உகுயுர் இனக் கதைகள் (சீனா)

This entry is part 2 of 43 in the series 17 ஜூன் 2012

தங்கமே குறி ஒரு திருடன் ஒரு சந்தையில் இங்குமங்கும் யாரிடம் திருடலாம் என்று பார்த்துக் கொண்டே சுற்றி வந்தான்.  கூட்டம் கூட்டமாக மக்கள் இங்குமங்கும் போய் வந்து கொண்டிருந்தார்கள். அவனால் வியாபாரக் கூடத்திற்கு செல்லும் வழிதோறும் மக்கள் மக்கள் என்று மக்களைத் தவிர வேறெதையும் காண முடியாதிருந்தது. வழி நெடுகிலும் வைக்கப்பட்டிருந்த வண்ண வண்ணப் பழங்கள், பொருட்கள் அவனது கண்களைப் பறித்தன. விதவிதமான அழகு மிக்க ஆடைகளும் கம்பளங்களும் அவனை கிறங்க வைத்தன. மக்களது கவனத்தை ஈர்க்க […]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 6

This entry is part 29 of 43 in the series 17 ஜூன் 2012

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன. பெர்னாட் ஷா (Preface […]

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றுமூன்று

This entry is part 40 of 41 in the series 10 ஜூன் 2012

  1938 நவம்பர் 18 வெகுதான்ய கார்த்திகை 3 வெள்ளிக்கிழமை   உன்னாண்ட ஒரு தண்ணிச் சொம்பும் கன்னடத்திலே எவனோ எங்கேயோ எழுதிக் கொடுத்த கோர்ட் காயிதமும் ஒரு தபா கொடுத்தேனே, ஞாபகம் இருக்கா? கோர்ட்டுலே குப்பை செத்தையா அடஞ்சு வச்சிருந்த ஜாமானுங்க.   நாயுடு சாயும் சூரிய வெளிச்சம் முகத்தைப் பாதிக்கு வெளிச்சம் போட, மீதம் மசங்கல் இருட்டில் இருந்தபடி நீலகண்டனைக் கேட்டான்.   நினைவு இருக்கிறது. அவன் கொடுத்தது. முக்கியமாக அந்த செம்பு. கங்கா […]

காசி யாத்திரை

This entry is part 39 of 41 in the series 10 ஜூன் 2012

  காசி ,   எஸ்.எஸ்.எல்.ஸி எனப்படும் பள்ளியின் கடைசி வருடமான பதினோறாம் வகுப்பில் ஏன் எங்கள் ரயில்வே ஸ்கூலில் வந்து சேர்ந்தான் என்று தெரியவில்லை. எங்களின் ஆங்கில ஆசிரியர் நடராஜன் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது பள்ளியின் சீனியர் ப்யூன் ராஜன்தான் காசியை அழைத்துக்கொண்டுவந்து, ” சார்! ஹெட்மாஸ்டர் இந்தப் பையனை ஒங்க க்ளாசில ஒக்காரவக்கச் சொன்னாரு ” என்று காசியின் முதுகில் கையைவைத்து மெதுவாகத் தள்ளிவிட்டான். தயங்கியபடியே காசி வகுப்பில் நுழைந்துகொண்டிருந்த பொழுது, நடராஜன் சார், பியூன் ராஜனைப் […]

வருகை

This entry is part 38 of 41 in the series 10 ஜூன் 2012

குருசு.சாக்ரடீஸ் பேருந்தில் நெருக்கியடிக்கும் கூட்டமிருந்தது. யாவோவை தவிர அனைவரும் போப் இரண்டாம் ஜாண்பாலை காணவந்த புனித யாத்ரீகர்கள். விமான நிலையத்தின் சில அடி தூரங்களில் பேருந்து நிறுத்தபட்டது. அதற்கு மேல் பேருந்தை நகர்த்த ரோட்டை அடைத்துகொண்ட திருவிழா தனம் சம்மதிக்கவில்லை. யாவோவின் உடமைகளையும் பேருந்திலிருந்து இறங்கிய யாத்ரீகர்கள் கால்களால் உதைத்து தள்ளினார்கள். ஒரு தகர டிரங்கு பெட்டியும் கயிறுகளால் பிணைக்கப்பட்டிருந்த இரண்டு அட்டைபெட்டிகளும் ரோட்டில் உருண்டன. ரோட்டு ஓரமாக அவைகளை எடுத்து வைக்க கூட அவகாசம் தராத […]

பஞ்சதந்திரம் தொடர் 47

This entry is part 35 of 41 in the series 10 ஜூன் 2012

  மூடத் தச்சன் ஒரு ஊரில் ஒரு தச்சன் இருந்தான். அவன் மனைவி ஒரு வேசி என்பது ஊரறிந்த சங்கதி. அவள் நடத்தையைச் சோதிக்க நினைத்தான் தச்சன் ‘’இவளை எப்படிச் சோதிப்பது? பெண்களின் கற்பின் முன்னே நெருப்பு குளுமையடையும், நிலா நெருப்பாகிவிடும், கெட்டவன் நல்லவனாவான். என்றொரு பழமொழி உண்டு. ஊர் ஜனங்கள் பேசிக்கொள்வதிலிருந்து இவள் ஒரு வேசி என்று எனக்குத் தெரியும். வேதத்திலோ சாஸ்திரத்திலோ காணாததையும் கேளாததையும், பிரபஞ்சம் முழுவதிலுமுள்ள சகல விஷயங்களையும், ஜனங்களிடமிருந்து தெரிந்து கொள்ளலாம். […]

ஒரு விவாகரத்து இப்படியாக…!

This entry is part 31 of 41 in the series 10 ஜூன் 2012

  எழுதியவர்: ’கோமதி’   காலை முதல் பக்கத்து போர்ஷனில் ஏதோ தகராறு. விவரம் சரியாகப் புரியவில்லை. ஆனால், காரசாரமான விவகாரம். நான் அலுவலகம் புறப்படும் வரை தொடர்ந்ததால் எனக்குப் புறப்படவே முடியவில்லை. எப்படியாவது விவரம் அறியவேண்டும். என் மனைவியோ அவள் உண்டு அவள் வேலை உண்டு என்றிருப்பவள். எதையும் காதில் வாங்க அவளால் முடியாது.   நான் வாசலில் வண்டியை புறப்படவைக்க முயன்றுகொண்டி ருந்த போது ஜகன் இரைந்துகொண்டிருந்தான்.  ”ஒன்று, நீ போகணும், இல்லை, நான் […]

முள்வெளி அத்தியாயம் -12

This entry is part 28 of 41 in the series 10 ஜூன் 2012

‘செக்யூரிட்டி கேமரா’ வழியாக வரவேற்பறையில் உட்கார்ந்திருக்கும் இளம் பெண்ணை லதா ‘கம்ப்யூட்டரி’ல் பார்த்தாள். இருபது இருபத்தி இரண்டு வயது இருக்கும் அந்தப் பெண்ணுக்கு. தனது மண வாழ்க்கை தொடர்ந்திருந்தால் ஒருவேளை இதே வயதுப் பெண்ணோ பையனோ ஒரு வாரிசாக வந்திருக்கலாம். தோழியின் மகள் இவள். இப்படிப் பல இளைஞர்களைப் பார்க்கத்தான் நேரிடுகிறது. ஏதோ ஒரு சமயம் இது போன்ற ஆதங்கம் கவிகிறது. சில நிமிடங்களில் சுதாரித்துக் கொள்வதும் பழக்கமாகி விட்டது. ஒப்பனை அறைக்குச் சென்று கண்களில் துளிர்திருந்த […]

நெஞ்சு பொறுக்குதில்லையே

This entry is part 25 of 41 in the series 10 ஜூன் 2012

ஆக்கம்: நடராஜா கண்ணப்பு  லண்டன் “திருப்பி அனுப்பாதே ” சுலோகம் தாங்கியவர்கள் “ச்சிப்போல்” விமான நிலைய தடுப்பு முகாம் பின்பக்க தெருவில் நிறைந்து விட்டார்கள். முதலாவது மேல் மாடி யன்னலில் தெரிந்த குழந்தை கையிலேந்திய அந்தச் சோகமான தாயின் முகத்தைப் பார்த்ததும். “அவையளைத் தான் திருப்பி அனுப்பப் போறாங்களாம்” பிள்ளையோடு நிக்கும் அந்த அனுப்பப் படப் போகும் பெண்ணை அடையாளம் கண்டுவிட்டார் மூர்த்தி “என்ட மடியில் தவழ்ந்த பிள்ளை இப்ப இங்க இந்தச் சிறைக்குள்ள.” மனம் உருகி […]

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 29

This entry is part 19 of 41 in the series 10 ஜூன் 2012

32. வெகு நாட்களுக்கு முன்பு இதே இடத்தில் மதிற்சுவருக்கு மறுபக்கம் நள்ளிரவில் தொலைந்த ஆட்டைத்தேடி அலைந்ததும், செண்பகத்துடன் மூன்று காவலர்கள் களையும் பூசாரிஒருவனையும் காணநேர்ந்ததை நினைவு கூர்ந்தான். அவர்கள் செட்டிக்குள திட்டிவாசல் வழியாக கோட்டைக்குள் நுழைந்திருக்கவேண்டும். தவிர காவலர்களின் அனுமதியோடு உள்ளே நுழைந்திருக்கிறார்களெனில் அரசாங்கத்தில் செல்வாக்குள்ள மனிதர்களின் சகாயமின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை. அதிகாரம், செல்வாக்கு என்றுவரும்போது  கள்ளமும் சூதும்  தவறாமல் உள்ளே நுழைந்துவிடும் போலிருக்கிறது. பெரிய இடத்து பொல்லாப்பு நமக்கேன் என்றும் கார்மேகம் நினைப்பதுண்டு. பிரதானி நந்தகோபால்பிள்ளை […]