நீங்காத நினைவுகள் – 9

This entry is part 5 of 25 in the series 7 ஜூலை 2013

தாழ்த்தப்பட்ட இந்துக்கள் ஏன் மதம் மாறுகிறார்கள் என்பதை மட்டுமல்லாது, ஆசைகாட்டியோ கட்டாயப்படுத்தியோ பிறரை மதமாற்றம் செய்யும் பிறமதத்தினர் மீதுள்ள தவற்றைச் சுட்டிக்காட்டியும்  “குற்றவாளிகள் யார்?” எனும் தலைப்பில், எனது கட்டுரை யொன்று “திண்ணை”யில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தது.  அக்கட்டுரையில், மதமாற்றம் என்பது – தானாக விரும்பியே ஒருவர் பிற மதத்துக்கு மாறினாலும் – தேவையே அற்ற ஒன்று என்பதை விளக்கி ‘மகா பெரியவர்’ என்று கொண்டாடப்பட்ட அமரர் காஞ்சி சங்கராசாரியர் அருள்மிகு சந்திரசேகர சரஸ்வதி […]

பாம்பே ட்ரீம்ஸ்

This entry is part 1 of 25 in the series 7 ஜூலை 2013

  வழக்கமாக பாம்பேயின் புறநகர் பகுதிகளில் ‘டைம்ஸ் ஆஃப் இண்டியா’வின் சில சிறப்புப்பகுதிகள் கிடைப்பதேயில்லை. எனக்கென பேப்பர் போடும் ஒரு முதியவர் , அவரின் மனைவியுடன் ஸ்டேஷன் செல்லும் வழியில் கடை பரப்பி வைத்திருப்பார். சில சமயங்களில் நேரம் கடந்து விட்டால் நேரே சென்று பேப்பர் வாங்கிக்கொண்டே ட்ரெயினைப்பிடிப்பது வழக்கம். அங்க்கிள் ‘பாம்பே டைம்ஸ்’ என்று இழுப்பேன். போரிவில்லி’க்கபுறம் யாருக்குமே கொடுக்கிறதில்ல தம்பி, இருந்தாலும் இங்க எல்லாருமாச்சேர்ந்து கேட்டுக்கிட்டிருக்கோம். கிடைக்க ஆரம்பிச்சவுடனே உங்களுக்கு மட்டும் தனியா கொடுக்கிறேன் […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​-13 ம.​பொ.சி​

This entry is part 26 of 27 in the series 30 ஜூன் 2013

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                     E. Mail: Malar.sethu@gmail.com  13. சாத​னைகள் ப​டைத்த ஏ​ழை மூன்று,,,மூன்று,,,மூன்று,,, அட என்னங்க,,,மூனு மூனுன்னு ​சொல்லிக்கிட்​டே வர்றீங்க,, ஆமா நீங்கதான் மூன்று எழுத்துல முடியும்னு ​சொன்னீங்க. நானும் என்​னென்ன​மோ ​பேருகளச் ​சொல்லிப் பாத்துட்​டேன் நீங்க எதுவு​மே இல்​லைங்குறீங்க..அதுதான் நான் மூனுமூனுன்னு ​சொல்லிக்கிட்​டே வர்​ரேன்..அப்பவாவது எனக்கு ஞாபகத்திற்கு வருதான்னு பாப்​போம்..ம்.ம்.ம்.ஞாபகத்துக்கு வரமாட்​டேங்கு​தே… நீங்கதான் விவரமாச் […]

இந்திய ஆய்வியல் துறையைக் காப்பாற்ற அணிதிரள்வோம்

This entry is part 15 of 27 in the series 30 ஜூன் 2013

  நாட்டின் பதின்மூன்றாவது தேர்தலுக்குப் பின் இந்திய சமுதாயம் எதிர்நோக்கியப் பல்வேறு பிரச்சினைகள் பற்றி பல்வேறு கோணத்தில் ‘சுடும் உண்மைகள்’ பகுதியில் மனதைத் தைக்கும் விசியங்களை ஆதாரத்துடன்  ஆசிரியர் திரு.பி.ஆர்.இராஜன் எழுதிவருதைக் கண்டு வருந்தாதத் தமிழ்ப் பற்றாளர்கள் இருக்க முடியுமா? சிறிய சமூகத்திற்கு இத்தனைப் பிரச்சனைகளா? என்று வியக்காதவர்கள் யார்? காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் லாக்காப்பில் இந்திய இளைஞர்களின்  தொடர் மரணங்கள் சமுதாயத்தினரிடையே அமைதியற்ற நிலையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. திட்டமிட்டே,கல்விமான்களும், நீதிபதி அந்தஸ்திலுள்ளவர்களும் அரசாங்கம் […]

உறவுப்பாலம்

This entry is part 14 of 27 in the series 30 ஜூன் 2013

சித்ரா சிவகுமார் ஆங்காங் ஆங்கிலேயர்களின் 100 ஆண்டுகளுக்கு மேலான ஆட்சிக்குப் பிறகு 1997இல், ஆங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.  1996லிருந்து இங்கு வாழ்ந்து அதன் வளர்ச்சியைக் கண்கூடாகக் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.  பற்பல வளர்ச்சிப் பணிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன.  அதில் மிகவும் பிரம்மாண்டமான திட்டம் தான் சீனாவின் மூன்று முக்கிய நகரங்களுக்கு உறவுப்பாலம் அமைப்பது. பேச்சு வார்த்தைகளால் அல்ல.  கடல் வழி பாலம் அமைத்து, அவற்றை இணைப்பது.  ஆம்.. ஆங்காங், மக்காவ், ஜூஹாய் ஆகிய மூன்று […]

நீங்காத நினைவுகள் – 8

This entry is part 8 of 27 in the series 30 ஜூன் 2013

தபால்-தந்தி இலாகா என்று வழங்கி வந்த இலாகாவைப் பிரித்துத் தபால் இலாகா, தொலைத் தொடர்பு இலாகா என்று சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு துறைகளாய்ப் பிரித்தார்கள் என்பது நமக்குத் தெரியும். தந்தித் துறை என்பதையே இந்தியாவில் ஒழித்துவிடப் போகிறார்களாம். இதற்கு வரவேற்பு, எதிர்ப்பு இரண்டுமே இருக்கின்றன. மின்னஞ்சல், தொலைக்குறுஞ்செய்திகள் என்று முன்னேறிய பிறகு தந்தியின் இன்றியமையாமை குறைந்து விட்டது உண்மைதான். இருப்பினும் அதை அடியோடு நீக்குவதைப் பலர் ஏற்கவில்லை. சில நாடுகள் தந்தியை ஒழித்துவிட்ட போதிலும், வேறு […]

நா. ரகுநாதன் – சில நினைவுக் குறிப்புகள்

This entry is part 18 of 27 in the series 30 ஜூன் 2013

எனக்கு முதலில் தெரியவந்தது விக்னேஸ்வரா வா, ரசிகனா என்பது இப்போது நினைவுகொண்டு சரியாகச் சொல்லத் தெரியவில்லை. அனேகமாக ரசிகன் தான் என்று நினைக்கிறேன். 1957 லிருந்து 1966 வரை தில்லியில் கரோல் பாகில் அடிக்கடி தங்கும் அறையையும் சாப்பிடும்  ஹோட்டலையும் மாற்றிக்கொண்டு வாழவேண்டி வந்த காலத்தில் ஒரு சௌகரியமும் இருந்தது.  எல்லாவற்றிற்கும் எங்கு போனாலும் குறுக்கே போகும் ஒரு ரோடு உண்டு ஒரிஜினல் ரோடிலிருந்து ராமானுஜம் மெஸ்ஸைத் தாண்டி நான் இலவசமாக டைம் ந்யூஸ்வீக் பத்திரிகைகளை அவை […]

நான் ஒரு பொதுமகன். And Im not a terrorist

This entry is part 28 of 29 in the series 23 ஜூன் 2013

  நீங்கள் ஒருவரைக் கொலை செய்ய விரும்புகிறீர்களா? அதுவும் நீங்கள்தான் கொன்றீர்களென்பது வெட்டவெளிச்சமாகத் தெரியவேண்டும் ஆனால் உங்களுக்குத் தண்டனை கிடைக்காது. உடனே காவல்துறையில் வேலைக்குச் சேர்ந்துவிடுங்கள்.  காவல்துறையெனும் போர்வையில் உங்கள் நண்பரையோ, எதிரியையோ விரோதத்துக்காகவோ, இலாபத்துக்காகவோ உங்களால் கொன்றுவிடுவது இலகு. தண்டனையைப் பற்றி ஏன் பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு இடம் மாற்றம் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு வேண்டப்பட்டவர்களாக இருப்பின், உங்களுக்குப் பிடித்த இடத்தைச் சொல்லி அங்கு உங்களால் மாறிக் கொள்ளலாம். அல்லது வேறு இடத்துக்கு மாறிக் கொள்வதற்காக வேண்டியே […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 12

This entry is part 4 of 29 in the series 23 ஜூன் 2013

( முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், தமிழாய்வுத்துறை, மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                     E. Mail: Malar.sethu@gmail.com  12.ஆடு​மேய்த்த அறிவியல் ​மே​தை…..      ஒண்ணு ​தெரியுமாங்க? அட..யாரு?…அட​டே நீங்களா? வாங்க… என்ன ஏ​தோ ​தெரியுமாங்குறீங்க?…என்னது?..அட அதுதாங்க எந்தப் ​பொருள ​மேல் ​நோக்கி எறிஞ்சாலும் அது திரும்பவும் கீழ் ​நோக்கித்தான் வருங்கற தகவலத்தான் ​கேட்​டேன். அட இது ஒரு ​பெரிய அறிவியல் ​மே​தையினு​டைய தத்துவமாச்​சே.. இது […]

மொழியின் அளவுகோல்

This entry is part 2 of 29 in the series 23 ஜூன் 2013

  தேமொழி   ஒரு மொழியின் மாட்சியையும் வீழ்ச்சியையும் அளவிட முடியுமா? ஒரு மொழியின் வளர்ச்சி எந்தப் பாதையில் செல்கிறது? வளர்ச்சியை நோக்கியா அல்லது அழிவை நோக்கியா? இதனை எப்படித் தெரிந்து கொள்வது?   உலகில் உள்ள 7,105 வாழும் மொழிகளில் (புழக்கத்தில் உள்ள மொழிகளில்), 10% மொழிகள் நன்கு வளர்ச்சி அடைந்த நிலையில் மேன்மையான முறையில் பயன்பாட்டில் உள்ளன 22% மொழிகள் பயன்பாட்டில் இருப்பதுடன் அவை தொடர்ந்து வளர்ச்சியை நோக்கியும் செல்கின்றன 35% மொழிகள் நல்ல […]