விவசாயி

This entry is part 6 of 31 in the series 16 செப்டம்பர் 2012

  வானம்பார்த்த பூமி விதைத்தால் விறகாகும் கருவேல மரங்கள் ——————————————————-   கண்ணீர்விட்டு வளர்த்தோம் இந்தவருடம் பூப்பெய்தியது எங்கவீட்டு புளியமரம் ——————————————————-   கண்ணைப் போல் தென்னை வளர்த்தோம் இளநீர் தந்தது ——————————————————-   குழிவிழுந்த வயக்காடு தாகம்தீர்த்துச் சிரித்தது மழையால் ——————————————————-   உழைத்துக் களைத்த உழவன் உறங்கத் துடிக்கும் தாய்மடி மரங்கள்

ஒவ்வொரு கல்லாய்….

This entry is part 1 of 31 in the series 16 செப்டம்பர் 2012

“கூடங்குளம்” பெயரில் தான் குளம். குடிக்க அதில் சொட்டுத்தண்ணிர் இல்லை. அலைந்து திரிந்த காகம் அணு ஜாடியை கண்டது. கொஞ்சம் தண்ணீர் தான் அடியில். ஒவ்வொரு கல்லாய்ப் போட்டால் “ஆபத்து”இல்லாமல் தண்ணீர்குடிக்கலாம். ஆனால் இலங்கைக்காக்கைகள் தமிழ்நாட்டுக்காக்கைகள் டெல்லி சாணக்கிய காக்கைகள் சாணி உரத்துப் பச்சைக்காக்கைகள் உலகத்து “தாராள மய”க்காக்கைகள் உள்ளூர் வெள்ளைக்காக்கைகள் அதிசயமாய் அசலூர் காவிக்காக்கைகள் இவையெல்லாம் படையெடுத்துச் சிறகடித்தால் “ஜாடி”உடையும். பூதமும் கிளம்பும் அலாவுதீன் பூதம் அல்ல. அகிலத்தையே தின்னும் பூதம். இந்த காக்கைகளின் கும்பல் […]

கதையே கவிதையாய்! (5) பண்டிதரும் கவிஞரும்

அரவம் ஒன்று வானம்பாடியிடம், “நீவிர் பறக்கக்கூடியவரேயாயினும், உம்மால், பூரணமான அமைதியில் வாழ்க்கையின் உயிர்ச்சாறு இடம் பெயரும் அந்த பூமியின் சரிவுகளைக் காண இயலாதே” என்றது. அதற்கு வானம்பாடி, “ஆம், தாங்கள் அளவிற்கதிகமாக அறிந்துள்ளீர்கள், அனைத்து அறிவார்ந்த பொருட்களையும்விட உம்முடைய கலை மேலும் அறிவுடையதாகவும் இருக்கலாம். – உம்மால் பறக்க இயலாது என்பது பரிதாபத்திற்குரியது” என்று பதிலிறுத்தது. மேலும் இதெல்லாம் ஏதும் செவியில் விழாதது போல, அந்த அரவம், “உம்மால் ஆழமான இரகசியங்களைக் காணவும் இயலாது, மறைந்த ராச்சியங்களின் […]

ஆசிரியர்களை நோக்கி ஒரு ஆசிரியப்பா!

This entry is part 26 of 28 in the series 9 செப்டம்பர் 2012

ருத்ரா இந்த நாட்டின் முதுகெலும்பு நீங்கள் டிசைன் செய்தது. இளைஞர்களின் மூளை நீங்கள் பதியம் இட்டது. நீங்க‌ள் அக‌ர‌ முத‌ல ஒலித்துக்காட்டிய‌பின் எங்க‌ள் அறிவு நீள‌மாயும் அக‌ல‌மாயும் ஆழ‌மாயும் பாய்ந்து சென்ற‌து. உங்க‌ள் கையில் சாக்பீசும் பிர‌ம்பும் இருந்தாலும் கூட அதில் ச‌ங்கு ச‌க்க‌ர‌ம் ஏந்திய‌வ‌ன் தான் எங்க‌ளுக்கு காட்சி த‌ந்தான். குரு என்னும் சுட‌ரேந்தியாய் நீங்க‌ள் வெளிச்சம் த‌ந்த‌தால் தான் உங்க‌ளுக்கு பின்னால் இருப்ப‌வ‌னின் முக‌ம் தெரிந்த‌து. மாதா பிதா குரு.. அப்புற‌ம் தானே தெய்வ‌ம்! […]

காலம்….!

This entry is part 22 of 28 in the series 9 செப்டம்பர் 2012

ஜெயஸ்ரீ ஷங்கர். வாழ்க்கையை உழும்… காலம்..! ———————— தன்னை யாரெனக் உணர்த்திடும் காலம்..! ————————- பூமியை சிக்க வைத்த சக்கரம்..! காலம்..! ————————— இன்று…! என்பதை நேற்றாக மாற்றும் காலம்..! —————————– பூமி கடந்து சென்ற பாதை காலம். ——————————— கலி முத்தியதால்… அலங்கோலமாய் சிரித்தது… காலம்..! —————————- விதைத்ததை அள்ளிக் கொடுத்தது காலம்..! ——————————– காலன் பார்ப்பதில்லை காலம்..! ——————————— மன ரணத்தை ஆற்றிடும் அருமருந்து காலம்..! —————————– கருவை வளர்த்து கிழமாக்கும் காலம்..! ——————————— […]

தாகூரின் கீதப் பாமாலை – 30 கடற் பயணி.

This entry is part 19 of 28 in the series 9 செப்டம்பர் 2012

தாகூரின் கீதப் பாமாலை – 30 கடற் பயணி. மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எந்தப் பாதையில் நீ வந்தாய் என்று நான் அறியேன், நீ வந்ததையும் நான் காண வில்லை பயணியே ! கனவுபோல் திடீரெனத் தோன்றினாய் கானகத்தின் அதே மூலையில்  ! பங்குனி மாதம் அது, புது வசந்தம்  கொணர்ந்த திங்கே புவிக் கடலில் பொங்கிடும்  அலை மட்டம்  ! உன் பச்சைப் படகில் காற்று வீசிக் […]

இந்த நேரத்தில்——

This entry is part 15 of 28 in the series 9 செப்டம்பர் 2012

க.சோதிதாசன்  இந்த நேரத்தில் இறுதி முத்தத்தை பகிர்ந்து விடை பெறுகிறது ஓர் காதல் இன்னோரிடத்தில் கண்களின் வழியே உயிருள் நுழைகிறது விண்மீன்களின் ஒளியில் இரவு பாடலை ரசிக்கிறது ஓர் உயிரி சூரிய தகிப்பால் வியர்வை நதியால் வெப்பம் குறைக்கும் ஓர் மானிடம்   இந்த நேரம் அகால வேளைகாரணமின்றி கைதுசெய்யப்படும் மகனுக்காக கதறுகிறாள் ஒருபெண் விடுதலை பாடலை பாடி உயிர் விதைக்கிறான் ஓர் போராளி. சிலர் கனவுகளில் இன்பம் துய்கிறார்கள் பலர் மரணக்கனவுகள் கண்டுவிழித்து வியர்வையில் விழுகிறார்கள் ஏதோ ஓர்முலையில் இனிய சங்கீதம் ஒலிக்கிறது இன்னுமோரிடத்தில் பேரழிவு குண்டொன்று விழுந்து கொண்டிருக்கிறது இந்த நேரத்தில் யாரோ சிலர் இந்த கவிதையை படித்து கொண்டிருக்கிறார்கள்.       யாழ்ப்பாணம்.

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 36) அடுத்த ஓர் முறையீடு

This entry is part 9 of 28 in the series 9 செப்டம்பர் 2012

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை […]

கேள்விகளின் வாழ்க்கை

This entry is part 4 of 28 in the series 9 செப்டம்பர் 2012

================= நம்மோடு நம்மிடையே வாழ்கின்றன நம் கேள்விகளும் பேருந்துப் படிக்கட்டுகளில் தொங்கியபடி சில மின்சார ரயில்களில் அருகமர்ந்தபடி சில மழையில் நனைய மறுத்து நாம் ஒதுங்கும் நிழற்குடைக்குள் ஒண்டியபடி சில கேள்விகள் நம்மிடையே வாழ்ந்து கொண்டேதானிருக்கின்றன அவைகளின் இருப்பை அறியாதார் நாமே மனிதரின் வாழ்விடங்களையெல்லாம் அவை தம்முடையதாக்கிக் கொள்கின்றன தாயைத் தொலைத்த மகவைப் போல சில மாந்தரே வாழா இடங்களிலும் வாழ்கின்றன தம்மைப் பெற்றவர் யாரெனும் ரகசியம் தெரியாமலேயே. – வருணன்.

தாகூரின் கீதப் பாமாலை – 29 கானத்தைப் பாடும் தருணம்

This entry is part 30 of 37 in the series 2 செப்டம்பர் 2012

  தாகூரின் கீதப் பாமாலை – 29 கானத்தைப் பாடும் தருணம் மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா தனித்த உரிமையில் கண நேரம் சந்நதியில்  உன்னருகே அமர்ந்திட வேண்டுகிறேன் நான். கைவச முள்ள எனது வேலைகளை முடித்துக் கொள்வேன் பிறகு ! கனிந்த நின் திருமுகக் காட்சியைக் காணாத மறைவுப் புறத்தில் நடமிடும் வேளை என்னிதயம் படபடத்துத் தவியாய்த் தவிக்கும் தன்னிலை மாறி !  அப்போதென் படைப்புகள் யாவும் சுமக்க […]