தாகூரின் கீதப் பாமாலை – 20 இரவின் மந்திர சக்தி !

This entry is part 12 of 32 in the series 1 ஜூலை 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என் இதயக் கூட்டை விட்டு எழுந்து நிற்பது எது ? இனிய சோக மொடு, ஏங்கும் சுதியில் பாடுது இரங்கத் தக்க தனிப் பறவை ஒன்று ! அடர்ந்த நிழல்கள் ஊடே படர்ந்த மயக்கம் வசப்படுத்தும் ! நெருக்கிய இலைக் காடுகள் நடமாட்ட மின்றி புறக்கணிக் கப்படும் ! மௌனச் சூழ்வெளியில் பந்தல் கொடிக் கப்பால் தன்னந் தனியாய் யாரோ வந்து நிற்கிறார் ! […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 26)

This entry is part 10 of 32 in the series 1 ஜூலை 2012

++++++++++++ என் கோமான் ++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் […]

சித்திரவதைக் கூடத்திலிருந்து

This entry is part 6 of 32 in the series 1 ஜூலை 2012

  அடுத்த கணம் நோக்கி எதிர்பார்ப்புக்களேதுமற்று பார்த்திருப்பதைத் தவிர முதலாமவனாகவோ இறுதியானவனாகவோ ஆவதற்கு நான் பிரார்த்தித்திருக்கவில்லை   எவ்வளவுதான் சிரம் தாழ்த்தி அமர்ந்திருந்தபோதிலும் அவர்களது அன்பற்ற குட்டுக்களிலிருந்து தப்பிக்கொள்ள முடியவில்லை சித்திரவதைக் கூடத்தில் கழித்த முதல் மணித்தியாலத்திலேயே எண்ணங்கள் காணாமல் போயின   துயர்தோய்ந்த இறந்த கால நினைவுகள் உடல்சதையைச் சுழற்றும் மோசமான வேதனைகள் மரண ஓலங்கள் அசாதாரண உருவங்களோடு மனங்கவர் வர்ணங்கள் பயங்கரக் கனவுகளிடையே உணர்வுகளைத் தூண்டுகின்றன   பயங்கரத்தைத் தவிர இங்கிருப்பது மனிதத்தன்மையில் கையேதுமற்ற […]

“கால‌ம் தீண்டாத‌ க‌விஞ‌ன்…….க‌ண்ண‌தாச‌ன்”

This entry is part 31 of 43 in the series 24 ஜூன் 2012

  மழை கூட ஒரு நாளில் தேனாகலாம் மணல் கூட ஒரு நாளில் பொன்னாகலாம் ஆனாலும் அவை யாவும் நீ ஆகுமா?என்று குழந்தைப்பூவுக்கு பூச்செண்டு கொடுத்த புனிதனே!ஜனாதிபதி உன் கவிதைக்குழந்தைக்கு விருது என்று கொடுத்தார் ஒரு கிலு கிலுப்பையை! அத்தனயும் எத்தனை வரிகள் உன் வரிகள். அத்தனையும் உன் எழுத்துக்குள் இனித்த வலிகள். கவிதை எனும் உலகக்கோளத்தின் பூமத்திய ரேகை சிறுகூடல் பட்டியின் வழியாக‌ அல்லவா ஓடுகிறது. “உலகம் பிறந்தது எனக்காக” என்றாயே நீ எதைச்சொன்னாய்? தமிழ் […]

குரோதம்

This entry is part 29 of 43 in the series 24 ஜூன் 2012

-முடவன் குட்டி குழந்தையா மறந்து போக..? மன்னித்து விட காந்தி மகானா ..? வெறுப்பின் காளவாய் ஊதி தீக் கங்குகளாய் சொல் வளர்த்தேன் அணையவிடாது காத்தேன்  ஓர் நாள் சாவகாசமாய் ஏதோ பேச வந்தாய்  சடா – ரென உன் முகத்தில்  வீசினேன் கதறித் துடித்தாய் ஆ இவ்வளவு வல்லமை  வாய்ந்தனவோ என் சொற்கள்..? பொறுக்கிச் சேர்க்கலானேன்  செதுக்கிச் செதுக்கிக்  கூர் செய்தேன் சொற்கள் விஷமேறின  வலிமை கொண்டன ஆயுதமாயின   கவசமாயின   ஆளுமையில் நிலை கொண்டன வீசி வீசி எறியலானேன் அலறினான் அவன்.. நொண்டி ஓடினான் இவன்.. […]

நினைவுகள் மிதந்து வழிவதானது

This entry is part 24 of 43 in the series 24 ஜூன் 2012

    இருளின் மொழியைப் பேசும் தண்ணீர்ச் சுவர்களை ஊடறுக்கும் வலிமைகொண்ட நீர்ப் பிராணிகளை உள்ளடக்கிய வனத்தின் நீரூற்றுக்கள் பெரும்பாலும் மௌனமானவை எப்பொழுதேனும் வனம் பற்றும் நாளில் பரவியணைக்கப் போதா நீர் நதியாகிப் பெருக்கெடுத்தோடுவதில் யாது பயன்   காலம் காலமாக அழிந்த மர விலங்குடல்களை செரித்து தேயாப் பசி கொண்ட கானகத்தின் எப் பெருவிருட்சத்தின் வேர் அகன்ற வாயைக் கொண்டதுவோ   புராதனச் சிதிலங்கள் தொக்கி நிற்கும் இக் காட்டிலெது நீ அண்டும் குருவிகள் எக்கணமும் […]

தப்பித்து வந்தவனின் மரணம்.

This entry is part 19 of 43 in the series 24 ஜூன் 2012

    நன்பனும் இல்லை,உறவும் இல்லை அவன். முகம் மளித்து மூன்று,நான்கு வருடம் இருக்கவேண்டும். தாடிக்குள் ஒளிந்திருந்தான் கரடியாய். எங்கேயோ பார்த்த பரிற்சயத்தில்தான் பேசத்தொடங்கினான். வாழ்வது பற்றிய கனவுகளின் மூட்டைகளை மாராப்பாய் கட்டி தோளில் போட்டபடிதான் வந்திருக்க வேண்டும் . சட்டி ,பானை ,உலாமூடி,பிங்கான் ,அகப்பயேன  குடும்பமா வாழ்வதிலிருக்கும் அலாதியை சொல்லிவிட முடியாது எளிதில் என்றான்.   காண்டா மிருகங்களின் கால்களின்கீழ் பட்டு அவனது உலகமே அழிந்ததாய் கதறினான் . நெருப்புமழை பொழிந்த வானத்தின் கீழ் வசித்ததாகவும், குரூரமான […]

பழையபடி மரங்கள் பூக்கும்

This entry is part 15 of 43 in the series 24 ஜூன் 2012

பெரும் நெருப்பு தணிந்து பனி நடக்கும் ஊரில் பஞ்சுமெத்தை விரித்து புற்கள் வரவேற்கும் கால்களை. கன்றிய இதயங்கள் இளகி முகம் பார்க்கும் மலர்களில். கூட்டு பறத்தலினூடே காற்றில் அசையும் புள்ளினங்களின் தேர்ந்த பாடலில் மயங்கி உயிர்கள் கழித்து விளையாடும். நிறைந்த குளங்களிலிருந்து குதித்துவிழும் மீன்கறிவாசம் பசியின் வயிறு தடவும். நிலவை தட்டில் பிசைந்து ஊட்டிய பாட்டி நினைவில் நின்று சிரிப்பாள், மனைவியின் உருவில் பேரப் பிள்ளைகளுடன். வடக்கின் குட்டானை கிழக்கின் நாருசிக்க ஒடியல் காயும் வாசலெங்கும். பஞ்சத்தில் வேரிறக்கி பயிர்கள் […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 25)

This entry is part 14 of 43 in the series 24 ஜூன் 2012

++++++++++++++++++++ வீண் பெருமை ++++++++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் […]

தாகூரின் கீதப் பாமாலை – 19 மனத்தில் வசந்தம்

This entry is part 8 of 43 in the series 24 ஜூன் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எந்தப் பூவும் பூந்தோப்பில் இல்லை இதயத் துள்ளே அவை மலர்ந் துள்ளன. எவரது மந்திர சக்தியால் இதயத்துள் வசந்தம் மலர்கிறது ? பட்டுப் போன மரக் கிளைகளில் பூ மொட்டுகள் வெடிக்கும் ! மௌனப் புள்ளினத்தை நடுங்க வைக்கும் ! பாலை வனத்தூடே சிரித் தோடும் ஓர் ஆறு. துயருக்கு அஞ்சாதவன் நான் பிரிவில் நேரும் மனவலிக்கு ஒரு குடில் கட்டி வைத்தேன். தேனீக்கள் […]