இரட்டுற மொழிதல்

This entry is part 9 of 41 in the series 23 செப்டம்பர் 2012

       — ரமணி     கோபமோ தாபமோ காமமோ காதலோ எதையும் வாய்ச் சொல்லாய்ச் சொல்லாது கவிதைக்குள் பதுக்கிவிடலாம்.   படித்துப் பார்த்தபின் கோபமும் தாபமும் காமமும் காதலும் இரட்டிப்பானது தனக்கென்று புலம்புவாள் மனைவி   — ரமணி

விடுதலையை வரைதல்

This entry is part 4 of 41 in the series 23 செப்டம்பர் 2012

க. சோதிதாசன் அவள் ஓவியம் வரைபவள் கண்ணீர்க் கோடுகளை நன்றாக கீறுவாள் தனிமையை தீட்டி இருக்கிறாள் அடக்கு முறையை சித்தரிக்க முடிந்திருக்கிறதுதுன்பத்தையும் சோர்வையும் சொல்பவை பல ஓவியங்கள் பலவீனத்தை படமாக்கி இருக்கிறாள் வீடும் பணிச்செயல்களும் உயிர்ப்பானவையாக இருக்கும் இருளை இணைக்க முடிந்திருக்கிறது ஆனால் விடுதலையையும் ஒளியையும் இறுதி வரை அவளால் வரைய முடிந்திருக்கவில்லை.. க. சோதிதாசன் யாழ்ப்பாணம் இலங்கை. drsothithas@gmail.com

தங்கம்மூர்த்தி கவிதை

This entry is part 3 of 41 in the series 23 செப்டம்பர் 2012

தங்கம்மூர்த்தி எனக்கே எனக்கென்றிருந்த ஒரே ஒரு நட்சத்திரமும் நேற்றிரவு திருடு போய்விட்டது. நெடுவானில் தவித்தபடி அலையும் என்னைக் கவ்விக்கொள்கிறது இருள். இருளோடு இணைந்து பயணித்து ஒளி தேடி அலைந்து களைத்து இருளுக்குள் இருளாகிறேன் புலரும் கலை புரியாமல்.

பயண விநோதம்

This entry is part 2 of 41 in the series 23 செப்டம்பர் 2012

சு.துரைக்குமரன் பெரும்பாலும் உற்சாகத்தோடு தொடங்கும் பயணங்கள் மறுமுனையின் தொடக்கத்தில் கசப்பின் நுனியைத் தொட்டுவிட்டே தொடருகின்றன அசதியும் வசதிக்குறைவும் தரும் கசகசப்பில் ஊரத்தொடங்கும் மனமும் உடலும் தகித்துக் கிளர்கின்றன கசப்பைக் கக்கியபடியே திட்டமிடலும் எதிர்பார்ப்பும் தாக்கும் ஏக்கத்தின் எதிரொளி பார்வையிலும் பின் வார்த்தையிலும் பற்றி எரிகின்றது பரிமாற இயலாத எண்ணங்களின் ஏற்ற இறக்கங்கள் சங்கடத்தைச் சரிபார்ப்பதில் நுனிபற்றிய கசப்பு வேரையும் விட்டுவைப்பதில்லை அதீத அலட்சியத்தாலும் அழுந்திப்பிதுங்கிய பெருமூச்சிலும் இருப்பையே விசாரணைக்குள்ளாக்கும் கேள்விகளோடு முடிகின்றன பயணங்கள் ஏதொன்றும் நிகழாததுபோல் மீண்டும் […]

வழி தவறிய கவிதையொன்று

This entry is part 31 of 31 in the series 16 செப்டம்பர் 2012

நடுச்சாமத்தில் உறக்கத்துக்கும் விழிப்புக்குமிடையே மனம் ஓடும் எல்லா இடங்களுக்கும் அறியா வெளிகளுக்கும்.   ‘டொக் டொக் டொக்’ யாரது? உள்ளம் கேட்கும்   ‘யார் நீ?’ உரத்த குரலில் வினவுகிறேன் நான்.   ‘நான். வந்து… வந்து… வழி தவறிய கவிதையொன்று. கதவைக் கொஞ்சம் திறக்க இயலுமா?’   கவிதையொன்றாம். வழி தவறி விட்டதாம். திறப்பதா கதவை? எனது கதவைத் திறக்காது விடின் வழி தவறிப் போகும் கவிதை. கதவைத் திறப்பின்…. வழி தவறிப் போவேன் நான். […]

தாகூரின் கீதப் பாமாலை – 31 நீ அருகில் உள்ள போது… !

This entry is part 27 of 31 in the series 16 செப்டம்பர் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நேற்றிரவு அப்பாட்டு வந்த தெனக்கு நீ அருகில் இல்லாத போது ! அது சொன்னது : நான் ஆயுட் காலம் முழுதும் போராடி வந்த ஆர்பாட்டத்தை ! காரிருளில் ஓரு கணம் தாரகை போல் வார்த்தைகள் இசையோ டிணைந்தன நீ   அருகில் இல்லாத போது ! பொழுது புலர்ந்ததும் எனக்கொரு நம்பிக்கை இசையோடு பாட வேண்டும்  நான் உனக் காக நான் இறக்கும் முன்பு […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 37) பன்மடங்கு பூரிப்பு எனக்கு

This entry is part 22 of 31 in the series 16 செப்டம்பர் 2012

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 37) பன்மடங்கு பூரிப்பு எனக்கு மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. […]

மெல்ல இருட்டும்

This entry is part 11 of 31 in the series 16 செப்டம்பர் 2012

தங்கம்மூர்த்தி மெல்ல இருட்டும் இவ்வேளையில் உன் நினைவுகள் ஒரு நிலவைப்போல் மேலெழுந்து குளிர்ந்து ஒளிர்கின்றன. நிலவின் ஒளி மெல்லடி வைத்துப் படர்கையில் இருள் நழுவி விலகி நிலவுக்குப் பாதையமைக்கிறது குளிர்ந்த ஒளி மழையெனப் பொழிந்து என்னை முழுவதும் நனைத்திருந்தது. அப்போது பூமியெங்கும் பூத்திருந்தன நிலவுகள். –

அம்மா

This entry is part 9 of 31 in the series 16 செப்டம்பர் 2012

  (1)   அம்மா இனியில்லை.   வெயிலில் வெறிச்சோடிக் கிடக்கும் ஒற்றையடிப்  பாதையாய் மனம் ஒடிந்து கிடக்கும்.   வேலைக்குப் போய் அம்மாவுக்கு வாங்கித் தந்தது ஒரே ஒரு சேலை.   அழுவேன் நான்.   ஆண்டுகள் பல அம்மாவிடம் பேசாத அப்பா நாற்காலியில் கிடத்தப்பட்டிருக்கும் ’அம்மாவின்’ தலைக்கு எண்ணெய் வைப்பார்.   அது இது வரை என் விவரம் தெரிந்த வரை அம்மாவுக்கு அப்பா செய்த ஒரே ஒரு சேவகம்.   அழுவார் அப்பா. […]

ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் எழுதியிருக்கிறது காலம்.

This entry is part 7 of 31 in the series 16 செப்டம்பர் 2012

க.சோதிதாசன்.   உயிரெங்கும் இனிய நினைவுகளால் நிறைகிறாய். நிஜம் தேடி பிரபஞசம் எங்கும் அலைகிறது மனசு காற்றின் இடைவெளிகளிலும் முகம் தேடும் கண். காதல் நினைவுகளில் கானல் நிறைத்து சென்று விழுகிறது பொழுது சில நாட்களில் ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் எழுதியிருக்கிறது காலம்.     க.சோதிதாசன்.     யாழ்ப்பாணம்