என் பார்வையில் தமிழ் சினிமா

This entry is part 3 of 34 in the series 6 ஜனவரி 2013

தமிழ் சினிமாவில் இலக்கியம் எழுத்து பற்றி எழுதச் சொல்லி எனக்குப் பணிக்கப்பட்டிருக்கிறது சைனாவில் இட்லியும் தேங்காய்ச் சட்னியும் தேடினால் கிடைக்கலாமோ என்னவோ. லாப்லாந்தில் மொந்தன் பழம் எங்கே கிடைக்கும் என்று தேடலாம். இர்குட்ஸ்க் நகரில் காலையில் எழுந்ததும் இடியாப்பமும் குருமாவும் தேடலாம். நாமும் கடந்த 90 வருட காலமாக தமிழுக்கு ஒரு ஆவேசத்தோடு தொண்டை வரள கோஷமிட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். தமிழ் வளர்ச்சியே தன் கொள்கையாகக் கொண்ட இயக்கம் அரசுக்கு வந்து இரண்டு தலைமுறை ஆன பிறகும், […]

காரசாரம். – பெண் சிசுக்கொலை பற்றிய விழிப்புணர்வு

This entry is part 33 of 34 in the series 6 ஜனவரி 2013

பொதிகையின் காரசாரம் நிகழ்ச்சிக்காக முகநூல் நண்பர் ப்ரேம் சாகர்  தொடர்பு கொண்டு பெண்சிசுக் கொலை பற்றிய விழிப்புணர்வு இருக்கிறதா இல்லையா என்ற தலைப்பில் கருத்துக் கூற அழைத்திருந்தார். விழிப்புணர்வு இல்லை என்ற பகுதியில் நானும் விழிப்புணர்வு இருக்கிறது என்ற பகுதியில் கருத்துக் கூற என் கணவரும் இடம் பெற்றிருந்தோம். சமூக ஆர்வலர் ஷைலா சாமுவேல்  இப்போது விழிப்புணர்வு வந்து விட்டதாகவும் ஆனால் முன் காலங்களில் எல்லாம் பெண் பிள்ளை என்றால் தத்து யாரும் எடுப்பதில்லை எனவும் கூறினார். […]

உன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை – 4

This entry is part 19 of 34 in the series 6 ஜனவரி 2013

விமர்சகர்களின் குற்றச் சாட்டுகளை மேலும் ஆராயலாம். கோவை குண்டு வெடிப்பிற்காக(1998) கைது செய்யப்பட ஒரு தீவிரவாதி, அதற்கு காரணம் பெஸ்ட் பேக்கரி(2002) தான் என்று காலத்திற்கு பிந்தைய ஒரு சம்பவத்தை கூறுகிறாராம்! இது படத்தில் உள்ள ஒட்டையாம். இப்படி ஒரு கண்மூடித் தனமாக கருத்தை எப்படி வெட்கமே இல்லாமல் வெளியே சொல்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை! இதை சொல்லும் தீவிரவாதி அப்துல்லாவிடம் ‘நீ ஏன் கோவையில் குண்டு வைத்தாய்?’ என்று கேட்கப் படவில்லை. அவன், கோவையில் குண்டு […]

“தாயைக்காக்க தனயன்களே புறப்படுங்கள் ,தமிழைக்காக்க தமிழர்களே புறப்படுங்கள்………!”

This entry is part 21 of 34 in the series 6 ஜனவரி 2013

                                                               தலைவர்.வே.ம.அருச்சுணன்         இந்த ஆண்டு தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் சரிவை கண்டுள்ளதைக் கண்டு தமிழ்மொழி வளர்ச்சி மீது அக்கறையும் மொழிமீது உயிரையே வைத்துள்ள உண்மையான தமிழர்களுக்கு அதர்ச்சியும் வேதனையும் தந்துள்ளன. இந்நிலை இனியும் தொடருமானால் இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகளே இந்நாட்டில் இல்லாமல் அழிந்து போய், தமிழ்ப்பள்ளிகள் தேசிய பள்ளிகளாக மாற்றம் கண்டு தமிழ் மாணவர்கள் அனைவரும் மலாய் மொழியிலேயே கல்வி பயில வேண்டிய கட்டாய  நிலை […]

கட்டாயக் காதலும் கற்பழிப்பும்!

This entry is part 1 of 34 in the series 6 ஜனவரி 2013

  ஜோதிர்லதா கிரிஜா       விரட்டி விரட்டித் தன்னைக் காதலித்த ஓர் இளைஞனை ஒரு பெண் மறுதலித்தாள்.  அதன் பிறகும் அவன் தொல்லை தாங்க முடியாத எல்லையைத் தொட்டதால் தன் தந்தையிடம் அவனைப்பற்றி அவள் கூற நேர்ந்தது.  அவள் அப்பா அவனை எச்சரித்த பிறகும் அவனுடைய தொந்தரவு தொடரவே, காவல் துறையினரிடம் அவனைப் பற்றி அவள் தந்தை புகார் கொடுக்கும்படி ஆயிற்று.  காவல்துறை அதிகாரி அவனை யழைத்து எச்சரித்த பிறகு, அவனது நச்சரிப்பு அப்போதைக்கு நின்று […]

வாழ்வியல் வரலாற்றின் சில பக்கங்கள் -41

This entry is part 26 of 26 in the series 30 டிசம்பர் 2012

அகலாதுஅணுகாதுதீக்காய்வார்போல்க இகல்வேந்தர்ச்சேர்ந்தொழுகுவார்.   தேடல் தேடல் எளிதல்ல. அர்த்தமுள்ள முயற்சியும் , தெரிந்தவைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலும் இன்றியமையாதவை. ஊக்கம் இடையில் உடைந்துவிடக் கூடாது. சிறுவயது முதல் எனக்கு அமைந்த குணம் இது. பல பாதைகளில் சென்றாலும் என் இலக்கு ஒன்றுதான். நாட்டில் சுதந்திரப் போராட்டம், தந்தை அரசியலில். .பின்னர் அரண்மனைக் கருகில் வீடு, அரண்மனையில் தந்தைக்கு உத்தியோகம், அரண்மனை விருந்தினர்  மாளிகைக்கு வரும் பெரியவர்களின் அறிமுகமும் பழக்கமும் தோற்றுவித்த அச்சமின்மை,  இலக்கிய ஈடுபாடு. பெற்றவரால் சோதிடம், […]

அதிகரிக்கும் பாலுறவு பலாத்கார குற்றங்களுக்கு தீர்வு என்ன?

This entry is part 23 of 26 in the series 30 டிசம்பர் 2012

தலைநகரில் நடந்த அவலம் இந்திய மக்களின் உள்ளங்களை உலுக்கியிருக்கிறது. அதுவும், இளைஞர்களையும் இளைஞிகளையும் அச்சத்தின் உச்சிக்கே அழைத்துச் சென்றிருக்கிறது. அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்று தெரியாமல், காங்கிரஸ் கட்சி தலைமை தவித்திருக்கிறது. இங்கே ஏராளமான தீர்வுகள் முன் வைக்கப்படுகின்றன. அதில் முக்கியமாக, இந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிக்க கோரும் குரல்கள் உரத்து எழுகின்றன. தண்டனையை கடுமையாக்குவது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உடனடி வழக்கை முடித்து தீர்ப்பு தருவது ஆகியவை ஓரளவுக்கு பயன் தரும் என்றாலும் அது தும்பை […]

பெண்களின் விதிகள்

This entry is part 18 of 26 in the series 30 டிசம்பர் 2012

தேமொழி இந்த டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி இரவு, இந்தியத் தலைநகர் டெல்லியில், கயவர்களால் வன்புணர்வுக் கொடுமைக்கு ஆளான 23 வயது கல்லூரி மாணவியின் நிலையைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. தற்பொழுது சிங்கப்பூர் அனுப்பப்பட்டு, உறுப்பு மாற்ற சிகிச்சைக்கு ஆயத்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் அவர். ஞாயிறு மாலை திரைப்படம் பார்த்துவிட்டு, தக்க துணையுடன் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிற்கு ஏற்பட்ட நிலைமை இது.  இதனால் மக்கள் பொங்கி எழுந்து, தலைநகரும், நாடும் […]

லைஃப் ஆஃப் பை (Life of Pie) திரைப்படம்: மனிதனும் மிருகமும்: ஒரே சங்கிலியின் இரு கண்ணிகள்

This entry is part 7 of 26 in the series 30 டிசம்பர் 2012

    பைக்குப் பதின்ம வயதை நெருங்கிவிட்ட பருவம்தான். அதற்கே உரிய பயம் அறியாத ஆசைகள் அவனிடமும் உண்டுதான். அதில் ஒன்று தந்தையார் நடத்தி வரும் சிறு உயிரியல் பூங்காவில் உள்ள வேட்டை மிருகங்களுடன், குறிப்பாகக் கம்பீர நடை நடந்து வரும் புலியுடன் நட்பு கொள்ள வேண்டும் என்பது. ஒருநாள் நடுநிசியில், வேண்டாம், வேண்டாம் என்று தடுக்கிற  தன்னைவிட இரண்டு வயது மூத்த அண்ணனையும் எழுப்பி இழுத்துக் கொண்டு கையில் ஒரு இறைச்சித் துண்டுடன் புறப்பட்டுவிடுகிறான்.. கூண்டைக் […]