எம்.வி.வெங்கட்ராமின் “வேள்வித் தீ” புதினம் காட்டும் சௌராஷ்டிரர்களின் வாழ்வும் பண்பாடும்

This entry is part 18 of 31 in the series 7 ஏப்ரல் 2013

  –       யாழினி முனுசாமி     நவீனத் தமிழிலக்கியத்தில் குறிப்பிடத் தகுந்தவராகத் திகழ்பவர் எம்.வி.வெங்கட்ராம். அவரது படைப்புகள் காலத்தால் அழியாத் தன்மை கொண்டவையாகும். அவரது வேள்வித் தீ எனும் புதினம் தமிழின் தலைசிறந்த புதினங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. அதற்கான காரணம் அப்புதினம் ஒரு சமூக வரலாறாகவும் இருப்பதுதான். தமிழகத்தில் வாழும் சௌராஷ்டிரர்களைப் பற்றிய இனவரைவியலாக இப்புதினம் அமைந்திருக்கிறது. அப்புதினத்தின்வழி சௌராஷ்டிரர்களின் வாழ்வியலையும் அச்சமூகத்தையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.   எம்.வி.வெங்கட்ராம் வாழ்க்கைக் குறிப்பு :   […]

அமெரிக்க அனுபவங்கள் – ஒரு சமூகவியல் பார்வை – புத்தக மதிப்புரை ஆசிரியர் – நாகேஸ்வரி அண்ணாமலை

This entry is part 6 of 31 in the series 7 ஏப்ரல் 2013

முதல் பதிப்பு – 2012 மொத்த பக்கங்கள் – 210 விலை – 165 பொதுவாக ஒரு சிறு பிரயாணம், அது வியாபார நிமித்தமாகவோ அல்லது சுற்றுலா மற்றும் வேறு ஏதாவது காரணங்களுக்காகவோ செல்வதென்றாலே பல முன்னேற்பாடுகள் அவசியமாகிறது. அதுவும் எங்கு பார்த்தாலும் தீவிரவாதமும், கொள்ளையும், பாலியல் வன்கொடுமைக்ளும் மலிந்து கிடக்கின்ற இந்த காலகட்டத்தில் நாடு விட்டு நாடு பயணம் செய்யும் போது, குறிப்பிட்ட அந்த நாட்டைப்பற்றிய அனைத்து தகவல்களும் அறிந்து கொண்டு பயணம் செய்யும்போது ஒரு […]

மாணவ நெஞ்சில் நஞ்சு கலக்கும் கிராதகர்கள்

This entry is part 3 of 31 in the series 7 ஏப்ரல் 2013

ராஜேந்திரன் ஒரு வழியாய் மீண்டும் வகுப்புகள் திறந்து மாணவர்கள் தங்களின் எல்லையை உணர்ந்து கோஷமின்றி, ஒரு இரு நிமிடம் தினமும் மௌனமாய் நிற்கிறார்கள். மாணவர் போராட்டத்தின் போது தமிழ் உணர்வாளர்கள் என்று நாமகரணம் சூட்டிக்கொண்டவர்கள் மௌனமாய் இருந்தது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. நரிகளாய் அவர்கள் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்ப்பது போல் இதில் தமக்கு ஏதாவது கிடைக்காத என்று காத்திருந்தது நடக்காமலே போனது. பாலசந்திரன் படத்தின் மேல் நடந்த அரசியலில், சிக்சர் அடித்தது போல் இன்று ஜெ […]

விஸ்வரூபம் – பறவைகளை நஞ்சு தாங்கிகளாக்கும் மனித அவலங்கள்

This entry is part 30 of 31 in the series 31 மார்ச் 2013

6.26. ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? (விவிலியம் – மத்தேயு) ** விஸ்வரூபம் திரைப்படம் பற்றி விமர்சனம் எழுதப்புகுந்தால், அது முழுமையாக ஆராயப்பட வேண்டும். அப்போது அதன் முழுக்கதையையும் பேச வேண்டி வரலாம் என்பதாலும், அன்றைக்கு எப்படிப்பட்ட விமர்சனங்களை விஸ்வரூபம் எதிர்கொண்டிருக்கிறது என்பதாலும், அவற்றில் சொல்லப்படாத சில விஷயங்களை பேசுவதற்காக தாமதமாக இந்த விமர்சனம் எழுதப்படுகிறது. ** மறுபடியும், தமிழ் […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – ஷேக்ஸ்பியர்

This entry is part 26 of 31 in the series 31 மார்ச் 2013

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ( முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com      இன்று பலரும் பணமிருந்தால்தான் வாழ்க்​கையில் உயர முடியும் என்று நி​னைக்கின்றனர். பணமின்றி வாழ்க்​கையில்​லை என்றும் கருதி மனதிற்குள் மறுகிக் கு​மைகின்றனர். வாழ்வில் வசதி ப​டைத்​தோரே புகழ​டைந்துள்ளனர் என்றும் எண்ணுகின்றனர். பணம் ப​டைத்​தோ​ர்தான் புகழ் ​பெற முடியுமா? பணம் ப​டைத்தவர்களுக்குத்தான் இவ்வுலகமா? மற்றவர்களுக்கு இங்கு இடமில்​லையா? அவர்கள் வறு​மையில் உழன்று உழன்று […]

விவசாயிகள் போராட்டமா?

This entry is part 14 of 31 in the series 31 மார்ச் 2013

“விவசாயிகள் போராட்டமா? வளர்ச்சிக்கு எதிரானதது”, என்றொரு கண்ணோட்டம் திறந்த வீட்டிற்குள் சுண்டெலி புகுதல் போல மெதுவாக நம் மனதுகளில் ஏற்படத் துவங்கியுள்ளது. அவ்வெண்ணம், ‘எது வளர்ச்சி?’ என்ற புரிதலுக்குள் நம் சிந்தனை செல்லாதிருப்பதன் விளைவாக ஏற்படுவது. நாகரிகம் உருவானதற்கு முன்பு உருவானது மனித இனம். அவ்வினம், வெற்றிகரமாக அடுத்த நூற்றாண்டிற்குள் ஆரோக்கியமாக காலடி எடுத்து வைக்க மிகவும் தேவையான ஒன்று விவசாயமும், உணவும். நாகரிகம் என்பது, மனிதனின் வாழ்க்கையை நெறிப்படுத்தவே. ஒருவனுக்கு உணவே இல்லை என்ற நிலை […]

நாகூர் புறா.

This entry is part 12 of 31 in the series 31 மார்ச் 2013

இரா ஜெயானந்தன்   மன்னர் அச்சுதப்பா நாய்க்கர் வயிற்று வலியால் அவதிப்படும் செய்தி, தஞ்சை மாநாகரெங்கும் ஒரே செய்தியாகப் பேசப்பட்டது. மக்களும் துயரத்தில்தான் வாழ்ந்துக் கொண்டிருந்தனர். ராஜ வைத்தியர்கள், பல்வேறு மூலிகைச் சாறுகளால். தினமும் வெவ்வேறு வகையான வைத்தியங்களை செய்து வந்தனர். தஞ்சையின் அனைத்துக் கோவில்களில் இருந்தும், பிரசாதங்கள் வந்த வண்ணம் இருந்தன். முக்கியமாக பெரியக் கோவில் , புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் பிரசாதங்கள், மன்னனுக்கு அளிக்கப்பட்டது. அரசாங்க கோப்புகள் முடங்கி கிடந்தன. வேற்று நாட்டு […]

கூலித்தமிழரே நம் தோழர்கள், சொந்தங்கள்…

This entry is part 10 of 31 in the series 31 மார்ச் 2013

  ராஜேந்திரன்     ” அர்த்தராத்திரி ஃபோனும், மாணவர்கள் நிலையும்” பின்னூட்டத்தில் பின்வருமாறு சொன்னது மனதை இன்னும் அரிக்கிறது.. Dr.G.Johnson says: March 28, 2013 at 8:02 am ஈழத் தமிழர்களுக்காக தமிழக மாணவர்களும் மாணவிகளும் கொதித்து எழுந்து போராடுகின்றனர். அவர்கள் உண்மையில் தமிழ் இன உணர்வால் போராடினால் அதை நான் பாராட்டுகிறேன். தமிழ் நாட்டு மாணவர்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் அபிமானிகளே. இதற்கு நாம் ஏதும் செய்ய முடியாது. அவரவரின் அரசியல் தலைவரின் […]

பரதேசி டாக்டர் – நல்லவரா..? கெட்டவரா…?

This entry is part 9 of 31 in the series 31 மார்ச் 2013

புனைப்பெயரில்      பரதேசி படத்தில், தேயிலை தோட்டத்தில் கொத்தடிமைகளாக வாழும் மக்களை இனம் புரியா நோய் தாக்கி அவர்கள் பிடுங்கிப் போட்ட செடி போல் செத்து விழுவார்கள். அது தொடர்ந்து , அங்கு வரும் ஒரு டாக்டர், அவர்களுக்கு இயேசப்பன் நாமம் சொல்லி வைத்தியம் பார்ப்பார். வைத்தியம் பார்ப்பது விட, அவர்களின் நாக்கிலும் நெற்றியிலும் அவரும் அவருடன் வரும் பெண்மணியும் இயேசு நாமத்தை குறியீடாக்குவார்கள். அப்புறம், இயேசுவின் நாமம் சொல்லி ஒரு குத்துப்பாட்டு ஆடி பன்களையும் […]

தமிழகத்தில் ஈழ தமிழர் ஆதரவு ப்போராட்டங்கள்

This entry is part 8 of 31 in the series 31 மார்ச் 2013

ஈழத்தமிழருக்கு ஆதரவான குரல்கள் மாணவர் கோரிக்கைகள் எல்லாம் தற்போது தேக்க நிலையை நோக்கிநகர்கிறது.. இதற்க்கு பல காரணங்கள் உண்டு. 1960கலில் இடம்பெற்ற பிரஞ்சு மணவர்கிளற்சிக்குப்பின்மாணவர்கள் மாணவர் போராட்டங்கள் பற்றி பல கோட்பாட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.இவற்றை வாசிக்கும்படி கோருவதுடன் இவற்றுக்கும் வெளியில் உள்ள மிக முக்கியமான அடிப்படைக் காரணம் ஒன்றை அடையாளம் காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கம். இனவெறி இலங்கை அரசுக்கெதிராக நிலைபாடு எடுக்கும்படி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதுதான்மூன்று தசாப்தங்களாக தமிழகத்தில் இடம்பெற்றுவரும் போராட்டங்களின் அடிப்படை […]