’சாலையோரத்து மரம்’

This entry is part 15 of 40 in the series 6 மே 2012

அது ஒரு நீண்ட மினி ஹால் மாதிரியான அறை.. உள்ளே நுழைந்தவுடன் ஜிவ்வென்று கவ்வும் ஏ.ஸி.யின் குளிர்…அதையுந்தாண்டி மூக்கில் உறைக்கும்  சேவ்லான் நெடி.வரிசையாய் கட்டில்களில் பல நிலைகளில் அபாய கட்டங்களில் நோயாளிகள். சிலர் ஆக்ஸிஜன் மாஸ்க் வைத்த பின்பும் மூச்சுத் திணறலுடன் கிடந்தார்கள்.அதில் சிலருக்கு  கோமா மயக்க நிலை. சொல்லி வைத்தாற்போல அல்லது யூனிஃபார்ம் போல எல்லாருக்கும் தலையில் பெரிய கட்டு.  இதுதான் சென்னை பொது மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை.யின் ஐ.ஸி..யூ. இண்டென்சிவ் கேர் […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம், இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 22

This entry is part 14 of 40 in the series 6 மே 2012

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா இந்த உலகில் நாம் பாதுகாக்கப் பட வேண்டிய மனித ஆத்மாக்கள் மிகையாக உள்ளன.  அவரை உய்விக்கச் செய்யும் நமது பணிகள் ஒருபோதும் ஓயமாட்டா ! நமது ஆயுளுக்குப் பிறகு நமது சந்ததிகள் அப்பணியைத் தொடரும். பட்டினி உடம்பில் ஒட்டி இருக்கும் பலவீன ஆத்மாக்கள் பாதுகாக்கப் பட வேண்டிய தில்லை ! முதலில் அவரது பசிப் பிரச்சனை நிரந்தரமாய்த் தீர வேண்டும். […]

பஞ்சதந்திரம் தொடர் 42- அரசனைத் தேர்ந்தெடுத்த பறவைகள்

This entry is part 13 of 40 in the series 6 மே 2012

முன்பு ஒரு சமயம் அன்னப்பறவை, கொக்கு, குயில், மயில், சாதகப் பறவை, ஆந்தை, மாடப்புறா, புறா, நீலக்குயில், கழுகு, வானம்பாடி, நாரை, மைனா, மரங்கொத்திப் பறவை, இன்னும் பல பறவைகள் எல்லாம் ஒன்றுகூடி யோசனை செய்யத் தொடங்கின. ‘’நமக்குக் கருடன் தான் ராஜா. ஆனால் அவரோ மகாவிஷ்ணுவுக்குப் பணிவிடை செய்து வருகிறார். நம்மைக் கவனிப்ப தில்லை. ஆகவே அப்படிப்பட்ட போலி ராஜாவால் நமக்கு என்ன லாபம்? வலையில் சிக்கிவிடுவது போன்ற துக்கங்கள் நமக்கு ஏற்படும்போது அது நம்மைக் […]

“பெண் ” ஒரு மாதிரி……………!

This entry is part 11 of 40 in the series 6 மே 2012

 (     ஆண்கள் படிக்க வேண்டிய கதை.)    மாதவ் ராவ், சென்னைவாசியாக இருந்தாலும், தஞ்சாவூர் ஞாகபமாகவே இருப்பார். அவர், சக்கா நாய்க்கன் தெருவில் சுற்றியதும், திரு.வி.க. பள்ளியில் படித்ததையும், நீடா மங்கலத்தில், பெண் பார்த்து, ஜமுனா பாயை கட்டியதையும், பெண் வீட்டில், மாமியார் செய்து போட்ட* கோளா குழம்பைப் பற்றியும்தான் அவர் வேலை செய்யும் இடத்தில் பேசிக் கொண்டே யிருப்பார். அவரின் மகன், சுப்புராவ், பீஇ படித்துவிட்டு, தற்போது, ஒரு சாப்ட்வேர் வேலையாக இருப்பதிலும் அவருக்கு பெருமை. […]

முள்வெளி – அத்தியாயம் -7

This entry is part 10 of 40 in the series 6 மே 2012

அந்த உணவகத்தில் திறந்தவெளி மேல் மாடிப் பகுதியில் சண்முக சுந்தரம் நுழைந்த போது ஒரு இளம் பெண் கை கூப்பி வரவேற்றாள். “ஐ யாம் கலா. லதாம்மாவோட செக்ரட்டரி” “காட் ப்ளெஸ் யூ” அவள் தலை மீது கை வைத்து ஆசி கூறினார். லதாவின் காரியதரிசிகள் அடிக்கடி மாறியதால் முகத்தையோ பெயரையோ நினைவு வைத்திருக்க வேண்டி இருக்கவில்லை. “மாத்தித் தானே ஆவணும். எத்தனை விவகாரம்” என்று பெற்ற பெண்ணைப் பற்றி கசப்புடன் அவள் தாய் உதிர்த்த சொற்கள் […]

நியாயப் படுத்தாத தண்டனைகள்..!

This entry is part 28 of 28 in the series 29 ஏப்ரல் 2012

காலை மணி எட்டரையைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது.  வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கேன் நெற்றியில் வேர்வை வழிய வழிய.  பவர் கட்டுத் தொல்லை வேறு  !   அது எப்போது வருமோ ?  இன்னும் வீட்டு வேலை செய்ய வரும் ஆயிஷா… வரவில்லை.எத்தனை நேரம் தான் நேற்று ராத்திரி போட்ட பத்துப் பாத்திரங்கள் காய்ந்து கொண்டிருக்கணும் ? வேலைக்கு வந்து பத்து நாட்கள் கூட ஆகலை…அதற்குள் இப்படி….! இந்த லட்சணத்துக்குத் தான் நான் வேலைக்கு ஆளே.. வெச்சுக்காமல் இருந்தேன்…என்னோட இந்த […]

பள்ளிப்படை

This entry is part 27 of 28 in the series 29 ஏப்ரல் 2012

இச்சிறுகதை எழுத தகவல் தந்து உதவிய  சில குறிப்புகள்:—-. 1)=  ’உடையாளூரில் பள்ளிப்படையா?.— கட்டுரை எழுதியது இரா.கலைக்கோவன்.—– நன்றி வரலாறு.காம்.இணையதளம் 2) =நன்றி— தமிழர் பார்வை இணைய தளத்தில்— கருவூர் தேவரின் சாபம் பற்றி மூத்த பத்திரிகையாளர் திரு அய்யப்பன் அவர்களின் தகவல். 3)= ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?.இணையதள ப்ளாக் ல் எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு திரு. நிர்மல் அவர்கள் ஒரு கடித வடிவில் விவாதித்த ஒருகட்டுரை 4) =‘ சோழர்கள் ‘வரலாற்று நூல் எழுதியது […]

முன்னால் வந்தவன்

This entry is part 26 of 28 in the series 29 ஏப்ரல் 2012

இப்படி ஒரு தடாலடி வேலையை  எலி என அறியப்படும் ராமகிருஷ்ணன் செய்துவிடுவான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொருமுறையும் எப்படியோ என்னை அறியாது கூட இருக்கும் நண்பர்கள் செய்துவிடும் திருட்டு அல்லது சில்மிஷங்களில் மனசே இல்லாமல் தலையைக்கொடுத்துத் துன்பம்  ஏற்கிற ஜன்மமாகவே ஏன் இருந்திருக்கிறேன் என்று தெரியவில்லை.  ராமகிருஷ்ணன், கூட இருந்தே குழிபறிக்கிறவன் என்பதால் காரணப்பெயராக எலி என்று மிகச்சரியான பெயர் வாங்கி,  அப்படி அழைக்கப்படுவதால் எந்தவித கோபமும் கொள்ளாதவனாகவே இருந்தான்.  அவர்கள் வீட்டிலேயே  கூட அவனை எலி […]

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தேழு

This entry is part 25 of 28 in the series 29 ஏப்ரல் 2012

  1927 மார்ச் 6  அக்ஷய  மாசி 22  ஞாயிற்றுக்கிழமை   காரசாரமான வெங்காய சாம்பாரும், கத்தரிக்காய் எண்ணெய்க் கறியும், ஆனையடி அப்பளமுமாக ராஜ போஜனம் போல ஒரு சாப்பாடு. இருபது சொச்சம் வருஷத்துக்கு முன்பு இந்த பாக்கியம் கிடைத்து அப்புறம் சொப்பனத்தில் மட்டும் கிடைக்கிறதாக மாறிப் போன சுகம் திரும்ப சித்தித்திருக்கிறது. அதை அனுபவிக்க விடாமல், போக வேளையில் வாசல் கதவைத் தட்டி மூட்டு வலித் தைலம் கேட்கிற அண்டை வீட்டுக்காரன் போல் இந்த மனுஷர்கள் […]

‘ மதில்களுக்கு அப்பால்……ஒரு நந்தக்குமாரன் ’

This entry is part 24 of 28 in the series 29 ஏப்ரல் 2012

x ஆறடி உயரத்தில் வெண்நிற ஆடையுடன்  நின்றிருந்த அவ்வுருவத்தைப் பார்த்தபோது செல்லம்மாவின்  நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது.ஏதோவொரு வெப்பம் தனிச்சையாக வந்து தாக்கியது.மேனி முழுவதும் சிலிர்த்தது.அத்தருணத்தில் தனக்குத் தோன்றிய உணர்வு எத்தகையானது என்பதை அவளால் பகுத்துப் பார்க்க இயலவில்லை.  அவ்வுருவத்தை தொடந்தாற்போல் சில நொடிகள் பார்க்கமுடியாமல் மெல்ல தலையைக் குனிந்துக்கொண்டாள்.சேலைத்தலைப்பை நன்கு இழுத்து முக்காடைச் சரி செய்தாள்.இதுவரையில் அதுபோன்ற ஒளிப்பொருந்திய கண்களை அவள் சந்தித்ததில்லை.தூரத்தில் இருந்து பார்த்தபோது அவை நட்சத்திரங்களாய் மின்னின…சற்று நெருங்கிய போதோ நிலவைப் போன்று […]