எனக்கும் சும்மா இருக்கவே விருப்பம்

This entry is part 7 of 43 in the series 24 ஜூன் 2012

அணுஉலைகள் வெடித்துச்சிதறினால் அனைத்து உயிரினமும் பூண்டோடழியும் என்ற எச்சரிக்கையை கருத்திலெடுத்துக்கொள்ளாமல், ஞெகிழிப்பைகள் பூமியை மலடாக்கும் என்ற அறிவியல் உண்மையை கண்டுகொள்ளாமல், சிட்டுக்குருவிகள் அருகி வருகின்றன என்பதைப் புரிந்துகொள்ளாமல், நிலத்தடி நீர் வற்றி, பூமி முழுதும் பாலைவனமாக மாறிவருகிறது என்பது பற்றிக்கவலை கொள்ளாமல், பவளப்பாறைகள் கூண்டோடு அழிக்கப்படுகிறது என்று அறிந்துகொள்ளாமல், அருகி வரும் மொழிகளுள் நமதும் ஒன்று என்றுணராமல், நாளொன்றிற்கு நான்கு பறவையினங்கள் இவ்வுலகிலிருந்து மறைந்துபோகின்றன என்றுணராமல், அனைவர்க்கும் சும்மா இருக்கவே விருப்பம் நமது கலைகள் அழிந்து வருகின்றன […]

பூட்ட இயலா கதவுகள்

This entry is part 32 of 43 in the series 17 ஜூன் 2012

ரமேஷ்ரக்சன் தொடர் மழையின் இரவில் திண்ணையில் ஒதுங்கிய நாயின் ஊளையின் குரலால் தோளில் சாய்ந்துறங்கும் மகளின் காதுகளில் விழவும் தலை நிமிர்த்து வாசல் நோக்கியவள் பயம் அப்பிய மனதினை விரல்களில் புகுத்தி தோள் பற்றி கதவை தாழிட சமிக்ஞை செய்கிறாள் சந்தையில் சந்தித்த கீழத் தெருக்காரன் ஒருவன் பாலுக்கான காசோடு வருவதை அவள் அறிந்திருக்க நியாயமில்லை!

ப.மதியழகன் க‌விதைக‌ள்

This entry is part 23 of 43 in the series 17 ஜூன் 2012

ஜகத்மித்யை பருவத்தில் பாட்டு கேட்பது தனிமையில் சிரிப்பது கண்ணாடி பார்ப்பது சகஜம் தான் மிலேச்ச நாட்டில் மொழி தெரியாமல் சுற்றுபவனைப் போல முகத்தை வைத்துக் கொண்டிருந்தால், கண்டுபிடிப்பது கஷ்டமல்ல காதல் தான் காதலின் சின்னமே கல்லறை தான் கேள்விப்பட்டதில்லையா காதலில் விழுவது தெய்வத்தைத் தொழுவது எல்லாம் ஒன்று தான் ஓர்மை இல்லாவிடில் சமூகக் கழுகுக்கு இரையாவாய் விடாயை விட்டுத் தொலை உலகை சாளரத்தின் வழியே பார்க்காமல் முச்சந்தியில் நின்று பார் சிவசங்கரன் சொல்லிச் சென்றது சிற்றறிவுக்கு சிறிது […]

தாகூரின் கீதப் பாமாலை – 18 வைகாசி வாழ்த்து

This entry is part 20 of 43 in the series 17 ஜூன் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எவருடைய வீணை இனிய குரலில் வாசிக்குது எனது தனித்துப் போன புதிய வாழ்வினிலே. காலை மலர்ந்த தாமரை மலர் போல் கட்ட விழ்க்கும் இதழ்களை என் இதயமே. எல்லா அழகுமயம் விழிதெழும், அனைத்திலும் களிப்பு இதயத்தில் நிரம்பும் இன்பம் ஒரு கண்ணி மைப்பில் எங்கிருந்தோ கொணரும் தென்றல் ஓர் புத்துணர்வை எடுத்த கற்றும் ஆத்மா அணிந் திருக்கும் அங்கியை. களிப்பும் சோகமும் ஆழமாய் உள்ளத்தைத் […]

பிடுங்கி நடுவோம்

This entry is part 16 of 43 in the series 17 ஜூன் 2012

விசாலமான வீடுகள் வினாக் குறியாய்க் குடும்பங்கள் மாமா என்கிறோம் அம்புலியை யாரோ என்கிறோம் அண்டை வீட்டாரை எல்லாரும் திறனாளிகள் எல்லாரும் பட்டதாரிகள் எல்லாரும் கடனில் அனைவர் கையிலும் அறிவுச் சாவி திறக்கத்தான் நேரமில்லை மருந்துகள் ஏராளம் நோய்கள் அதைவிட ஏராளம் ஆதாயம் தேடும் வியாபாரப் பொருள்களாய் உறவுகள் விரைவான உணவுகள் மெதுவான சீரணங்கள் ஸ்டீவ் ஜாப்ஸ் தெரிகிறார் சிரிக்கத் தெரிவதில்லை வாழும் நிலம் செத்துக் கொண்டிருக்கிறது குற்றுயிராய் மனித நேயம் வாருங்கள் வாழ்க்கையைப் பிடுங்கு நடுவோம் அமீதாம்மாள்

ருத்ராவின் க‌விதைக‌ள்

This entry is part 12 of 43 in the series 17 ஜூன் 2012

  பட். இதன் கதை முடிந்து விட்டது. இனிமேல் தான் கதை எழுதப்போகிறார் ஆசிரியர்.”கொசு” ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍________________________________________ எழுதிச்செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லும். எங்கே முடியும் விதி? “பத்திரிகை அலுவலகத்தின் குப்பைக்கூடை” _______________________________________________ பேனாவுக்கு மட்டுமே புரிந்தது. காகித‌ம் ம‌ட்டுமே ர‌சித்த‌து. “க‌விதை” _________________________________________________ எழுதி முடிக்க‌வில்லை. பேனாவில் எல்லாம் எறும்புக‌ள். “த‌மிழுக்கும் அமுதென்று பேர்” ___________________________________________________ என்னைத் தூக்கி கொடுக்கிறார்க‌ள் என்னைக்கேட்டா கொடுக்கிறார்க‌ள். இது யார் எழுதிய‌ க‌விதை? “ஞான‌பீட‌மே எழுதிய‌து” ____________________________________________________ ல‌ட்ச‌க்க‌ண‌க்கான […]

ஜென்

This entry is part 11 of 43 in the series 17 ஜூன் 2012

  ஜென் என்றால் என்ன? இப்படி கேள்வி கேடபதே ஜென். கேள்வியே இல்லாத போது கேள்வியைத் தேடும் பதில் ஜென். கடவுள் பற்றி தியானம் செய்யும் வகுப்பில் முதலில் உட்கார்வது கடவுள். வகுப்பை துவக்குவது ஜென். பிற‌ந்து தான் வாழ்க்கையை ப‌டிக்க‌ வேண்டும். இற‌ந்து தான் வாழ்க்கைக்கு கோடைவிடுமுறை. அடுத்த‌வ‌குப்பு துவ‌ங்கும்போது புத்த‌க‌மும் புதிது. மாண‌வ‌னும் புதிது. ஆசிரிய‌ர் ம‌ட்டும் அதே ஜென். ஜென் ஒரு புதிர். ஜென்னை அவிழ்ப்ப‌தும் இன்னொரு புதிர். ம‌று ஜென்ம‌ம் உண்டு. […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 24)

This entry is part 28 of 43 in the series 17 ஜூன் 2012

++++++++++++++++++++ கண் வரைந்த ஓவியம் ++++++++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் […]

புதிய கட்டளைகளின் பட்டியல்..

This entry is part 36 of 41 in the series 10 ஜூன் 2012

ஒரு வரையறை வைத்துக் கொள்ளமுடியவில்லை உனது எல்லை எதுவென்ற வரைபடத்தை எனது அறைச் சுவரில் ஒட்டி வைக்கிறாய் நினைவுப் படுத்திக் கொள்ளவோ அல்லது ஞாபகத்தில் இருத்திக் கொள்ளவோ புதிய கட்டளைகளின் பட்டியலொன்றை வாசலில் நின்றபடி சத்தமிட்டு வாசித்துச் செல்கிறாய் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு நானும் பின்னிக் கொண்டிருந்த வலையை நிறுத்திவிட்டு சிலந்தியும் வாய் மூடிக் கேட்டுக் கொண்டிருக்கிறோம் ******* –இளங்கோ

பிரேதம்

This entry is part 34 of 41 in the series 10 ஜூன் 2012

  புத்தகம் மூடியே கிடந்தது மேஜையில் காபி ஆறிப்போயிருந்தது ஆஸ்ட்ரேவில் சாம்பல் இல்லை இன்னும் யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தது அவளுக்கு உற்ற துணையாய் இருப்பேன் என்றேன் ஆனால் இதற்கு துணை வர முடியவில்லை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள மருத்துவரை அழைக்கலாமா என்று யோசனை எழுந்தது நான் இன்னும் உயிருடன் இருப்பது குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தியது எனது ஆன்மா பாதாள அறையில் சிறைபட்டுவிட்டது மீண்டும் அறை கதவை திறந்து உள்ளே சென்றேன் இத்தனை நாட்களாக வியாதி […]