சாமி போட்ட முடிச்சு

This entry is part 21 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

முகில் தினகரன் குடிசைக்கு வெளியே கயிற்றுக் கட்டிலைப் போட்டுக் கொண்டு வானத்து நட்சத்திரங்களை பிரமிப்புடன் பார்த்தபடியே படுத்துக் கிடந்த சாமியாடிக்கு தெக்காலத் தோப்புப் பக்கமிருந்து வந்த நாய்க் குரைப்புச் சத்தம் சற்று உறுத்தலாகவே இருந்தது. “இதென்ன கருமமோ தெரியல இன்னிக்கு நாய்க இந்தக் கூப்பாடு போடுதுக…ஒருவேளை வெள்ளானப்பட்டியில் ப+ந்த மாதிரி…நம்மூர்ப்பக்கமும் முகமூடித் திருடனுக ப+ந்துட்டானுகளோ?” யோசனையுடன் எழுந்து கொய்யா மரத்தருகே சென்று தெக்காலத் தோப்புப்பக்கமாய்ப் பார்வையைச் செலுத்தினார். தூரத்தில் நேர்கோடாய்ப் படுத்துக் கிடந்த ரயில் தண்டவாளத்தின் மீது […]

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 40

This entry is part 20 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

– நாகரத்தினம் கிருஷ்ணா ஹரிணி 49. நீண்ட விஸில் சப்தம். பேருந்து குலுங்கி நின்றது. ஒரு பெருங்கூட்டமே இறங்குவதுபோலிருந்தது. இரண்டு நடுத்தர வயது பெண்மணிகளுடன் ஓர் இளைஞனும், கைக்குழந்தையுடன் பெண்ணொருத்தியும் இறங்கினார்கள். அவர்களைத்தொடர்ந்து இறங்கினேன். வேகமாக வந்த சைக்கிளொன்று என்மீது இலேசாக இடித்து நின்றது. நிலை தடுமாறி விழ இருந்தவள் சமாளித்து நின்றேன். சைக்கிளில் பத்துபன்னிரண்டு வயது சிறுவன். சட்டென்று பிரேக் அடித்து பாரில் இறங்கி காலை ஊன்றினான். ‘கோவிச்சுக்காதீங்க அக்கா, பெல்லடித்துக்கொண்டுதான் வந்தேன். நீங்க கவனிக்கலை’, […]

முள்வெளி – அத்தியாயம் -23

This entry is part 19 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

ஆகஸ்ட் 14. இரவு மணி எட்டு. பெரிய ஜமக்காளம் விரிக்கப் பட்ட அந்த வீட்டு மொட்டை மாடியில் கிட்டத்தட்ட இருபது பேர் அமர்ந்திருந்தார்கள். மொட்டை மாடிக் கதவுக்குப் பின் இருந்த ‘ப்ளக் பாயிண்ட்’டிலிருந்து வந்த ஒயரின் முனையில் ஒரு நூறு வாட்ஸ் பல்பு சிறு சணலால் நிலையின் மீது அடிக்கப்பட்ட ஆணியில் ஒயர் சுற்றப் பட்டுத் தொங்கிக் கொண்டிருந்தது. ஈசல்களும் கருப்பு நிற சின்னஞ்சிறு பூச்சிகளும் அந்த பல்பை மொய்த்து சிலரின் சட்டை மற்றும் தலை மீது […]

பெய்வித்த மழை

This entry is part 16 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

பா.பூபதி பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்க முடியும், பகலில் இரவு கரைவதை என்று புரிந்தாலும் போதுமான அளவு இரவை போர்வையில் அடைகாத்துக் கொண்டேன். ஆனாலும் நேரம் வளர வளர நான் அடைகாத்த இரவின் நிரம் தேய்ந்தபடியே இருந்தது. ஒரு கட்டத்தில் தேய்ந்த நிரம் அதற்குமேல் மங்காமல் அப்படியே இருந்தது. இதென்ன இப்படியே இருக்கே! என்று பக்கத்தில் போய் பார்த்ததும் பல்லைக்காட்டி சிரித்தது நிழல். நிழலா! இது நிஜத்தின் பின்னால்தானே இருக்கும். இது… இது இந்த போர்வையின் நிழலாச்சே! அப்படினா […]

இது…இது… இதானே அரசியல்!

This entry is part 11 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

”ஏப்பா…. சந்திரா பொண்ணு வீட்டுக்காரங்க எப்ப பார்க்க வர்ரீங்கன்னு கேட்டு அனுப்பியிருக்காங்க.. நீ ஒன்னுமே சொல்லாம இருக்கியே…?” “கல்யாணம் பண்ணிக்கற நிலைமையிலா இப்ப இருக்கு நம்ம் வீடு… அக்கா குழந்தைக்கு மொட்டையடிக்கிறதுக்கு போயிட்டு வந்து சீர் பத்தலைன்னு அவிங்க மாமியார்கிட்ட பேச்சு தின்ன விசனமே தீரல.. ஆச்சு தங்கச்சியோட கட்டு சோறு விருந்தும் வந்தாச்சு.. அவ குழந்தைப்பேறுக்கு வரப்போற நாளும் தூரமா இல்ல… இந்த லட்சணத்துல வர சம்பளம் வாயுக்கும், வவுத்துக்குமே சரியாயிருக்கு.. இதுல இன்னொரு டிக்கட்டை […]

கதையே கவிதையாய்! (2)

This entry is part 10 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

இரு பாதுகாவல் தேவதைகள் ஒரு பொன்மாலைப் பொழுதில் நகர எல்லையில் இரு பாதுகாவல் தேவதைகள் சந்தித்து, ஒருவரை ஒருவர் வாழ்த்தியவாறு உரையாடலானார்கள். ஒரு தேவதை, “தற்போது என்ன செய்கிறாய், உனக்குக் கொடுக்கப்பட்ட பணி என்ன?” என்றது. மற்றொரு தேவதை, “பள்ளத்தாக்கின் அடியில் வாழும் மிக மோசமாக மதிப்பிழந்த, பெரும் பாவியான, வீழ்ச்சியடைந்த ஒரு மனிதனின் பாதுகாவலனாக நியமிக்கப்பட்டுள்ளேன். நான் கடுமையாக உழைக்க வேண்டிய ஒரு முக்கியமான பணி அது என்பது உறுதி” என்று பகன்றது. முதலாம் தேவதை, […]

கடிதம்

This entry is part 9 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

வர்ஷினி என்ற இந்தப் பெண்ணை மையமாக வைத்து தான் சுந்தரின் மனப்பிரபஞ்சமே சுற்றிக் கொண்டிருந்தது.அழகு,கடவுள் அவளுக்கு அளித்த வரமென்றால், அவர்கள் குடும்பப் பின்னணி அவளுக்கு கம்பீரத்தைக் கொடுத்தது;அவளது நிமிர்ந்த நன்னடையில் தன்னம்பிக்கை தெரிந்தது.கல்லூரி வாழ்க்கையில் படிப்புச் சம்மந்தமான அன்றாடக் கடமைகளை சுந்தர் நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது,உள்ளம் அவ்வப்போது கழுகாய் சிறகு விரித்து அவளின் மனவெளியில் பறந்து கொண்டிருக்கும்.அத்திப்பூத்தாற் போல் ஏதாவதொரு சமயத்தில் அவளருகில் நெருங்கி நிற்கும் போது,அவளது முகம் பிரகாசிக்கும் ஒளியில் அவனுடைய மனம் தொட்டாற்சிணுங்கியாய் கூனிக் குறுகி […]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -9

This entry is part 7 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

 மேடம் மோனிகாவின் வேடம்  (Mrs. Warren’s Profession)  நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்)  அங்கம் -2 பாகம் -9   ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, […]

பெரியம்மா

This entry is part 38 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

ரிஷ்வன் ஏதோ பொத்தென்று என் மேல் விழ போர்வையை விலக்கி என்னவென்று  பார்த்தேன்… அணில் ஒன்று ‘கீச் கீச்’ என்ற சத்தத்தோடு ஜன்னல்  திரையை  விலக்கி வந்த வழியே ஓடியது என் கண்ணில் பட்டது…  என் போர்வையிலோ பாதி தின்ற கொய்யாப் பழம் விழுந்து  கிடந்தது…  என்ன  நடந்தது  என்று  என்னால்  ஓரளவு  ஊகிக்க  முடிந்தது… ஜன்னலோடு  ஒட்டிய  வேப்ப மரத்திலிருந்து  அணில்  உள்ளே  நுழைய  அந்த நேரம் பார்த்து காற்று  பலமாய்  அடித்திருக்க வேண்டும்…  காற்றிலே […]

கருணைத் தெய்வம் குவான் யின்

This entry is part 35 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

சித்ரா சிவகுமார் ஹாங்காங் ஏழாம் நூற்றாண்டில், சீனாவின் சூ மாநிலத்தை மிகவும் திறமை வாய்ந்த அரசர் மியாவ் சுயன் ஆண்டு வந்தார். அவரது ஆணையை எவரும் எதிர்த்தவர் இல்லை.  யாரேனும் ஆணைப்படி நடக்கவில்லையென்றால், கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர், குடும்பத்தினர் உட்பட! அரசர் மியாவிற்கு, அழகான மூன்று மகள்கள் இருந்தனர். மூத்தவள் மியாவ் யின். இரண்டாமவள் மியாவ் யான். இளையவள் மியாவ் ஷான். இளையவள் பிறந்த உடன், அவளைக் கண்ட அரசருக்கு, அவளது முகம் பரிசுத்தமாகவும் கருணை மிக்கும் காணப்பட்டதாக […]