என் மனைவியின் தாய்க்கு

This entry is part 39 of 42 in the series 29 ஜனவரி 2012

சு.மு.அகமது   முடிவின் ஆரம்பம் அழுகுரல் விசும்பலுடன் ஒரு சகாப்தத்தின் இறுதியை நிச்சயப்படுத்தும் மரணம் என்ற சொல்லுக்கு அருகிலான பயணமும் நிச்சயப்படாத இலக்கு நோக்கின முன்னேறுதலும் சுருங்கின வயிறின் முடிச்சுக்களாய் உயிர்ப்பின் முகவரி தொலைத்து தொலைப்பில் உழலும் அறிமுகம் தேசாந்திரியின் அழுக்குப்பையில் கிடக்கும் கசங்கிய துணிச் சுருளாய் சவக்குழியில் இறக்கப்பட்டு சலனமற்ற முகத்தோடு இறுதி உறக்கம் கலையாத உணர்வுக்கு கனவுகளற்ற புதிய உலகில் பகிர்ந்து கொள்ள ஏதும் உளதோ அமைதியாய் சரியும் மண்ணும் இருளாய் போகும் உலகமுமாய் […]

போதை கனக்கும் டாஸ்மாக் குடுவை

This entry is part 36 of 42 in the series 29 ஜனவரி 2012

  மாயப்போதை தேடும் மூளையோடும் எச்சிலூறும் நாவோடும் சில்லறைகளைப் பொறுக்கி போதை பதுங்கிக்கிடக்கும் குடுவையை கையகப்படுத்துகிறான் குடிமகன்.   அழுக்கடைந்த குடிப்பக மூலையில் ஆலமரக்கிளையொன்று சிந்தும் நிழலில் கோணலாய் நிற்கும் மேசையில் காக்கையொன்று நேற்றும் எச்சமிட்டிருந்தது.   முதலிரவுக்கு வந்த மனைவியைப்போல் குறுகுறுப்பாய் குடுவையைக் கையாள அடைபட்டுக்கிடந்த அவனுக்கான அமிர்தம் விடுபட்டு மெல்லச் சிரிக்கிறது   நடுங்கும் விரல்களோடு குவளையில் சரித்து இனிப்பூட்டிய குளிர்பானத்தையோ வாயு நிரம்பிய சோடாவையோ பிளாஸ்டிக் பை தண்ணீரையோ பீய்சிக்கலந்து ஒரு புணர்ச்சியின் […]

ஐம்புல‌ன் அட‌க்க‌ம்

This entry is part 33 of 42 in the series 29 ஜனவரி 2012

ஐம்புலனை அடக்கிச் செறித்த அதிகாலை ஆழ்ந்த உறக்கத்தின் சோம்பலைத் தின்று கனவு முளைத்தது. பெருமான் பெருமாள் முல்லா இயேசு புத்த‌ன் வந்து அமர்ந்தனர் என் ஞான முற்ற‌த்திற்கு. அவ‌ர்க‌ளுக்கான‌ தேநீர் த‌யாரிப்பின் மும்முர‌த்தில் தொலைவில் இருந்த‌ க‌ண்ணாடி போதித‌ர்ம‌னை உள்வாங்கியிருந்த‌து. தேநீர் புசித்து புன்முறுவல் சிந்தி புறப்படலாயினர் நானும் உடன் புறப்பட்டேன் அவர்கள் வீடு நோக்கி. பெருமான் வீட்டுக் கோபுரநிழல் ந‌ந்திவாக‌ன‌ம் நவ‌க்கிர‌க‌ம் கால‌பைர‌வர் அறுபத்து மூவ‌ர் அகிலாண்டேஸ்வரி க‌ட‌ந்து மூல‌வரைத் தேடிக் க‌ர்ப்ப‌கிர‌க‌த்தில் கால‌டி வைக்கையில் […]

எல்லாம் தெரிந்தவர்கள்

This entry is part 32 of 42 in the series 29 ஜனவரி 2012

அதைப் பற்றி அப்பொழுதே எனக்கு தெரிந்து விட்டிருந்தது அனைவரும் அதை ஆமோதிக்கத் தொடங்கியிருந்தார்கள் இடுப்பில் இருக்க மறுத்து நழுவியோடும் கீழாடையாய் மீண்டும் ஏற்றி அந்நிகழ்வுகளை பத்திரப்படுத்தினார்கள் மாந்தர்கள் வல இட உள் வெளி புறமெல்லாம் உறுப்புகள் நீண்ட ஆக்டோபஷாய் அதற்கு உருவமிடத் தொடங்கினார்கள் என் சுற்றியவர்கள் மனனமிட்டுருத்தும் அல்ஜிப்ரா சூத்திரங்களாய் மீண்டும் மீண்டும் சொல்லிச் சொல்லி அதனிருத்தல்களை உறுதிசெய்து கொண்டார்கள் பலர் சிலரின் உயிரோரம் அந்நிகழ்வுகள் இடித்ததாயும் சிலருக்கு உயிருக்குப் பதிலாய் அதுவே துடித்ததாயும் ஆளாளுக்கு அளக்கத் […]

இப்படியும்… பேசலாம்…..!

This entry is part 29 of 42 in the series 29 ஜனவரி 2012

உலகம் என்பது என்னுள் சுழல்வது…. ——————————- என்னை … அறியவா… எனக்கு இந்தப் பிறவி..! —————————— இந்த உடல் .. வாடகை வீடு… காலியாகி விடும்…….! உயிரே…புரிந்துகொள்.. இப்படிக்கு…. ஆன்மா..! ———————————- விதை தரும்…. விருக்ஷமும்… மண்ணுக்குள் அன்று…. விதையாகத் தான்..! ——————————————– கைப்பிடி …. மூளைக்குள் அனந்தகோடி அறைகள்…! ——————————– அளவில்லாததை…. “இதயம்” என அளந்து… வைத்தான்.! ———————————– பூஜ்ஜியமும் இல்லை ராஜ்ஜியமும் இல்லை… எதற்கு எல்லை..? ————————————– ஒன்றும் இல்லாத பரவெளிக்கு……? பந்தல் எதற்கு…! […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) தெறித்த முத்துக்கள் ! (கவிதை -58)

This entry is part 28 of 42 in the series 29 ஜனவரி 2012

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஏகாந்த வாழ்வு ஏகாந்த நிலையில் நான் தாமதிக் கிறேன் ! ஏகாந்த மாய் நான் மட்டும் என் படகினில் ! எங்கும் இருள் மயம் எந்தத் தளமும் தெரிய வில்லை ! திரண்ட முகில் மூட்டம் நீருக்கு மேலிருக்க முயல்கிறேன் ! ஆயினும் ஆழத்தில் ஏற்கனவே வாழ்கிறேன் அடிக்கடல் விளிம்புக்குள் ! ++++++++++++ அழுகை வருகுது ! அழுகை வருகுது எனக்கு ! […]

பள்ளி மணியோசை

This entry is part 27 of 42 in the series 29 ஜனவரி 2012

பிடிக்காத வாத்தியாரின் பாட நேரங்களில் கூர்ந்து கவனிக்கிறார்கள் அடுத்த பாட வாத்தியாரை வரவேற்க போகும் மணியோசையை அந்த நாளின் இறுதி பாடத்தின் கடைசி பத்து நிமிடங்களில் போர்கால அடிப்படையில் ஆயத்தமாகிறார்கள் விடுப்பு மணியின் மூன்றாவது மணி யாரும் கேட்காமல் ஆனாதையாய் வகுப்பறையில் உட்கார்ந்தபடியே ஒளிந்துக் கொள்கிறார்கள் வீட்டுப்பாடம் செய்யாத நாட்களில் கடமையை செய் பலனை எதிர் பார்க்காதே கத்துக் கொடுத்தார் ஆசிரியர் முதன் முறையாக வீட்டுப்பாடம் முடித்தும் படித்தும் வந்தவனிடம் அவர் ஒன்றும் கேட்கவில்லை வாத்தியார் அடிக்கும்போது […]

இரகசியக்காரன்…

This entry is part 17 of 42 in the series 29 ஜனவரி 2012

மெல்ல என்னை இழந்து கொண்டிருந்தேன் திடுமென வீசிப்போன புயலில் தன்னருகதை இழந்த சிறு துகள்களாய் என் ஒட்டு மொத்தமும் ஒடுங்கி விட்டிருந்தது வீசியெறிந்ததொரு அலையின் எதிர் நீச்சல்காரனாய் சிதைந்த உடம்புகளோடும் இழந்த துடுப்புகளோடும் அந்நிகழ்வுகளின் அரூபங்கள் வழியே பின் தொடர வேண்டியதுள்ளது. முற்றுமாய் தங்கள் மௌனங்கள் களைந்த என் வார்த்தைகளை சிலர் பறித்துக் கொண்டிருப்பார்கள் இன் முகமாய் முன் இளித்து என் பித்தட்டு வழியே ரகசியங்களை பை நிறைய திணித்துக் கொள்வார்கள் பலர் ஒரு ஓரமாய் ஒடுங்கிய […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 4)

This entry is part 16 of 42 in the series 29 ஜனவரி 2012

எழில் இனப் பெருக்கம் மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதியிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் […]

பிரியாவிடை

This entry is part 15 of 42 in the series 29 ஜனவரி 2012

வீட்டில் சகுனங்களில் நம்பிக்கை இருந்திருக்கலாம் குறுக்கே போன கருப்புப் பூனை சாக்கில் ஐந்து நிமிடங்கள் கூடுதலாய் இருந்திருக்கலாம்.. பொம்மைக்கூட்டத்திலிருந்து பிரித்து கொணரப்பட்ட குழந்தையொன்றைக் கைப்பிடித்து நடத்திவருவதைப் போலிருக்கிறது நான் இழுத்துவரும் ட்ராலி, என் நடையின் நேர்கோட்டுக்குப் பின்னால் உருண்டுவந்தபடி.. “செல்போன் சார்ஜர் எடுத்து வச்சியா?” “பனியா இருக்கு, ஸ்வெட்டர் போட்டு போ” அக்கறைக்குரல்கள் துரத்தல்களாய்க் கேட்க பிரியாவிடைபெற்று நடக்கிறேன், விடிந்தால் விரியும் மீண்டுமொரு விடுதி நாள்..