தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 ஜூன் 2018

‘கவிதைகள்’ படைப்புகள்

முற்றுபெறாத கவிதை

இன்னும் என் கவிதை முடிக்கப்படவில்லை …. ரத்தம் பிசுபிசுக்கும் வலிமிகுந்த வரிகளால் இன்னும் என் கவிதை தொடர்ந்துகொண்டே இருக்கிறது ….. பதில் கிடைக்காமல் விக்கித்து நிற்கையில் கேள்விக்குறி ஒன்று தொக்கி நிற்கிறது . திடுமென நிகழ்ந்த நிகழ்வொன்றில் , கண்களை அகல விரித்து ஆச்சர்ய குறி ஒன்று இடைசொருகப்படுகிறது ..! ஏதும் சொல்லொண்ணா நேரங்களில் வெறும் கோடுகளாய் நீள்கிறது……. [Read More]

கிறீச்சிடும் பறவை

  நாள் தவறாமல் வந்து என் ஜன்னல் கம்பிகளில் அமர்ந்து ஒரு சிறு பறவை கிறீச்சிடுகிறது என் கவனத்தைக்கவர.   எதை ஞாபகப்படுத்த ? மறந்துபோன இயற்கையுடனான நட்பையா ? அல்லது கடந்து சென்ற காலங்களை மீள் நினைவூட்டவா ?   எனினும் நாளையும் வரும் என்ற எதிர்பார்ப்பை என்னில் ஏற்படுத்துவதைத்தவிர. அது வேறொன்றும் செய்வதில்லை.   மேலும் அது ஒரு இறகையும் உதிர்த்துச்செல்வதில்லை எனக்கென.   [Read More]

அழுகையின் உருவகத்தில்..!

என்ன பதில் மொழிவதென தவிக்கும் விளிம்பு நிலை விரிசலின் தடயங்களில் ஏதேனும் மார்பு அகப்பட்டிருந்தால் கண்ணீர் கரைசல் படிமக் காடு படர்ந்திருக்கும். வார்த்தைகளின் உயிரோட்டத்திலே உயிர் பிரிந்து சென்றிருக்கலாம்.. ஏதோ ஒரு அழுகையின் உருவகத்தில் அரவணைத்திட அறியாதொரு அழகியலின் தொன்மம் கரைந்துக் கொண்டிருக்கிறது. *மணவை அமீன்*   [Read More]

ப மதியழகன் கவிதைகள்

மோட்ச தேவதை   கிணற்று நீரில் விழுந்த தனது பிம்பத்தை எட்டிப் பார்த்தது குழந்தை வானவில்லை விட அம்மாவின் சேலை வண்ணம் மிகவும் பிடித்திருந்தது அதற்கு தன்னுடன் சோற்றுக் கவளத்துக்கு போட்டியிடும் நிலாவுக்கு காய் விட்டது குழந்தை லாலிபாப் வாங்கிக் கொடுத்தால் கன்னத்தில் முத்தம் பதிக்கும் யாரையும் சீரியல் பார்க்கவிடாமல் கார்ட்டூன் சேனல்களில் லயித்துப் போய் [Read More]

அவனேதான்

ஆட்டுக்கு புல்லைக்காட்டி அழைத்துச் செல்கிறான் கழுத்தை வெட்ட.. மீனுக்கு புழுவைக்காட்டி தூண்டிலில் பிடித்து துடிக்க வைக்கிறான்.. பசுவிடம் பால்கறக்க போலியாய்க் கன்றைக் காட்டி காரியம் சாதிக்கிறான்.. இத்தனையும் தானாகி இலவசத்தால் ஏமாந்து ஜனநாயகம் என்ற பேரில் சந்தியில் நிற்கிறான் ! -செண்பக ஜெகதீசன்.. [Read More]

விட்டு விடுதலை

சுமக்கிற பிரியங்களை இறக்கி வைப்பது இறுதி நொடியில் கூட இயலுமா தெரியவில்லை. பிரிகிற ஆன்மா பேரொளியில் சேரத் தடையாகுமதுவே புரியாமலுமில்லை. காலத்திற்கேற்ப ஆசைகள் மாறுவதும் தலைமுறைகள் தாண்டிப் பாசங்கள் தொடர்வதும் புகழ்பொருள் மீதான நாட்டங்கள் போதையாகுவதுமே சாஸ்வதமாக மீளும் விருப்பற்று இறுக்கும் சங்கிலிகளுக்குள் இருப்பினைப் பத்திரமாக்கி விட்டு விடுதலை ஆகாமலே [Read More]

கரியமிலப்பூக்கள்

அமிலம் மற்றும் கரிப்புத் தன்மை கொண்டவையாகவே இருந்து விடுகின்றன சில நிஜங்கள் மறுக்கப்படுகிறது இனிப்பின் இயல்பு மறந்தும் கூட இறுக்கப்பட்ட மன இயந்திரத்தின் அழுத்தக் கோட்பாடுகள் வேகமேற்று .. அனல்வாயின் கொதிக்கும் தங்கக் குழம்பின் சிதறிய பிரள்கள் மலர்ந்து விடுகின்றன நட்சதிரப்பூக்களாய் … சூடு தணிக்கும் பணியென தண்ணீர் ஊற்றப்படுகையில் குளிர்ந்தும் இறுகியும் [Read More]

விழிப்பு

சந்தங்கள் மாறித் துடிக்கும் இருதயம் தினமும் புதிதாய் இங்கே – ஆயிரம் காதை சொல்கிறது பௌதிகம் தாண்டிய திசைகளில்… வெயிலோ பட்டெரிக்கும் வெந்தீ சுட்டு எரிக்கும் வார்த்தை பட்டு உடையும் இதயம் படாத பாடு படும்… யாதும் தொடாமலே எண்ணங்கள் இடமாறலாமா…? நிலவு கந்தளானால் அது உன் பிறை நுதல் என்பேன்., இருள் கந்தளானால் அது உன் விழி வீசும் சுடர் என்பேன்., கனவே கந்தளானால் அதைத் தான் [Read More]

தூரிகையின் முத்தம்.

எல்லா ஓவியங்களும் அழகாகவே இருக்கின்றன. வரைந்த தூரிகையின் வலிமையும் பலஹீனமும் நகைப்பும் திகைப்பும் ஓவியமெங்கும் பரவிக் கிடக்கின்றன.   பல இடங்களில் தூரிகை தொட்டுச் சென்றிருக்கிறது. சில இடங்களில் தூரிகை துள்ளிக் குதித்திருக்கிறது.   சில இடங்களில் தூரிகை எல்லை தாண்டி நடந்திருக்கிறது.   இன்னும் சில இடங்களில் தூரிகையின் கண்ணீர் அது விழுந்த இடத்தைச் சுற்றிலும் [Read More]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -4)

கலில் கிப்ரான் கவிதைகள்  (1883-1931)  ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -4)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “நானோர் உண்மை உரைப்பேன் :  மனித சிந்தனைகள் கண்ணுக்குத் தெரியும் உலகுக்கு மேலே உயரத்தில் உள்ள ஓர் வாழ்தளத்தில் வீற்றிருப்பவை.  அதன் வான மண்டலத்தில் புலன் உணர்ச்சி முகில் எதுவும் தோன்றி மறைப்ப தில்லை.  கற்பனை யானது கடவுளின் அரங்கத்துக்குப் பாதை காட்டுவது.  ஆங்கே உலோகவியல் உலகிலிருந்து மனித ஆத்மா விடுதலை [Read More]

 Page 214 of 234  « First  ... « 212  213  214  215  216 » ...  Last » 

Latest Topics

அரசனுக்காக ஆடுதல்

அரசனுக்காக ஆடுதல்

ஜானகி ஸிங்ரோ சந்தூர் கிராமத்து மக்கள் [Read More]

தொடுவானம் 226. இது கடவுளின் அழைப்பு

டாக்டர் ஜி. ஜான்சன் 226. இது கடவுளின் அழைப்பு [Read More]

Popular Topics

Archives