அக்னிப்பிரவேசம் – 4

This entry is part 19 of 23 in the series 7 அக்டோபர் 2012

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com வகுப்பைச் சேர்ந்தவர்கள் எல்லோறும் பிகினிக் சென்றார்கள். ஏறக்குறைய இருபத்தைந்து மாணவிகளுடன் கம்பார்ட்மென்ட் கலகலப்பாய் இருந்தது. வயதானவர்கள் முதல் நேற்று மீசை முளைத்த விடலைகள் வரையில் அந்தப் பெட்டிதான் கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தது. மாணவிகளும் சுதந்திரமாய் குறும்பு சேட்டைகள் செய்துகொண்டும், வம்பு பேசிக்கொண்டும், கண்ணில் பட்ட ஆண்பிள்ளைகளுக்கு பட்டப்பெயரை சூட்டிக் கொண்டும் ரகளை செய்து கொண்டிருந்தார்கள். பாவனாவின் பார்வை இரண்டு வரிசைகளைத் தாண்டி ஜன்னல் ஓரமாய் […]

நம்பிக்கை ஒளி (2)

This entry is part 16 of 23 in the series 7 அக்டோபர் 2012

மன உணர்வும், மனித உறவுகளும், சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றங்களுக்கு உட்பட்டது. இதன் காரணமாகவே வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் பல திருப்பு முனைகளைச் சந்திக்கிறோம். ராஜகணபதி கோவிலில் கூட்டம் இல்லாதலால் அமைதியாக இருந்தது. கண்மூடி அமர்ந்தவுடன் ஏனோ பழைய நினைவுகள் ரொம்பவே அலைக்கழித்தது. உறவுகளுக்காக ஏங்கும் இந்த மனதை கட்டுப்படுத்துவது சிரமம்தான். எதிர்பார்ப்பு என்பதே ஏமாற்றங்களுக்கு காரணமாகிறது. அறிவுக்கு தெரிந்த பல விசயங்கள் உணர்விற்கு எட்டுவதில்லை. அதற்கு கட்டுப்படுவதும் இல்லை. யதார்த்தங்களை அப்படியே ஏற்றுக் கொள்வது மட்டுமே மன […]

ரத்தத்தை விடக் கனமானது தண்ணீர்

This entry is part 15 of 23 in the series 7 அக்டோபர் 2012

  அந்தக் காரின் முதுகில் மோதிய வேகத்தில் தன் இருசக்கர வாகனத்துடன் இரண்டு மீட்டர் இழுத்துச் செல்லப்பட்டார் வசந்தன். தலைக் கவசத்தின் இடப்பக்கம் பழைய டயராய்த் தேய்ந்து விட்டது. அந்த ஒரு வினாடி வசந்தனின் உயிரின் விலை 90 வெள்ளிக்கு வாங்கிய அந்தத் தலைக் கவசம்தான். சாலை ஓரத்திற்கு தூக்கிவரப்பட்டார். முதலில் சில மூச்சுக்களைக் கடினமாக இழுத்தார். பிறகு சரளமானது. உடல் முழுதும் எல்லா மூட்டுமே மடங்க மறுக்கிறது. ஓர் வாடகைக் கார் ஓட்டுநர் காரை நிறுத்திவிட்டு […]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்)

This entry is part 3 of 23 in the series 7 அக்டோபர் 2012

அங்கம் –3 பாகம் –5 ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன. […]

பஞ்சதந்திரம் தொடர் 58 – மூன்று ஸ்தனமுள்ள அரசகுமாரி

This entry is part 35 of 36 in the series 30 செப்டம்பர் 2012

வடக்குப் பிரதேசத்தில்  மதுபுரம் என்ற நகரம் இருக்கிறது. அங்கு மதுசேனன் என்ற அரசன் இருந்தான். அவனுக்கு ஒரு சமயம் மூன்று ஸ்தனங்கள் உள்ள பெண் பிறந்தாள். அரசன் மூன்று ஸ்தனங்களுடன் அவள் பிறந்திருப்பதைக் கேட்டு மந்திரியை அழைத்து, ‘’இவளைக் காட்டில் கொண்டு விட்டுவிடு. அதனால் ஒருவரும் அறியமாட்டார்கள்’’ என்றான். அதைக்கேட்ட மந்திரி ‘’மஹாராஜா, மூன்று ஸ்தனங்களையுடையவள் குலத்திற்குக் கெடுதலை கொண்டு வருவாள் என்று அறிந்ததே. இருந்தாலும் பிராமணர்களை அழைத்துக் கேட்க வேண்டும். அதனால் இரு உலகங்களுக்கும் எதிராக […]

கதையே கவிதையாய்! (7) சிங்கமடங்கல் – கலீல் ஜிப்ரான்

This entry is part 31 of 36 in the series 30 செப்டம்பர் 2012

  (சிங்கத்தின் மகள்)     தம் சிம்மாசனத்தின் மீது துயில் கொண்டிருந்த ஒரு மூதாட்டி அரசிக்கு சாமரம் வீசிக்கொண்டு நின்றிருந்தனர், நான்கு அடிமைகள்.  குறட்டை விட்டுக்கொண்டிருந்த அந்த அரசியின் மடியில் பூனை ஒன்று மெலிதாக உறுமிக்கொண்டு, அந்த அடிமைகளை சோம்பலுடன் வெறித்துக் கொண்டிருந்தது.  முதல் அடிமை பேச ஆரம்பித்து, “இந்த மூதாட்டி தூங்கும் போது எவ்வளவு அவலடசணமாக இருக்கிறார் பாருங்கள். அவர் வாய் துருத்திக்கொண்டு, சாத்தான் தனக்கு மூச்சுத்திணறல் ஏற்படுத்துவது போல சுவாசித்துக் கொண்டிருக்கிறார்.“ என்றான்.  பின்னர் […]

வெற்றியின் ரகசியம்!

This entry is part 30 of 36 in the series 30 செப்டம்பர் 2012

ரசிப்பு எஸ். பழனிச்சாமி காலையிலிருந்து பாத்ரூம் ஷவர் குழாயில் சிறிதளவு தண்ணீர் தொடர்ந்து கொட்டிக்கொண்டே இருக்கிறது. குமிழை முழுவதுமாக மூட முடியவில்லை. ராஜனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பிளம்பரைக் கூப்பிடலாமா? அவன் கேட்கும் கூலி ஒரு பக்கம் இருக்கட்டும். குழாயைக் கழட்டுகிறேன் பேர்வழி என்று சுவர் டைல்ஸை எல்லாம் உடைத்து விட்டால் என்ன செய்வது? பார்த்து பார்த்து செலக்ட் செய்த டிசைன் என்று வாடகைக்கு விடும்போது வீட்டுக்காரர் சொன்னாரே! அது இப்போது உடைந்துவிட்டால் கடையில் இதே […]

அக்னிப்பிரவேசம் -3

This entry is part 29 of 36 in the series 30 செப்டம்பர் 2012

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com உலகமே ஆனந்த மயம் என்று எண்ணிக கொண்டிருந்த அவள் எண்ணத்தில் அன்று மாலையே இடி விழுந்தது. அஃப்கோர்ஸ்! ரொம்ப சின்ன இடிதான். “சுந்தரி இருக்கிறாளா? என் பெயர் மூர்த்தி, சுந்தரியின் அண்ணன்” என்றான் அவன். “வாங்க.. உட்காருங்க. சித்தியைக் கூப்பிடுகிறேன்” என்று உள்ளே ஓடினாள் பாவனா. “அண்ணாவா? எதுக்காக வந்தான் இப்போது?” யோசனையுடன் வெளியே வந்தாள் சுந்தரி. கூடத்திற்கு வந்தவள் “நீ போ காலேஜுக்கு. […]

நம்பிக்கை ஒளி! – 1

This entry is part 25 of 36 in the series 30 செப்டம்பர் 2012

  ”அம்மா.. அம்மா. தூங்குறயா நீனு.. இந்த பாப்பா பொம்மையைப் பாறேன். திடீர்னு கண்ணே திறக்க மாட்டீங்குது.. அச்சச்சோ, பாப்பா மாரியே நீயும் கண்ணே தொறக்க மாட்டீங்கறே.. ஐய.. பாப்பா மாதிரி நீனும் வெள்ளாடறியா… அம்மா.. அம்மா…”   “அக்கா, அம்மா தூங்கறாங்க பாரு. தொந்திரவு பன்னாத. அம்மா நேத்தே காச்சல்னு சொல்லிச்சுதானே. நல்லா தூங்கட்டும். அப்பதான் சீக்கிரமா காச்சல் சரியாவும்.”   “இல்லை, மாலு எனக்கு வயிறு பசிக்குதே. அம்மா இன்னும் சோறு செய்யவே இல்லியே.. […]

எங்க வீட்டு தங்க ஊசிகள்…!

This entry is part 23 of 36 in the series 30 செப்டம்பர் 2012

தெருவில் “ஊ…ஊ…ஊ….ஊ…..லொள்..லொள்..லொள்…லொள்….ஊ..ஊ..ஊ..ஊ.. ” இரவின் அமைதியைக் கிழித்துத் துவம்சம் பண்ணிக் கொண்டிருந்த தெருநாய்களின்  ஊளையிடும் சத்தம் கேட்டு ஏற்கனவே பயந்து கொண்டிருந்த ஜெயந்திக்கு வயிற்றைப் பிசைந்து..தொண்டை வரண்டது..கடிகார முள் சத்தம் வேற “டிக் டிக் டிக்..”..என்று இதயத் துடிப்போடு சேர்த்து அதிவேகமாக நகர்வது போல  உணர்ந்தவள், கார்த்தால ஸ்பெஷல்  கிளாஸ்  இருக்குன்னு  சொல்லிட்டு சீக்கிரமாக் கிளம்பி  காலேஜுக்குப் போன அபிலாஷ் பாதி ராத்திரி ஆகியும்  இன்னும், வீடு வந்து சேரலை. அவன் கேட்டதும்  பைக் வாங்கிக் கொடுத்தது […]