ஓடும் பஸ்ஸில் ஒரு நாடகம்..!

This entry is part 24 of 37 in the series 2 செப்டம்பர் 2012

  :ஜெயஸ்ரீ ஷங்கர்,தில்லை. காலங்கார்த்தால ஃபோன் மணி அடித்து எழுப்பியது.  எடுத்ததும்,  அம்மா தான்….விஷயம் பெரிசா ஒன்றும் இல்லை. ஆனால் அழைப்பில் அவசரம். இன்னைக்கு இங்கு ஸ்ரீவாரி கல்யாண உற்சவம் நடக்கப் போறது.. நீயும் எங்களோட கண்டிப்பா வந்து கலந்துககோ. இப்பவே சிதம்பரத்தில் இருந்து கிளம்பினால், சரியாயிருக்கும்…. வா….வந்து கல்யாணத்தைப் பார்த்துட்டுக் கூட நீ கிளம்பிக்கோ பரவாயில்லை. அம்மா ரொம்ப வற்புறுத்தி அழைத்த இடம் புதுச்சேரி. எப்போ கல்யாணம்…?  ன்னு கேட்டேன். அது சாயந்தரமாத்தான்…..ஆனாலும் நீ கார்த்தாலயே வந்துடு….. சரியா… வெச்சுடறேன் […]

உரஷிமா தாரோ (ஜப்பான்)

This entry is part 23 of 37 in the series 2 செப்டம்பர் 2012

உரஷிமா தாரோ (ஜப்பான்) சித்ரா சிவகுமார் ஹாங்காங் நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பு, ஒரு கோடை மாலையில், உரஷிமா தாரோ என்ற வாலிபனொருவன், அலைவீசும் கடற்கரையில் அமைதியாக நடந்து கொண்டிருந்தான்.  அன்று அவன் மீன் பிடித்து, சந்தையில் விற்று, பணத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தான்.  அன்றைய தொழில் மிகவும் திருப்திகரமாக இருந்ததால், சற்றே மகிழ்ச்சியுடன் நடை பயின்று கொண்டிருந்தான். அவன் நடந்து கொண்டிருந்த வழியில், அவன் கண்களில், திடீரென்று ஒரு ஆமை தென்பட்டது.  ஆமை.. பாவம்.. கேட்பாரற்று தன்னுடைய […]

மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -41

This entry is part 22 of 37 in the series 2 செப்டம்பர் 2012

  நாகரத்தினம் கிருஷ்ணா     51.       மயக்கம் தெளிந்திருந்தேன். பறவைகளும் விலங்குகளும் கூடி உரையாடுவதுபோல குரல்கள் தெளிவின்றி கேட்டன. வீட்டின் முன்வாசலிலிருந்த பூவரசமரங்களிலும், இடது புறம் களைத்து காலை பரப்பியபடி வாயில் நுரையொழுக கண் துஞ்சும் எருதுகளிடமும் வெக்கையின் பாரிய வீச்சு. விநோத கயிறுகளால் இழுப்பட்ட சர்க்கஸ் கூடாரம்போல வீட்டு வாசலை வெயில் மூடியிருந்தது. என்னைக் கண்டதும் அலை இயக்கம் நின்ற கடல்போல அங்கே மௌனம். விழல் வேய்ந்து கீழே சிமெண்ட் மெழுகிய அக்கொட்டகை […]

உயர்வென்ன கண்டீர்?

This entry is part 19 of 37 in the series 2 செப்டம்பர் 2012

(செப்டம்பர் 11 பாரதியார் நினைவு நாள் சிறுகதை:) மலர்மன்னன்     ரயிலடியில் இறங்கி வெளியே வந்த ராமசாமிக்குக் கிழக்கு மேற்குத் தெரியவில்லை. பொழுது அப்போதுதான் புலர்ந்து கொண்டிருந்தது. எதிராளி முகந் தெரிய ஆரம்பிக்கவில்லை. புதுச்சேரி அவருக்கு முன்பின் அறியாத ஊர். இங்கே யாரிடம் என்னவென்று விசாரிப்பது?   அவன் வெறித்துப் பார்த்துக்கொண்டு நிற்பதைப் பார்த்து ஓடி வந்தான், ஒரு ஆள். “சாமீ, வண்டி வேணுமா” என்றான்.   ‘சரி’ என்று அவன் பின்னால் நடந்தான். அந்த […]

அது ஒரு வரம்

This entry is part 18 of 37 in the series 2 செப்டம்பர் 2012

முகில் தினகரன் திரைப்படங்களில் கதாநாயகி மழையில் நனைந்தபடி ஓடிச் சென்று ஒரு குடிசையில் ஒதுங்குவதையம் குடிசைக்குள் அமர்ந்திருக்கும் கதாநாயகன் நனைந்த நிலையில் நிற்கும் அவளின் மேனியழகில் சொக்கிப் போய் காதல் வயப்பட்டு நெருங்கி வந்து அணைப்பதையும், அவளும் அவன் அணைப்பில் மயங்கிச் சாய்வதையும், பார்க்கும் போதெல்லாம் சிரிப்புச் சிரிப்பாய் வரும் சாவித்திரிக்கு. ஆனால் இன்று அந்தக் கதாநாயகியின் சூழ்நிலை நிஜத்தில் அவளுக்கே ஏற்பட்ட போது அவளுடைய மனநிலை வேறு விதமாயிருந்தது. சிரிப்பு வரவில்லை மாறாக…எதையோ தேடும் ஆவல்…எதிர்பார்ப்பு […]

கதையே கவிதையாய்! (3)

This entry is part 17 of 37 in the series 2 செப்டம்பர் 2012

    வழி – கலீல் ஜிப்ரான்   குன்றுகளின் மத்தியில், தம் தலைப்பிள்ளையான ஒரே மகனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள் ஓர் பாவை. மருத்துவர் ஆங்கே நின்று கொண்டிருக்கையிலேயே, அக்குழந்தை இறந்தது ஓர் காய்ச்சலினால். அந்தத் தாயவள் வேதனையினாலே. மனம் குழம்பிப் போனாள்  அம்மருத்துவரிடம், “சொல்லுங்கள், சொல்லுங்கள் அவனது செயல்களை முடக்கிப்போட்டதோடு, அவனுடைய இனிய கானத்தையும்  அமைதியாக்கியது எது?” என்று பதறினாள். அந்த மருத்துவரோ, ”அது அந்தக் காய்ச்சல்தான்” என்றார். மேலும் அந்தத் தாய், “ஏன் அந்தக் […]

நல்லதோர் வீணை..!

This entry is part 5 of 37 in the series 2 செப்டம்பர் 2012

 சிறுகதை:ஜெயஸ்ரீ ஷங்கர்,சிதம்பரம்   மயில்கழுத்து நீலப்பட்டுப் புடவையில் அன்னப்பட்சி ஜரிகை ஜொலிக்க மெல்லிய கொலுசொலி பார்கவியின்  நடைக்கு ஜதிபோட, தலையில் சூட்டிய  பிச்சிப்பூவின் மணம் அவள் கடந்து சென்ற பாதை முழுதும்  மலரின் புகழைப்  பரப்பியது.  “பார்கவி இன்னும் கொஞ்சம் மெல்ல நடவேன்” என்று காதில் அசைந்தாடிய ஜிமிக்கிகள் ரகசியமாய் எச்சரிக்க, மனதைப் பிடுங்கித் தின்ற வெட்கத்தையும் பயத்தையும் ஒதுக்கிவிட்டு பிரார்த்தனையோடு மேடையில் அமர்கிறாள். விரித்திருந்த ஜமுக்காளத்தில் காத்திருந்து, அமர்ந்தவளின் மடியில் தலை வைத்தது  அவளது அருமை […]

புதிய அனுபவம்

This entry is part 1 of 37 in the series 2 செப்டம்பர் 2012

    எழுதியவர் : ‘கோமதி’   பாகீரதியிடம் தெருக்கோடி வீட்டு பையன் ஓடி வந்து, “உங்க வீட்டுக்குபுதுசா ஒருத்தர் வந்திருக்காரில்லயா? அவரை போலீஸ் பிடிச்சுண்டு ஜீப்புலே அழைச்சுண்டு போனா. நான் ஸ்கூலுக்கு போறபோது பார்த்தேன்” என்றபோது பாகி “ஐயையோ, புதுப்பையன் கன்னடமும் தெரியாது. இங்கிலீசும் பேசத்தெரியாது. எங்கே போய் தேடறது?’’ என்று கவலைப்பட்டாள்.   ”மல்லேச்வரம் போலீஸ் ஸ்டேஷனுக்குத்தான் கூட்டிக்கொண்டுபோயிருப்பார்கள் ” என்றுசொன்ன பையன் விளையாட ஓடிவிட்டான். மணி மாலை நாளுக்கு மேலாகிவிட்டது.   மாடியில் […]

மானும் விறகுவெட்டியும் (கொரிய நாடோடிக் கதை)

This entry is part 23 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

சித்ரா சிவகுமார், ஹாங்காங் வெகு காலத்திற்கு முன்பு, கொரிய நாட்டின் கும்காங் மலையடிவாரத்தில், ஒரு ஏழை விறகுவெட்டி வாழ்ந்து வந்தான். அவன் தாயுடன் தனியே வாழ்ந்தான். மணம் ஆகியிருக்கவில்லை. ஒவ்வொரு நாளும், மலைக்குச் சென்று விறகு வெட்டி, அதை விற்று, தன் வாழ்க்கையை நடத்தி வந்தான். ஒரு முன்பனி காலத்தில், சிவப்பு மேபில் மரங்கள் அடர்ந்த காட்டின் எல்லாப்பகுதியும் தகதகவென்று ஒளிர்ந்து கொண்டு இருந்த போது, எப்போதும் போல், காட்டில் மரம் வெட்டச் சென்றான். கடினமாக மரத்தை […]

சாமி போட்ட முடிச்சு

This entry is part 21 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

முகில் தினகரன் குடிசைக்கு வெளியே கயிற்றுக் கட்டிலைப் போட்டுக் கொண்டு வானத்து நட்சத்திரங்களை பிரமிப்புடன் பார்த்தபடியே படுத்துக் கிடந்த சாமியாடிக்கு தெக்காலத் தோப்புப் பக்கமிருந்து வந்த நாய்க் குரைப்புச் சத்தம் சற்று உறுத்தலாகவே இருந்தது. “இதென்ன கருமமோ தெரியல இன்னிக்கு நாய்க இந்தக் கூப்பாடு போடுதுக…ஒருவேளை வெள்ளானப்பட்டியில் ப+ந்த மாதிரி…நம்மூர்ப்பக்கமும் முகமூடித் திருடனுக ப+ந்துட்டானுகளோ?” யோசனையுடன் எழுந்து கொய்யா மரத்தருகே சென்று தெக்காலத் தோப்புப்பக்கமாய்ப் பார்வையைச் செலுத்தினார். தூரத்தில் நேர்கோடாய்ப் படுத்துக் கிடந்த ரயில் தண்டவாளத்தின் மீது […]