எங்க வீட்டு தங்க ஊசிகள்…!

This entry is part 23 of 36 in the series 30 செப்டம்பர் 2012

தெருவில் “ஊ…ஊ…ஊ….ஊ…..லொள்..லொள்..லொள்…லொள்….ஊ..ஊ..ஊ..ஊ.. ” இரவின் அமைதியைக் கிழித்துத் துவம்சம் பண்ணிக் கொண்டிருந்த தெருநாய்களின்  ஊளையிடும் சத்தம் கேட்டு ஏற்கனவே பயந்து கொண்டிருந்த ஜெயந்திக்கு வயிற்றைப் பிசைந்து..தொண்டை வரண்டது..கடிகார முள் சத்தம் வேற “டிக் டிக் டிக்..”..என்று இதயத் துடிப்போடு சேர்த்து அதிவேகமாக நகர்வது போல  உணர்ந்தவள், கார்த்தால ஸ்பெஷல்  கிளாஸ்  இருக்குன்னு  சொல்லிட்டு சீக்கிரமாக் கிளம்பி  காலேஜுக்குப் போன அபிலாஷ் பாதி ராத்திரி ஆகியும்  இன்னும், வீடு வந்து சேரலை. அவன் கேட்டதும்  பைக் வாங்கிக் கொடுத்தது […]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -4

This entry is part 16 of 36 in the series 30 செப்டம்பர் 2012

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன. பெர்னாட் ஷா (Preface […]

ஓடியது யார்?

This entry is part 12 of 36 in the series 30 செப்டம்பர் 2012

பரசுவால் நீலு பேசும் ஒரு வார்த்தைளை பொறுத்துக் கொள்ளவோ மன்னிக்கவோ முடியவே இல்லை. கோபித்து கொள்ளவோ தடுக்கவோ தைரியமுமில்லை. அவளுடைய பேச்சுக்குப் பேச்சு அதை கேட்க நேர்ந்தது. மனம் திடுக்கிட்டு பதறுகிறது. ஆனால் அதற்கு ஒரு காரணமிருந்தது. அவன் சிறுவயதிலேயே யாரோ சொன்ன விஷயம் மனதில் பதிந்து போனது வேறு. யார்? பாட்டிதான் சொன்னாள். ஆமாம். “சிவசுவோட அம்மா குடுகுடுப்பாண்டியோட ஓடிப் போயிட்டாளாம். பாவம் குழந்தைகளை தாத்தா-பாட்டிகிட்டே வுட்டுட்டு அப்பன்காரன் கண்காணாம போயிட்டான். அவமானம்தாங்காம போயிட்டாலும் குழந்தைகளுக்காக […]

சிறை

This entry is part 10 of 36 in the series 30 செப்டம்பர் 2012

மேலே திடீரென விழுந்து ஊர்ந்த கரப்பானைத் தட்டி விடும் முயற்சியில் மாடத்தில் இருந்த குளிக்கும் சோப்பு டப்பாவுடன் கீழே விழுந்தது. அவனுக்கு வியர்த்தது. இருள் சூழ்ந்த நிலையில் அடுத்த அடி எடுத்து வைக்கும் போது சோப்பு வழுக்கி விடுமோ என்று ஐயமாயிருந்தது. தட்டுத் தடுமாறி ‘வெஸ்டர்ன்’ கம்மோடின் மீது அமர்ந்தான். ஏன் இப்படி நிகழ்கிறது? குளியலறையில் நுழைந்த போது கதவைத் திறந்து தானே வந்தேன்? மின்விளக்கும் எரிந்ததாகவே நினைவு. இப்போது வெளிச்சம் இல்லாதது மட்டுமே சவால் என்று […]

பஞ்சதந்திரம் தொடர் 57

This entry is part 40 of 41 in the series 23 செப்டம்பர் 2012

பிராமணனின் மனக்கோட்டை ‘’ஓர் ஊரில் சுபாவக்ருபணன் என்ற பெயருடைய பிராம்மணன் இருந்தான். அவன் பிச்சையெடுத்து வந்த மாவில் ஒரு பகுதியைச் சாப்பிட்டு மிகுதியை ஒரு பாத்திரத்தில் நிரப்பி வந்தான். அந்தப் பாத்திரத்தை ஒரு முனையில் தொங்கவிட்டு அதன் அடியில் கட்டிலைப் போட்டுக்கொண்டு எப்பொழுதும் ஒரு கண்ணால் அதைப் பார்த்துக்கொண்டே இரவில் யோசனை செய்தான்: ‘’இந்தக் குடமோ நிறைந்திருக்கிறது. எப்பொழுதாவது மாவுக்குப் பஞ்சம் ஏற்பட்டால் இதிலிருந்து நூறு ரூபாய் கிடைக்கும். பிறகு அதன்மூலம் இரண்டு ஆடுகளை வாங்குவேன். பிறகு […]

அக்னிப்பிரவேசம் 2 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

This entry is part 37 of 41 in the series 23 செப்டம்பர் 2012

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com விஸ்வத்தை கிராமப் பள்ளிக்கூடத்திற்கு டிரான்ஸ்பர் பண்ணி விட்டதால் குடும்பம் சொந்தக் கிராமத்திற்கு வந்து சேர்ந்தது. சிறிய ஓட்டுவீடுதான் என்றாலும் துப்புரவாய் இருந்தது. சுற்றிலும் நாலாபக்கமும் காலி இடம் இருந்தது. முன் பக்கம் முழுவதும் பூச்செடிகள். அருந்ததி கடந்த ஒரு வருடமாய் ரொம்ப பலவீனமாய் போய்க் கொண்டிருந்ததால் டாக்டரிடம் காட்டினார்கள். கேன்சர் என்று சந்தேகப்பட்டு உடனே கருப்பையை நீக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். பதினைந்து நாட்களுக்கு முன்பு […]

தலைமுறைக் கடன்

This entry is part 30 of 41 in the series 23 செப்டம்பர் 2012

முகில் தினகரன் (சிறுகதை) தான் அமர்ந்திருந்த அந்த சேரை உடகார்ந்தவாறே, அப்படியும் இப்படியுமாக இடுப்பை அசைத்து சோதித்துப் பார்த்தார் கேஷியர் வரதராஜன். ‘லொடக்…லொடக்” என ஒரு பக்கமாய் ஏறி இறங்கியது. குனிந்து பார்த்தார். அதன் அடிப்பகுதியில் ஒரு புஷ் மட்டும் இல்லாமலிருந்தது. ‘அடப்பாவி!…எல்லாச் சேருக்கும் புது வயர் பின்னியாச்சு….புஷ் போட்டாச்சுன்னு சொன்னானே அந்த வயர் பின்னறவன்!…வரட்டும்…வரட்டும்…பில் சாங்ஷன் ஆகி…பேமெண்டுக்கு என்கிட்டதானே வரணும்?…கவனிச்சுக்கறேன்!” கோபத்துடன் தனக்குத்தானே பேசிக் கொண்டார். பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு, ‘சார்…இந்தாங்க சார் பில்லு!” என்று […]

குரல்

This entry is part 29 of 41 in the series 23 செப்டம்பர் 2012

சத்யானந்தன் மின்சார வண்டித் தொடர் ரயில் நிறுத்தத்தை விட்டு கடந்து நீங்கிய பின் அவன் தண்டவாளங்களைக் கடந்து, சரிவும் மேடுமாய் இருந்த பாதையைத் தாண்டி நெடுஞ்சாலையை அடைந்தான். வெளிச்சமும், விரைவும், ஓசையுமாய் கனரக வாகனங்கள், பேருந்துகள், கார்கள் இடைவிடாது சென்று கொண்டிருந்தன. இரவில் நெடுஞ்சாலையைக் கடப்பது கிட்டத்தட்ட தற்கொலை முயற்சி போன்றது தான். ஆனாலும் கடைசி வண்டியைப் பிடிப்பதே பழக்கமாகிவிட்டது. எதோ நினைவு வந்தவன் போல U வளைவு வரை ஓரமாகவே நடந்தான். வளைவில் ஏதேனும் ஒரு […]

சுபாவம்

This entry is part 24 of 41 in the series 23 செப்டம்பர் 2012

கே.எஸ்.சுதாகர் ஆனந்தன் ‘கோல்ஸ்’ (Coles) சுப்பர்மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தான். அவுஸ்திரேலியாவில் ‘கோல்ஸ்’ பிரபலமான ஒரு பல் பொருள் அங்காடி. இரண்டொரு நிரைகள் தள்ளி அவனுடன் வேலை செய்யும் •பாம்(Pham) தனது றொலியில் (Troly) பொருட்களை நிரப்பிக் கொண்டிருந்தான். அவன் வியட்நாம் தேசத்தைச் சேர்ந்தவன். நிரப்பிக் கொண்டிருந்தான் என்று சொல்ல முடியாது. றொலி வெறுமையாக இருந்தது. பொருளின் விலையைத் திருப்பிப் பார்ப்பதும், பின்னர் முகர்ந்து பார்த்துவிட்டு பத்திரமாக இருந்த இடத்திலேயே வைப்பதுமாக இருந்தான். ஒரு சொல்லில் அவனைப் […]

வெள்ளம்

This entry is part 17 of 41 in the series 23 செப்டம்பர் 2012

: சுப்ரபாரதிமணியன்   தான் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பதாய் அவன்  அவ்வப்போது சொல்லிக்கொண்டதுண்டு. படுக்கையில்  யாருடனாவது களைத்து  விழுந்து உடம்பைக் குறுக்கிக் கொண்டு தூங்க ஆரம்பிக்கும் போது பெரும்பாலும் அவன் அப்படிச் சொல்லிக் கொள்வான். இல்லையென்றால் சவுந்தர்ய உபாசகனாகி இவ்வளவையும் ரசிப்பவனாக ஆகியிருக்க முடியுமா என்றிருக்கும். இவ்வளவு  பெண்கள்  தன்னிடம்  அகப்பட்டுக்கொள்வார்கள் என்று அவன் நினைத்துப்பார்த்ததுமில்லை.அய்ந்து வருடம் முன்பெல்லாம் அவன் தனித்து விடப்பட்ட போது அவனுக்கு சாவு பற்றிய எண்ணம் தான் மிகுந்திருந்தது. சரவணன் பெரியப்பாவிடம் ஒருநாள் கூட […]