உன் காலடி வானம்

This entry is part 1 of 35 in the series 29 ஜூலை 2012

அன்றைய மழைக்கால முன்னிரவில் அவளது நீண்ட நேரக் காத்திருப்பின் முடிவு பேருந்துத் தரிப்பிடத்தில் தேங்கி நின்றதோர் கணம் தாண்டிச் சென்ற எவரையோ அழைத்துப் பேசி கூடச் செல்லுமுனது பார்வையின் கீழே நழுவியதவளது பூமி தெருவோரம் எவரோ வெட்டி வீழ்த்தியிருந்த மரத்தினை நோக்கிக் கூடு திரும்பிய பட்சிகள் இருளாய் வட்டமிட்ட அன்றைய இரவு ஒரு சாத்தானின் உருவம் கொண்டது அந்தகாரத்தில் உனது நடை மீன்களின் நீச்சலை ஒத்திருந்தது நீ எடுத்து வைத்த ஒவ்வொரு எட்டிலும் நதிகள் உதித்தன தண்ணீரில் […]

திருப்பதியில் நடைபெற்ற சாகித்ய அகாதெமியின் வடகிழக்கு மற்றும் தென்னிந்திய எழுத்தாளர்களின் சந்திப்பில் இடம் பெற்ற சில கவிதைகள்

This entry is part 34 of 37 in the series 22 ஜூலை 2012

தமிழில்: சுப்ரபாரதிமணியன் 1. அரசியல்வாதியும் புறாவும் ஓர் அரசியல்வாதியும் வெள்ளைப் புறாவும் அன்பாகவும், அடிக்கடி சண்டையிட்டும் இருந்தனர் வானில் சுதந்திரமாக பறக்க விரும்புவதாக புறா சொன்னது. அரசியல்வாதி சொன்னார்: “ உன்னை பறக்க அனுமதிப்பதோ, இல்லையோ அது என் அரசியல்” புறா மீண்டும் சொன்னது: “நான் என் இறக்கைகளை அடித்தபடி வானில் பறப்பேன்”” அரசியல்வாதி ஒரு  துப்பாக்கியைக் காட்டினான். புறா பறக்க இயலாமல் மெளனமானது. இப்போது வெள்ளைப்புறா அரசியல்வாதியின் பாக்கெட்டின் உள்ளே இருக்கிறது. ரகு லைசாங்கதம் (மணிப்பூரி) […]

கற்பித்தல் – கலீல் கிப்ரான்

This entry is part 32 of 37 in the series 22 ஜூலை 2012

உம்முடைய அறிவெனும் உதயமதில், முன்னமே அரை உறக்க நிலையில் இருப்பதையன்றி வேறொன்றும் உமக்கு எவரும் வெளியிடப்போவதில்லை. ஆலய நிழலில் நடைபயிலும் அந்த ஆசிரியர், தம் மாணாக்கர்களுக்கு, ஓரளவிற்கு தம் நம்பிக்கை மற்றும்  அன்பினாலும் வழங்குவாரேயன்றி, தம் ஆத்ம ஞானத்தினாலன்று. உண்மையிலேயே அவர் மதிநுட்பமுடையவராயின், அவர்தம் ஆத்ம ஞானமெனும் வீட்டில் நீவிர் நுழைவதற்கு ஆணையிடமாட்டார். ஆயின், உம்மை உம் சுயமனமதின் நுழைவாயிலினுள் வழிநடத்துவார். அவர் வானியல் அறிஞராயின், விண்வெளி குறித்த தம்முடைய புரிதலை உம்மிடம் பகிரலாம். ஆயினும் அவர்தம் […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 29)

This entry is part 31 of 37 in the series 22 ஜூலை 2012

காதல் வெல்லும் எல்லாம் ! மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் […]

உலராத மலம்

This entry is part 28 of 37 in the series 22 ஜூலை 2012

மலஜலம் கழிக்க வயல் வெளிப்பக்கமும் ஊர் ஒதுக்குப் புறமும் ஜனங்கள் போகும் ஊர். கங்குலில் தெருவோரம் உட்கார்ந்து எழும் அடையாளம் தெரியாத உருவங்கள். என் பால்ய காலத்தில் பழகிய வழி ஊரில் பள்ளிக்கூடம் போய் வரும் வழி. போய் வரும் வழியோரமெல்லாம் மலங்கள் நிறைந்து கிடக்கும். தினம் தினம் பள்ளி செல்லும் போது மலத்துப்புரவு செய்யும் ஒரு பெருந் துயரப் பெண்ணைக் கண்டு போவதுண்டு. என் அம்மா மோர் விற்கிறாள் இவள் மலம் அள்ளுகிறாள்- இப்படித்தான் சின்னப்பயலான […]

தாவரம் என் தாகம்

This entry is part 25 of 37 in the series 22 ஜூலை 2012

துவக்கப் பள்ளியில் தோட்டம் போட்டோம் நான் கத்தரி வைத்தேன் சாணமும் சாம்பலுமாய் சத்துர மிட்டேன் கண்காட்சியானது என் கத்தரிச் செடிகள் வாத்தியார் சொன்னார் ‘செடியைக் குழந்தையாய் வளர்க்கிறாய் சிறந்த தந்தையாவாய் நீ’ பத்தாம்வகுப்பில் வாத்தியார் கேட்டார் ‘பார்த்ததில் ரசித்தது எது?’ ‘பூவோடும் பிஞ்சோடும் கொஞ்சும் கத்தரிச் செடி ‘ என்றேன் ‘நீ ஒரு கவிஞனாய் வருவாய்’ என்றார் அப்பாவுக்கு அரசாங்க வேலை புதுப்புது ஊர்கள் புதுப்புது வீடுகள் எல்லாம் அடுக்கு மாடி தொட்டியில் வைத்தேன் கத்தரி காலை […]

கணினித்தமிழ் வேந்தர் மா.ஆண்டோ பீட்டர் அவர்களுக்கு ஒரு அஞ்சலி

This entry is part 24 of 37 in the series 22 ஜூலை 2012

  ஆறுமுக‌னேரியின் அருந்த‌மிழ‌ச் செல்வ‌! அறிவியல் தமிழின் “கணினியன் பூங்குன்றன்” நீ எளிதாய் இனிதாய் நுட்ப‌ங்க‌ள் ஆயிர‌ம் விள‌க்கிய‌ அற்புதம் ம‌ற‌க்க‌ இய‌லுமோ? அக‌த்திய‌ன் தமிழோ புராணமாய் போன‌து. அக‌ப்பட்ட‌ த‌மிழோ த‌ட‌ம் ம‌றைந்து போன‌து அறு வகை ம‌த‌மும் நால் வகைக் கூச்ச‌லும் ஆழ‌ப் புதைத்த‌பின் த‌மிழ் என்ன‌ மிச்ச‌ம்? க‌ணினித் த‌மிழ் இங்கு க‌ண் திற‌ந்த‌ பின்னே எட்டாத‌ அறிவும் இங்கு எட்டுத்தொகை ஆன‌து. எத்தனை எத்தனை நூல்க‌ள் எழுதி எழுதி குவித்தாய்! இணைய‌த்த‌மிழ் […]

தாகூரின் கீதப் பாமாலை – 23 பிரிவுக் கவலை

This entry is part 17 of 37 in the series 22 ஜூலை 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பிரிவுக் கவலை இனிப்பாய் மாறலாம் தேனான இந்த மாலையில் ! கானம் ஆழ்மனதில் எழலாம் சோக மோடு நெடிய வேதனைக்குள் உன்னைக் காணாத இழப்பு உண்டாக்கும் துன்பத் தவிப்பு ! முழுமதி பூத்த இரவு நேரத்தில் எழுந்திடும் மோகம் ! கனிவான கானல் நீர் கண்களில் மாய வித்தை செய்யும். தூரத்தி லிருந்து காற்று நறுமணப் படர்வைத் தூக்கி வரும். என் இதயம் பாதை […]

பூக்களாய்ப் பிடித்தவை

ஒரு வண்ணத்துப்பூச்சியைப் பிடிப்பது போல மெல்லப் பின்பக்கம் போய் அடிக்கமுடியவில்லை. ஈயைப் பிடிக்கும் உள்ளங்கைக் குழித்த சாகசமும் பலன் தரவில்லை. சாட்டையடித்து மெய்வருத்திக்கொள்ளும் கழைக்கூத்தாடி போல கைகளால்மாறி மாறி அடித்துக்கொண்டாலும் தப்பித்து விடுகின்றன கொசுக்கள். சரி, கடித்துவிட்டுப்போகட்டும் என இயலாமையில் சோர்ந்து கண்ணயர்ந்த பின், ரத்தம் குடித்த போதையில் நகர முடியாது நான் புரண்டு படுத்ததில் நசுங்கி நேர்ந்த அவற்றின் மரணம் பெயர் தெரியாத குட்டிச்சிகப்புப் பூக்களாய்ச் சிதறிக்கிடக்கும் மறு நாள் காலையில் என் படுக்கை விரிப்பில். […]

தாகூரின் கீதப் பாமாலை – 22 எவளோ ஒருத்தி ?

This entry is part 17 of 32 in the series 15 ஜூலை 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மீண்டும் யாரென் கதவைத் தட்டுவது ? நேரம் கடந்த வேளையில் யார் வந்து நிற்பது ? யாரைத் தேடி வந்திருப்பது ? நெடு நாட்களுக்கு முன்பு ஒருநாள் வசந்த காலத்தில் வாலிப மங்கை ஒருத்தி வந்தாள் என்னருகில். வருத்திய வாழ்வைப் பொங்க வைத்தாள் வரை யில்லாக் களிப்புகளில் ! இன்றிரவு மழை பெய்கிறது இருள் அடர்ந்த இந்தப் பகுதியில் இரைச்ச லான மழை ! […]