தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

11 நவம்பர் 2018

‘கவிதைகள்’ படைப்புகள்

வாழ்தலை மறந்த கதை

அவளிடம் சொன்னேன் அடுப்படி தாண்டு .பருப்புக்கு வெங்காயம் தாளிப்பதை விட அனேக விஷயங்கள் இருக்கின்றன வா உன் சொந்தக்கால் கொண்டு பூமிப்பந்து சுற்றும் வித்தை சொல்லித் தருகிறேன் அவள் வந்தாள். சுமக்க முடியாத சங்கிலிகளையும் முடிவற்ற சந்தேகங்களையும் சுமந்து கொண்டு மிகுந்த பிரயாசையோடு அவள் சங்கிலிகளை ஒவ்வொன்றாய் களைந்தேன் சந்தேகங்கள் முடிவுறாது ஒடும் நதியை ஒத்தனவாய் [Read More]

கவிஞனின் மனைவி

அபூர்வமான சொற்களைப் பின்னும் பொன்னிற சிலந்தி அவன் ஆறும் தேநீரை மறந்து இரவிரவாய் நூற்காடுகளுக்குள் மல்லாந்து கிடப்பான். திடும் மென அவள் தாகித்தெழும் நடுநிசி பொழுதுகளில் அவன் விரல்கள் தாளில் முளைத்துக்கிடப்பதைப் பார்த்தவாறே உறங்கிப்போவாள். அவன் எழுதும் எதையும் அவள் வாசித்ததில்லை அவனது விசாரங்களும் தனித்துவமான சிந்தனைகளும் அவளுக்குப் புரிந்ததேயில்லை. அதிகம் [Read More]

மேலதிகாரிகள்

உறங்கத் தாமதமாகும் ஒவ்வொரு இரவும் சுமந்து வருகிறது உழைப்பின் களைப்பை அலுவலகம் உறிஞ்சிச் சுவைத்த நேரத்தை பார்களில் அமர்ந்து பீராக உறிஞ்சியபடி அதிக வேலை பற்றியும் அதிகப்படியாயோ குறைந்தோ கிடைத்த போனஸ் பற்றியும் கடுகடுத்த மேலதிகாரியை கிண்டலடித்தபடியும் சக ஊழியனை ஜால்ராக்காரனாகவும் ஐஸ்துண்டங்கள் கரைய கரைய மனதைக் கரைத்தபடி வண்டியில் ஏறும்போது தூக்கமற்று [Read More]

காகித முரண்

ஒரு மரம் விடவில்லை ஒரு சுவர் விடவில்லை ஊரெல்லாம் விழா பற்றி ”காகித” போஸ்டர்ஸ் முதல்வர் கலந்து கொள்கிறாராம் ஊரே விழாக்கோலம் பூண்டது சிறுவன் படித்துக்கொண்டிருந்தான் காகிதம் மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது விழாவின் பெயர் ஏதோ “மரம் நடுவிழாவாம்”. அ.லெட்சுமணன். [Read More]

சின்னப்பயல் கவிதைகள்

ஆள்காட்டி மழை ஜன்னல் கம்பிகளில் தொற்றிக்கொண்டிருந்த மழை நீரை ஆள்காட்டி விரல் கொண்டு ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை அழுத்தி வடித்து விட்டேன். மறு நாள் மழை வரவில்லை. ஆள்காட்டி விரல் காரணமாயிருக்குமோ ? அஞ்சறைப்பெட்டி அஞ்சறைப்பெட்டியில் அம்மா போட்டு வைத்த மீதக்காசில் சீரகத்தின் மணமும் கடுகின் வாசமும் வெந்தயத்தின் நெடியும் மஞ்சள்பொடியின் கமறலும் மிளகின் காரமுமாக [Read More]

காட்சியும் தரிசனமும்

பூகோள வரைபடங்கள் இல்லாமல் திசையை அவதானித்து தேசங்களைக் கடப்பதாய் பறந்தும் மிதந்தும் மின்னல் வேக இறக்கத்தில் ஒரு மீனைக் கொத்திச் செல்வதாய் வளாகங்களின் சாளர மேற்புறத்து வெயில் மறைப்புகளில் ஒடுங்கிப் பெருகுவதாய் மலரினுள் நுழைந்து தேனெடுத்து மரத்தைக் கொத்தி இரை தேடி ஜீவிப்பதாய் வணங்கப் படுவதாய் உண்ணப் படுவதாய் ஒரு வலையை விடவும் நுண்ணிய கூடு கட்டும் திறனாளியாய் [Read More]

ப.மதியழகன் கவிதைகள்

மணல் வீடு   வானக்கூரையை தொட்டுக் கொண்டு நிற்கும் கலங்கரை விளக்கம் படகுகளைத் தாலாட்டும் கடலலைகள் கடலில் நீந்தும் மீன்கள் வலையில் அகப்பட்டால் பாத்திரத்தில் பதார்த்தமாய் கிடக்கும் கடலின் ஆழத்தில் பனித்துளி முத்தாக உருமாறும் கடலலைகள் எழுப்பும் ஓசை ஆர்மோனியத்திலிருந்து வெளிவரும் சுதியைப் போலிருக்கும் பால்யத்தில் கிளிஞ்சல்கள் பொறுக்கிய நாம் தான் கடற்கரையிலும் [Read More]

காலம் – பொன்

பொன்னை துரத்தும் பந்தயம் காலம்-நான்-பொன் ஒருவர் பின் ஒருவர் துரத்தியபடி . ஓடினால் அள்ள முடியாதென குதிரை மேல் சவாரி . ஏறியதும் தெரிந்தது – இது பொன் இடும் குதிரை மட்டுமல்ல பொன் தேடும் குதிரையும் கூட . தலை தெரிக்க ஓடுகிறது அது பாய்கிற பாய்ச்சலில் கழுத்திலிருந்த பிடி நழுவி சவாரி வாலை பிடித்தபடி அது போகிற இடமெல்லாம் … கழுத்தில், குதிரை சலங்கைகளுடன் ! மன்னிக்கவும் – [Read More]

பிறந்த மண்

மணல் குன்றில் விளையாடுகின்றன குழந்தைகள். மலை ஏற்ற வீரர்களைப்போல் அதன் உச்சியில் ஏற நெகிழ்ந்து மண் சரிய சிரிக்கின்றன . மணலில் மலை செய்து அதில் குகைகளைக்குடைந்து கூழாங்கற்களை வாசலுக்குப்பதிக்கின்றன மணலில் சித்திரங்களை,பெயர்களை வரைந்து அழிக்கின்றன. மணலில் செடியை நட்டு நீர் வார்க்கின்றன. அதட்டும் அழை குரல் அவசரத்தில் எழும் குழந்தைகளின் மடியிலிருந்து கொட்டங்குச்சி [Read More]

வினா ….

இருளை உள்ளடக்கியே பரவிக்கொண்டிருக்கின்றன வெளிச்சக் கீற்றுக்கள் எங்கும் துளை போட இயலாமல் காற்றுவெளியில் இறுகி கோளங்களாய் உருண்டு வீசப்படாத எரிபந்துகளாய் அந்தக் கோள்கள்… வழி எனும் விடை தெரிந்தோ தெரியாமலோ திசை எங்கிலும் விரவிக் கொண்டே தனித்தொரு பாதையமைத்து எதிலும் படாமல் விலகியே செல்லும் என்றும் விடை தெரிவதே இல்லை சில கேள்விகளுக்கு மட்டும் ஷம்மி முத்துவேல் [Read More]

 Page 225 of 239  « First  ... « 223  224  225  226  227 » ...  Last » 

Latest Topics

உதவி செய்ய வா !

 மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழ்த் [Read More]

கேழல் பத்து

கேழல் என்பது காட்டுப் பன்றியைக் குறிக்கும். [Read More]

அதன் பேர் என்ன?

கனக்கிறது பொழுதெல்லாம்! எந்த [Read More]

செட்டிநாடு கோழி குழம்பு

பொருள்கள் கோழி – 1 கிலோ கிராம்பு – 2 பட்டை – 2 [Read More]

புளியம்பழம்

ஓட்டோடு ஒட்டாத கனியிடம் கேட்டேன் [Read More]

இயற்கையிடம் கேட்டேன்

‘இந்தத் தீபாவளிக்கு ஏதாவது சொல்’ [Read More]

தொடுவானம்       227. ஹைட்ரோஃபோபியா

தொடுவானம் 227. ஹைட்ரோஃபோபியா

டாக்டர் ஜி. ஜான்சன் 227. ஹைட்ரோஃபோ பியா நண்பர் [Read More]

Popular Topics

Archives