நாவல்  தினை              அத்தியாயம் பதினொன்று        CE 300

This entry is part 6 of 6 in the series 23 ஏப்ரல் 2023

   மீண்டும் பறவைக் கூச்சலில் விழித்தெழுந்தது மலைப் பிரதேசம். வழமை போல் மிருகங்கள் பறக்கத் தொடங்கின. ஆற்றங்கரை  இருமருங்கும் படித்துறைகளில் உடுத்திருந்த துணி தவிரக் கொண்டு வந்த விழுப்பைத் துவைத்து அலசவும், ஆற்று வண்டல் எடுத்து, அழுக்கும், படிந்திருந்த உடல்வாடையும் போயொழியக் கையிடுக்கிலும், அரைக்கட்டிலும், காலிடுக்கிலும் வெகுவாகப் பூசி, குளிர்ந்த நதி நீரில் மனக் கசடும், எண்ணக் கசடும், உடல் கசடுமெல்லாம் உதிர்ந்து, தூய்மை மீட்டு வரவுமாக எல்லா வயதினரும், ஆண்கள் தனியாகவும், எதிர்ப் படித்துறையில் பெண்களும் […]

காணிக்கை

This entry is part 4 of 6 in the series 23 ஏப்ரல் 2023

மீனாட்சி சுந்தரமூர்த்தி.   சுவர்க்கடிகாரம் ஆறு முறை  அடித்து ஓய்ந்தது ஒரு வழியாக  லேப்டாப்பை  மூடிவிட்டு எழுந்தவன் , கண்களில் கைநிறைய நீரை  அடித்து முகம் கழுவிக் கொண்டு வந்தான். அம்மா தந்த  காபிக் கோப்பையை  வாங்கிக் கொண்டு ஹாலுக்கு வந்து சோபாவில்  உட்கார்ந்து காலை எதிரிலிருந்த டீபாயின் மீது நீட்டினான். அன்று வெள்ளிக் கிழமை  ஆனதால் காலையிலேயே அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு  வீடுகள் பலவற்றிலிருந்து  ஊதுபத்தி வாசனையோடு கிணுகிணுவென மணியின் ஒலியும் எழுந்தது.தெருவில் பூ , […]

இஃப்தார்

This entry is part 3 of 6 in the series 23 ஏப்ரல் 2023

தமிழ் முஸ்லிம்களெல்லாம் எறும்பென்றால் அந்தப் பள்ளிவாசல்தான் கரும்பு. ரமலான் மாதத்தில் இரவுத் தொழுகைக்கும் அதற்கு  முன் நடக்கும் இஃப்தார் என்கிற நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கும் உற்றார் உறவினர்களுடன் இந்தப் பள்ளியில் கூடுவதும் கலைவதும் என்றென்றும் நீங்காத நினைவுகள். அதற்குக் காரணம் தமிழ்முஸ்லிம்களின்   கலாச்சார வழக்கப்படி நடக்கும் நிகழ்வுகள், மிகச்சிறந்த மார்க்க அறிஞர்களால் தமிழில் நடத்தப்படும் இறைச் சொற்பொழிவுகள் ஆகியவைதான் மாலை நேரத்தில் 5 மணிக்கெல்லாம் நோன்புக்கஞ்சி விநியோகம் தொடங்கிவிடும். அதற்கும் முன்னதாகவே இஃப்தார் வேலைகள் ஆரம்பமாகிவிடும். பள்ளிவாசலின் […]

குற்றமும், தண்டனையும்

This entry is part 11 of 12 in the series 17 ஏப்ரல் 2023

“ கருப்புக் கண் “  என்று அந்த போலீஸ்காரர் தியாகராஜனைப் பார்த்துச் சொன்னார் .அவர் வழக்கமான சீருடை அணிந்து இருக்கவில்லை .நன்கு சலவை செய்யப்பட்ட வெள்ளை சட்டையில் நீல பூக்கள் இருந்தன  .அவரின் தலை கேசம் காவல் துறை சார்ந்த மனிதரின் அலங்காரமாக இல்லாமல் புதிதாக இருந்தது. இன்றைய கல்லூரி மாணவர்கள் போட்டுக்கொள்ளும் தலைக்கேச வேஷம் போல் இருந்தது. அந்த அறைக்கு வந்து செல்பவர்களில் பாதிப்பேர் இப்படித்தான் காவல்துறை உடுப்பு இல்லாமல் இருந்தார்கள். பலர் வெள்ளை சட்டையில் இருந்தார்கள். அவனை அடித்தவர்கள் யாரென்று அடையாளம் காண முடியாதபடி பலர் வந்து […]

நாவல்  தினை              அத்தியாயம்  பத்து                     CE 300

This entry is part 6 of 12 in the series 17 ஏப்ரல் 2023

      ஒன்று கவிதை எழுதுங்கள் அல்லது  கலுவத்தில் மருந்து அரையுங்கள். இது மருத்துவன் நீலன் தருமனிடம் மற்ற கவிஞர்களும் மருத்துவர்களும் சொன்னது. சரியாகச் சொன்னால் மருத்துவர் நீலர் தருமரிடம். எனினும் அவர் வெகு காலமாக நீலன் வைத்தியராக உள்ளார். அழைக்க ஏதோ ஒரு பெயர். அதற்குமேல் என்ன வேண்டும்? அவரை அவரது மோசமான கவிதைகளுக்காக மற்ற மருத்துவர்கள் கொண்டாடினார்கள். உள்நாக்கில் அடக்கிக் கரையக் கரைய எச்சில் விழுங்க வேண்டிய மூலிகையைத் தவறுதலாக நாசித் துவாரங்களில் பிழிந்து மூக்கில் […]

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -2 காட்சி -1 பாகம் : 3

This entry is part 3 of 12 in the series 17 ஏப்ரல் 2023

வில்லன் புருனோ, மோனிகா & ஒத்தல்லோ [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்] தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா  ++++++++++++++++++++++++  அங்கம் -2 காட்சி -1 பாகம் : 3 ++++++++++++++++  நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]  ஒத்தல்லோ :  வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி]   [45 வயது]  மோனிகா :  செனட்டர்  சிசாரோவின் மகள்.  ஒத்தல்லோவின் மனைவி [25 வயது]  புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன்  [30 வயது]  காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது]  ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன் [வயது 25]  சிசாரோ :  மோனிகாவின் தந்தை.  வெனிஸ் செனட்டர் [60 வயது]  எமிலியோ : புருனோவின் மனைவி.  மாண்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர்.  பயாங்கா :  காஸ்ஸியோவின் கள்ளக் காதலி.  மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ், சாம்ராஜ்ய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள்.   நிகழ்ச்சிகள் நடப்பது இத்தாலிய வெனிஸ் நகரம், மத்தியதரைக் கடல் & சைப்பிரஸ் தீவு  இடம் :  சைப்பிரஸ் தீவில் ஒரு துறைமுகக் கரை ஓரம்  நேரம் : பகல் வேளை  பங்கெடுப்போர் :  சைப்பிரஸ் கவர்னர், மாண்டேனோ, மற்றும் இரண்டு படைவீர்கள்,காஸ்ஸியோ, மோனிகா, தோழியர், எமிலியோ, புருனோ, ஷைலக்.   [ஒத்தல்லோ காவல் படை சூழ தூரத்தில் வருகிறான்.] புருனோ: [ மோனிகாவைப் பார்த்து]  எந்த ஓர் அழகிய மாது கர்வ மின்றி, எதை எப்போது எங்கே சொல்ல வேண்டும் என்று அறிந்தவளோ, சபையில் உரக்கப் […]

நாவல்  தினை               அத்தியாயம் ஒன்பது               CE 5000-CE 300

This entry is part 6 of 7 in the series 9 ஏப்ரல் 2023

                                                                                                      அடிவாரத் தரிசு பூமி. எல்லோரும் தினம் புழங்கினாலும் யாருக்கும் நினைவு இல்லை. கருங்கல் ஒற்றைச் சிற்பமாக நிற்கும் மலையின் கீழே ஒரு காலத்தில் சூரிய வெளிச்சம் உள்ளே வராமல் மறைத்த அடர்ந்த பெருமரத் தோப்புகளும் பரந்து பந்தலித்த கொடிகளும், மூலிகைச் செடிகளும்   வளர்ந்து செழித்திருந்ததை யாரும் நினைவு கொள்வதில்லை.  கேட்டால், அறுதப் பழசுக் கதை என்பார்கள். நடப்பில் இருக்கும் காலத்துக்கு ஆயிரம் வருடம் முற்பட்டது என நம்பிக்கை. மலையின் செழிப்பை எடுத்தோதிக் கொண்டு தினம் […]

பனித் தூவல்

This entry is part 2 of 7 in the series 9 ஏப்ரல் 2023

                                                                                                                             மீனாட்சி சுந்தரமூர்த்தி.                                                                                                                                                                                                                              பனித் தூவல் வாங்கி வியர்த்திருந்தன தோட்டத்து ரோஜாக்கள். வெற்றிலைக் கொடிக்குப் பக்கத்தில் தன் பங்குக்கு மதிலை வளைத்திருந்த நீலச் சங்குப் பூக்களின்  பனித்துளிகள்  அருகிலிருந்த வாழை இலையில் வழிந்தோடி சொட்டு சொட்டாக  விழுந்து கொண்டிருந்தன. ஐந்து மணிக்கே எழுந்து விட்ட பாமா குளித்து முடித்து, லலிதா நவரத்தினமாலை  பாடி விளக்கேற்றி  வழிபாடு முடித்து விட்டாள். கூடத்து கடிகாரத்தில் சிட்டுகள் மூடி திறந்து ஆறுமுறை ஒலித்து விட்டு உள்ளே சென்று […]

தாய் மண்

This entry is part 1 of 7 in the series 9 ஏப்ரல் 2023

                                                                                                                                               ம.மீனாட்சிசுந்தரம் நாளும் பொழுதும் மகன் கார்த்திக் நினைப்பிலேயே கழிகிறது. அவன் அமெரிக்கா சென்ற நாட்களின் எண்ணிக்கை வாரங்கள் மாதங்கள் என மாறி வருடங்கள் ஆறு ஆகிவிட்டது. ஓரிரு வருடங்களில் வந்துவிடுகிறேன் என அவன் சொன்ன வார்த்தைகள் மதிப்பற்றுப் போயிற்று. மூன்றாண்டுகள் கழித்து அவன் விரும்பிய, அவனோடு பணிபுரியும்  கவிதாவை திருமணம் செய்வதற்காக இங்கு வந்தான். அதுவும் கவிதாவின் பெற்றோர் சம்மதமில்லாமல். அதற்கு  மறுப்பேதும் தெரிவிக்காமல் அவனது விருப்பப்படி திருமணம் செய்து அனுப்பிவைத்ததையும் நினைத்துப் பார்த்தாள் […]

நிற்பதுவே நடப்பதுவே!

This entry is part 7 of 7 in the series 9 ஏப்ரல் 2023

                                       உஷாதீபன் (ushaadeepan@gmail.com).             என்னாங்க…நிறையத் தண்ணி இருக்கிறதாப் பார்த்து வெட்டுங்கன்னா….இப்டி சீவிக் கொடுக்குறீங்களே? …. ஒரு டம்ளர் அளவு கூட இல்ல….             சின்னாண்டி தலையைக் குனிந்தவாறே நின்றான். சமயங்களில் அவன் கணக்கு தப்பி விடுகிறதுதான். அது பிரச்னையாகிவிடுகிறது. ஒன்றும் சொல்லாமல் இளநீரை இரண்டாய் வெட்டிப் பிரித்தான். ஒரே வழுக்கை.   பார்த்ததும் திக்கென்றது. வழுக்கையாய் இருந்தால் நீர் அதிகம் இருக்க வேண்டும்.  அதுவுமில்லை.             ஆனால் இளநீர் என்று வெட்டினால் முப்பது ரூபாய்தான். ஒன்று […]