முன் வினையின் பின் வினை

This entry is part 2 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

எஸ்.கணேசன்     பதின்வயது மோகம் அழுக்கைத் தாங்கின வெள்ளித்திரையைத் தாண்டி உன்னையும் தாக்கக் குடும்பமே போர்க்களமாய்ப் போயிற்றே!   அளவற்ற செல்லத்தின் சுதந்திரம் புரியாது காதலின் அர்த்தத்தை உன் வழியில் தேடி நீ அலைந்த இளம்வயது தாய்தந்தைக்குச் சடுதியில் மூப்பைச் சாத்தியதே!   இளங்கலையில் தேறியிருக்க வேண்டியபோது நீ இளந்தாய் ஆகிவிட்டிருந்தாயே!   எதை இழந்து எதைப் பெற்றாய் என நீ அறியும் முன் வாழ்க்கை உன்மீது இருட்டையும் கசப்பையும் அப்பிவிட்டுச் சென்றுவிட்டதே!   அதையும் […]

வா…எடு…எழுது..படி…பேசும்..கவிதை.!

This entry is part 16 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

என் ஆன்மாவின் கதவிடுக்கில் ஒளிந்து நின்று எட்டிப் பார்க்காதே வெளியே வா….! உன் எண்ணம் இனிமை மழை நீர் போல் தூய்மை உனை மறுக்கும் அதிகாரம் எனக்கில்லை..இதோ பேனாவை எடு…! இயற்கை மேல் வைத்த கண் அளந்து விட்டதோ படித்ததை நினைவூட்டு உன்னுள் உயிர்த்ததை என்னுள் எழுது..! காற்றோடு நாசி நுழையும் தூசியை சிலிகான் செல்களாக மாற்றிப் படி..! நீ இன்று இருந்து எழுதி வைத்தவை… நாளை நான் இல்லாது போனாலும் பேசும்..! மூச்சசைவில்  வாழ்வு… போனதும் சாம்பல்… இருந்தும் மணக்கும் என்னை நினைவூட்டும் இறவாத கவிதை..! ஜெயஸ்ரீ ஷங்கர்.

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 32) மரித்த காதலன் !

This entry is part 31 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை […]

மரமும், நானும், விட்டுப் போன உரையாடல்களும்

This entry is part 28 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

  (1) ’செளக்கியமா—’ திரும்பிப் பார்ப்பேன். எங்கிருந்து குரல்? தெரியவில்லை. சிறிது நேரம் சென்று துணிகள் காயப்போட வெளிமாடம் வருவேன். ’செளக்கியமா—’ திரும்பிப் பார்ப்பேன். அருகிலிருந்து குரல். ஒரு மரம் விசாரிக்கும். பத்து வருடங்கள் முன் பார்த்த அதே மரம். என் ஞாபகம் இருக்கிறதா? -நான். ஞாபகமா? -மரம். வேலை மாற்றலாகி வந்து விட்டேன் இங்கே. ’வயசாயிருச்சே’? -நான். என்ன சொல்கிறாய்? புரியவில்லை. -மரம். எத்தனை வருடங்கள் இருக்கிறாய் இங்கு? -நான். இந்தக் கணத்தில் இருக்கிறேன். -மரம். […]

பாற்சிப்பிகள்

This entry is part 12 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

    சேகரிக்க வேண்டாம், கரையில் மின்னும் மென்மையான பாற்சிப்பிகளை உப்புச் சுவை மா கடலுக்கே அவை சொந்தமானவை ஏன் தண்ணீரில் இறங்குவதில்லை அச்சமா???   எண்ணிலடங்கா ரகசியங்கள் இல்லை கடலிடம் இருப்பது ஒற்றைச் சிறு ரகசியமே… எல்லையில் வானும் கடலும் இணையாதென்பது குறித்து நன்கறிந்தும் ஏன் பொய்யான கனவுக் கவிதைகள் கரையிலிருந்து கொண்டு கடல் குறித்து?   சேகரிக்க வேண்டாம் இப் பாற்சிப்பிகளை கடலுக்குள் இறங்காமல் கரையில் சுகமாக இருந்துகொண்டு…   – இஸுரு சாமர […]

தாகூரின் கீதப் பாமாலை – 26 உறக்கத்தில் தவறிய காட்சி !

This entry is part 11 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கி யுள்ள போதென் அருகில் வந்தமர்ந்தான் அவன், ஆயினும் நித்திரை யிலிருந்து நான் விழித்தெழ வில்லை ! என்னே எந்தன் சாபக் கேடானத் தூக்கம்? அந்தோ வருந்தி வருவோனே ! அருகில் அவன் வந்த தருணம், நள்ளிரவு ஊன்றிய நேரம் ! கரங்களில் யாழினை ஏந்தி அவனது, கை விரல்கள் மீட்டிய இன்னிசைக் கானங்களில் மனம் ஒன்றிப் போய்ப் பின்னிக் கிடந்தன […]

மீண்டும் அமைதி சமாதானம் அறிவிக்கப்படுகிறது

This entry is part 6 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

க.சோதிதாசன் என் நகரத்தில் அமைதி பிரகடனபடுத்த பட்டிருக்கிறது   வீதிகள் அழகு படுத்த படுகிறது.   இடிபாடுகளில் இருந்து புதிதாய் முளைக்கின்றன சீமெந்து காடுகள்   நகர அரங்குகளில் இரவ நிகழ்சி களைகட்டுகிறது   அயல் நாட்டு பாடகர்கள ் உச்சஸ்தாயில் இசைக்கிறார்கள் விரசம் வழியும் பாடல்களை   அன்னிய மொழி பெண்ணின் நடனத்திற்கு எழுகிற சிவில் சத்தத்தில் அதிர்கிறது காற்று   மீண்டும் அமைதி சமாதானம் அறிவிக்கப்படுகிறது.   அரசியல் தலைவர்கள் அச்சமில்லாது மாலை ஏற்க்கிறார்கள் […]

தாகூரின் கீதப் பாமாலை – 25 ஆத்ம நாடகம்.

This entry is part 36 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உன்னோடு நடத்தும் இந்த நாடகம் அந்தோ என் ஆத்மா வுக்கு ! ஓ காதலே ! நீ காண்பது என் காதலி மிக மிக ஆர்வமோ டுள்ளது இன்றென் இதயம் ! விளையாட்டுப் போட்டியில் இழப்பு களை நீ எளிதாய் ஏற்றுக் கொள்ளாய். இப்படி நீ ஒருத்தி தான் எப்போதும் எனக்கு வர்ணம் பூசி விட்டு ஏகி விரைவாயா ? பிடிபட்டுக் கொள்ள பிரபு […]

பா. சத்தியமோகன் கவிதைகள்

This entry is part 33 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

என் சொற்கள் எனக்குப்போதும் கொஞ்ச காலமல்ல — நீண்ட வருடமாய் நான் ஒரு மெல்லிய இறகு வைத்திருந்தேன் அதன் எடை மிகவும் இலகுவானது காற்றைவிடவும் மெலிசானதால் ஊதித் தள்ளப்பட்டு பள்ளத்தாக்கில் போய் ஆழத்தில் பறந்து விழுந்தது என்றாலும் பாருங்கள் அதன் எடையை இந்த உலகம் இழந்தபோது உலகத்தால் தாங்கமுடியவில்லை பறக்க என் சிறகைத் தேடுகிறது அது! நிச்சயமாய் எனக்குத்தெரியும் – மீண்டும் என் இறகு கிடைத்த பிறகுதான் உலகம் உருண்டையாகி தன் இயல்பில் இயங்குகிறது1 . ***** […]

தொலைந்த காலணி..

This entry is part 31 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

தி. ந. இளங்கோவன் சீறிச் செல்லும் வாகனங்களிடையில் ஒற்றையாய் சிதைந்து கிடந்ததந்த புத்தம்புதிய பிஞ்சுக் காலணி….. தாயின் வயிற்றை அணைத்துப் பிடித்து இரு சக்கர வாகனத்தின் இசைவில் உறங்கிப் போன வேளையில் காலணியைத் தவறவிட்ட குழந்தை வீடு போய் விழித்தவுடன் வாங்கிய அன்றே தொலைந்து போன காலணிக்காய் அழும்போது சோகமாய் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு துக்கம் அனுஷ்டித்தது தொலையாத இன்னொரு காலணி ! தி. ந. இளங்கோவன்