வதம்

This entry is part 20 of 29 in the series 18 நவம்பர் 2012

கனவிலாவது பெருங்கனவானாக இருக்கக் கூடாதா சுற்றம் இவனிடம் பவிசாக நடந்து கொள்ளக் கூடாதா நடப்பவை தெரியவந்தால் அசுவாரஸ்யம் ஏற்படாதா மாரிக்காலத்தில் ஒளிந்து கொள்ளத் தெரியாதவன் பகலவனா தேவதாசிகளின் அழகு அத்தனையும் முருகனுக்கா காடு,மலை,கடல் நவகிரகங்கள் ஒன்றுக்கொன்று பார்த்துக் கொள்வதில்லையா அன்னாபிஷேகத்துக்கு பசியோடு வரலாமா வரம் கொடுப்பவன் சிவனென்றால் வதம் செய்வது விஷ்ணுவா பாழடைந்த கோவிலில் இருப்பது அம்பாளுக்கு விருப்பமென்றால் நான் என்ன செய்வது தேர் நிலையை அடைய வடம் பிடித்தால் மட்டும் போதுமா மூலவர் பேச ஆரம்பித்ததால் […]

எனது குடும்பம்

This entry is part 13 of 29 in the series 18 நவம்பர் 2012

    விடிகாலையிலெழுந்து வேலைக்குப் போகும் அப்பா இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவார் விடிகாலையிலெழுந்து வேலைக்குப் போகும் அம்மா இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவார் விடிகாலையிலெழுந்து பள்ளிக்கூடம் செல்லும் நான் பள்ளிக்கூடம் விட்டு வகுப்புக்கள் முடிந்து இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவேன்   எமக்கென இருக்கிறது நவீன வசதிகளுடனான அழகிய வீடொன்று   – தக்ஷிலா ஸ்வர்ணமாலி தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

தாகூரின் கீதப் பாமாலை – 40 தாமரைப் பூ சமர்ப்பணம்

This entry is part 8 of 29 in the series 18 நவம்பர் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா தனியாக, அறியாமல் நீ தடாகத்தில் அமர்ந்து காரண மின்றித் ஒவ்வொன் றாய்க் தாமரை இதழைக் கொய்து எடுத்தாய் ! சில வேளை, அந்தோ நீ செய்ய மறந்தாய் ! அப்போது நான் தாமரைப் பூ பறித்து உன் பாதம் சமர்ப்பித்தேன் காலைப் பொழுதில் ஏது காரண மின்றி ! அவ்விடம் விட்டு நான் அகன்ற பின் அதை எடுத்துக் கொண்டாய் அறியாமலே நீ ! […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 45) ஆத்மாவும் உடலும் -2

This entry is part 7 of 29 in the series 18 நவம்பர் 2012

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை […]

ரகசியத்தின் நாக்குகள்!!!

This entry is part 6 of 29 in the series 18 நவம்பர் 2012

நேற்கொழு தாசன் இலை உதிர்த்திய காற்றில் பரவிக்கொண்டிருந்தது கிளையின் ஓலம், நுண்ணிய அந்த ஓசையால் உருகி வழியதொடங்கியது உணர்வுகள்…… வர்ணிப்புகளை எல்லாம் தோற்கடிக்கும் எரிமலைகுழம்பாய். அடங்காதவொரு பசியுடன் உறங்கிய மனமிருகம் _அந்த பேரிரைச்சலால் வெகுண்டு உன்னத்தொடங்கியது மனச்சாட்சியை, நாக்கின் வறட்சி மீது படிந்த மனச்சாட்சியின் அதிர்வுகள் ஓய்ந்துபோக மறுத்து ஆரோகண சுதியடைந்தன…….. மௌன விரிதலொன்றினை உருவாக்கி இடம்மாறிக்கொண்டது ஓலம் …………. எங்கோ தூசிஅடர்ந்த மூலையொன்றில் வௌவால் சிறகடிக்கும் ஓசை படரத்தொடங்கியது ————————– ஆக்கம் நேற்கொழு தாசன் வல்வை

எங்கள் ஊர்

This entry is part 4 of 29 in the series 18 நவம்பர் 2012

  எங்கள் ஊர் நிறையவே மாறி விட்டது கோயில் கோபுரங்களில் குருவிகள் இல்லை கைபேசிக்கான கோபுரங்கள் ஏகப்பட்டவை வந்து விட்டன எங்கள் ஊர் நிறையவே மாறி விட்டது சிறுவர்கள் தெருவில் விளையாடுவதில்லை கணிப்பொறி தொலைக்காட்சி திரைகளின் முன்னே சிறுவர்கள் எங்கள் ஊர் நிறையவே மாறி விட்டது வரப்புக்களின் இடையே பயிர்கள் இல்லை வீட்டுமனைக்கான விளம்பரப் பலகைகள் எங்கள் ஊர் நிறையவே மாறி விட்டது நட்பு உறவுக்குள் கைமாத்து கொடுப்பதில்லை அடகுக் கடைகளில் வரிசையில் மக்கள் எங்கள் ஊர் […]

மணலும் நுரையும்! (3)

This entry is part 28 of 33 in the series 11 நவம்பர் 2012

sand and foam (3) – Khalil Gibran ஏழு முறைகள் எம் ஞாதிருவை வெறுத்திருக்கிறோம் யாம், முதல் முறையாக அவளை, சாதுவான மங்கையாகக் கண்டாலும்   அவள உச்சத்தை எட்டக்கூடும் இரண்டாம் முறை அந்த முடமாகிப் போனவனுக்கு முன்னால் துள்ளிக் கொண்டிருக்குமவளைக் கண்டேன். மூன்றாம் முறையாக கடினமானது மற்றும் எளிதானதிற்கும் இடையிலான தேர்ந்தெடுத்தலில் அவள் அந்த எளிதானதையேத் தேர்ந்தெடுக்கக் கண்டேன். நான்காம் முறையாக தவறொன்றை அவ்ளிழைத்தபோது, மற்றவர்களும் தவறிழைத்துக் கொண்டுதானே இருக்கிறார்கள் என்று தம்மையே ஆற்றிக் கொண்டவளைக் […]

குறும்பாக்களைப்பற்றி குறும்பாக்கள்

This entry is part 27 of 33 in the series 11 நவம்பர் 2012

  ஆயிரம் பக்க எழுத்துக்களின் \”போன்சாய்\” மரம் காதல் தீயை பற்ற வைக்கும் சிக்கி-முக்கிக்கல். சங்கத்தமிழ் அடைந்து கிடக்கும் முத்துச்சிப்பிகள் ஒரு சோறில் ஒன்பதாயிரம் பசி. எதிர்வீட்டு ஜன்னலில் உட்கார்ந்து இருப்பவர்கள் காளிதாசன் கம்பன்கள். மொழியே  இல்லாத ஹைக்கூ குயிலின் குக்கூ. பேனாவின் ஒற்றைப்புள்ளியில் காதலின் ஏழுகடல்கள். இரு எழுத்து போதும் காதலின் பிரபஞ்சம் தெரிய.. \”கண்\” கழி நெடிலடி எண்சீர் விருத்தமும் கழுத்து சுளுக்கிக்கொண்டது ..அவள் \”களுக்\” சிரிப்பில். கவிதைக்கடல் இங்கே கர்ப்பம் தரித்த சொல் […]

தாகூரின் கீதப் பாமாலை – 39 என் காலம் முடியும் தருணம்

This entry is part 25 of 33 in the series 11 நவம்பர் 2012

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   இங்கும் அங்கும் போகும் வீதிகளில் உலவிக் கானங்கள் பாடிக் கொண்டென் காலம் கடந்து போனது. பிரியும் தருணத்தில் யார் கையில் நானென் இதயத்தில் வாசித்த வீணையைத் தருவது ? பூக்களின் வண்ணத்தில் வைப்பேன் பாக்களின் பல்வேறு இசைத் தொனியை ! யாழிசைக் கருவியைப் பொன் முலாம் பூசிய முகில்களின் சந்திப்பில் போட்டு விடுவேன்.   பூமாலைகள் சூடி ஐக்கிய மாகிய பாமரர் […]

நுகராத வாசனை…………

This entry is part 23 of 33 in the series 11 நவம்பர் 2012

நேற்கொழு தாசன் மலர் உதிரும் ஓசையொன்றால் குலைந்து போனவன் தனக்கான கல்லறையை செதுக்கத்தொடங்கினான். தேர்ந்த ஓரிடத்தில் நிறங்களை ஒதுக்கி மௌனப்பாறைகளால் சுவர்களையும், நிர்வாணத்தை நிகழ்த்தி தனிமையால் புதர்களையும் உருவாக்கினான் முதலில். இருளடர்ந்த சுவருக்குள் வாசங்கள் நுழைந்துவிடாதிருக்க வேர்களையெல்லாம் களையத்தொடங்கியவன் கிளைகளின் ஈரலிப்பில் பூர்விகத்தை கழுவிக்கொண்ட கணத்தில் மொட்டொன்று அவிழ்ந்ததை உணர்ந்தான். கல்லறையின் வாசலில் இறகொன்று கிடந்தது பறத்தல் பற்றிய கனவோடு….. ஆக்கம்; நேற்கொழு தாசன் வல்வை