமணி நேரம் தேடினான். அவர்களைக் காணவில்லை.  தான் வந்த இடம் சரிதானா என்ற ஐயம் ஏற்பட்டது. இனி தன் கதிஅதோ கதி தான் என்று எண்ணி, மிகச் சோர்வுடன், வெறுத்துப் போய் ஒரு நாற்காலியில் தன் பையை தொப்பென்று போட்டு விட்டு, முகத்தை மூடிக் கொண்டு என்ன செய்வதென்று யோசிக்கத்தொடங்கினான்.  ஹாங்காங் தான் மோசம் என்றால், இங்கு அதை விடவும் மோசமல்லவா?  யார் என்னைப் புரிந்து கொள்வார்கள்?  பெற்றோரிடம் கொண்டு சேர்ப்பார்கள்?   அப்போது யாரோ தோளைத் தொட்டது போல் தோன்றியது.   நிமிர்ந்து பார்த்தான்.   அதீத மகிழ்ச்சி.   நின்றிருந்தது அவனது தாய்.   “அம்மா..” அப்படியே மகிழ்ச்சியில் கத்தினான்.   தாய்க்குப் பின்னால் அவனது தந்தை நின்றிருந்தார்.   சான் தன் தந்தையைப் பல வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறான். அவர் சற்று தளர்ந்து காணப்பட்டார். தலைமுடி முழுவதுமாக நரைத்திருந்தது.   “அம்மா.. எங்கே போனீங்க?” என்று கோபத்துடன் கேட்டான்.   “நாங்கள் இங்கே தான் இருந்தோம்”   “அப்போ ஏன் என்னிடம் வரல்லை..”   “நீ ஆளே மாறிட்டே போ.. உன்னை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் நாங்களும் உன்னை தேடிக் கொண்டிருந்தோம்.  கடைசியில் நீ இங்கே வந்து உட்கார்ந்ததும் தான் உன்னைத் தெரிந்துகொண்டு இங்கே வந்தோம்..” என்றார் தாய்.   பத்து வருடங்கள் அவனைப் பெரிதும் மாற்றியிருந்தது என்பது உண்மை. குண்டாக இருந்தது மாறி ஒல்லியாகி விட்டருந்தான்.  உயரமும் கூடியிருந்தது.  ஆள் அடையாளம் தெரியாமல்உருமாறியிருந்தது உண்மை தான்.   தந்தைக்கு அவன் அங்கு வந்தது மகிழ்ச்சியைக் கொடுத்தது.  ஏனென்றால் பத்தொன்பது வயதில் அங்கு குடியுரிமைப் பெறுவது மிகவும் எளிது.   ஹாங்காங்கை 1997லில் சீனாவிற்கு கொடுத்த பின்னர் என்ன நடக்குமோ என்பது தெரிந்திராத நிலையில் ஹாங்காங்வாசிகள் இன்னொரு நாட்டின் குடியுரிமையை வாங்கி வைத்துக் கொள்வதைநல்லது என்று எண்ணியிருந்த காலம் அது.  அதையே சானின் தந்தையும் எண்ணினார்.   கான்பராவில் தந்தை பணி செய்து கொண்டிருந்த அமெரிக்க தூதுவர் அலுவலக குடியிருப்புப் பகுதியில் சான், தன் பெற்றோருடன் தங்கினான்.   சான் அங்கேயே சிறிது காலம் தங்கியிருந்து குடியுரிமையைப் பெற்றான்.  அதைப் பெற்ற பின், அவனுக்கு தான் மேலும் அன்னியமாகிப் போனதைப் போல் தோன்றியது.   பிறந்து வளர்ந்த ஹாங்காங்கிலேயே தன்னால் சாதிக்க முடியாத போது, இந்த அன்னிய மண்ணிலா சாதிக்கப் போகிறோம் என்ற வெறுப்பு தொற்றிக் கொண்டது. […]

ஆணோ பெண்ணோ உயிரே பெரிது

This entry is part 10 of 31 in the series 20 அக்டோபர் 2013

     பாலியல் வன்முறைகள் எதனால் என்பதற்கு பல காரணங்கள் முன்வைக்கபடுகின்றன.கடும்தண்டனைகள் அவற்றை வெகுவாக குறைத்து விடும் என்ற வாதமும் பலரால் வைக்கபடுகிறது .கடும் தண்டனை வழங்கப்படும்  நாடுகளில்  பெண்களின் நிலை மிகமோசமாக ,அடிமைகளின் நிலையை ஒத்திருப்பதையும்,மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நாடுகளில் பெண்கள் தைரியமாக பல்வேறு வேலைகளில் பணிபுரிவதையும்,அவர்கள் விருப்பத்திற்கேற்ப வாழும் நிலையை கண்கூடாக பார்க்கும் போது இந்த வாதத்தின் அர்த்தமற்ற தன்மை தெளிவாக தெரிகிறது.     டெல்லியில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு அதன் கொடூரத்தால் தன […]