ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 35) குற்ற மன்னிப்பு

This entry is part 29 of 37 in the series 2 செப்டம்பர் 2012

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 35) குற்ற  மன்னிப்பு மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் […]

என்ன செய்வார்….இனி..!

This entry is part 27 of 37 in the series 2 செப்டம்பர் 2012

அருமை மகனின் படுத்தும் சேட்டையால் பக்கத்து வீட்டு பையன் பங்காளி  ஆனான் அவனுக்கு…! அடுத்த வீட்டுக்காரியிடம் அடுத்தடுத்து காபி பொடி, சர்க்கரை கடன் வாங்க… அவளும் உடன் பேச்சை நிறுத்தினாள் அடுத்த வீட்டுக்காரரிடம் நான் மட்டும் நட்பை வளர்க்க யார் கண் பட்டதோ ஊர் கண் பட்டதோ ஒதுங்கும் கழிவு நீரால் அதிலும் ஓட்டை விழ…! விரிசல் நட்பால் பிரிந்தன வீடுகள் பேச்சுகள் அற்று நிசப்தமாய் இரு வீடுகள்..! அனைத்தையும் வெட்டிய அடுத்த வீட்டுக்காரர் இருவரும் இணைந்தே […]

காலத்தின் விதி

This entry is part 20 of 37 in the series 2 செப்டம்பர் 2012

முன் பின் தெரியாத ஒரு அனாதைச் சாவிலிருந்து திரும்பும் ’அவனை’ வழி மறைப்பான் முன்வாசலில் முதியவன் ஒருவன்.   முதியவன் கால்கள் மண்ணில் வேர் கொள்ளவில்லையா?   சதா அழுக்கு சேரும் கோணிப்பை போன்ற கிழிந்த சட்டையில் கிழட்டு வெளவாலாய் அவன் தொங்கிக் கொண்டிருப்பது போலத் தோன்றும்.   முதியவன் வாழ்ந்தும் செத்தும் கொண்டிருப்பதை விழிகள் திறந்தும் மூடியும் சொல்வான்.   அப்போது பெய்து முடிந்த அந்தி மழைக்குப் பின்னால் தான் அவன் வந்திருக்க  வேண்டும்.   […]

கதையே கவிதையாய்! (3)

This entry is part 17 of 37 in the series 2 செப்டம்பர் 2012

    வழி – கலீல் ஜிப்ரான்   குன்றுகளின் மத்தியில், தம் தலைப்பிள்ளையான ஒரே மகனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள் ஓர் பாவை. மருத்துவர் ஆங்கே நின்று கொண்டிருக்கையிலேயே, அக்குழந்தை இறந்தது ஓர் காய்ச்சலினால். அந்தத் தாயவள் வேதனையினாலே. மனம் குழம்பிப் போனாள்  அம்மருத்துவரிடம், “சொல்லுங்கள், சொல்லுங்கள் அவனது செயல்களை முடக்கிப்போட்டதோடு, அவனுடைய இனிய கானத்தையும்  அமைதியாக்கியது எது?” என்று பதறினாள். அந்த மருத்துவரோ, ”அது அந்தக் காய்ச்சல்தான்” என்றார். மேலும் அந்தத் தாய், “ஏன் அந்தக் […]

காலம்….!

This entry is part 16 of 37 in the series 2 செப்டம்பர் 2012

வாழ்க்கையை உழும்… காலம்..! தன்னை யாரெனக் உணர்த்திடும் காலம்..! பூமியை சிக்க வைத்த சக்கரம்..! காலம்..! இல்லாத ஒன்றை இருப்பதாய்க் சிரிக்கும் காலம்.. இன்று…! என்பதை நேற்றாக மாற்றும் காலம்..! பூமி கடந்து சென்ற பாதை காலம்..! கலி முத்தியதால்… அலங்கோலமாய் சிரித்தது… காலம்..! விதைத்ததை அள்ளிக் கொடுத்தது காலம்..! காலன் பார்ப்பதில்லை காலம்..! மன ரணத்தை ஆற்றிடும் அருமருந்து காலம்..! கருவை வளர்த்து கிழமாக்கும் காலம்..! கேள்வியும் கேட்கும் பதிலும் சொல்லும் காலம்..! ஒளியை இருளாக்கும்.. இருளை… நிலவாக்கும்… […]

ஆற்றங்கரைப் பிள்ளையார்

This entry is part 12 of 37 in the series 2 செப்டம்பர் 2012

தி.ந.இளங்கோவன் பருவப் பெண்ணின் செருக்கோடு வளைந்து நெளிந்து பாய்கிறது நதி. கரையோரம் பொறுக்க யாருமின்றி உதிர்ந்து கிடக்கின்றன நாவற்பழங்கள். அப்பா தூக்கியெறிந்த உணவுத்தட்டு ஆடி அடங்குகிறது முற்றத்தில் சோற்றுப்பருக்கைகளின் மீது. செத்த எலியொன்றை சிதைத்துப் புசிக்கின்றன பசி கொண்ட காகங்கள். சருகு மெத்தையில் சுருண்டு கிடக்குதொரு நாகம். காய்களின் கனம் தாங்காமல் தரை தொடுகிறது மாமரக்கிளை. தனது கடைசி உணவுக்காய் காய்க்கிறது தினமென்று உணராப் பெண்ணொருத்தி அம்மரத்தின் பூப்பறித்து தினந்தினம் தொழுகின்றாள், எல்லாம் அறிந்தும்   எதுவும் […]

கருப்பு விலைமகளொருத்தி

This entry is part 11 of 37 in the series 2 செப்டம்பர் 2012

  வளையல்களைத் தேர்ந்தெடுத்த இடத்தில் நான் சந்தித்த விலைமகள் மிகவும் அகங்காரத்துடனும் அழகுடனும் கருப்பாகவுமிருந்தாள்   காலையில் நாம் உணவுக்காகச் செல்லும் உணவகத்தின் இன்னுமொரு மூலையில் பீங்கான் நிறையச் சோறெடுத்து உண்பாள் அவளது வயிறு மேடிட்டிருப்பதை கதிரைகளுக்கிடையேயிருந்து கண்டேன் கருவுற்றிருந்தாள் பசியகன்றதும் மரத்தடிக்குச் சென்றாள்   நாள்தோறும் சந்திக்க நேரும் அவ் வதனத்தை எவ்வாறு தாங்கிக்கொள்ள இயலும் வங்கி முன்னாலிருக்கும் ஒரேயொரு சிறு நிழல் மரம் அவளது இருப்பிடம் ஒருவர் மாத்திரமே இருக்க முடியுமான அவ்விடத்திலமர்ந்து வயிற்றைத் […]

6 ஆகஸ்ட் 2012

This entry is part 10 of 37 in the series 2 செப்டம்பர் 2012

    செவ்வாய் கிரகத்தைச் சதுரஅடி சதுரஅடியாய்ச் சலித்துச் சலித்துச் சொல்லி  விட்டோம்   கணினியில் ‘செவ்வாய்’ என்று தட்டினால் கொத்துக் கொத்தாய்ச் செய்திகள் இறங்கிக் ‘குறித்துக் கொள்’ என்கிறது   ஆனாலும் நாம் சும்மாவா இருக்கிறோம்?   சூரியக் குடும்பத்தில் மூன்றாம் மடியில் நாம் நான்காம் மடியில் செவ்வாய் இடையே கிடக்கும் அண்டம் கடக்க வண்டியொன்று செய்தோம் அது செவ்வாயில் இறங்கி எழுதியிருக்கிறது நம் முகவரியை   6 ஆகஸ்ட் 2012 மனித வரலாறு மறக்கமுடியாத […]

காலமும் தூரமும்

This entry is part 4 of 37 in the series 2 செப்டம்பர் 2012

    — ரமணி   யார் சொல்லியும் எப்படிச் சொல்லியும் சண்டையின்போது மேல்விழுந்த வார்த்தைகள் செய்த காயத்தை ஆற்றிக்கொள்ளவே முடியவில்லை!     புழுதி படிந்துகொண்டிருக்கும் அந்த நாளின் பாரம் இறக்கப்படாமலேயே உறைந்து கிடக்கிறது!   பார்வையை விட்டகல புலம் பெயர்ந்த பின்னும் நழுவிய நாட்களோடு காயத்தின் வலியும் செய்தவன் நினைவும் கரைந்து போய்விடவில்லை.   நேர்ந்துபோன உறவுகளை காலம் சேர்க்கவும் இல்லை தூரம் பிரிக்கவும் இல்லை   —-  ரமணி

பூனைகளின் மரணம்

This entry is part 27 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

– பத்மநாபபுரம் அரவிந்தன் – யாரேனும் கண்டதுண்டோ .. பூனைகளின் இயற்கையான மரணத்தை? வாகனங்களில் அடிபட்டோ , நாய்களால் கடிபட்டோ இரை பிடிக்கத் தாவுகையில் தவறிக் கிணற்றுள் விழுந்தோ .. விபத்து சார்ந்த மரணங்களையன்றி பூனைகளின் இயற்கையான மரணம் மனித மனதைப் போல பெரும் புதிர்… குறிகிய இடத்துள் நெளிந்து நுழையும் உயர இடத்தில் பரபரக்க ஏறும் … எப்படித் துக்கிப் போட்டாலும் கால்கள் ஊன்றித் தரையிறங்கும் புழுதியில்ப் புரண்டு அழுக்காகும் நாக்கால் நக்கியே தூய்மையாகும் விரட்டி […]