ஒருவர் சுயத்தனம் பற்றி எனது பாடல் -1 (1819-1892) (புல்லின் இலைகள் -1)

This entry is part 11 of 26 in the series 9 டிசம்பர் 2012

  மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா   வால்ட் விட்மன் வாழ்க்கை வரலாறு: அமெரிக்காவின் உன்னதக் கவிஞருள் ஒருவரான வால்டயர் விட்மன் 1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலண்டு, நியூயார்க்கில் பிறந்தார்.  தனது 12 வயது வரை புரூக்லினில் வசித்து வந்தார்.  அவர் 11 வயதினராய் உள்ளபோது வீட்டில் வருவாயின்றி வேலை செய்து பணம் சம்பாதிக்கப் பள்ளி யிலிருந்து தந்தையால் நிறுத்தப் பட்டார்.  ஆகவே அவர் சிறு […]

தாகூரின் கீதப் பாமாலை – 43 சதுப்பு நிலப் பாடல்கள்

This entry is part 10 of 26 in the series 9 டிசம்பர் 2012

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பாசான நீர்க்கொடி போன்ற எனது பாடல்கள்  அலை வெள்ள அடிப்பில் பாதை தவறி எப்போதும் திசை மாறிப் போகும் ! நங்கூரம் இல்லை அவற்றுக்கு ! ஆதார மற்ற காற்றிலே அவை ஏன் ஆடி வருகின்றன  ?  அவை ஏன் இடம் மாறிப் போகின்றன, தடம் ஏதும் விடாது தானியம் ஏதும் விளையாது ? எம்முயற்சியும்  இல்லை  அவற்றுக்கு ! ஒன்றைக் குறிவைத்து […]

கண்ணீர்ப் பனித்துளி நான்

This entry is part 9 of 26 in the series 9 டிசம்பர் 2012

  மயிர் கூச்செரியும் கடுங்குளிரில் நிலவுமறியாது பனிக்கட்டிகளுக்குள் மறைந்திருக்கும் கண்ணீர்ப் பனித்துளி நான்   ஆயிரக்கணக்கில் தாரகைகள் பூக்கும் ஆகாயம் அனுப்பும் ஒளிக்கீற்று மேல் காதலுற்று சூரியனுக்கே காதல் கடிதங்களை வரையும் கண்ணீர்ப் பனித்துளி நான்   நாளை உதிக்கவிருக்கும் விடிகாலையில் உனது வெளிச்சத்தை முத்தமிட்டு அந்த உஷ்ணத்திலேயே உருகிக் கரைந்துவிடும் கண்ணீர்ப் பனித்துளி நான்   – ரொஷான் தேல பண்டார தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

என்னைப் போல் ஒருவன்

This entry is part 27 of 31 in the series 2 டிசம்பர் 2012

என்னை யாரோ பின்தொடருகிறார்கள் எனக்கு  பகைவரென்று யாருமில்லை கடன் வாங்கி கொடுக்காமல் இருந்ததில்லை எடுத்தெறிந்து யாரையும் பேசுவதில்லை அடுத்தவர் மனைவியை நிமிர்ந்து  பார்ப்பது கூட இல்லை தீவிரவாதியோ என சந்தேகப்படுவார்கள்  என்று தாடி கூட  வைப்பதில்லை சர்ச்சைக்குரிய  நாவல் எதையும் நான் எழுதவில்லை வெளிநாட்டுக்கு உளவறிந்து சொன்னதில்லை என் குழந்தையைத்  தவிர வேறெந்த குழந்தையையும் தூக்கி  கொஞ்சுவதில்லை அருகாமையில் எந்த குண்டுவெடிப்பும்  நடக்கவில்லை எந்த ஒரு  சித்தாந்தமும் என்னை ஈர்த்ததில்லை என்னைப் போல் ஒருவன் இருப்பானோ என்று […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 47) ஓர் உடன்படிக்கை

This entry is part 16 of 31 in the series 2 டிசம்பர் 2012

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை […]

நதியும் நானும்

This entry is part 13 of 31 in the series 2 டிசம்பர் 2012

    பார்வையின் எல்லைக்குள் எங்கும் மழையேயில்லை எரியும் மனதை ஆன்மீகத்தால் குளிர்விக்க ப்ரிய நேசத்தால் நிறைந்த இன்னுமொரு மழை அவசியமெனக் கருதுகிறேன் நான்   சற்று நீண்டது பகல் இன்னும் மேற்கு வாயிலால் உள்ளே எட்டிப் பார்க்கும் பாவங்களை அதற்கேற்ப கரைத்து அனுப்பிவிடத் தோன்றுகிறது   வாழ்நாள் முழுவதற்குமாக சுமந்து வந்த அழுக்குகள் அநேகம் வந்த தூரமும் அதிகம் எல்லையற்றது மிதந்து அசையும் திசை இன்னும் நிச்சலனத்திலிருக்கிறது நதி   எனினும் கணத்துக்குக் கணம் மாறியபடியும் […]

தளபதி .. ! என் தளபதி ..!

This entry is part 10 of 31 in the series 2 டிசம்பர் 2012

மூலம் : வால்ட் விட்மன் (1819-1892) (புல்லின் இலைகள்) தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா ஓ காப்டன் ! என் காப்டன் ! ஓய்ந்தது நம் பயங்கரப் பயணம் ! கப்பல் தளங்கள் தப்பின சூறா வளியை ! தேடிய வெகுமதி கிடைத்தது நமக்கு ! அருகில் துறைமுகம், ஆலய மணி ஓசை ! வெற்றி கொண்டா டுவர் மக்கள் எல்லாம் ! ஓ நெஞ்சே ! நெஞ்சே ! நெஞ்சே ! ஓடுது பார் […]

தாகூரின் கீதப் பாமாலை – 42 அணைந்து போனது என் விளக்கு … !

This entry is part 5 of 31 in the series 2 டிசம்பர் 2012

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     வெகு நாட்க ளுக்கு முந்தி இருண்ட பல நடுநிசிகளில் முணுமுணுத்தேன் நானுன் காதிலே பல்வேறு சம்பவங்கள்; பற்பல ரகசியப் பாடல்கள் நான் படைத்து வைத்தவை ! “நினைவில் உள்ளதா அவை ?” யென்று வினாவ மட்டும் தான் நான் வந்துள்ளேன் மீண்டும் . இந்த நள்ளிரவின் இதயத்திலே இரண்டறப் பின்னி நிலைத் துள்ளன எனது பாடல்கள் !   ஆதலால் […]

காணோம்

This entry is part 41 of 42 in the series 25 நவம்பர் 2012

இரா. ஜெயானந்தன். கூரைவேய்ந்த பள்ளியைக் காணோம் குடுமி வைத்த வாத்தியைக் காணோம் உயர்ந்து வளர்ந்த மரங்களைக் காணோம் ஏறி விளையாடிய கிளைகளைக் காணோம். ஈமொய்த்த எலந்தை பழங்களைக் காணோம் தோல் சுருங்கியை பாட்டியைக் காணோம் டவுசரில் ஒட்டுப்போட்ட சுகுமாரானைக் காணோம் இங்கு படிந்த ஓட்டைப் பேனாக்களை யும் காணோம். கிட்டிபுல் விளையாடிய மைதானத்தைக் காணோம் கிளிக்கொண்டைப் போட்ட கிரிஜாவைக் காணோம் தேடி தேடி, ஓடி ஓடி பார்த்தேன் உன்னையும், என்னையும் காணோம்.

தாகூரின் கீதப் பாமாலை – 41 அவள் தந்த பிரிவுப் பரிசு.

This entry is part 38 of 42 in the series 25 நவம்பர் 2012

தாகூரின் கீதப் பாமாலை – 41 அவள் தந்த பிரிவுப் பரிசு. மூலம்: இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா எந்தன் கழுத்தைச் சுற்றி அணிந்திருக்கும் இந்த மலர்மாலை எனக்கவள் தந்த பிரிவுப் பரிசு ! கால் எட்டு வைக்கும் ஒவ்வொரு கணமும் இங்கு மங்கும் அசைந் தாடும் என் இதயத்தின் அருகிலே ! இந்தக் கணமும் அடுத்த தருணமும் அந்த மாலை நறுமணம் வீசிடும் தேனீக்கள் ரீங்காரக் கிளைகளின் அடியில், வசந்தத் தென்றலில் ! […]