மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -7

This entry is part 8 of 21 in the series 21 அக்டோபர் 2012

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா     பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல ! ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல ! ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன. பெர்னாட் […]

மன தைரியம்!

This entry is part 23 of 23 in the series 14 அக்டோபர் 2012

ரசிப்பு எஸ். பழனிச்சாமி நேற்று காலையில் கண் விழித்த போது, அப்படி ஒரு விசித்திர அனுபவம் ஏற்படும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அன்று முழுவதும் அதைப் பற்றிய நினைப்பே மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருந்தது. இப்போது நினைத்தாலும் நேற்று நடந்தது அப்படியே என் கண் முன்னால் நிற்கிறது. எங்கள் வீட்டில் எப்போதும் சைவ உணவுதான் என்பதால், ஞாயிற்றுக்கிழமை என்றால் மதிய உணவுக்கு காளான் பிரியாணியோ அல்லது பன்னீர் பிரியாணியோ, அதுவும் இல்லாவிட்டால் காளான் குழம்போ […]

அக்னிப்பிரவேசம்- 5

This entry is part 20 of 23 in the series 14 அக்டோபர் 2012

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com   பாவனா இன்டர் மூன்றாவது வகுப்பில் தேர்ச்சி பெற்றாள். ஏற்கனவே எல்லோரும் எதிர்பார்த்த விஷயம் என்பதால் யாருக்கும் வருத்தம் ஏற்படவில்லை. தொடர்ந்து மேல்படிப்புப் படிக்கும் ஆர்வம் கொஞ்சம் இல்லாமல் போய்விட்டது. வீட்டுப் பொறுப்பு முழுவதும் அவள் தலையில் விழுந்தது. விஸ்வம் வரன் தேடவேண்டும் என்று முடிவு செய்தான். பாவனாவின் அழகிற்கு வரன் கிடைப்பது கஷ்டம் இல்லை என்று நினைத்துவிட்டான். ஆனால் பள்ளிக்கூடம், வீடு, இருக்கும் […]

நம்பிக்கை ஒளி! (3)

This entry is part 10 of 23 in the series 14 அக்டோபர் 2012

தாயின் அன்பிற்கு இணையாகச்  சொல்வதற்கு, இந்த உலகில் தாயன்பைத் தவிர வேறு ஏதுமில்லை. தாயில்லாத மாலுவிற்கு தாய்க்குத் தாயாக இருந்தவள் சாரு அக்கா. மாலுவிற்கும், சாருவிற்கும் இரண்டு வயதே வித்தியாசம் என்றாலும் தான் மூத்தவள் என்ற பெருமையுடன்  தாய் என்ற அந்தப் பதவியைத் தானே எடுத்துக் கொண்டவள், சாரு. ஆசிரமத்தில் மைதானத்தில் உள்ள வீணை மீட்டும் கலைவாணியின் திருஉருவிற்கு அன்றாடம் மலர்தூவி அருச்சித்து வணங்கும் சாருவின் பிரார்த்தனையில். தங்கை மாலுவிற்கு நல்ல வழி காட்ட வேண்டும், அவள் […]

நிழல்

This entry is part 8 of 23 in the series 14 அக்டோபர் 2012

வீட்டில் இருப்பது, களத்தில் இருப்பது, அலுவலில் முனைவது, அலுவலகம் செல்வது இவை யாவுமே வெவ்வேறானவை. கவனம் மட்டுமே தொடர்ச்சி உள்ளது. இதையேல்லாம் பழகிக் கொள்ள எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் குறைவாக இருக்கும் போது வெற்றிக்கான இடைவெளி குறைகிறது. குழந்தையின் அறை, மற்றொரு படுக்கை அறை, ஹால் கிட்டத்தட்ட எல்லா இடத்திலும் துணிகள், நோட்டுப் புத்தகம் அல்லது புத்தகம், ஸ்பூன், உதிரியான உணவுத் துணுக்குகள் என விதம் விதமான குப்பைகளாய், பார்க்க சகிக்க இயலாது இருந்தது. ரவிக்கு […]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -6

This entry is part 7 of 23 in the series 14 அக்டோபர் 2012

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன. பெர்னாட் ஷா (Preface to Mrs. […]

கேளா ஒலிகள் கேட்கிறவள்

This entry is part 6 of 23 in the series 14 அக்டோபர் 2012

பீட்டர் ஸ்டாம் (சுவிட்சர்லாந்து)   ஜெர்மானிய மொழியில் இருந்து ஆங்கிலத்தில் (Expectations) மைக்கேல் ஹோஃப்மன் தமிழ் வடிவம் எஸ். ஷங்கரநாராயணன் நீங்கள் நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் எத்தனையோ சப்த களேபரங்களின் நடுவே ஒரு தனி ஒலிக்குறிப்பை என்னால் பிரித்தறிய முடியும். பேரோசை என்றில்லை சின்ன சிணுக்கம். அதைக்கூட நான் அறிந்துகொண்டு விடுவேன். ஒலிகளுக்காக என் காதுகள் ஆர்வப்பட்டுக் காத்திருக்கின்றன. சவாலாய்க் கூடச் சொல்வேன். மத்தவர்கள் கேட்காத ஒலிகளைக் கூட நான் துல்லியமாக அறிவேன். இந்த அடுக்கக […]

வாயு

This entry is part 5 of 23 in the series 14 அக்டோபர் 2012

அரு. நலவேந்தன் – மலேசியா           “புகைப்பிடிப்பதனால் பல்வேறு நோய்களால் இன்றைய இளைய சமுதாயத்தினர் சிக்கித்தவிக்கின்றார்கள்…….! .உதாரணத்திற்கு நுரையீரல் புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய், வாய்ப்புற்றுநோய் மற்றும் மிகக் கொடுமையானதாகக் கருதப்படும் மூளைப்புற்று நோயும் இதில் அடங்கும். புகைப்பிடிப்பவர்கள் மட்டுமின்றி, அவர்கள் விடும் புகையை மற்றவர்கள் சுவாசித்தாலும் அவர்களையும் இந்த நோய்கள் தாக்கவல்லது!”  என்று   ஒலிப்பெருக்கியின் வழி மலேசியச் சுகாதார மையத்திலிருந்து வந்த அதிகாரி இஞ்சே மாருல் ஹாசன் உரை ஆற்றிக்கொண்டிருந்தார்.           ஆசிரியர்களும்  மாணவர்களும்  மிகவும் உண்ணிப்பாக […]

பஸ் ரோமியோக்கள்

This entry is part 1 of 23 in the series 14 அக்டோபர் 2012

  லேசாக தாமரையின்  மூச்சுக் காற்றோடு மெழுகுவர்த்தியின்  சுடர் தள்ளாடித்  தள்ளாடித் தலையாட்டிக் கொண்டே  எரிந்து அந்த அறைக்குள் மங்கிய வெளிச்சத்தை அழுது கொண்டே வாரி இறைத்துக் கொண்டிருந்தது. மெழுகு திரியின் ஒளியில் தாமரை  குனிந்து உட்கார்ந்து கொண்டு  நோட்டில் எதையோ  எழுதிக் கொண்டிருக்கிறாள் அவளின் குனிந்த  பக்கவாட்டு முகம் அந்த ஒளியில்  தங்க நிலவாக தக தக வென்று  மின்னிக் கொண்டிருக்கிறது. அவளது உள்ளத்தில் மட்டும் இன்று ஏனோ ஒரு நிம்மதியான மகிழ்ச்சி. காந்தி ஜெயந்தின்னு […]

அம்மாவின் மோதிரம்

This entry is part 21 of 23 in the series 7 அக்டோபர் 2012

  அந்த மோதிரத்துக்கு கெட்ட செய்திகளை மட்டும் ஈர்த்துக் கொண்டுவரும் சக்தி இருக்கிறதோ என்று அவன் ஐயப்பட்டது அன்று உறுதியாகிவிட்டது. அந்த மோதிரத்தை விரலில் மாட்டிய நாளிலிருந்து தினம் ஏதேனுமொரு கெட்ட தகவல் வந்துகொண்டே இருந்தது. அணிந்த முதல்நாள் வந்த தகவல் மிகவும் மோசமானது. அவன் தங்கிப் படித்து வந்த வீட்டு அத்தை கிணற்றில் விழுந்து தவறிப்போயிருந்தாள். அன்றிலிருந்து தினம் வரும் ஏதேனுமொரு தகவலாவது அவனைக் கவலைக்குள்ளாக்கிக் கொண்டே இருந்தது. முதலில் அவன் அந்த மோதிரத்தை இது […]